லேபிள்கள்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

முட்டைகளும் அதன் நன்மைகளும்.

 பிராய்லர் கோழி முட்டைகளை விட இலகுவாக கிடைக்கக் கூடிய காடை, வாத்து, மீன் முட்டை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இம்முட்டைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்.

காடை முட்டை:

காடை முட்டை அளவில் கோழி முட்டை அளவில் பாதி தான் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதிலிருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும். தோலின் நிறத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது.

கோழி முட்டைகளை விட 3 முதல் 4 மடங்கு வரை அதிகமான உணவு சத்துகள் நிறைந்துள்ளன. கோழி முட்டையில் 11 சதவீத புரதம் உள்ளது.

ஆனால், காடை முட்டையில் 13 சதவீத புரதம் இருக்கிறது. இதில், பி2 இரும்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து ஆகிய சத்துகள் கோழி முட்டையில் இருப்பதை விட அதிக அளவு இருக்கின்றன.

மேலும், எச்.டி.எல். என்னும் கொழுப்பு சத்து உள்ளதால் வயதானவர்களும் இதை உண்ணலாம்.

காடை முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு சத்து குறைந்து, மனித மூளையை இயக்கும் கோலின் என்னும் வேதியியல் பொருள் நிறைந்து உள்ளது.

குழந்தைகளுக்கு, உணவில் தினமும் இரண்டு காடை முட்டைகள் கொடுத்து வந்தால், நல்ல உடல் வளர்ச்சி பெற்று, தொற்று நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

காடை முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் காணப்படுகின்ற கோலினிஸ்ட்ரேஸ் நொதி மூலம் அல்சைமர் நோய் உருவாகும் ஆபத்தை தடை செய்கிறது.

வாத்து முட்டை:

கோழி முட்டையில் இருக்கும் புரதத்தை விட அதிகமான அளவு புரதம் வாத்து முட்டையில் இருக்கிறது. இதில் இருக்கும் மைக்ரோ பையல் தன்மை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உட‌ல் பரு‌க்கு‌ம், வாயுவை உ‌ண்டா‌க்கு‌ம், ம‌ந்‌தி‌க்கு‌ம், தேக‌த்து‌க்கு வ‌லிவு கொடு‌க்கு‌ம். வா‌ன்கோ‌ழி மு‌ட்டை‌க்கு‌ம் இதுவே கு‌ண‌ம். இ‌ஞ்‌சி, கொ‌த்தும‌ல்‌லி, ‌சீரக‌ம் சே‌ர்‌த்து‌ச் சமை‌க்க வே‌ண்டு‌ம்.

மீன் முட்டை:

மீன் முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறது. பெரும்பாலும், மீன் முட்டையை நாம் யாரும் உண்பதில்லை. மீனில் உள்ள சத்துக்களை காட்டிலும் மீன் முட்டையில் சத்துக்கள் அதிகம். இது ஆரோக்கியமானதும் கூட.

இந்த முட்டைகளில் உள்ள திரவ வடிவிலான சுரப்பியில், வைட்டமின் இ அதிகளவில் உள்ளது.

சாதாரண கோழி முட்டையை தயார் செய்வது போல், இவற்றை தயார் செய்து சாப்பிடலாம்.அதிலும், கண் நோய் சம்பந்தப்பட்டவர்கள், மாலைக் கண் நோயின் தாக்கம் உள்ளவர்கள், இதனை சாப்பிடும் நிலையில், கண் பார்வை தெளிவு பெறுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாலைக் கண் நோயில் இருந்து விடுபடலாம்.

நாட்டுக் கோழி முட்டை:

நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் உடலின் வலிமை அதிகரிக்கும். ஆண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை உண்பதால் இரத்த ஓட்டம் சீராகி ஆண்மை மேம்படும்.

தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன்

தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, , , கே, பி 6 உள்ளது.

முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.

மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது.

இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.

முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts