லேபிள்கள்

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

மீன்எண்ணெய்யில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!!

மீன் எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில்  இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு  சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும்  நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்  போன்று

இருக்கும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/nutrients-in-fish-oil-its-uses-120053000027_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஜும்ஆநாளின் மகிமைகளை பேணுவோம்

அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை மறந்து செயல்படக்கூடாது

அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!
நிர்பந்த அடிப்படையில் தடைபட்டது ஜும்ஆவுடைய ஒன்றுகூடலும் தெழுகையும் மட்டும் தானே ஒழிய அத்தினத்தின் சிறப்புக்கள் அல்ல என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஜும்ஆவுடைய தினத்தின் சிறப்புக்களும் அதில் நாம் செய்ய வேண்டியவைகளும்

1) ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்

நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு,

عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» صحيح مسلم

நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)

நாட்களில் சிறந்த நாள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1548.
அத்தியாயம் : 7. ஜும்ஆ

2)ஜும்ஆத் தினத்தில் நபிகளார் சுபஹுத் தொழுகையில் ஓதியவை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
ஸஹீஹ் புகாரி : 891.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

பள்ளியில் இமாமுக்கு பின்னால் தொழுது பலகிய பலருக்கும் இந்த அத்தியாயங்கள் மனனமில்லாதிருக்கும் இப்போது கிடைத்துள்ள ஓய்வுகாலத்தை பயன்படுத்தி அவற்றை மனனமிட்டுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

3) நபிகளாரின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுதல்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، …… فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ…….» سنن أبي داود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அதில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்."
(அபூ தாவுத்:1047, நசாஇ…)

அன்றைய தினத்துக்காக குளித்தல். இது மிகவு வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும், இதில் பொடுபோக்கு செய்யக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 687.
அத்தியாயம் : 4. தொழுகை

ஸலவாத் சொல்ல வேண்டிய முறை

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".

புஹாரி 3370

4) ஜும்ஆ நாளில் குளித்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 897.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆவுடைய தொழுகை தொழுகை எம்மீது கடமையில்லை என்ற போலும் சுத்தத்தை பேணிக்கொள்ள நாம் குளிக்க வேண்டும்.

5) துஆக்கள் அங்கிகரிக்கப்படும் நேரம்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுது அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி : 935.
அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

அது எந்த நேரம் என்பது தொடர்பில் பல கருத்துக்கள் கூறப்படுகின்றது அவை அனைத்தும் ஆதாரமற்றவை எனவே அந்நாள் முழுவதிலும் அதிகமாக பிரார்த்தனைகளில் நாம் ஈடுபட வேண்டும்.

இப்போது எங்களுக்கு ஏற்படுள்ள மிகப்பெறும் சோதனையால் இன்று வரை நோய்வாய் பட்டுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும் இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து எம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்குமாறும் அதிகமாக வெள்ளிக்கிழமை தினத்தில் ரஹ்மானிடம் நாம் பிரார்திப்போம் துஆக்கள் அங்கிகரிக்கப்படும் அந்த நேரத்தில் எமது பிரார்த்தனை நேற்பட்டு விட்டால் நிச்சியமாக நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான நிம்மதியான வாழ்கை எமக்கு மீண்டும் கிடைத்து விடும்.

6) வெள்ளிக் கிழமை செய்யக் கூடாதவை

வெள்ளி நோன்பு பிடிப்பதாக இருந்தால் அதற்கு முந்திய நளுடனோ பிந்திய நளுடனோ சேர்த்து பிடிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ» صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: "ஜும்ஆ தினத்தில் உங்களில் எவறும் நோன்பு பிடிக்க வேண்டாம், அதற்கு முந்திய நாளில் அல்லது பிந்திய நாளில் பிடித்தாலே தவிர."

(புஹாரி:1985, )

ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்பட்டால் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ } [الجمعة: 9]

ஜும்ஆ தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த விறைந்து வாருங்கள், மேலும் வியாபாரத்தை விட்டுவிடுங்கள்
(அல் ஜும்ஆ: 9)

ஜும்ஆவுடைய அதான் கூறப்பட்ட பின்னர் உள்ளூரில் இருப்போர் வியாபாரத்தில் ஈடுபடுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான் ஜும்ஆ கடமையில்லாத பிரயாணிகள் மீதும் நோயாளிகள் மீதும் நிர்பந்த சூழலில் உள்ளோர் மீதும் அது குற்றமில்லை அவர்களின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

உள்ளூரில் இருக்கும் நாம் பரவக்கூடிய Covid19 என்ற வைரஸின் அச்சத்தால் நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி அரசு எடுத்திருக்கும் முடிவகளுக்கு அமைய நிர்பந்த சூழ்நிலை காரணமாகவே ஜும்ஆ தொழுகையை கைவிட்டுள்ளோம் இந்த காலகட்டத்தில் ஜும்ஆவை விட நாம் சலுகையளிக்கப்பட்டுள்ளோம். எனவே எமது தேவைகளுக்கு ஏற்ப்ப வியாபார நடவடிக்கை களை மேற்கொள்வதில் தடையில்லை.

சோதனை நிறைந்த இந்தக்காலத்தில் குடும்பம் சகிதம் லுஹருடைய நேரத்தை தொழுவதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஸலவாத்து சொல்வதிலும், துஆ கேட்பதிலும் களிப்பது விரும்பத்தக்க காரியமாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

📌குறிப்பு:
ஜும்ஆ உரை மற்றும் ஜும்ஆ தொழுகையுடன் தொடர்புபட்ட சட்டதிட்டங்கள் எதையும் இங்கே நான் பதிவு செய்ய வில்லை இன்றைய காலத்துக்கு தேவையான

சட்டங்களுன் இவ்வாக்கம் சுருக்கப்பட்டுள்ளது.

நட்புடன்:
இன்திகாப் உமரீ

http://www.islamkalvi.com/?p=124136    

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பயனுள்ளஅற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும்  உண்டாகும்.

சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப்  பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும்  உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை,  பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/useful-wonder-natural-medicine-tips-120041300053_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

வியாழன், 29 ஜூலை, 2021

அழகுபராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்...!!

அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றை பராமரிக்கப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை கழுவும்போது அரிசி கழுவிய நீரால் முகத்தை கழுவ வேண்டும். அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை இறுக செய்திடும்.

அரிசி கழுவிய நிறை தினமும் பேஷியல் க்ளிசராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை  துடைத்திடுங்கள். சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.

கூந்தல் அதிக வறட்ச்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அப்போது அரிசிகளுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து

பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

அரிசி கழுவிய நீரை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக  கிடைக்கும்.

அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள்  வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/rice-washing-water-for-beauty-care-120041500019_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

இரவு நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்.

சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. 10 நிமிட நடை பயிற்சியில் வளர்ச்சிதை மாற்ற...

Popular Posts