லேபிள்கள்

சனி, 16 மே, 2020

அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி! -(01)

S.A Sulthan February
மறுமை நாளில் தன் அடியார்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், பல விதமான சிறப்புக்களையும், அந்தஸ்துக்களையும் வழங்குகின்றான். தன் அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குதல், தவ்பா செய்த தன் அடியார்களின் பாவங்களை நன்மையாக மாற்றுதல், பிறரின் குறைகளை மறைத்த, தன் அடியார்களின் குறைகளை உயர்ந்தோன் அல்லாஹ் மறைத்துவிடுதல் போன்ற அந்தஸ்துகளில் தன் அடியார்களுக்கு அல்லாஹ் ஒளியை வழங்க இருப்பதும் அந்தஸ்துகளில் ஒன்றாகும்.
மறுமை நாளில் அல்லாஹ் யாருக்கு ஒளியை (பிரகாசத்தை) வழங்குகின்றானோ, அவர்கள்தான், நேர்வழி பெற்றவர்களும், சுவனத்திற்குள் பிரவேசிக்கக் கூடியவர்களுமாவார்கள்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰٮكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۚ
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய (ஒளி) பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) "இன்று உங்களுக்கு நற்செய்தி சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் இது தான் மகத்தான வெற்றியாகும்" (அல்குர்ஆன்:57:12)
يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْۚ قِيْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاؕ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌؕ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُؕ
அந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும், பெண்களும் ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டவர்களை பார்த்து: "எங்களை சிறிது கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பயனடைந்து கொள்கிறோம்" என்று கூடுவார்கள். உங்களின் பின் திசையிலிருந்து ஒளியைத் தேடுங்கள் என்று அப்போது அவர்களுக்குக் கூறப்படும். பிறகு, அந்த இரு சாராருக்கும் மத்தியில் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (அல்லாஹுவின்) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் – (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும். (அல்குர்ஆன்: 57:13)
يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَ تَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِىُّ حَتّٰى جَآءَ اَمْرُ اللّٰهِ وَ غَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
அவர்கள் இறைநம்பிக்கையாளர்களை அழைத்து நாங்கள் (உலகத்தில்) உங்களுடன் இருக்கவில்லையா?" என்று கேட்பார்கள். ஆம் "உண்மைதான்; எனினும் நீங்களே உங்களைக் குழப்பிக்கொண்டும், (நல்லவர்களுக்கு) கேடு ஏற்படுவதை) எதிபார்த்துக்கொண்டும் இருந்தீர்கள். (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை (மரணம்) வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மதிமயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்" என்றும் இறை நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 57:14)
இந்த மூன்று இறைவசங்களும் சூரா அல்ஹதீத் 57-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பெற்றது என்பது பெருமப்பாலான அறிஞர்களின் கூற்றாகும்.
அதாவது மறுமை நாளின் மிகப்பெரும் மைதானங்களில் நிகழவிருக்கும் திடுக்கிடச் செய்யும் அமளி துமளிகளைப் பற்றியும், கடுமையான நிலஅதிர்வுகளைப்பற்றியும், அங்கு ஏற்படவிருக்கும் மோசமான விஷயங்கள் பற்றியும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறும் அறிவிப்புகளாகும் இது!
இந்த மூன்று வசங்களுக்கும் முந்திய வசனங்களில் தர்மம் செய்பவர்களுக்கு கிடைக்க இருக்கும் வெகுமதிகளையும், அதனால் அவர்கள் அடையவிருக்கும் சுகங்களையும் அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டு, இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளியைப்பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.
இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளி என்பது என்ன? அதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்கள் என்ன? மறுமையில் இருளில் சிக்கித்தவிக்கும் நயவஞ்சகர்கள் மற்றும் இறைநிராகரிப்பாளர்களுக்கு ஏற்படப்போகும் இழிவு என்ன என்பதையும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) மற்றும் நபித்தோழர்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் ஆகியோரின் விளக்கப் பின்னணியில் இருந்தும், இமாம் இப்னு கதீர் அவர்களின் விரிவுரையில் இருந்தும் நாம் விளங்குவோம் இன்ஷாஅல்லாஹ்..,


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 மே, 2020

கல்வியும் ஒழுக்கமும்

இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை,வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
அல்லாஹ் கூறினான்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.62:2
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ஒழுக்கத்திற்கும் நற்குணத்திற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
அல்லாஹ் கூறினான்:
நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.68:4
அதிய்யா ஓஃஃபி رحمه الله அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் மகத்தான ஒழுக்கத்தின் மீது இருக்கின்றீர்கள் என்று கூறினார்.(பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒழுக்கம்,மற்றும் நற்குணத்தின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தார் .
நான் (சஅத்) "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா رضِي الله عنها அவர்கள், "நீர் குர்ஆனை ஓதவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கி றேன்)" என்றேன். ஆயிஷா رضِي الله عنها அவர்கள்,"நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது" என்று கூறினார்கள்.நூல் ஸஹீஹ் முஸ்லிம் 1357
இஸ்லாம் மனிதன் தன் வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களைக்குறித்து பேசுகிறது என்றாலும் நாம் இங்கே இக்கட்டுரையில் கல்விகுறித்து மார்க்கம் கூறியுள்ள ஒழுக்கத்தை மட்டுமே பார்க்க உள்ளோம்.
ஒழுக்கமில்லாதவனுக்கு கல்வியில்லை என்று அரபியில் கூறுவார்கள்
கல்வியைத்தேட க்கூடியவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கமில்லாமல் கல்வியைப்பெறுவதால் எவ்வித நன்மையுமில்லை கல்வியைத்தேடுபவர்களின் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும்.
நிச்சயமாக 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.ஸஹீஹுல் புஹாரி 1
நிய்யத் சரியில்லாமல் ஒருவர் கல்வியைப்பெற்றால் அந்த கல்வி அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லாது
மறுமையில் முதலாவதாக தீர்ப்பளிக்கப்பட்டு நரகில் நுழைவிக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் கல்வியைக் கற்றவர் என்று அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ கூறினார்கள்
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள் மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ்வின் திருப்தியை நாடி கற்கவேண்டிய கல்வியை யார் உலகத்தில் ஏதாவது ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு கற்பானோ அவன் சொர்க்கத்தில் வாடையைக்கூடப்பெறமாட்டான்.அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் சுனன் அபீதாவூத் 3664
கல்வியைத்தேடக்கூடியவர் பேண வேண்டிய ஒழுக்கத்தை மூஸா عليه السلام அவர்கள் ஹிள்ரு عليه السلام அவர்களிடம் கல்வியைத்தேடிச்செல்லும் போது பின்பற்றியதை அல்லாஹ் சூரத்துல் கஃஹ்ஃப் என்ற அத்தியாயத்தில் கூறிக்காட்டுகிறான் பார்க்க சூரத்துல் கஃஹ்ஃப் 60 முதல் 83 வரையுள்ள வசனங்கள் .
ஆசிரியரிடம் பாடம் பாயிலும் போது மாணவர்கள் அவசரம் காட்டக்கூடாது பொறுமை காக்க வேண்டும் ஆசிரியர் பாடத்தை நடத்தி முடிக்கும் முன் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ஒழுக்கத்தை மாணவர்கள் இந்த நிகழ்விலிருந்து பெற வேண்டும்
மாணவன் ஆசிரியரிடம் கல்வி பயிலும் போது ஆசிரியருக்குமுன் பணிவோடு அமரவேண்டும் என்பதை ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது அதில் வந்துள்ளது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களிடம் எண்ணிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறிய போது மக்கள் கேள்விக் கேட்க்க அஞ்சினார்கள் அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரின் முட்டுக்கால்களுக்கு முன் அமர்ந்து கேள்விகளைக்கேட்டார்கள் ஸஹீஹ் முஸ்லிமில் 10
ஒழுக்கமில்லாத கல்வி காகித பூ போன்றது அது மணம் தராது
ஒழுக்கமில்லாமல் கல்வி பயில்வதனால் எவ்வித பயனுமில்லை என்வே தான் இந்த சமுதாயத்தின் சிறந்த முன்னோர்கள் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி தேடினார்கள் நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் தம்மை ஒர் ஆசிரியராக அறிமுகப்படுத்தினார்கள் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைக்குறித்து கூறும்போது அவரை விட சிறந்த ஒர் ஆசிரியரை நாங்கள் கண்டதில்லை என்றார்கள்
இமாம் இப்னுல் முபாரக் رحمه الله அவர்கள் கூறினார் முப்பது வருடம் நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன் அதன் பின் இருபது வருடம் கல்வி பயின்றேன்
நல் அறிஞர்கள் கல்வியை கற்பதற்கு முன் ஒழுக்கத்தை கற்றுக்கொள்பவர்களாக இருந்தார்கள் .காயத்துன் நிஹாயா ஃபி தபக்காத்தில் குர்ரா 1/446
இமாம் இப்ராஹிம் பின் ஹபீப் பின் ஷஹீத் رحمه الله கூறியதாவது என்னுடைய தந்தை என்னிடம் கூறினார் எனதருமை மகனே நீ ஃபுகஹாக்களிடமும் உலமாக்களிடமும் சென்று அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள் அவர்களின் ஒழுக்கத்தையும்,நற்பண்புகளையும்,அழகிய வழிமுறையையும் எடுத்துக்கொள்ளுங்கள் நீ அதிகமான ஹதீஸ்களை கற்றுக்கொள்வதை விட அது தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார்கள் .அல்ஜாமிஃ லில் அஹ்லாகிர் ராவி வ ஆதாபிஸ் ஸாமிஃ 1/80
இமாம் அப்துல்லாஹ் பின் வஹப் رحمه الله அவர்கள் கூறினார் நாங்கள் இமாம் மாலிக் رحمه الله அவர்களிடமிருந்து கற்ற கல்வியை விட அதிகமாக அவரின் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டோம் .ஸியரு அஃலாமின் நுப்லா 8/113
இமாம் இப்னுல் முபாரக் رحمه الله அவர்கள் கூறினார் என்னிடம் ஆரம்பம் முதல் இது நாள் வரையுள்ள தலைமுறையில் கல்வியை கற்ற ஒரு மனிதரைப்பற்றி கூறப்பட்டு அவரை நான் சந்திக்க முடியாமல் போனாலும் நான் அதற்காக வருத்தப்படமாட்டேன் ஒழுக்கமுடைய மனிதனைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்திக்க முடியாமல் போனால் அதற்காக நான் வருத்தப்படுவேன் .அல் அதாபுஷ் ஷரஈய்யா 4/207
ஒழுக்கமில்லாதவர்களிடம் கல்வி பெறலாமா?
மார்க்கத்திற்கு முரணான வெளிப்படையான ஒழுக்கக்கேடுகளை செய்யக்கூடியவர்களிடம் கல்வி கற்கக்கூடாது வெளிப்படையான ஒழுக்ககேடுகள் என்பது பொய்யுரைப்பது,மோசடி செய்வது,ஹராமான காரியங்களில் ஈடுபடுவது,
அல்லாஹ் கூறுகிறான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். 49:6
கல்வியைப்போதிப்பவர்கள் நல்லவர்களா தீயவர்களா என்று ஆராய்ந்து பார்த்து தான் அவர்களிடமிருந்து உபதேசத்தை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஒழுக்கமில்லாதவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பெயரில் பொய்யையும் புரட்டையும் மார்க்கமாக ஆக்கி மக்களை வழிகெடுத்து விடுவார்கள்
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள் என் சமுதாயத்தின் மீது நான் அதிகம் அஞ்சுவது வழிகெடுக்கும் தலைவர்களைத்தான் .நூல் அபூதாவூத் 4252
மேலும் கூறினார்கள் உங்கள் மீது நான் அதிகம் பயப்படுவது நாவன்மைமிக்க நயவஞ்சகனின் தர்க்கத்தை தான். நூல்:இப்னு ஹிப்பான் 80,ஷுஃபுல் ஈமான் 1639
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த கல்வியை நீதமானவர்கள் சுமந்துகொள்வார்கள் அவர்கள் வரம்பு மீறுவோர்களின் கைய்யாடல்களையும் பொய்யர்களின் புறட்டு வாதங்களையும் மடையர்களின் தவறான விளக்கங்களையும் நீக்குவார்கள் .அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் தப்ரானி 599 அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 20911
இமாம் மாலிக் رحمه الله அவர்கள் கூறினார்கள்
அறியாமையை பகிரங்கப்படுத்தும் மடையன்
மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்
மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன் இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே
நல்லவர்,வணக்கசாலி,சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள் நூல் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 மே, 2020

வெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ! அப்புறம் ஆபத்தில் சிக்கி தவிக்காதீங்க !

காலையில் தூக்கத்தை விட்டு எழுந்தவுடன், தினமும் நான் காபி அல்லது டீ பருகுவோம். அவ்வாறு தினமும் பருகவது உடலுக்கு நல்லதல்ல என்று உணவியல் நிபுணர்கள் கருத்தது தெரிவித்துள்ளனர். காலையில் எழுந்தவுடன் நீராக்கங்கள் சாப்பிடுவது நல்லதாம். குறிப்பாக வெதுவதுப்பான நீரை 2 டம்ளர் அருந்துவது குடல் சுத்தமாக உதவுகிறதாம்.

அதனுடன் தேன் கலந்து குடித்தால் அதைவிட பல மடங்கு பயன் அதிகம் என்கின்றனர். தோல் பளபளப்பு கூடி, இளமை தோற்றம் கிடைக்கும் என்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடல் முன் எப்போதும் இல்லாத்து போல புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
வெந்நீரில் தேன் கலந்து பருகுவதால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வெகு விரைவில் தீர்ந்து, நுரையீரல் கழிவுகள் வெளியேறி சுவாசம் சீராகிறது. இதனால் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவு அதிகரித்து, இரத்தம் சுத்தப்படுகிறது. இதனால் உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.

மேலும் தூக்கமின்மை நீங்கி, நல்ல தூக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்து தேவையான சக்தியை உருவாக்கி அதி அற்புத உணர்வை நமக்களிக்கிறது.
உடல் குளிர்சியை ஏற்படுத்தி, இரத்த சர்க்கையை கட்டுக்குள் வைத்து, வாயுத்தொல்லை, அஜீரக் கோளாறுகளை தீர்த்து ஒரு அற்புதமான பணியை செய்த தரும் உணவுப்பொருள் வெந்தயம். தலைக்கு அரைத்து தேய்த்துக் குளித்தால் அன்று தலைமுடிக்கு தீபாவளி கொண்டாடியது போல ஒரு புத்துணர்ச்சி கிடைத்து, அதி அற்புத உணர்வை பெறும் வாய்ப்பை கொடுப்பது வெந்தயம். இதய நோயிலிருந்து காத்து நமக்கு ஒரு பாதுகாப்பு வீரன் போல செயல்படும் உணவு வெந்தயம்.

இதை முறையாகப் பயன்படுத்தினால் உடலில் உள்ள பல பிரச்னைகள் தீர்ந்து விடும். அன்றாட உணவில் சிறிது வெந்தயம் கலந்திருந்தால் உடல் பளபளப்பு, தலை முடி பளப்பு உருவாக்கி, ஆளே மாறி விடும் அளவிற்கு உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு அரு மருந்து வெந்தயம்.
முளைக்கட்டிய தானிங்கள் எடுத்துக்கொண்டால் உடல் வனப்பு கூடும். எதிர்ப்புச் சக்தி அபிரதமாக பெருகி, நம்மை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்திடும். இதய நோய் வராமல் பாதுகாத்திடலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, இதய நாளங்களில் அடைப்பு வராமல் செய்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்தி, சர்க்கை நோய் வாரமல் செய்கிறது.

குழந்தைகளுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உகந்தது. அலர்ஜி, வாயுத்தொல்லை வராமல் செய்கிறது. ஆக மொத்ததில் ஒரு சிறந்த அருமருந்து, அதி சிறந்த உணவு முளைக்கட்டிய சிறுதானிய உணவுகள்.
காலையில் எழுந்தவுடன் காய்கறிகளை ஜீஸ் போட்டு அருந்துவது குடலுக்கு, உடலுக்கி மிக மிக நல்லது. அல்சர் பிரச்னை தீருகிறது. அற்புதமாக இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது. இரத்தத் தில் உள்ள அசுத்தங்கள் நீங்கி, இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவைகளை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்:

வெறும் வயிற்றில் தெரியாமல் கூட சாப்பிடக்கூடாத உணவுகள் என்று சில இருக்கின்றது. அவற்றை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம். ஆரஞ்சு, வாழைப்பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது குடலுக்கு தீங்கு செய்து விடும். சாப்பிட்டப் பிறகு தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றை எடுத்துக்கொள்வதால் அதில் உள்ள ஆசிட், குடலிலள்ள ஆசிட்டுடன் கலந்து குடல் புண்களை அதிகரிக்கச் செய்து விடும். எனவேதான் இதை மறந்தும் கூட வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவை தவிர்த்து, மற்ற பழங்களை சாறாகவும்,வெறும் வயிற்றில் சாப்பிட்டும் வரலாம். இதனால் சரு ம ம் பளபளப்பு அடைந்து, உடல் தேவையான சக்தியைப் பெறும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts