லேபிள்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை

45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை
பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது  தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய்  நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல  பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைட்டமின்களை 45 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள  வேண்டும்.

45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது  இதயத்தில் பிரச்னை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த இறைச்சி, கானாங்கெளுத்தி  மீன் வகைகள் மற்றும் முட்டை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின்களாகும். ஏனெனில்  இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை  தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.
தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல்,  சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டியின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் ஞி 10 45 வயதான பெண்கள்  அவசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமினானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.
இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள்.  எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 45 வயதைக் கடக்கும் போது  பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில்  அதிகம் இருக்கும். அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு  மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்!

பற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்!
பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக்காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்போது தான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை, மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும் பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலாசனைப்படி சுத்தம் செய்வது அவசியம்.

பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரல் பிரச்சனைஇவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறார்களோ, அவ்வளவு துர்நாற்றம் வீசாது.
பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக்கொள்ளலாம்.
சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும். இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படுத் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின் நிறம் மாறும் என்பதால் எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம் என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.
செய்யக்கூடியவை.
தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப்பொருட்களை 'பிளாஸ்' கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிபட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம். பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப் பிரச்சனை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.
செய்யக்கூடாதவை
கடினமான உணவுப்பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக்கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவுகளை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக்கூடாது.
புகை தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை பிளாஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது
காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதயத்தில் ரத்தம் உறையும் நோய் 'த்ராம்போசிஸ்' எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:
உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.
வெள்ளை நிற பற்கள் தான் ஆரோக்கியமா?
திடீரென நம் பற்களை வெள்ளை நிறத்தில் பளீரிட வைப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன டூத் பேஸ்ட் நிறுவனங்கள். 'ஒயிட்னர்  பேஸ்ட்' என்ற பெயரில் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட்டுகள் இங்கு அறிமுகமாகி உள்ளன. டென்ட் டிஸ்ட்டுகள் பரிந்துரைக்கும் பேஸ்ட்டுகள்  டென்ட்டிஸ்ட்டுகளே உபயோகிக்கும் பேஸ்ட்டுகள்என எல்லாமும் சேர்ந்து நம் பற்களை வெள்ளையாக்க வாக்குறுதி தருகின்றன.
விளம்பர வாக்குறுதி நிறைவேறாததால் தனியாக டென்ட்டிஸ்ட்டுகளைப் பார்த்து பற்களை பிளீச்சிங் செய்து வெள்ளையாக்குபவர்களும் இப்போது  பெருகிவிட்டார்கள். ஆனால், ''இதெல்லாமே வேஸ்ட், ஆரோக்கியமான பற்கள் என்பவை மஞ்சளாகத்தான் இருக்கும்'' என்கிறார்கள் இன்றைய  மருத்துவ நிபுணர்கள். ''அப்படியா?'' என களத்தில் இறங்கி விசாரித்தோம்
''ஆம்; பற்களின் மஞ்சள் தன்மையைப் பார்த்து அதை ஏதோ நோய் என்றே நிறைய பேர் நினைத்து விடுகிறார்கள். பல்லின் எனாமல் எனும் வெளிப்புற  அடுக்கும், டென்டின் எனும் உட்புற அடுக்கும் வலிமையாக இருப்பதன் அடையாளமே மஞ்சள் நிறம்'' என்கிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி  பல் மருத்துவப் பிரிவின் பேராசிரியரான பாலாஜி.
''இதை விட முக்கியம், டூத் பேஸ்ட்களால் பற்களுக்கு வெண்மை நிறத்தைத் தர முடியாது என்பதுதான். வெள்ளையாகும் வரை விட மாட்டேன் என்று  பற்களை முரட்டுத்தனமாக நீண்ட நேரம் தேய்த்தால், எனாமல் தேய்ந்து பல் பலவீனமாவதும் பற்கூச்சம் ஏற்படுவதும்தான் மிஞ்சும்'' என எச்சரிக்கும்  பாலாஜி, 'பற்களை எப்படித் துலக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை' என ஆதங்கப்படுகிறார்.
''பற்களில் 'எனாமல்', 'டென்டின்', 'பல்ப்' என்று மூன்று முக்கிய அடுக்குகள் உண்டு. இதில் 'எனாமல்' தேய்ந்தால், 'டென்டின்' வெளிப்படும். பல்  கூச்சத்துக்குக் காரணம் இதுதான். இந்த பல் கூச்சத்தைப் போக்க, இன்னும் நன்றாக பல் துலக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மக்கள், கிரைண்டர்  அரைப்பதைப் போல நீண்ட நேரத்துக்கு பற்களை இழுஇழுவென இழுக்கின்றனர். இது பற்களை மேலும் பலவீனப்படுத்திவிடும்.
நாங்கள் பல் துலக்குதல் என்பதை 'மணிக்கட்டு செயல்' என்கிறோம். அதாவது, மணிக்கட்டை மட்டும் பயன்படுத்தி மெதுவாக செய்ய வேண்டிய  செயல் அது. மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலுமாகத்தான் பிரஷ்ஷை அசைக்க வேண்டும். இருபுறமும் உள்ள கடவாய்ப் பற்களை மட்டுமே நேராகத்  துலக்க வேண்டும், அதுவும் மென்மையாக! பலரும் இப்படிச் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் மனதில் வேரூன்றிவிட்ட வெண்மைப்  பற்களுக்கான மோகம்தான்'' என்கிறார் பாலாஜி.
அந்த மோகத்தால் நாம்தான் பற்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறோம். ரசாயனத்தால் பற்களைக் குளிப்பாட்டி வெளுக்க வைக்கும் பிளீச்சிங்  அதில் முக்கியமானது. சருமநோய் மற்றும் அழகியல் பிரிவு மருத்துவ நிபுணர் ஜி.ஆர்.ரத்னவேலிடம் அந்த பிளீச்சிங் பற்றிப் பேசினோம். ''பற்களுக்கான பிளீச்சிங் என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏதேனும் ஃபங்ஷன் என்றால் முகத்தை பிளீச் செய்வது போல் பற்களையும்  ப்ளீச்சிங் செய்யத் துவங்கிவிட்டனர்.
இதை எப்போதாவது செய்தால் பரவாயில்லை. அடிக்கடி செய்தால் ஆபத்து'' என்கிறார் அவர். ''பிளீச்சிங் செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளன.  அவை எல்லாவற்றிலும் ஓரளவு கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமிலத் தன்மை உள்ள அந்த கெமிக்கல்கள் பற்களில் உள்ள கறைகளையும்  அழுக்குகளையும் நீக்கி விடுவதால்தான் வெண்மை நிறம் கிடைக்கிறது. அந்த கெமிக்கல்களால் ஈறுகள் உட்பட மற்ற பகுதிகள் பாதிக்கப்படாதபடி  நிபுணர்களால் கவனமாகச் செய்யப்படுவது இந்த பிளீச்சிங்.
தற்போது அறிமுகமாகியுள்ள ஒயிட்னர் பேஸ்ட்களால் பற்களுக்கு பிளீச்சிங் செய்வது போன்ற வெண்ணிறம் கிடைக்காது. ஆனாலும் இவற்றில்  அமிலத் தன்மை அதிகம் இருக்கும். இதனால் அதிக நேரம் துலக்கினால், பற்களில் உள்ள எனாமல் தேய்வதோடு, ஈறுகள் உள்ளிட்ட சருமப் பகுதியும்  பாதிக்கப்படும். இதேபோல வாய்ப் புத்துணர்ச்சியை முன்வைத்து விற்கப்படும் ஜெல் வகை பேஸ்ட்களிலும் அமிலத் தன்மை உண்டு. வாய்ப்புண்,  முகத்தில் வலி என என்னிடம் வரும் நோயாளிகளில் பலர், பற்களை அதிக நேரம் துலக்குபவர்களாக இருக்கிறார்கள்'' என்கிறார் அவர் கவலையோடு.
இனியாவது, 'புழுங்கலரிசி பல்லழகி' என்று வர்ணனையை மாற்றிப் போட்டு மக்கள் மனதை கவிஞர்கள் மாற்றுவார்களாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

செய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!

செய்யிதுல் இஸ்திஃபார் தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்:
(நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான். (71:10-12)
அல்லாஹ் கூறுகின்றான்:
(இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُلَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَمنْبِىْ فَا اغْفِرْلِى فَاِنَّه لَا يَغْفِرُ الذَّنُوْبَ اِلَّا اَنْتَ

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பி லா இலாஹ இல்லா அன்த்த க(KH)லக்த்தனீ  வ அன அ(B)ப்துக்க  வ அன அலா அஹ்திக்க, வ வஃஅதிக்க மஸ்ததஃது அஊது பி(B)க்க மின் ஷர்ரி மா ஸனஃது  அ(B)பூ உ லக்க பி(B) நிஃமத்திக்க அலைய்ய, வ அ(B)பூ உ  பி(B) தன்பீ ஃபஃ(F)ஃபிர்லீ (F)ஃபஇன்னஹு லா யஃ(F)ஃபிருத் துனூ(B)ப இல்லா அன்த்த'
என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: யா அல்லாஹ்! நீயே எனது இரட்சகன்! நிச்சயமாக உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் யாருமில்லை, நீயே என்னைப் படைத்தாய்! மேலும் நான் உனது அடிமை!நான் என்னால் இயன்ற அளவு உனது உடன்படிக்கையிலும், வாக்குரிதியிலும் நிலைத்திருக்கிறேன். நான் செய்த கெடுதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன். எனது பாவத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில், நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிக்கக்கூடியவன் யாருமில்லை!
இதனை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் இதனை யார் காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 11 ஏப்ரல், 2018

இப்லீசின் சதிவலைகள்!

இப்லீசின் சதிவலைகள்!

இப்லீசின் சதிவலைகள் ஆறு! அவைகள்:
(1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது!
இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான்.
(2) முதல் முயற்சியில் தோல்வி அடைந்த இப்லீஸ் தன்னுடைய இரண்டாவது முயற்சியாக தனக்கு விருப்பமான பித்அத்களை மார்க்கம் என்ற பெயரால் செய்வதற்கு தூண்டுகின்றான். ஏனெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதன் மூலம் அந்த வழிகேட்டினைச் செய்ய வைத்து அவனை நரகத்திற்கு சொந்தக்காரனாக்கி விடுகின்றான்.


இதில் இப்லீஸ் வெற்றி கண்டால் இந்த புதுமையைப் பரப்புபவர்களில் ஒருவனாக அவனை ஆக்கிவிடுகின்றான்.
(3) ஒருவர் ஷிர்க் மற்றும் பித்அத்களை புறக்கணித்து வாழ்வதில் உறுதியுடையவராக இருந்தால், அதில் தோல்வி அடையும் இப்லீஸ் அதோடு நின்றுவிடுவதில்லை! மூன்றாவதாக அவரை மற்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகின்றான்.
(4) அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய அடியானாக அவன் இருந்தால் நான்காவது முயற்சியாக அவனை சிறு பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகின்றான்.
சிறு பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டே வரும் ஒருவனின் தீமைப்பதிவேட்டின் கணத்தைக் கூட்டுவதன் மூலம் அவனது மறுமை வாழ்வை சிதைப்பது தான் இப்லீசின் எண்ணம்!
(5) ஒரு அடியான் சிறு பாவங்கள் செய்வதைக் கூட தவிர்ந்து வாழ்பவனாக இருப்பின் அதில் தோல்வி கண்ட இப்லீஸ் அத்தோடு நின்றுவிடாமல் ஐந்தாவது முயற்சியாக ஒருவனை மறுமையில் எவ்வித தண்டனையோ அல்லது நன்மைகளையோ பெற்றுத்தராத அதே நேரத்தில் மார்க்கம் தடை செய்யாத செயல்களைச் செய்வதில் அவனை மூழ்க வைக்கின்றான். அதன் மூலம் அவன் மறுமை வாழ்வு சிறக்க செய்ய வேண்டிய சிறந்த அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.
(6) இதிலும் ஒரு அடியான் உறுதியாக இருப்பின் இப்லீஸ் தனது ஆறாவது முயற்சியாக குறைந்த நன்மைகளைத் தரக்கூடிய அமல்களை மிகப்பெரிய அமல்களாக அந்த அடியானுக்கு காட்டி அதிலேயே அவனை மூழ்க வைத்து அதன் மூலம் அளப்பரிய நன்மைகளைத் தரக்கூடிய அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.
இந்த சதிவலையில் அநேகர் விழுந்து விடுவர்! ஏனெனில் அவர்களின் நம்பிக்கை என்னவெனில் ஷைத்தான் எப்போதுமே நன்மையான காரியத்தை ஏவமாட்டான் என்பது! இறையருள் உடையவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த சதிவலையை உணர்ந்து அளப்பரிய நன்மைகளைத் தரும் மற்ற அமல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்குவர்.
ஒரு அடியான் ஷைத்தானின் மேற்கண்ட ஆறு சதிவலைகளிலிருந்தும் இறையருளைக் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டான் எனில், இப்லீஸ் தன்னுடைய படைகளையும் மனிதர்களில் தன்னைப் பின்பற்றியவர்களையும் ஏவிவிட்டு இறைவனின் ஏவல் விலக்கல்களை முறையாகப் பேணி வாழும் அந்த அடியாரை 'வழிகெட்டவர்' என்றும் 'மார்க்கத்திற்கு முரணானவர்' என்றும் மக்கள் முன் பறைசாற்றி அவரை விட்டும் மக்களை தூதமாக்கி அதன் மூலம் அவரின் போதனைகள் மக்களைச் சென்றடையாமல் இருக்கச் செய்வதோடல்லாமல் அவரையும் பலவீனப்படுத்தி இப்லீஸைப் பின்பற்றுபவர்களை பலப்படுத்துகின்றான்.
எப்போதாவது ஒரு முஃமின் இப்லீசின் விடாத முயற்சியால் சோர்வடைந்து விட்டால் அவனை மீண்டும் தன் வலையில் இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவன் தன்னுடைய பட்டாளத்தோடு முழு வீச்சில் எந்நேரமும் செயல்பட்டுவருவதால் ஒரு முஃமின் அவன் இறக்கும் வரையிலும் இப்லீசோடு போர் புரியும் நிலையிலேயே இருக்க வேண்டியதிருக்கிறது!
தப்ஸீர் இப்னு கைய்யூம் (ரஹ்)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 9 ஏப்ரல், 2018

நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!

நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!

ஒரு திருமணம். உறவினர்களை அழைத்திட வேண்டும். ஆனால் அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில்!
என்ன செய்கிறார்கள் நம்மவர்கள்? கார் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது.
மயிலாடுதுறையில் திருமணம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காரைக்கால் நாகூர் வரை ஒரு மார்க்கம். சீர்காழி சிதம்பரம் வரை இன்னொரு மார்க்கம். ஆடுதுறை கும்பகோணம் வரை இன்னொரு மார்க்கம். பூந்தோட்டம் திருவாரூர் என்று இன்னுமொரு மார்க்கம்.
இதில் வேடிக்கை என்னவெ

ன்றால் இந்த மார்க்கங்களுக்கெல்லாம் கட்டுப்படாத ஊர்களில் உறவினர்கள் இருந்தால்
ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்று அலைந்து திரிகிறார்கள் பெற்றவர்கள்.
உறவினர் ஒருவர் 150 கிமீட்டருக்கு அப்பால். அந்த ஒரே ஒரு உறவினரை அழைப்பதற்காக 300 கிமீ பயணம் மேற்கொள்கிறார்கள் தாயும் தந்தையும்.
இப்படி திருமணத்துக்கு அழைப்பதற்கென்று நாட்கணக்கில் வாரக்கணக்கில் சிரமம் எடுத்துக்கொள்கிறது சமூகம்.
சரியாக உண்ணாமல், சரியாக தூங்காமல் அவதிப்படுகிறார்கள் பெற்றவர்கள். ஒருவருக்கு மாரடைப்பே வந்து விட்டது சமீபத்தில்!
நேரில் வந்து அழைத்தால் தான் வருவார்களாம். "வேணும்னா வாங்க!" என்பது தான் அவர்களின் வாதம்!
இந்த முறையை மறு பரிசீலனை செய்தால் என்ன என்பதற்கே இந்தப் பதிவு.
நண்பர் ஒருவர் வெளியூரில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு பத்திரிகை வைக்கச் சென்ற போது அந்த வீடு பூட்டியிருந்ததாம். கதவிடுக்கில் பத்திரிகையை செருகி வைத்து விட்டு வந்து விட்டாராம் அவர். ஊருக்கு வந்து போன் செய்தாராம். அவர் சொன்னாராம்: இப்போது நான் வீட்டில் தான் இருக்கிறேன் இன்னொரு தடவை நேரில் வாருங்கள் என்றாராம்!
இன்னொரு நண்பர். அவர் மகளுக்குத் திருமணம். அவருடைய உறவினர் ஒருவர் வீட்டிலும் திருமணம். உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற நண்பர் தன் மகளின் திருமணப் பத்திரிகையை திருமண மண்டபத்திலேயே வைத்துக் கொடுக்க என்ன இங்கே வைத்து பத்திரிகையைக் கொடுக்கிறீங்க என்று பத்திரிகையையே வாங்க மறுத்து விட்டாராம் அவர்!
அழைக்கப்பட வேண்டியவர் சம்பந்தம் செய்து கொண்ட உறவினராக இருந்து விட்டால் இன்னொரு பிரச்னை. நேரில் வந்து அழைக்காவிட்டால் மருமகனையோ மருமகளையோ கூட அனுப்பாமல் தடுத்து விடுகிறார்களாம் சம்பந்தி புரத்து சொந்தங்கள்.
நேரிலேயே வந்து அழைப்பதைத்தான் மரியாதையின் குறியீடாகப் பார்க்கிறது சமூகம். இதில் மரியாதை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது! வெளியிலே தான் சிரித்துக் கொள்கிறார்கள்; உள்ளுக்குள்ளே கடுமையான வன்மம்! இதில் எங்கிருக்கிறது மரியாதை?
இந்தப் போலி மரியாதைக்கு பயந்து அலை அலை என்று அலைகிறது சமூகம். இந்த அலைச்சலால் ஏற்படுகின்ற சிரமங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு!
அஞ்சல் வழியே பத்திரிகை அனுப்பி விட்டு தொலைபேசியில் நினைவூட்டி விட்டால் அது போதாதா இந்த சமூகத்துக்கு?
இன்னும் ஒரு படி மேலே போய் மின்னஞ்சல் வழியே அனுப்பி விட்டால் பத்திரிகை அடிக்கும் செலவையும் மிச்சப்படுத்தி விடலாம் தானே?
அதே நேரத்தில் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். நேரில் வந்து அழைக்க உறவினர்கள் சிரமப்படுவதைப் பார்க்கும் இவர்கள், பரவாயில்லை. மின்னஞ்சலிலேயே அனுப்பி விடுங்கள் நான் வந்து விடுகிறேன் இன்ஷா அல்லாஹ் என்று சொல்பவர்களும் நம்மில் உண்டு!
சுமார் முப்பது ஆண்டுகள் இருக்கும். என் தூரத்து உறவினர் ஒருவர் இப்படி செய்தார். திருமணப் பத்திரிகை அனைத்தையும் அஞ்சல் வழியே தான் அனுப்பி வைத்தார். பத்திரிகையுடன் ஒரு சிற்றேட்டையும் அச்சடித்து இணைத்திருந்தார் அவர்.
"நேரில் வந்து அழைத்திடும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே பத்திரிகையை அஞ்சல் வழியே அனுப்புவதாகவும், இதனை நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்."
அனைவரும் வந்து திருமணத்தைச் சிறப்பித்தது அன்றைய சமூகம்! ஆனால் அது ஏனோ மற்றவர்களால் பின்பற்றப் படாமலேயே போய் விட்டது.
இப்போது அதற்கு நேரம் வந்து விட்டது! புதிய தலைமுறை சிந்திக்கட்டும்!
பழசுகள் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை!
– S.A. Mansoor Ali, Nidur


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 7 ஏப்ரல், 2018

போலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிட...

போலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிட....
உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய புகாரினை

( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?



இதுபோன்ற சூழ்நிலையில் நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும். இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.
சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது.
இதற்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரர் நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 5 ஏப்ரல், 2018

உற்சாகமான விடாமுயற்சியே அதிர்ஷ்டம் என அழைக்கப்படும்!

உற்சாகமான விடாமுயற்சியே அதிர்ஷ்டம் என அழைக்கப்படும்!
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.



அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது" என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்" என்றாள்.

"இது எப்போது நடந்தது?" என்று கேட்டான். "அந்தக் காசு கிடைத்த மறுநாளே" என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.' என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!
______________________________________________________


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுகப்பிரசவம் சுலபமே!

சுகப்பிரசவம் சுலபமே!
 பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.
ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?
இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்

1. கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு
திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.
2. உணவை விரும்பு!
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.
3. எதைச் சாப்பிடலாம்?
முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும்.
கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!
4. குனி, வளை, நிமிர்!
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது.
அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.
5. சபாஷ் சரியான எடை!
கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான்.
ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.
6. படுக்கையும் உறக்கமும்!
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.
7. ஒரே மருத்துவர்!
பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.
8. தவறாத மருந்துகள்!
தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.
9. கூடாதுகூடாதுகூடவே கூடாது!
வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.
10. அகமே சுகம்!
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்' என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
நன்றி : விகடன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

மட்டனா?சிக்கனா? நீரிழிவுநோயாளிகளுக்கு எது நல்லது?

நீரிழிவு நோய் இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகி விட்டது. இந்த கோளாறில் , இரத்தத்தில் சர்க்...

Popular Posts