லேபிள்கள்

சனி, 9 செப்டம்பர், 2017

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-1
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.


ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது. அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை. எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.

குறிப்பு 1:
மின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும்.

குறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா! மைக்ரோசாப்ட் அண்மையில்https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம்.

குறிப்பு 5: ஜிமெயிலில் "conversation view" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 6: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே.
ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

குறிப்பு 7: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான்.

குறிப்பு 8: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம்.

குறிப்பு 9: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.

குறிப்பு 10: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும்.
http://www.anbuthil.com/2016/03/how-to-use-android-smart-phone-completly.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts