லேபிள்கள்

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?


ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?
நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட் ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பலவகையான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் 'என்னவெல்லாம்' செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!



#1 திறந்தவெளி வைபை : பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

#2 சேர்ச் ஹிஸ்ட்ரி : ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியா : கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#3 போஸ்ட் அல்லது ட்வீட் : மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.

#4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் : வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#5 வீடியோவில் நடனம் : ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

ரஷ்யா : ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

#6 இன்டர்நெட் கமெண்ட் : சிரியாவில் இன்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.

#7 மொழிமாற்றம் : தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

#8 சூதாட்டம் : உலகின் பல நாடுகளிலும் ஆன்லைன்னில் சூதாடுவது சட்டப்படி குற்றமாகும்.

#9 ஃபைல் பரிமாற்றம் : ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்தது.

#10 ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் : அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் ஒருமுறை கைது சம்பவம் நடந்துள்ளது.
http://www.anbuthil.com/2016/02/online-safety-tips-2016.html
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 செப்டம்பர், 2017

மொபைல் டிப்ஸ்

மொபைல் டிப்ஸ்
* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும். 
* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல். 



* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள். 
* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 11 செப்டம்பர், 2017

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

'இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ' (2:256)
'லா இக்ராஹ பித்தீன்' மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
'உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.' (109:6)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.


'லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:'
'எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!' (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.

'சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.' (18:29)
விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.
இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.
வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.
சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 செப்டம்பர், 2017

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.


ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது. அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை. எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.

குறிப்பு 1:
மின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும்.

குறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா! மைக்ரோசாப்ட் அண்மையில்https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம்.

குறிப்பு 5: ஜிமெயிலில் "conversation view" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 6: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே.
ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

குறிப்பு 7: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான்.

குறிப்பு 8: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம்.

குறிப்பு 9: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.

குறிப்பு 10: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும்.
http://www.anbuthil.com/2016/03/how-to-use-android-smart-phone-completly.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 7 செப்டம்பர், 2017

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-2

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-2

குறிப்பு 11: ஜிமெயில் ஆண்ட்ராய்ட் செயலியில், அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வசதி லேபிள்களுக்கான வழக்கமான நோட்டிபிகேஷன்களைச் சோதனை செய்திடும் அதன் திறன் தான். முக்கியமான மின் அஞ்சல் ஒன்று உங்கள் மெயில் பெட்டியை அடையும்போது, உங்கள் போன், உங்களை உஷார் படுத்த வேண்டும் என எப்போதாவது எண்ணியதுண்டா? அதுவும், வெவ்வேறு தன்மை கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு, வெவ்வேறு ஒலிகளில். லேபிள்களுக்கான நோட்டிபிகேஷன்ஸ்களில் தான் இந்த அருமையான வசதியை செட் செய்து பயன்படுத்தலாம். 

இந்த அருமையான வசதியைப் பயன்படுத்த, முதலில் லேபிள்கள் மற்றும் பில்டர்களை உருவாக்கும் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக, ஜிமெயில் தரும் Priority Inbox அல்லது categorized inbox பயன்படுத்தினால், மாறா நிலையில் உள்ள லேபிள் மற்றும் பிற செட்டிங்ஸ் கொண்டு இதனை அமைக்கலாம். இதனைப் பின்பற்றி, லேபிள் மற்றும் பில்டர்களை அமைத்த பின்னர், ஜிமெயில் ஆண்ட்ராய் செயலியின் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும். 
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து Label Notifications பாக்ஸ் செக் செய்திடவும். இங்கு எந்த மாதிரி ஒலி மற்றும் வைப்ரேஷன் அதிர்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். அவ்வளவுதான். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் இனி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டண்ட் போல செயல்படும். குப்பையாய் வரும் அஞ்சல்களைப் பிரித்துப் பார்த்து (நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கேற்ப) குறிப்பிட்ட வகை அஞ்சல் வரும்போது, நீங்கள் அமைத்த ஒலியை அல்லது அதிர்வைக் கொடுக்கும்.
 



குறிப்பு 12: உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி., அதனைத் தயாரித்தவரால், அதன் சாப்ட்வேர் சற்று மாற்றப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கூகுள் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இது https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar என்ற தளத்தில் கிடைக்கிறது. இந்த காலண்டர் செயல்பாடு மற்றவற்றைக் காட்டிலும், சிறப்பான தோற்றங்களைக் கொண்டதாகவும், பயன்படுத்துபவருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ளது. நாம் குறிப்பிட்ட நிகழ்வினை, காலண்டரில் குறித்து வைத்தால், அதற்கேற்ற சிறிய படங்களை அத்துடன் தானாக இந்த செயலி இணைத்துக் கொள்கிறது. நிகழ்வுகளுக்கான இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடங்களைத் தருகிறது. நாம் ஏதேனும் நிகழ்வுகளை உறுதி செய்தால், நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கிறது. பயணம் என்றால், அதற்கான கால அட்டவணையைத் தொகுத்துத் தருகிறது. 
குறிப்பு 13:
 காலண்டரில் அமைக்கும் நிகழ்வுகளுக்கேற்ப, நம்மை எச்சரிக்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் "கூகுள் நவ்" செயலி, நேரத்திற்கேற்றபடியும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற வகையிலும், உங்களுக்கு நிகழ்வுகளை நினைவூட்டும். இதற்கு, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒலிவாங்கியை (microphone) செயல்படுத்தி, எப்போது உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதனை அறிவிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, "Remind me to take out the trash when I get home" அல்லது "Remind me to call the doctor's office tomorrow morning எனக் கூறலம். இதே கட்டளையில், எங்கேனும் சரியான இடத்தில் "every" என்ற சொல்லைச் சேர்த்தால், குறிப்பிட்ட நினைவூட்டல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, "Remind me to take my umbrella every Friday at noon" எனக் கட்டளை கொடுக்கலாம். 

குறிப்பு 14: கூகுள் நவ் நினைவூட்டல்களைச் செயல்படுத்த, Google Now செயலி தேர்ந்தெடுத்து, அதில், திரையின் மேலாக இடது பக்கம் உள்ள மெனு ஐகானைத் தட்டவும். பின்னர் Reminders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, உங்களுடைய இன்றைய, முந்தைய நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும். அதிலேயே, நீங்களாகவே, ஒரு புதிய நினைவூட்டலையும் அமைக்கலாம். 

குறிப்பு 15: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை, எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும்மா? இலவசமாகக் கிடைக்கும் 'கூகுள் கீப் ஆப்' (Google Keep app) என்ற செயலியைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். இதில் நீங்கள் செய்திட வேண்டிய செயல்களை, நீளமான வரிகளில், தெளிவாக அமைத்திடலாம். அவற்றிற்கான குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷன் கூகுள் நவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். எனவே, இந்த பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கும், நீங்கள் நினைவூட்டல்களை செட் செய்திடலாம். 

குறிப்பு 16: எந்த ஓர் ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் நீங்கள் அமைத்திடும் அழைப்பிற்கான தொடர்புகள், தானாகவே, கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட Google Contacts Web app மூலம் அழைப்பு தொடர்புகளைப் பார்க்கலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்களும், உங்களுடைய அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். 

குறிப்பு 17: நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பினை மிக எளிதாகக் கண்டறிய, அந்த தொடர்புக்குரிய நபரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானை தட்டவும். உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தின் காண்டாக்ட் பிரிவில் இதனை மேற்கொள்ளலாம். அல்லது Google Contacts Web அப்ளிகேஷனிலும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் சார்ந்த தகவல்கள், பட்டியலின் மேலாகப் பார்க்கக் கிடைக்கும். 

குறிப்பு 18: எப்போதாவது, ஒரே நபரின் அதே தகவல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக காண்டாக்ட் பட்டியலில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவரின் பணி குறித்த மின் அஞ்சலுக்காக ஒன்றும், தனி நபருக்கான மின் அஞ்சலுக்கான ஒன்றுமாக, அவை இடம் பெற்றிருக்கலாம். இதனைச் சரி செய்வதற்கு கூகுள் எளிமையான வழியைத் தருகிறது. Contacts Web அப்ளிகேஷனில், திரையின் இடது புறத்தில் Find Duplicates என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைத் தட்டினால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டவற்றை, இனம் கண்டறிந்து காட்டும். இவற்றில் ஒரு முறை கிளிக் செய்து, அனைத்தையும் இணைத்து வைத்துக் கொள்ளலாம். 
இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம். செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை, கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

அலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10

அலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10
கம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்ற எர்கனாமிக்ஸைக் கவனிக்க வேண்டும்.
கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்தால் ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம்.


எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.
அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்.
வேலை செய்யும் இடத்திலேயே (டெஸ்க்கில்) அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.
நடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்துகொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
மேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.
வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
http://www.pettagum.blogspot.in/2015/12/10_20.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

என்ன உணவு கொடுக்கலாம்?
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது. 



என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்
சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.
அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்.
http://www.pettagum.blogspot.in/2015/12/blog-post_11.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts