லேபிள்கள்

சனி, 13 ஜனவரி, 2024

மீதமான வெள்ளை சாதத்தை மறுநாள் சூடாக்கி சாப்பிட்டால் விஷமாக மாறுமா?

மீதமான சாதத்தை மறுநாள் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கின்றது. முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் தயிர் கலந்து சாப்பிடும் பழைய சோற்றின் ருசியே தனி தான்.

இதனால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதே மீந்துபோன சோறை மறுநாள் சூடாக்கி சுடச்சுட சாப்பிட்டால் அது விஷமாகும் என ஆய்வு கூறுகிறது.

அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த தேசிய சுகாதார மையம் நடத்திய மருத்துவ ஆய்வில் மீதமான சோற்றை மறுநாள் காலை சூடாக்கி சாப்பிட்டால் அது ஃபுட் பாய்சனாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார அமைப்புப் படி சமைக்காத அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா இருக்கிறது. அது ஃபுட் பாய்சனை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா. அது சமைத்த பின்பும் உயிர் வாழும் ஆற்றல் கொண்டது. எனவே அந்த உணவை அப்படியே சேமித்து அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் அவை வேகமாக வளரும் ஆற்றல் கொண்டவை.

எனவே அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.

சரி, வீட்டில் அதிக சோறு வடிவித்துவிட்டீர்கள். என்ன செய்வது, குப்பையில் கொட்டவும் மனமில்லை எனில் என்ன செய்யலாம்? அதாவது மீந்த சோறை அப்போதே உடனே ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சூடாக்கி சாப்பிடலாமாம். அதுவும் ஒரு நாளைக்கு மேல் வைத்து சாப்பிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

தரையில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்.

மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத் தான் பின்பற்றினார்கள். ...

Popular Posts