லேபிள்கள்

புதன், 13 மார்ச், 2013

வலீமா புறக்கணிப்பு சரியா...

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய வலீமா என்ற ஒரு கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி வலிமாவை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?
சிலர்,  ஒரு திருமணத்தில்  பித்அத் இருந்தால் வலீமாவை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளனர்..!

திருமண விருந்து(வலீமா):
'நிக்காஹ்க்குப்பின் மணமகன் வழங்கும் விருந்துதான் வலீமா எனப்படுகின்றது' என்பதை நாம் அறிவோம்.
 
இந்த விருந்து நபிவழியாகும். ஏனெனில், இதுபற்றி குர்ஆனில் எந்த குறிப்பும் நான் பார்க்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவரகள் மார்க்கமாக நமக்கு வலியுறுத்தியதும் வஹிதான் -- இறைக்கட்டளை தான் என்பதையும் நாம் அறிவோம்..! அவ்வகையில் வலீமா என்பது இறைவழிகாட்டல்..!
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப்பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை. இன்று அப்படி பெண்வீட்டார்... "நானும் விருந்து போடுவேன்" என்று போட்டால்... அது சாதா விருந்துதானே அன்றி இஸ்லாம் கூறும் வலீமா விருந்து அல்ல..! வலிமாவிற்கான நன்மை கிடையாது..! காரணம் நபி (ஸல்) அவர்கள் மணமகனைத்தான் விருந்து போட சொன்னார்கள்..!

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 டீ லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)
நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வசதிக்கு அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும்.
 
நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து கொடு!"என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் ரலி... அவர்களிடம் சொன்னதால்... ஒரு ஆட்டுக்குமேலே அதிகமாக அறுக்கலாம் என்றும் இதிலிருந்து புரியலாம்..! விருந்தில் 'எளிமை' என்று சொல்பவர்கள்... எத்தனை ஆடு அறுத்தால் அது எளிமை.... எத்தனை ஆட்டுக்கு மேலே அறுத்தால் 'அது எளிமை அல்ல' என்ற அளவை எல்லாம் கூற வேண்டும்...! 

மேலும், நபி அவர்களின் வலிமாவுக்கு... நபி(ஸல்) குறிப்பிட்டு சொன்னவர்களையும் மற்றும் தான் சந்தித்த அனைவரையும்
 ஹனஸ் (ரலி) அழைக்கிறார்கள். 
.
நபி(ஸல்..) அவர்கள் கேட்கிறார்கள்."எத்தனை பேர் விருந்துண்டார்கள் என்று"
"சுமார் முன்னூறு பேர்" என்கிறார்கள் ஹனஸ் (ரலி)
 

சஹீ முஸ்லிமில்
 நீளமாக வரும்  2803 முஸ்லிம் ஹதீஸில்முன்னூறு பேரை நபி ஸல்.. அவர்கள் அழைத்து உள்ளார்கள்.... (அல்லது அனஸ் ரலி... அவர்கள் 300 பேரை தம் வலிமாவுக்கு அழைத்ததை ஏற்றுக்கொண்டார்கள்... தடை ஏதும் போட வில்லை...கடிந்து கொள்ளவும் இல்லை...) "பத்து பேர்.. ஐம்பது பேர்தான் எளிமை" என்பவர்கள்... "இந்த 300ஐ எளிமை இல்லை" என்பார்களா.,..???

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. காட்டினால் அது கெட்ட வலீமா.
 இங்கே... "அந்த 'கெட்ட வலிமா'வை ஏழைகள் அழைக்கப்படாததால் செல்வந்தர்கள் அந்த வலீமா புறக்கணிக்கவேண்டும்" என்று நபி ஸல்...அவர்களால் சொல்லப்பட வில்லை..! வலிமாவை புறக்கணிப்பதில் முழுமூச்சாக இருப்போர் எவரும் இந்த காரணத்துக்காக எல்லாம் புறக்கணித்ததும் இல்லை..! :-)))
சஹீ புஹாரி - பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5179
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இந்த (மண) விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ('நஃபில்' எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள்.
.
 
ஆக வலீமா எந்த அளவுக்கு என்றால்... ஒரு நஃபில் நோன்பை முறித்து செல்வது கூட கூடும் என்று உமர் (ரலி) அவர்களின் மகன் சஹாபி அப்துல்லாஹ் (ரலி) புரிந்து வைத்து இருந்திருக்கிறார்கள். அதாவது, "ஒரு நஃபீலை காட்டிலும் சுன்னத் நன்மைகளில் மேலானது" என்ற அடிப்படையில். (இவர் எப்படி என்றால், தன் தந்தை கலீஃபா உமர் ரலி ஆயினும், அவர் தமத்து ஹஜ் பற்றிய ஒரு ஹதீஸுக்கு மாறான கட்டளைக்கு கட்டுப்படாமல், நான் ரசூளுல்லாஹ்வை மட்டுமே பின்பற்றுவேன்... என்று தமத்து ஹஜ் செய்த ரொம்ப ஸ்ட்ராங்கான சஹாபி).
.
சஹீ புஹாரி -
 பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5072
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
 
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரி(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களுக்கு இரண்டு துணைவியர் இருந்தனர். எனவே ஸஅத்(ரலி) தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!" என்று கூறினார்கள்.
 

(அதாவது, செல்வம் மற்றும் மனைவி ஆகிய எதுவும் வேண்டாம். என மறுத்து விட்டார்)

பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள்.
 சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, 'என்ன இது அப்துர் ரஹ்மானே?' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான்(ரலி), 'நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்தேன்" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரிச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து கொடு!" என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் பேரருளால் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி..) மதினாவின் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார் என்பதெல்லாம் அப்புறம்தான்...! ஆனால், ஆட்டை அறுத்து விருந்து கொடுக்க சொல்லப்பட்ட போது அவர் 'என்ன நிலையில்' இருந்தார் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. வீசின கை வெறுங்கையோடு மதினா வந்து 'அ'-னாவிளிருந்து துவக்கிய வியாபாரம். சில நாட்களில்
  மஹருக்கான பொன்னை சேர்த்து இருக்கிறார். உடன் திருமணம் செய்து இருக்கிறார். அதாவது, அதுதான் அவரின் பொருளாதார ஸ்டார்டிங் ஸ்டேஜ்.  அதே ஊரில் உள்ள நபி (ஸல்) அவர்களிடம் கூட சொல்லாமல் திருமணத்தை சிக்கனமாக குறைந்த செலவில் முடித்து இருக்கிறார். அதைக்கூட ஏன்  என்று கேட்கவில்லை நபி (ஸல்) அவர்கள்.'ஒரு ஆட்டையாவது அறு. வலீமா போடு' என்றார்கள். 

"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும் " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."என்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும்
  அஹ்மத்- 23388 ஹதீசை எளிமைக்கு சுட்டிக்காட்டுகிறோம். 

எந்த எளிமைக்கு,,,? வலிமாவுக்கு..! இது சரியா,,? பொற்குவியலே தருவது தவறில்லை என்று அல்லாஹ் சொல்லி இருக்க...மஹரில் நம்மால் எளிமையை நிர்பந்திக்க முடியுமா...?
 

அதாவது, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஆட்டு விருந்துக்கு... மாட்டேன் என... 'எளிமை'யை காரணம் சொல்ல வில்லையே ஏன்..?

நபி(ஸல்) அவர்களே கூட ஆட்டை அறுத்து விருந்து போட்டு உள்ளார்களே..? 'எளிமை' தெரியாததாலா..? அப்போதும் பேரிச்சம் பழம்... கோதுமை மாவு... தந்திருந்தால் அது இன்னும் எளிமையாக இருந்திருக்குமே..?

ஆக...... எதில் எளிமை வேண்டும்..?

வெட்டி செலவுகளை... மணமக்களின்
  உடையிலும்... பெண்ணின் ஆபரனங்களிலும்... மேளம் கொட்டு.. வீட்டு  அலங்காரம் இவற்றில் குறைத்துக்கொள்ள வேண்டும்..! 

இப்படியாக,,,, நாம் எளிமை எதில் வேண்டும் என்று அது குறித்து சிந்திக்க வேண்டும் சகோ..!

அடுத்து வரும் ஒரு ஹதீஸ் மணமகன் அழைத்த வலிமாவை மறுத்து... புறக்கணித்து... அல்லாஹ்வுக்கும் தூதருக்கு மாறு செய்ததவர்களில் கொண்டு போய் நம்மை சேர்க்கிறது.
 
சஹீ புஹாரி -
 பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5177 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மணவிருந்து உணவே... உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது என்றும்,
 யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளதை பார்த்தோம்..!

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர்.
 (58:22)
நபி (ஸல்) அவர்கள்,,,,,,,
வெள்ளிப்பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும், 'மைஸரா' எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, தடித்தபட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். 
விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க் (சிலைகள், உருவப்பட திரைச்சீலைகள்) மற்றும் ஹராமாக்கப்பட்ட (பட்டு துணியால் சுவர் அலங்கரிப்புகள், உட்காரும் விரிப்புகள் திண்டுகள்) காரியங்கள் இருந்தால்.... நபி ஸல்... அவர்கள் 'அவை இருக்கும் வரை வரமாட்டேன்' என்று கூறி விருந்தை புறக்கணித்து எழுந்து சென்றார்கள்.
இது எதை காட்டுகிறது...? ஷிர்க் அல்லது ஹராம்.... இவற்றை ஏற்றுத்தான் வலீமா சாப்பிட வேண்டும் என்று இல்லை..! அப்படி இருந்தால் புறக்கணிக்க வேண்டும்...!
மேலும், அந்த வலீமா உணவில் கூட ஹராமான இறைச்சி... அல்லது ஹராமான உணவு, அல்லது வெள்ளி தட்டில் வலீமா உணவு... வைத்து பட்டு கம்பளம் விரித்து... பட்டால் வலீமா விருந்து நடக்கும் அறை சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு... பரிமாறப்பட்டலோ... சாப்பிட வேண்டுமா... புறக்கணிக்க வேண்டுமா..? 
புறக்கணிக்க வேண்டும்..! இதற்கு ஆதாரம் உள்ளது..!
ஆனால், 

ஒரு பித்அத் துவா ஓதினால் வலிமாவை புறக்கணிக்கலாம்,
 
ஆடம்பர மாலை போட்டால் வலிமாவை புறக்கணிக்கலாம்,
ஆடம்பரமாக
  பைத்துசாபா கச்சேரி வைத்தால்...
இப்படி புறக்கணித்து அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மாறு செய்யலாம்....
 
-------என்றெல்லாம் கூறுவோர்,
.........இதற்கு ஆதாரம் வைக்க வேண்டும்...!

ஆகவே...
திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?
 
நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..?
இத்தோடு சேர்த்து... இந்த மூன்று பதிவிலும் சேர்த்து.....
நான் சொல்வது என்னவென்றால்...

பித்அத்களை நாம் புறக்கணிக்க வேண்டும்...
ஆடம்பரங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்..
இவற்றை காரணம் காட்டி அது இருப்பதால்...
அவை இல்லாத.... அவை கலக்காத... நிக்காஹ்வையும் வலிமாவையும் எப்படி நம்மால் புறக்கணிக்க முடியும்..???

ஆடம்பரம்+பித்அத்+நிக்காஹ்+வலீமா
 = திருமணம்
இவற்றில்....

ஆடம்பரம் மற்றும் பித்அத் களை புறக்கணியுங்கள்...!
  
அப்படி புறக்கணித்தால்
  நமக்கு அது நன்மை..!

நிக்காஹ்வையும் வலிமாவையும் புறக்கணிக்காதீர்கள்...!
  
மீறி புறக்கணித்தால் நமக்கு அது பாவம்..!

இதொன்றும்
  நாம் செய்யாதது அல்ல..! தினசரி செய்வதுதான்..! தொழுகையில் நபிவழிக்கு முரணாக பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றி தொழத்தான் செய்கிறோம்..! ஆனால், எது பித்அத்தோ... அதை மட்டும் விட்டுவிட்டு... நாம் சுன்னாவை பின்பற்றியவர்களாக பர்ளான.. சுன்னத்தான.. ஜமாஅத் தொழுகைகளை அதே இமாமை பின்பற்றி தொழுது முடிக்கிறோம்..! பித்அத் களை காரணம் காட்டி ஒட்டு மொத்தாமாக ஜமாஅத் தொழுகையை புறக்கணிப்பதில்லையே..!? அல்லது பள்ளிவாசல் ஆடம்பரமாக கட்டி இருக்காங்க என்று தொழுகையை புறக்கணிப்பதில்லையே..! இதே நிலைப்பாடுதானே நிக்காஹ்/வலீமா விஷயத்தில் எடுக்க சொல்கிறேன்..?


--
*more articles click*
www.sahabudeen.com



திங்கள், 11 மார்ச், 2013

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய நிக்காஹ் என்ற ஒரு கட்டாயக்கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி நிக்காஹ்வை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?
சிலர்,  ஒரு திருமணத்தில்  பித்அத் இருந்தால் நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளனர்..!
மணமக்களின் உறவே இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்யக்கூடாத அளவில் உள்ள ஹராம் என்றாலோ....
அல்லது 
மேலே கூறப்பட்ட இஸ்லாமிய கட்டளைகள் (மணமகள் சம்மதம், மஹர், வலீ, இரு சாட்சிகள், ஒப்பந்தம்) ஆகியன தேவை இல்லை என மீறப்பட்டாலோ...
இதனால், 
'அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் ரசூலால் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக இந்த நிக்காஹ் உள்ளது... இது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை... எனவே.... நான் இந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்" என்றால்... அதில் நியாயம் உள்ளது..! 
இப்போது இவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால்.....
"இந்த மாப்பிள்ளை ஊர்வலம் பைத்சபா  பாடலுடன் ஊர்வலம் வந்தார்... 
"மாப்பிள்ளை கோட்-சூட்-டை-மாலை-ஷூ- போட்டு ஆடம்பரமாகிவிட்டார்... "
"திருமணத்துக்கு வந்த ஒருவர் நிக்காஹ் முடிந்தவுடன் மைக்கில் ஒரு தொப்பி போட்டு தாடி வைத்த ஒரு ஹஜ்ரத்  பித்அத் துவா ஓதப்போகிறார்... "
"இந்த கல்யாணத்துக்கு ஆயிரம் பேரை மட்டன் பிரியாணி & சிக்கன் ஃபிரை என்ற வலிமா விருந்துக்கு அழைத்து ஆடம்பரம் செய்கிறார்கள்.....  "
இதனால்... நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும்... என்போர்.... இப்படியான ஆடம்பரங்கள் மற்றும் பித்அத் ஒரு திருமணத்தில் இருந்தால் அதில் உள்ள நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற குர்ஆன் ஆயத்து... சஹீஹ் ஹதீஸ்.... ஆகியவற்றை...
நிக்காஹ் விஷயத்தில் அப்படி ஓர் ஆதாரம் இருந்தால் அதை வையுங்கள்...! அப்படியான நிக்காஹ்வை புறக்கணிப்பதில் நானும் இன்ஷாஅல்லாஹ் உங்களுடன் இணைகிறேன்..!
எனது கேள்வியை இன்னும் சுருக்கி.... இன்னும் துல்லியமாக கேட்கிறேன்...!
சூழ்நிலை ஒன்று...!
இதோ இப்படி ஒரு நிலை வருகிறது என்று வைப்போம்...!
ஒரு மணமகன்... நம்முடைய தவ்ஹீத் சகோதரர்.... இரண்டில் ஒரு சாட்சியாக இருக்க என்னையும் உங்களையும் அழைக்கிறார்.
நாம் அங்கே சென்றால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
அங்கே பெண்ணுக்கு வலீயாக வந்த ஒருவர் நிற்கிறார்.... அவர்,  நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் "அல்லாஹும்ம அள்ளிஃப் பைனஹுமா..." என்ற துவாவை ஓதுவேன் என்கிறார்..! 

நாம் மணமகனை நோக்க... "நான் என்ன பண்ணுவேன் சகோ.... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... அவர் கேட்கலை... வேறு வலியும் மணப்பெண்ணுக்கு இல்லையாம்... என்ன செய்ய நான்..?" என்கிறார்...!
சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நாம் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...?
ஒரு பித்அத் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..? 

அல்லது
 

நிக்காஹ் நடக்க காரணமாக சாட்சியாக இருந்து முடிந்தவுடன்.... நாம் நம்முடைய நபிவழிப்படி... "பாரக்கலாஹு லக... வ பாரக்க அலைக்க... வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்...!" என்று சொல்லிவிட்டு... "யோவ் வலீ.... நீ வேணும்னா உம்ம துவாவை ஓதிக்கிட்டு நீயே ஆமீன் போட்டுக்க... இது பித்அத்... நாங்க இதை புறக்கணிக்கிறோம்...." என்று கூறி என்று நாம் கழண்டு விட்டால்... பித்அத் ஐ ஆதரித்து விட்டோம் என்று அர்த்தமாகிவிடுமா...? அந்த துவாவுக்கு முன்னர் நடந்த நிக்காஹ் "புறக்கணிக்க வேண்டிய பித்அத் சபை" என்றாகி விடுமா...
பதில் சொல்லுமுன்னர் முந்திய பதிவான........ 
திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?
----இதில் நான் சொன்ன ஆதாரங்கள் அனைத்தையும் படித்து விட்டு பதில் சொல்லுங்கள்...!
சூழ்நிலை இரண்டு...!
இதோ... இப்படி ஒரு நிலை வருகிறது, என்று வைப்போம்...!
ஒரு மணமகள். அவளுக்கு யாருமே கிடைக்கவில்லை, வலீயாக இருக்க...! நீங்கள் ஆட்சியாளர். எனில், நீங்களே வலீ.
நானும் இன்னொருத்தரும் சாட்சிகளாக நிக்காஹ் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்ததன் பேரில் வந்தால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
நம்ம மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார்..!
இந்த ஒன்றுதான் இடிக்கிறது...!
 
நான் என்ன சகோ... இது...? என்று உங்களை நோக்க... 
நீங்கள்... "அவருகிட்டே கேட்டுட்டேன் சகோ... அவரு... கல்யாண ஃபோட்டோ எடுத்தால்... அதில் மாலையும் கழுத்துமா இருக்கணும் என்று விரும்புகிறாராம்... அவசியமாம்... இது அவருக்கு ஆடம்பரம் இல்லையாம்... மாலை மார்க்கத்தில் இல்லைன்னும் தெரியுமாம்... கழட்ட மாட்டேன்... போட்டே தீருவேன் என்கிறார்...என்ன செய்ய..." என்று சொல்கிறீர்கள்..!
ம்ம்ம்.... சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நான் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...? நீங்கள் வலியாக இருப்பீர்களா... அல்லது புறக்கணிப்பீர்களா...?
ஓர் ஆடம்பரம் என்று நாம் கருதும் ஒன்று மாப்பிள்ளை கழுத்தில் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..?  
அல்லது... நிக்காஹ் நடக்க வலீயாக, சாட்சியாக இருந்து அது முடிந்தவுடன்.... நாம் 'பாரக்கலாஹு லக...' சொல்லிவிட்டு... மாப்பிள்ளைக்கு மாலையை பற்றி... அது ஒழிக்கப்பட வேண்டியதைப்பற்றி ஒரு சிறு கிளாஸ் எடுத்துவிட்டு... கிளம்புவோமா...?ஆனால்...  

நானும் ஒரு நிக்காஹ்வை புறக்கனிப்பேன்.
எப்போது தெரியுமா...?
அதில்... ஹராம் இருந்தால்..! அதில் ஷிர்க் இருந்தால்..!
அல்லாஹ் திருமணம் செய்ய தடை கூறி ஹராமாக்கிய சொந்தத்துக்கு இடையில் (அண்ணன்-தங்கை, அப்பா-மகள், அம்மா-மகன்... இதுபோல...) நிக்காஹ் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிந்தே தெரிந்தே புரிந்தே நடந்தால்..!
அல்லாஹ் கூறிய "நிக்காஹ்வுக்கு அவசியமான வலி, சாட்சிகள், பெண்ணின் சம்மதம் போன்றவை, மஹர் (சிலர் மஹரும் தந்து அந்த சபையில் வரதட்சணையும் வாங்கி தருகிறார்கள். இது அப்பட்டமான அல்லாஹ்வின் மஹர் சட்ட அவமதிப்பு)  ஏதும் அவசியமில்லை" என்று பகிரங்கமாக கூறி... அல்லாஹ்வின் கட்டளை அறிந்தே தெரிந்தே புரிந்தே மீறப்பட்டால்...! 
நிக்காஹ் நடக்கும் இடத்தில்... சிலை வழிபாடு... சமாதி வழிபாடு... அக்னி வழிபாடு... போன்ற அல்லாஹ் தடை கூறிய.... ஷிர்க் இருந்தால்...!
இவை நிச்சயம் அல்லாஹ்வை கேலி செய்வது..! 
அவன் வசனங்களை மறுப்பது..! 
எனவே.... இதுபோன்ற நிக்காஹ்வை நான் நிச்சயமாக முடிந்தால் கையால் தடுப்பேன்..! முடியவில்லையேல் வாயால் தடுப்பேன்...! அதுவும் முடியவில்லையேல் அந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்..!
இப்படி செய்ய.... எனக்கு என்ன இஸ்லாமிய ஆதாரம்...???
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில்ஒன்று சேர்ப்பான்.- (அல்குர்ஆன் 4:140)
அப்புறம் எப்படி வீண் வெட்டி ஆடம்பர பித்அத் அனாச்சாரங்களை ஒழிப்பது என்றா கேட்கிறீர்கள்..? 
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் சில, நன்மையை வேறு எங்கோ ஓரிடத்தில் (மேடை/டிவி) ஏவிவிட்டு... அந்த தீமை நடக்கும் இடத்தில் தீமையை தடுக்க வழி இருந்தும்... தடுக்காமல்... வெறும் 'ஈமானின் கடைநிலை புறக்கணிப்பால்' என்ன பெரிய பயன் ஏற்படுகிறது..? எதிர்ப்பில்லா தீமை இன்னும் பலம்தான் பெறுகிறது..!

தீயதை கண்டால்... நாம் கையால் தடுக்க வேண்டும் அல்லவா..? தனி மனிதனாக தடுத்தால் மண்டை உடையும்..! எனவே... ஊரில் அப்படி புறக்கணிக்கும் எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் ஒன்று கூடிச்சென்று... அவை நடக்கும் இடத்தில் ஜமாஅத்தாக சென்று அவற்றை நடக்க விடாமல் கையால் தடுக்க வேண்டும்..!
 
ஏன்...? முடியாதா..? இன்று ஒரு SMS இல் இலட்சம் பேரை திரட்டும் வல்லமை இயக்கங்களிடம் உள்ளதா... இல்லையா..? எனவே, கையால் தடுக்கும் கடமையும் இவர்களுக்கு சேர்ந்து விடுகிறது..! 
அப்படியான சாத்தியம்... இல்லையா...? சரி,  எங்கோ வேறொரு திருமணமே நடக்காத இடத்தில் மேடை போட்டு இதனை கடுமையாக எதிர்ப்பதை விடுத்து... அவை எல்லாம் நடக்கும் இடத்தில், களத்தில் இறங்கி நமது பிரச்சாரத்தை அழகிய முறையில் செய்யலாமே..? இப்படி தீமையை அது நடக்கும் இடத்திலேயே வாயால் தடுத்தால் என்ன..? அங்கே வந்த மக்களிடம் அவை குறித்து 'விழிப்புணர்வு பிட்நோட்டிஸ்' தந்தால் என்ன..?
இதுவும் முடியாதா...? சரி, மனத்தால் வெறுத்து... அவற்றை மட்டும் புறக்கணிக்கலாம்..! 'அது எப்படி முடியும்' என்கிறீர்களா..? 
முடியும்..! அதுவரை கூட்டமாக வீட்டுக்கு/மண்டபத்துக்கு/பள்ளிக்கு வெளியே நின்று விட்டு... நிக்காஹ் ஆரம்பிக்கும் போது மட்டும் அங்கே திடீர் என்டர் கொடுப்பது..! அது முடிந்து "அல்லாஹும்ம அள்ளிஃப்..." பித்அத் துவா ஸ்டார்ட் ஆகுதா... சத்தமாக எல்லாரும் சேர்ந்து.. "பாரக்கலாஹு லக.." ஓதிவிட்டு... 'திமு திமு' என்று எழுந்து இடத்தை காலி பண்ணி வெளியேறி வெளிநடப்பு செய்து விடுவது..!

பின்னர் மீண்டும் அந்த துவா முடிந்தவுடன்... உள்ளே சென்று வலிமாவில் கலந்து கொள்ள வேண்டும்..! எப்படி...? இதில்... அல்லாஹ் மறைமுகமாக
 சொல்வது... நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!  அதாவது... அவர்கள் வேறு நல்ல ஆகுமான பேச்சுக்களில் ஈடுபட்டால்... அதே சபையில் சென்று கலந்து கொள்ளலாம் எனபதே..!
இப்படி செய்வது... இதொன்றும்  நமக்கு புதிது இல்லையே..? நாம் நமது மஸ்ஜித்களில் இதனைத்தானே தினம் செய்கிறோம்..! தொழுகை முடிந்து கூட்டுதுவா ஓதினால் எழுந்து வெளியே செல்கிறோம்..! தராவீஹ் எட்டாவது ரக்கத் முடிந்தால் அனைவரையும் விளக்கி வெளியே செல்கிறோம்..! பின்னர்... வித்ர் ஆரம்பிக்கும் பொது உள்ளே நுழைகிறோம்..! இதெல்லாம்தான் அங்கே உள்ள மற்ற மக்களுக்கு செயல் மூலம் தாவா..!

பராஅத்-மிஃராஜ்-தஸ்பீஹ் நஃபீல்-யாசீன்- துவா... மவ்ளூது-ஹத்தம்-பாத்திஹா-ராத்திபு... இவற்றில் எல்லாம் கலந்து கொள்வதில்லையே..! ஃபர்ளும் சுன்னத்தும் தொழுதுட்டு வெளிநடப்பு செய்கிறோமே..! இவற்றுக்காக பள்ளிவாசலையே புறக்கணித்தது இல்லையே நாம்..? இதேபோல... திருமணத்திலும் செய்ய முடியாதா, என்ன..?

இன்ஷாஅல்லாஹ்.... கடமையை நிறைவேற்றி... பித்அத் ஐ அனாச்சாரத்தை மட்டும் புறக்கணிக்க முடியும்..! நிச்சயம் முடியும்..
http://www.onlyoneummah.blogspot.in/2012/08/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com



சனி, 9 மார்ச், 2013

கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பயண பாதுகாப்பு வழிமுறைகள்

1.     சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன? (பயணி/டிரைவர் இருவருக்கும்!)  
·                     முதல்ல கார்ல உட்கார்ந்த உடனே கார் கதவை மூட வேண்டும்! 
·                     கண்டிப்பாய் முன்புறமுள்ள டிரைவர்/பயணி இருவரும் சீட்பெல்ட் போடவேண்டும்!
·                     சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்! (வேகமா எங்க விண்வெளிக்கா போகப்போற?) அனைத்து டிராபிக் ரூல்ஸ்களையும் பின்பற்ற வேண்டும்!
·                     சாலை என்பது பகிர்ந்து செல்வது! உனக்காக மட்டும் போடவில்லை! சாலையை உபயோகப்படுத்த நடைபயணி, சைக்கிள்காரர், லாரி, பஸ், மாட்டுவண்டி என அனைவருக்கும் உரிமையுண்டு! யாரேனும் வேகமாக வந்தால் அவருக்கு வழி விட்டுவிடவும்! (சாகப்போகிறவன் வேகமாத்தான் போவான்!)
·                     14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்புற இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது! 
·                     யாரேனும் நடந்து சாலையின் குறுக்கே வந்துவிட்டால் காரை நிறுத்தி அவர்கள் போன பின்பே செல்ல வேண்டும் (நீ இதேபோல் எத்தனைமுறை வந்திருப்ப?)
·                     ஒவ்வொரு நாளும் பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன் சக்கரங்களின் காற்றை சரிபார்க்க வேண்டும! 
·                     இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் (பயணம் செய்யும் இருவரும்!) சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் + REFLECTIVE LIFE JACKET அணிய வேண்டும். நீங்கள் தவறுதலாய் ரோட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டால்கூட தூரத்தில் வரும் வாகனங்கள் எளிதில் உணர்ந்து நிறுத்த முடியும்! 
·                     தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, வேகமாக செல்லுதல், வேறு டிரைவர்களை கெட்டவார்த்தையால் திட்டுவது, வீலிங் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முன்புறம் செல்லும் வாகனங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், முந்த வேண்டுமெனில் லைட்டை உபயோகிக்கவும் - ஹாரனை அல்ல!

2.     நீங்கள் பயணம் செய்யும் கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

  கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முன்புற அல்லது பின்புற கண்ணாடியை உள்ளிருந்து வெளிப்புறமாகக் கையால் வேகமாய்க் குத்தவும். (அர்ஜுன் சொல்ற மாதிரி – முதலாளி! உங்க அக்காவ நினைச்சிகிட்டு வேகமா குத்துங்க) இதனால் கண்ணாடி உடைந்துவிடும்! அதன்மூலம் நீங்கள் வெளியே வந்துவிடலாம்! குத்துவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி இருந்தால் அதைக்கூட உபயோகிக்கலாம்! 

3.     உங்களின் டிரைவிங் வேகம் எதைப் பொறுத்தது? ரோடு கண்டிசன் மெயின் ரோடு/சப் ரோடு அல்லது வாகனம்?

  டிரைவிங் வேகம் ரோடு/மெயின் ரோடு/ சப்ரோடு/வாகனம் இவற்றையெல்லாம் பொறுத்தது அல்ல! உங்கள் பார்வை எவ்வளவுதூரம் வரை பார்க்க முடிகிறது என்பதை பொறுத்தது. இதனால்தான் வளைவு வரும்போது நீங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும்! மலைப்பாதை/ ,மழை, பனி மற்றும் இரவில் நீண்ட தூரம் பார்க்க முடியாததால் வேகத்தைக்குறைத்து செல்ல வேண்டும்!

4.
    மலைப்பாதைகளில் இறங்கும்போது ஆட்டோமாட்டிக் கியரில் போகக்கூடாது ஏன்? இறக்கங்களில் பிரேக் பிடிக்காதது ஏன்?

  புவிஈர்ப்பு விசையால் உங்கள் வாகனம் இறக்கங்களில் தானாகவே வேகமாய்ச் செல்லும்! ஆட்டோமாட்டிக் கியரில் வேகம் அதிகரிக்க தானாகவே அடுத்த கியருக்கு மாறி இன்னும் வேகமாகச் செல்லும்! வேகம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பிரேக் திறன் குறைத்துக்கொண்டே வரும்! எனவே ஆட்டோமாட்டிக் கியரை மாற்றி இரண்டாவது கியரில் பயணிக்க வேண்டும்! இதனால் எஞ்சினிலுள்ள என்ஜின் பிரேக்கையும் நாம் உபயோகிக்கிறோம்! பயணம் பாதுகாப்பானது! 

5.
     மலைகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஏறுபவர்? அல்லது இறங்குபவர்

  மலைகளில் நிச்சயம் ஏறுபவருக்குத்தான் முன்னுரிமை! அது மாட்டுவண்டியாய் இருந்தாலும்கூட! ஏறுபவர் நிறுத்தினால் வண்டி புவிஈர்ப்பு விசையினால் பின்னோக்கி நகர ஆரம்பித்துவிடும், இப்படி எத்தனைமுறை அவர் நிறுத்தி செல்லுவார்? எனவே இறங்குபவர் ஏறுபவருக்கு வழி கொடுத்து வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.


--
*more articles click*
www.sahabudeen.com



மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts