லேபிள்கள்

புதன், 3 ஜனவரி, 2024

நல்ல உறக்கத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

அடிக்கடி உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினம் இரவினில் உணவுக்குமுன் வெந்நீரில் குளித்தலும் உணவுக்குப் பின் சில கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது.ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

செர்ரிபழம்:

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

இரவில் சாப்பிடும் உணவானது அளவு குறைவான உணவாகவும், காரமில்லாத, வாயு சேர்க்காத உணவாகவும் இருப்பது மிகவும் முக்கியம்.

உடல் சுத்தமும், நல்ல காற்றோட்டமும் கூட தூக்கத்திற்கு அடிப்படையாகும். உறங்கப் போகும் முன் முகம், கை கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதும், நாம் படுக்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவும்.

சாப்பிட்டவுடன் களைப்போடு சென்று படுக்கையில் விழுவது, சோம்பலையும், கெட்ட கனவுகளையும் அளிக்கும். பகல் தூக்கம் நிச்சயமாக இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படுக்கச் சென்றால் நிச்சயமாக நல்ல தூக்கம் வரும்.

மாம்பழம் சாப்பிடுவதால் நல்ல உறக்கம் வரும். குரல் இனிமை அடையும். நரம்புகள் வலுப் பெறும். ஆயுள் அதிகரிக்கும். மாம்பழம் சாப்பிட்டதும், சிறிது பால் அருந்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts