லேபிள்கள்

வியாழன், 7 செப்டம்பர், 2017

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-2

ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த பகுதி-2

குறிப்பு 11: ஜிமெயில் ஆண்ட்ராய்ட் செயலியில், அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வசதி லேபிள்களுக்கான வழக்கமான நோட்டிபிகேஷன்களைச் சோதனை செய்திடும் அதன் திறன் தான். முக்கியமான மின் அஞ்சல் ஒன்று உங்கள் மெயில் பெட்டியை அடையும்போது, உங்கள் போன், உங்களை உஷார் படுத்த வேண்டும் என எப்போதாவது எண்ணியதுண்டா? அதுவும், வெவ்வேறு தன்மை கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு, வெவ்வேறு ஒலிகளில். லேபிள்களுக்கான நோட்டிபிகேஷன்ஸ்களில் தான் இந்த அருமையான வசதியை செட் செய்து பயன்படுத்தலாம். 

இந்த அருமையான வசதியைப் பயன்படுத்த, முதலில் லேபிள்கள் மற்றும் பில்டர்களை உருவாக்கும் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக, ஜிமெயில் தரும் Priority Inbox அல்லது categorized inbox பயன்படுத்தினால், மாறா நிலையில் உள்ள லேபிள் மற்றும் பிற செட்டிங்ஸ் கொண்டு இதனை அமைக்கலாம். இதனைப் பின்பற்றி, லேபிள் மற்றும் பில்டர்களை அமைத்த பின்னர், ஜிமெயில் ஆண்ட்ராய் செயலியின் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும். 
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து Label Notifications பாக்ஸ் செக் செய்திடவும். இங்கு எந்த மாதிரி ஒலி மற்றும் வைப்ரேஷன் அதிர்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். அவ்வளவுதான். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் இனி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டண்ட் போல செயல்படும். குப்பையாய் வரும் அஞ்சல்களைப் பிரித்துப் பார்த்து (நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கேற்ப) குறிப்பிட்ட வகை அஞ்சல் வரும்போது, நீங்கள் அமைத்த ஒலியை அல்லது அதிர்வைக் கொடுக்கும்.
 குறிப்பு 12: உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி., அதனைத் தயாரித்தவரால், அதன் சாப்ட்வேர் சற்று மாற்றப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கூகுள் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இது https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar என்ற தளத்தில் கிடைக்கிறது. இந்த காலண்டர் செயல்பாடு மற்றவற்றைக் காட்டிலும், சிறப்பான தோற்றங்களைக் கொண்டதாகவும், பயன்படுத்துபவருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ளது. நாம் குறிப்பிட்ட நிகழ்வினை, காலண்டரில் குறித்து வைத்தால், அதற்கேற்ற சிறிய படங்களை அத்துடன் தானாக இந்த செயலி இணைத்துக் கொள்கிறது. நிகழ்வுகளுக்கான இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடங்களைத் தருகிறது. நாம் ஏதேனும் நிகழ்வுகளை உறுதி செய்தால், நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கிறது. பயணம் என்றால், அதற்கான கால அட்டவணையைத் தொகுத்துத் தருகிறது. 
குறிப்பு 13:
 காலண்டரில் அமைக்கும் நிகழ்வுகளுக்கேற்ப, நம்மை எச்சரிக்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் "கூகுள் நவ்" செயலி, நேரத்திற்கேற்றபடியும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற வகையிலும், உங்களுக்கு நிகழ்வுகளை நினைவூட்டும். இதற்கு, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒலிவாங்கியை (microphone) செயல்படுத்தி, எப்போது உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதனை அறிவிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, "Remind me to take out the trash when I get home" அல்லது "Remind me to call the doctor's office tomorrow morning எனக் கூறலம். இதே கட்டளையில், எங்கேனும் சரியான இடத்தில் "every" என்ற சொல்லைச் சேர்த்தால், குறிப்பிட்ட நினைவூட்டல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, "Remind me to take my umbrella every Friday at noon" எனக் கட்டளை கொடுக்கலாம். 

குறிப்பு 14: கூகுள் நவ் நினைவூட்டல்களைச் செயல்படுத்த, Google Now செயலி தேர்ந்தெடுத்து, அதில், திரையின் மேலாக இடது பக்கம் உள்ள மெனு ஐகானைத் தட்டவும். பின்னர் Reminders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, உங்களுடைய இன்றைய, முந்தைய நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும். அதிலேயே, நீங்களாகவே, ஒரு புதிய நினைவூட்டலையும் அமைக்கலாம். 

குறிப்பு 15: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை, எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும்மா? இலவசமாகக் கிடைக்கும் 'கூகுள் கீப் ஆப்' (Google Keep app) என்ற செயலியைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். இதில் நீங்கள் செய்திட வேண்டிய செயல்களை, நீளமான வரிகளில், தெளிவாக அமைத்திடலாம். அவற்றிற்கான குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷன் கூகுள் நவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். எனவே, இந்த பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கும், நீங்கள் நினைவூட்டல்களை செட் செய்திடலாம். 

குறிப்பு 16: எந்த ஓர் ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் நீங்கள் அமைத்திடும் அழைப்பிற்கான தொடர்புகள், தானாகவே, கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட Google Contacts Web app மூலம் அழைப்பு தொடர்புகளைப் பார்க்கலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்களும், உங்களுடைய அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். 

குறிப்பு 17: நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பினை மிக எளிதாகக் கண்டறிய, அந்த தொடர்புக்குரிய நபரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானை தட்டவும். உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தின் காண்டாக்ட் பிரிவில் இதனை மேற்கொள்ளலாம். அல்லது Google Contacts Web அப்ளிகேஷனிலும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் சார்ந்த தகவல்கள், பட்டியலின் மேலாகப் பார்க்கக் கிடைக்கும். 

குறிப்பு 18: எப்போதாவது, ஒரே நபரின் அதே தகவல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக காண்டாக்ட் பட்டியலில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவரின் பணி குறித்த மின் அஞ்சலுக்காக ஒன்றும், தனி நபருக்கான மின் அஞ்சலுக்கான ஒன்றுமாக, அவை இடம் பெற்றிருக்கலாம். இதனைச் சரி செய்வதற்கு கூகுள் எளிமையான வழியைத் தருகிறது. Contacts Web அப்ளிகேஷனில், திரையின் இடது புறத்தில் Find Duplicates என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைத் தட்டினால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டவற்றை, இனம் கண்டறிந்து காட்டும். இவற்றில் ஒரு முறை கிளிக் செய்து, அனைத்தையும் இணைத்து வைத்துக் கொள்ளலாம். 
இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம். செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை, கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts