லேபிள்கள்

சனி, 13 ஜனவரி, 2024

மீதமான வெள்ளை சாதத்தை மறுநாள் சூடாக்கி சாப்பிட்டால் விஷமாக மாறுமா?

மீதமான சாதத்தை மறுநாள் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கின்றது. முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் தயிர் கலந்து சாப்பிடும் பழைய சோற்றின் ருசியே தனி தான்.

இதனால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதே மீந்துபோன சோறை மறுநாள் சூடாக்கி சுடச்சுட சாப்பிட்டால் அது விஷமாகும் என ஆய்வு கூறுகிறது.

அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த தேசிய சுகாதார மையம் நடத்திய மருத்துவ ஆய்வில் மீதமான சோற்றை மறுநாள் காலை சூடாக்கி சாப்பிட்டால் அது ஃபுட் பாய்சனாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார அமைப்புப் படி சமைக்காத அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா இருக்கிறது. அது ஃபுட் பாய்சனை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா. அது சமைத்த பின்பும் உயிர் வாழும் ஆற்றல் கொண்டது. எனவே அந்த உணவை அப்படியே சேமித்து அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் அவை வேகமாக வளரும் ஆற்றல் கொண்டவை.

எனவே அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.

சரி, வீட்டில் அதிக சோறு வடிவித்துவிட்டீர்கள். என்ன செய்வது, குப்பையில் கொட்டவும் மனமில்லை எனில் என்ன செய்யலாம்? அதாவது மீந்த சோறை அப்போதே உடனே ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சூடாக்கி சாப்பிடலாமாம். அதுவும் ஒரு நாளைக்கு மேல் வைத்து சாப்பிடக் கூடாது.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

உங்களுக்கு ஏற்கனவே சைலண்ட்டா மாரடைப்பு வந்திருக்கிறதா என்று படித்து தெரிந்து கொண்டு சரி செய்து கொள்ளுங்கள்.

இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தாலும் ஒட்டு மொத்த உடலும் சோர்ந்து விடும்.

எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை, அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

இதயம் நாள் முழுக்க நமக்காக வேலை செய்யும் முக்கியமான உறுப்பு. உடலின் மிக முக்கியமான தசை இது. உடல் உறுப்புகளுக்கு இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் செலுத்தும் பொறுப்பை கொண்டிருப்பதன் மூலமே இதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

இதயம் சில விநாடிகள் அதன் பொறுப்பை தவிர்க்கும் போது அது ஓராயிரம் பிரச்சனைகளை நொடிக்குள் உருவாக்கிவிடலாம். தமனிகளின் புறனிக்குள் கடுமையான பிரச்சனைகள் உருவாகலாம். பிறகு மாரடைப்பு மற்றும் இரத்த தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புண்டு.இன்றைய நிலையில் இதயத்தை பாதுகாத்து அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் ஆரோக்கியம் தான் உயர்ந்த செல்வம் என்று சொல்லப்படுகிறது.

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா' என்று பெயர்.

நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

சனி, 6 ஜனவரி, 2024

பூண்டு வாசனை போகணுமா? சில எளிய வழி முறைகள்

பூண்டு உறித்த கைகளில் அந்த வாசனை போக என்ன செய்யலாம். பூண்டு இந்தியாவில் உள்ள அனைத்து உணவுகளிலும், மிகச் சிறந்த சுவை - மேம்படுத்தும் பொருட்களில் ஒன்றாகும்.

கறிகள் முதல் பிரியாணி மற்றும் புலாவ் போன்ற அரிசி உணவுகள் வரை, பராத்தா மற்றும் குல்சாக்கள் போன்ற ரொட்டிகளுக்கு கூட, பூண்டு முழு அளவிலான உணவுகளுக்கு சுவை சேர்க்க பயன்படுகிறது.

இதனாலேயே பல இந்திய வீடுகளில் இஞ்சி-பூண்டு விழுது இருப்பு வைக்கப்படுகிறது, இது உணவுகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுவையை சேர்க்க ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு இந்திய உணவின் தொடக்கமும், அடிப்படை இஞ்சி-பூண்டு விழுதுடன் வெங்காயத்தை வதக்குவதை உள்ளடக்கியது.

இருப்பினும், பலர் தங்கள் உணவுகள் அதிகபட்ச சுவையைப் பெறுவதற்காக, தினசரி புதிய பூண்டை நறுக்க விரும்புகிறார்கள். பூண்டு வாசனை உங்கள் உணவின் சுவையை சேர்க்கலாம், ஆனால் அதை அகற்றுவது கடினம். சமைக்கும் போது,   உணவுகளில் பயன்படுத்த பூண்டு பற்களை வெட்டுவதற்கு நிறைய பேர் கட்டிங் போர்டு பயன்படுத்துகிறார்கள்.

பூண்டின் வாசனை அது தொடும் பலகை, உங்கள் கைகள், கத்தி மற்றும் நீங்கள் பயன்படுத்திய மற்ற பாத்திரங்கள் உட்பட எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் கைகள் மற்றும் பாத்திரங்கள் சோப்பு போட்டு கழுவிய பிறகும் 'பூண்டு' வாசனை வரும்.

உங்கள் கைகள் மற்றும் பாத்திரங்களில் இருந்து பூண்டின் கடுமையான வாசனையிலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள். உங்கள் கட்டிங் போர்ட் மற்றும் கத்தி வலுவான பூண்டு வாசனையை விட்டு வெளியேற மறுத்தால், அவற்றை சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் விடலாம். அவற்றை வெளியே எடுத்து பாத்திரம் கழுவும் பொடியை மேலே தடவி மூடி வைக்கவும். பலகை மற்றும் கத்தியை ஒரு நல்ல டிஷ் ஸ்க்ரப்பர் அல்லது பிரஷ் மூலம் ஸ்க்ரப் செய்யவும். பிறகு சோப் கொண்டு ஒருமுறை பாத்திரங்களை கழுவவும்.

வாசனை இன்னும் போகவில்லை என்றால், நீங்கள் அதே செயல்முறையை மீண்டும் உப்பு அல்லது சோடா மற்றும் எலுமிச்சை கொண்டு செய்யலாம். உப்பு அல்லது சோடாவை தூவி, வெட்டப்பட்ட எலுமிச்சையைப் பயன்படுத்தி அவற்றை துடைத்து, பின்னர் கழுவவும். எலுமிச்சையை இங்கும் பயன்படுத்தலாம். உங்கள் கைகளில் இருந்து பூண்டு வாசனையை அகற்றுவதற்கான எளிதான வழி.

புதன், 3 ஜனவரி, 2024

நல்ல உறக்கத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

அடிக்கடி உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினம் இரவினில் உணவுக்குமுன் வெந்நீரில் குளித்தலும் உணவுக்குப் பின் சில கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது.ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

செர்ரிபழம்:

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

இரவில் சாப்பிடும் உணவானது அளவு குறைவான உணவாகவும், காரமில்லாத, வாயு சேர்க்காத உணவாகவும் இருப்பது மிகவும் முக்கியம்.

உடல் சுத்தமும், நல்ல காற்றோட்டமும் கூட தூக்கத்திற்கு அடிப்படையாகும். உறங்கப் போகும் முன் முகம், கை கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதும், நாம் படுக்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவும்.

சாப்பிட்டவுடன் களைப்போடு சென்று படுக்கையில் விழுவது, சோம்பலையும், கெட்ட கனவுகளையும் அளிக்கும். பகல் தூக்கம் நிச்சயமாக இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படுக்கச் சென்றால் நிச்சயமாக நல்ல தூக்கம் வரும்.

மாம்பழம் சாப்பிடுவதால் நல்ல உறக்கம் வரும். குரல் இனிமை அடையும். நரம்புகள் வலுப் பெறும். ஆயுள் அதிகரிக்கும். மாம்பழம் சாப்பிட்டதும், சிறிது பால் அருந்த வேண்டும்.

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts