லேபிள்கள்

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

செய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!

செய்யிதுல் இஸ்திஃபார் தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்:
(நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான். (71:10-12)
அல்லாஹ் கூறுகின்றான்:
(இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُلَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَمنْبِىْ فَا اغْفِرْلِى فَاِنَّه لَا يَغْفِرُ الذَّنُوْبَ اِلَّا اَنْتَ

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பி லா இலாஹ இல்லா அன்த்த க(KH)லக்த்தனீ  வ அன அ(B)ப்துக்க  வ அன அலா அஹ்திக்க, வ வஃஅதிக்க மஸ்ததஃது அஊது பி(B)க்க மின் ஷர்ரி மா ஸனஃது  அ(B)பூ உ லக்க பி(B) நிஃமத்திக்க அலைய்ய, வ அ(B)பூ உ  பி(B) தன்பீ ஃபஃ(F)ஃபிர்லீ (F)ஃபஇன்னஹு லா யஃ(F)ஃபிருத் துனூ(B)ப இல்லா அன்த்த'
என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: யா அல்லாஹ்! நீயே எனது இரட்சகன்! நிச்சயமாக உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் யாருமில்லை, நீயே என்னைப் படைத்தாய்! மேலும் நான் உனது அடிமை!நான் என்னால் இயன்ற அளவு உனது உடன்படிக்கையிலும், வாக்குரிதியிலும் நிலைத்திருக்கிறேன். நான் செய்த கெடுதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன். எனது பாவத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில், நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிக்கக்கூடியவன் யாருமில்லை!
இதனை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் இதனை யார் காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts