லேபிள்கள்

சனி, 9 மார்ச், 2019

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

உங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்!

ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி, பலர் கேட்கும் ஒரே கேள்வி... என்ன மைலேஜ் தரும்? என்பதாகவே இருக்கும்.

பவர், டார்க், தொழில்நுட்பம், வசதிகள், டாப் ஸ்பீடு... இவற்றில் நமது வாகனம் சிறப்பாக இருக்க வேண்டும் என ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், நம் ஊரில் வாகனத்தின் விலையைத் தாண்டி பலர் கேட்கும் ஒரே கேள்வி... `என்ன மைலேஜ்  தரும்?' என்பதாகவே இருக்கும். 
 அதுவும் தற்போது பெட்ரோல்/டீசல் விலை தொட்டிருக்கும் புதிய உச்சத்தால், ரன்னிங் காஸ்ட் மீது பலரின் கவனம் விழுந்திருக்கிறது. எனவே, உங்கள் வாகனம் கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும், அதன் மைலேஜை அதிகரிப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும் என எண்ணுகிறோம். 
 சர்வீஸ் வேண்டும் மக்களே!
ஒவ்வொரு நிறுவனமும் தமது வாகனங்களுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை சர்வீஸ் செய்வது குறித்த அட்டவணையை, Owners Manual-ல் வழங்கியிருக்கும். எந்த வாகனமாக இருப்பினும், அது சிறந்த கண்டிஷனில் இருந்தால்தான் சிறந்த மைலேஜ் கிடைக்கும். புதிய வாகனங்களை அந்தந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில், சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதே நலம். அப்போதுதான் பின்னாளில் வாரன்ட்டி க்ளெய்ம் செய்வதில் எந்தச் சிக்கலும் எழாது.
சில சந்தர்ப்பங்களில் உங்கள் வாகனத்தை வெளியிடங்களில் சர்வீஸ் விட நேர்ந்தாலும், முடிந்த அளவுக்கு வாகன நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துங்கள். பைக் என்றால் செயின் ஸ்ப்ராக்கெட்டையும், கார் என்றால் வீல் அலைன்மென்ட்டையும் சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது செக் செய்யவும். இது சரியாக இல்லாதபட்சத்தில், அது உங்கள் வாகனத்தில் மைலேஜில் சிறிய பாதிப்பைத் தரலாம்.
கச்சிதமான ஆக்ஸிலரேஷனே போதும்!
ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டுவதைவிட, தன்மையாகப் பயன்படுத்துவது நல்ல மைலேஜைத் தர உதவும். இது பிரேக்குக்கும் பொருந்தும். மேலும் தேவையில்லாமல் வாகனத்தை விரட்டி ஓட்டுவதைவிட, நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்வது, இன்ஜினுக்கும் பர்ஸுக்கும் நல்லது. இந்த நேரத்தில் சரியான கியரில் பயணிப்பதும் முக்கியம். ஏனெனில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் செல்வது, இன்ஜினின் செயல்திறனைப் பாதிக்கும். 
தவிர, ஆரஞ்சு விளக்கு எரியும்போதோ - சிக்னலை நெருங்கும்போதோ வேகமெடுப்பதைவிட, படிப்படியாக கியரைக் குறைத்து வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. பைக் என்றால் சரியான சீட்டிங் பொசிஷன் மற்றும் கார் என்றால் கதவுக் கண்ணாடிகளை ஏற்றிவிட்டுக்கொண்டு செல்லும்போது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் பக்காவாக இருக்கும். அதனால் நல்ல மைலேஜும் கிடைக்கும்.
காற்று அழுத்தம்... முக்கியம்!
வாகனம் வைத்திருக்கும் பலரும், பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத விஷயம் இதுதான். ஆனால், உங்கள் வாகனத்தின் மைலேஜில் 5 முதல் 10 சதவிகிதம் பங்கு வகிப்பது, டயர் பிரெஷர்தான். ஒவ்வொரு வாகனத்தின் பர்ஃபெக்ட்டான டயர் பிரெஷர் குறித்த விவரங்கள், அதன் Owners Manual-ல் வழங்கப்பட்டிருக்கும். தற்போதைய வாகனங்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்களே இருக்கின்றன. அவை டியூப் டயர்களைவிடக் குறைவான அளவிலேயே காற்றழுத்தத்தைக் கைவிடும் என்பதுடன், இதில் பஞ்சர் சரிபார்ப்பதும் சுலபம். 
ஒருவேளை உங்கள் வாகனத்தின் டயரில் வழக்கத்தைவிடக் குறைவான காற்றழுத்தம் இருந்தால், அது கூடுதல் உராய்வைத் தந்து மைலேஜைக் குறைக்கும். இதுவே அதிக காற்றழுத்தம் இருந்தால், அது உங்கள் வாகனத்தின் ஓட்டுதல் அனுபவத்தைப் பாதிக்கும். எனவே வாரத்துக்கு ஒருமுறை அல்லது வாகனத்துக்கு பெட்ரோல்/டீசல் நிரப்பும்போதோ, டயரில் சரியான காற்றழுத்தத்தை மெயின்டெயின் செய்வது, மைலேஜையும் டயரின் ஆயுளையும் கூட்டும். இதுவே நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டால், அது டயரின் வெப்பநிலையைச் சீராக்குவதில் உதவும்.
அதிக ஐடிலிங் கூடாது!
நெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்லும்போது, சிக்னல்கள் நம்மை நிழல்போல பின்தொடர்வது வழக்கமான ஒன்றுதான். எனவே, சிக்னலில் 10 விநாடிக்கும் அதிகமாக நிற்க நேர்ந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடலாம். இதனால் எரிபொருள் சேமிப்பதுடன், காற்று மாசடைவதும் கட்டுப்படுத்தப்படும். பைக் என்றால் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் எனவும், கார் என்றால் ஏசி ஆஃப் ஆகிவிடும் என்பதாலும், சிக்னலில் நிற்கும் பலர் தமது வாகனங்களை ஆஃப் செய்யாமல் ஐடிலிங்கில் விடுவதைப் பார்க்க முடியும்.
இன்னும் சிலர் ஏதோ ரேஸுக்கு ரெடியாவதுபோல ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டே இருப்பார்கள். இதற்குப் பதிலாக, காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, சில நிமிடம் ஐடிலிங்கில்விடுவது நன்மை தரும். அப்போதுதான் ஆயில் இன்ஜின் முழுவதும் பரவியிருக்கும். இதனால் சரியான வெப்பநிலையில் இயங்குவதற்கும் இன்ஜின் ரெடியாகியிருக்கும். 
லைட் வெயிட் நல்லது!
உங்கள் வாகனத்தின் எடை குறைவாக இருந்தால், அது இயங்குவதற்குக் குறைவான எரிபொருளையே எடுத்துக்கொள்ளும். இதனால் உங்கள் வாகனத்தின் மைலேஜில் கணிசமான முன்னேற்றம் தெரியும். எனவே, பைக் என்றால் இரண்டு நபர்களுக்கு மேலே செல்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது வாகனத்தின் ஆயுளையும் பாதிக்கும். இதுவே கார் என்றால், ரூஃப்புக்கு மேலே அல்லது டிக்கியில் அளவுக்கு அதிகமான பொருள்களைக் கொண்டுசெல்வது, வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேவைப்படும்போதுதான் க்ளட்ச்!
உங்கள் வாகனத்தில் கியர் மாற்றுவதற்கு மட்டுமே க்ளட்ச்சைப் பயன்படுத்த வேண்டும்; நெரிசல்மிக்க டிராஃபிக்கில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு அல்ல என்பதை நினைவில்கொள்ளவும். அதுவும் சிக்னலில் நிற்கும்போது நியூட்ரலில் இல்லாமல், முதல் கியரில் க்ளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பதைப் பார்க்க முடியும். 
அது மைலேஜையும் க்ளட்ச் ப்ளேட்டின் ஆயுளையும் குறைக்கும். மேலும், பிரேக் பிடிக்கும்போது க்ளட்ச்சைப் பிடிக்கவே கூடாது மக்களே! இவற்றையெல்லாம் தவிர்க்க, சரியான கியரில் சரியான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தினாலே போதுமானது. 
தரமான எரிபொருள் அவசியம்!
எத்தனை பெட்ரோல் பங்க் இருந்தாலும், கலப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எனவே, முடிந்த அளவுக்கு ஒரே பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். மேலும் IOC, BP, HP போன்ற எரிபொருள் நிறுவனங்கள், Company Owned & Company Operated (COCO) பாணியில் பெட்ரோல் பங்க்குகளைக் கொண்டுள்ளன. இவற்றில் உங்கள் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பும்போது, கலப்படமற்ற எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். 
ப்ரீமியம் எரிபொருள் என்றால் அது போனஸ்! ஏனெனில், தொடர்ச்சியாகக் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளில் இயங்கும் வாகனம், முதலில் மைலேஜைக் குறைத்து, பிறகு கார்புரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் தொடங்கி இன்ஜின் வரை அனைத்தையும் படிப்படியாக காலி செய்துவிடும். மேலும் பெட்ரோல் டேங்க்கை ஃபுல் செய்வதற்கு, காலை அல்லது இரவு நேரத்தில் நிரப்புவது லாபகரமாக இருக்கும். அதாவது மதிய நேர வெயிலில், எரிபொருள் விரைவாகவே வெப்பமயமாகும் தன்மையைக்கொண்டிருக்கிறது
Thanks to vikatan.com
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 7 மார்ச், 2019

கண்ணாடி வாழ்கை –

கண்ணாடி வாழ்கை

பேரா. ஹஸனீ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும்.
இக்காலத்தில் இந்த சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு அற்புதமான குணநலனை இந்த ஹதீஸ் விவரிக்கிறது, பொதுவாக இன்று யாருடைய பேச்சையும் யாரும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இல்லை.
என் கருத்தே மிகச்சரியானது என்று கொடிபிடிக்கும் காலமிது, அது சமூகமாக இருந்தாலும், ஊராக இருந்தாலும், இயக்கமாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் தனி மனிதனாக இருப்பினும் இதுவே நிலை.
நிலை இப்படி இருக்க பெருமானாரின் கருத்தை கேளுங்கள், உங்களில் ஒருவர் தன் சகோதருக்கு கண்ணாடி, கண்ணாடி என்றால்? தலைவாற வா? என்றால் இல்லை தலைக்குள் (மூளை) வருட.
கண்ணாடி எப்படி தனக்குள் எத்தனை கீறல்கள் இருந்தாலும் எதிரில் நிற்பவரின் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய தூசியை கூட தெளிவாக சுட்டிகாட்டுமோ அப்படித்தான் ஒரு முஃமின் இருப்பார் என்கிறது இந்த ஹதீஸ்.
ஒகோ! நம்மிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டும் தான் நாம் திருத்தவேண்டுமா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
இந்த நிலையை ( இன்றைய சமூக நிலையை ஒழிக்க வந்தது தான் இந்த ஹதீஸ்) அல்லாஹ்வும் அவன் தன் தூதரும் மனிதனின் இயற்கை இயல்புகளைப்புரிந்தால் மிகத்தெளிவாக நம்மை பண்படுத்துகினர்.
பொதுவாக மனித இயல்பு அவனின் நிலைப்பற்றி அவனுக்கு தெரியாது அடுத்தவர்களைப்பற்றியே அதிகமாக பார்த்தும் யோசித்தும் கொண்டிருப்பான்.
அடுத்தவர்களைப் பற்றி ஒரு செய்தி செல்லப்பட்டால் அவன் ஃபிராட், அவன் ரெம்ப ஒழுக்கமானவனா? அவனைப்பற்றி தெரியாத என்பது போன்றவைத் தான் பதிலாக வரும்.
இந்நிலையை நுட்பமாக விளங்கியதால் இஸ்லாம் மனிதனின் குணங்களையும், ஆற்றல்களையும் வேறோரு நிலையாக மாற்ற முடியுமே அல்லாது அதை மெத்தமாக அழித்துவிட்டு அதில் மனிதத்தை எழுப்ப முடியாது என்ற கொள்கையை தன் தாரக மந்திரமாக வைத்துள்ளது.
ஒரு முஃமின் தன் சகோதர் பார்வை மூலமாக தம்மை எப்படி மேம்படித்திக்கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை இந்த இடத்தில் எடுத்தாளுகிறது.
எந்த மனிதனும் தம்மிடம் உள்ள குறைகளை அவ்வளவாக அறியமாட்டான் (அறிந்து வைத்திருந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டான்) , உங்களைப்பற்றியே உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களைப்பற்றி நீங்கள் வரைந்து வைத்திருப்பது நீங்கள் ரெம்ப நல்லவர் என்பதாகத்தான் இருக்கும்.
இந்த ஒரு பார்வைதான் தம் சுயமுன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் தடைக்கல். ஆகையால் ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள முற்படுகிற போது அவனுக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது அடுத்த ஒரு முஃமினான மனிதன் தான்.
அவனிடமிருந்து தன்னை பற்றி வரும் செய்திகளை வைத்து அதை நீக்கி தன்னிலை உயர்த்திககொள்வான், இவன் மற்ற சகோதர்களுக்கு கண்ணாடியாக ஆகும்போது ஒரு முழு சமுதாய முன்னேற்றமும், சமுக மாற்றமும் ஏற்பட இது மிகப்பொரும் காரணமாக இருக்கும்.
அடுத்து, இது ஒரு மனிதனிடம் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை ஏற்படுத்தும், இந்த ஏற்றுக்கொள்ளு பக்குவம் இல்லாததால் தானே இன்று சமூக சீரழிந்து நேர்கதியாக நிற்கிறது.
அடுத்து கண்ணாடியிடம் இருக்கிற கீறல்களால் நாம் என்றும் அதை பார்த்து சீவாமல் இருந்து விடுவதில்லையே.
இன்று சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள சிலர் மக்களுக்கு மத்தியில் வரும்போது முகமூடி அணிந்த மிக நல்லவர்களைபோல் வலம்வருபவர்கள் கூட தன் குளியலரையில் கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள் என்பது தற்கால ஆய்வேட்டின் வேடிக்கையான ஆனால் உணமையான தகவல்.
தன் சகோதரனைக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும் தன்னை கொண்டு இந்த சமூக மக்களுக்கு பிரையோஜம் ஏற்பட் வேண்டும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயமே.
சரி, நாளை காலையிருந்து இந்த வேலை ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு ஆளாப்பர்த்து என்னப்பா இப்படி பான்ற? நீ பண்றது சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள்
அதை எப்படி செய்யனும் என்பது பற்றி மிர்காத் என்ற ஹதீஸ் விரிவுரை நூலில் மிக அழகாகவே எழுதியிருக்காங்க. இது ஒரு அழகான செய்தியாக இருக்கிறதே இதை எப்படி ஆரம்பிப்பதுஎன்று தானே சந்தேகம், வருங்கள்அதையும் பார்போம்
1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும்.
ஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்து காக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும்.
அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
இன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும்.
ஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான்.
அவர் சொன்னார் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா? அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா?அப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா?
அப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும்.
உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும்.
அடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும்.
ஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது.
அடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை,அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும்.
2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நாகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது.
சில பேர் ' யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்'. தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம்.
3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில்,ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர்.
இதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே,ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள்.
நீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள்.
இதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=485


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 5 மார்ச், 2019

ஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப்படி?

ஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப்படி?
இணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இடையிடையே சில தகவல்களை படித்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.
திடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் "இன்டர்நெட்" ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது.

எனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
  சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்தை பறைசாற்றும். நம்பிக்கையான இணையதளம் என்றால், அதன் வடிவமைப்பு, அதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், வாசகர்களின் கருத்துகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதில் அமைந்திருக்கும் கட்டுரைகள் பிழையின்றி இருக்கும். அதே சமயம் அதில் இடம்பெற்றிருக்கும் About US, Contact Us, Privacy Policy போன்ற பக்கங்களை பார்வையிட்டாலே அந்த தளத்தைப் பற்றி நம்பக்தன்மையை அறிந்துகொள்ளலாம்.

4. ஒரு இணையதளத்தின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்கு,
 WOT, Webutation, Trustpilot போன்ற பிரபலமான Browser Extensions உள்ளன. அவற்றை வலை உலவியில் இணைப்பதன் மூலம், நீங்கள் எந்த ஒரு இணையத்தளத்தை திறந்திடும்பொழுதும், அவ்விணையதளத்தின் "நம்பகத்தன்மை" குறித்த தகவல்களைக் காட்டும்.

அதேபோல,
 AVG Link Scanner , McAfee SiteAdvisor மற்றும் Dr.Web LinkChecker போன்ற ஆன்ட்டி-வைரஸ் புரோகிராம்களும் வலைத்தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் வைரஸ் போன்ற புரோகிராம்களின் ஆபத்து குறித்த தகவல்களை உடனடியாக காட்டிவிடும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 3 மார்ச், 2019

பயணியின் வாழ்க்கை

பயணியின் வாழ்க்கை

- பேரா. ஹஸனீ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் என் இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக கூறினார்கள் " நீங்கள் இந்த உலகில் ஒரு ஏழையைப்போன்றோ அல்லது ஒரு பிரயாணியைப்போன்றோ இருங்கள் என்று கூறினார்கள் என்று நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது போன்று தோன்றினாலும், இது அனைவரும் சொல்லப்பட்ட ஒன்று. இன்னும் ஒரு அற்புதமான ஒரு செய்தி இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
இப்னு உமர் அவர்கள் இந்த ஹதீஸை நபியவர்கள் தனக்கு எவ்வாறு கூறினார்கள் என்ற நிலையையும் ( இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக )சேர்த்து வர்ணித்தே கூறியுள்ளார்கள்.
ஹதீஸ்கலை வல்லுனர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த மிகப்பெரிய சேவை, ஹதீஸ்களை மட்டும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்காமல் அது நடைபெற்ற சூழல், அதை அறிவித்தவர்களின் வரலாறு என்று மிகப்பெரும் பொக்கிஷங்களை விட்டுச்சென்றுள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் அத்துணை பேரின் சிறிய, பெரிய பாவங்களை மன்னித்து, அவர்களின் தரஜாக்களை உயர்த்தி, அவர்களின் மண்ணறையை சுவனத்தின் உயர்ந்த பகுதியாக ஆக்கித்தருவானாக.
இந்த ஹதீஸில் நபிகளார் இந்த செய்தியை கூறும் போது நடந்துகொண்ட விதம் அவர்களின் leadership quality யைக் காட்டுகிறது. இப்படி நபிகளார் எந்தந்த மனோநிலையில் இருந்தார்களோ அவற்றையும் முழுவதுமாக ஹதீஸில் பதிவுசெய்கின்றனர்.
தான் செல்லவந்த செய்தியின் முக்கியத்துவதை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உணர்த்துவதற்காக நபியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
இந்த உலகைப்பற்றி உண்டான செய்தி இது ஒரு நிலையான பொருள் இல்லை, இன்னும் இதன் வெளிரங்கம் ஆடம்பரமாகவும், அழகானதாகவும் இருப்பினும் இதன் உள்ரங்கமோ அழிந்து போகக்கூடியது.
அது மனிதர்களை தன் வெளிரங்க அழகால் கட்டிப்போட்டுள்ளது. அதனால் இதன் அழகில் மயங்கிய மனிதன் மறுமைச் சிந்தனைவிட்டும் வெகு தூரம் சென்று விடுகிறான்.
இது குறித்து குர் ஆன் கூறும் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது, நிச்சயமானது " இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை (3:185)
இதில் இன்பம் இல்லை என்று சொல்லவில்லை, மறுமையை நிலைநிறுத்தும் போது இது அற்ப இன்பம். ஆனால் அந்த இன்பம் கழிந்து அவன் உணர்வு பெறுவதற்கு முன்பே அவனை மரணம் அள்ளிச்செல்கிறது.
எல்லா விஷயத்திற்கும் வழிகாட்டியாக வந்த நபிகளார் மனித வாழ்வோடு இரண்டுர கலந்த இந்த உலக வாழ்வை குறித்து சொல்லாமல் சென்றிருப்பர்களா?
அவர்கள் தான் நமக்கு நிதமான வழிகாட்டியாயிற்றே, சரியான உபதேசிப்பாளர் ஆயிற்றே.
ஆகையால் தான் தேவையான நேரத்தில், தேவையான அளவில், உதாரணங்களோடு தங்கள் தோழர்களுக்கு சொல்லுவது போன்று உலகம் அழியும் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்.
ஒரு ஏழையைப்போன்று அல்லது ஒரு வழிப்போக்கன் போன்று என்ற அழகிய உவமானத்தோடு கூறினார்கள். இந்த இருவருக்கும் எங்கும் நிலையான இடம் இருக்காது, அவன் எண்ணம் முழுவதும் தன் சென்றடய் வேண்டிய இடம் நோக்கி இருக்கும். தன்னிடம் இருக்கும் நிலைகொண்டு பொருந்திக்கொள்வான்.
இன்று நாம் பார்க்கிறோம், எத்தணையோ பணக்கார்கள் கூட பயணம் என்று வந்துவிட்டால் பயணத்திற்க்கு தோதுவான தன் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
என்ன ஒரு அற்புதமான ஒப்பீட்டை கூறியுள்ளார்கள் மனிதரகளாகி நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ மறுமை என்ற ஊர் நோக்கியல்லவா பயணத்தில் இருக்கிறோம்.
பயணம், அது தானே மனிதர்களின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. எத்தணையோ நபர்களின் பயணம் அவர்களை கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்கிறது. இன்னும் சிலரோ மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருபவரும் உண்டு
பயணங்களில் தானே மனிதன் பொறாமை, கோள், பொய், அடுத்தவர்களுக்கு காட்டுதல் போன்ற கீழ் குணங்களிருந்து விலகிநிற்கிறான்.
இன்னும், ஒருவனைப் பற்றி சாட்சி சொல்லுவதற்க்கு கூட அவரோடு பயணத்தில் இருந்ததயோ அளவுகோல் ஆக்குகிறது இஸ்லாம்.
இப்படி தொடர்கிற செய்திகள் எத்தணையோ.......
ஆகையால் இந்த ஹதீஸை வைத்து மக்களை விட்டு தனித்து சென்று விடலாமா? என்றால் இஸ்லாம் அதையும் அனுமதி அளிக்கவில்லை.
நபிகளாரின் வார்த்தைகளை தீர்மிதி என்ற ஹதீஸ் புத்தகத்தின் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை கவனியுங்கள்.
மக்களோடு கலந்து அவர்களின் சிரமங்களை பொறுத்துக்கொள்கிற முஸ்லிம், மக்களைவிட்டு தனித்திருந்து அவர்களின் சிரமங்களை பொறுக்காதவரை விட சிறந்தவர் ஆவார்.
இந்த ஹதீஸைக்கொண்டு பொதுவாக நமக்கு இவ்வுலகம் வேண்டாம், இவ்வுலக வாழ்கை ஏமாற்றுதல், ஆகையால் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடவேண்டும் என்ற கருத்து இல்லை.
இந்த ஹதீஸ் வெளிரங்கத்தை குறித்து பேசவில்லை மாறாக மனோநிலைக்குறித்து பேசுகிறது.
சஹாபக்களின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இருந்தார்கள். செல்வம் அவர்கள் கையில் இருந்ததே தவிர மனதில் இருக்கவில்லை. இது தான் இங்குள்ள core point.
கோடிகளின் வரவும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. கோடிகளின் நஷ்டமும் அவர்களிடம் எவ்வித கலக்கத்தையும் அளிக்கவில்லை.
ஏனெனில், அவர்களின் நபிகளின் சகவாசத்தால் அறிந்திருந்தார்கள், கோடிகளை கொண்டு (பிறக்கும் போது) வந்தவர்களுமில்லை. கோடிகோடியாய் இருதததும் (இறந்தபின்) கொண்டுபோனவர்களும். ஆகையால் இல்லாத சொத்துக்கு செந்தம் கொண்டாட என்ன இருக்கிறது.
பிர்அவ்னின் வல்லரசு செத்துக்களேல்லாம் இன்று ஏதோ ஒரு குடிமகன் கையில். செந்தம் கொண்டாட கூட ஆட்களில்லை. நாம் என்னதான் கோடீஸ்வரர்களாக இருப்பினும் இவ்வுலகைவிட்டு செல்லும் போது விரலில் இருக்கிற இரும்பு மோதிரத்தைக்கூட கழட்ட மறக்காது இந்த உலகு.
இப்படி உள்ள உலகில் வாழ நபிகளாரின் வாக்கு அற்புதம் வழிகாட்டியன்றோ.
அதன் அடிப்படையில் வாழ்தால், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் வெல்பவர்கள் நாமாக இருப்போம். வாழ்கையில் பல பயணங்கள் உண்டு .. ஆனால் நம் வாழ்வே பயணமாகட்டும்....
http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=486


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 1 மார்ச், 2019

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிகளைத் தேர்ந்தெடுத்தலே போதுமானது.

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் பணம் தேவை. அந்த பணத்தை எவ்வாறு ஈட்டுவது? என்ன செய்தால் உங்களைத் தேடி உங்களை தேவைகளுக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும்?

இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கிறது நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா?

சரியான விடைகள் உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் சுற்றும் முற்றும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனியுங்கள். அன்றாட உங்களது செயல்களை ஊன்று கவனியுங்கள். ஆம். நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு தொழில், வேலை போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை மூல காரணம் பணம் சம்பாதிப்பதுதான். அதுதான் அவர்கள் குறிக்கோளாக இருக்கும்.

கீரை விற்கும் கண்ணம்மா முதல் பால் விற்கும் பாலசுப்ரமணி வரை அனைவருமே பணத்தை தேடித்தான் அலைகிறார்கள்.

பணம் பத்தும் செய்யும்.. பணம் பாதாளம் வரை செல்லும்... பணம் இல்லையென்றால் பிணம் என்ற பழமொழிகள் அனைத்துமே பணத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை பறைசாற்றுபவைகள்தான்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எப்படி சம்பாதிப்பது? என்ன செய்வது என்பதில் அதிக குழப்பம் உள்ளது என்று புலம்புபவர்கள் பலர்.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு பணம் சம்பாதிக்க தெரியாது என்பதெல்லாம் பொய். அதற்கான முயற்சிகளை அவர் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

உதாரணமாக நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்றாலே,
  முதலில் காலணி தான் அணிய வேண்டும். அதிலிருந்தே உங்களது தேடலைத் தொடங்கலாம். சாதாரணமாக பார்த்தால் அது ஒரு காலணி. ஆனால் வியாபார, தொழில் ரீதியான கண்ணோட்டத்துடன் அதை அணுகினால் அது ஒரு பணம் தரும் பொருள்.

ஆம். நண்பர்களே.. அந்த காலனியை நீங்கள் முதலில் ஒரு கடைக்காரரிடம் வாங்கியிருப்பீர்கள். அவர் நிச்சயமாக ஒரு செருப்பு கடை வைத்திருப்பார். அதிலிருந்து அவருக்கு வருமானம் கிடைக்கும். அந்த செருப்புகளை ஏதோ ஒரு டீலரிடம் இருந்து அவர் பெற்றிருப்பார். அதை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்பவருக்கும் நோக்கம் பணம் சம்பாதிப்பதாக மட்டுமே இருக்கும். அந்த செருப்பை தயாரித்த நிறுவனத்திற்கும் அதுவே முழு முதற் காரணமாக இருந்திருக்கும்.

அதைத் தயாரிக்க உதவிய இயந்திரங்களும், அதைத் தயாரித்தவர்களுக்கும் அப்படியே. செருப்பு தயாரிக்க உதவிய மூலப் பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் "பணம் சம்பாதிப்பதை" அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

இப்படி சாதாரண காலணியில் கூட இத்தனை ஆயிரம் விஷயங்கள் உண்டு. அன்றாடம் நாம் பயன்படுத்தும் "அழகு சாதனப்பொருட்கள்" கூட அப்படித்தான்.

வீட்டு உபோயகப் பொருட்கள் முதற்கொண்டு, நாம் அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்கள் வரை பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே தயாரித்து/உருவாக்கப்பட்டு விற்கப்படுகிறது.

இவ்வாறு உங்களைச் சுற்றியே உங்களுக்கான பணம் ஈட்டும் வழிகள் 1000 உண்டு. அவற்றில் உங்களுக்குப் பிடித்தமான, உங்களால் செய்ய முடிந்த வியாபாரத்தை, தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

தொழில் ஆரம்பிப்பது என்றால் அதற்கான முதலீடு, மூலதனம் வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்று யோசித்து, அதை கைவிடுபவர்கள் வாழ்க்கையில் என்றுமே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியாது.

தடைகள் அனத்தையும் உள்வாங்கி, அதை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவர்களால் மட்டுமே தொழில் தொடங்க முடியும். எடுத்த எடுப்பிலேயே "எதிர்மறை சிந்தனை" நிச்சயம் அந்த செயல் முடிக்க உதவாது.

தொழில் தொடங்க சுய ஆய்வு செய்திடுங்கள்:

ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதைப்பற்றிய அறிவு, அனுபவம் நிச்சயம் வேண்டும். அதைப் பெற்றிட முதலில் முயலுங்கள். எந்த ஒரு தொழிலும் இலாபகரமானதுதான். அதை நாம் எப்படி செய்கிறோம், எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் "சூட்சுமம்" அடங்கியுள்ளது.

நம் வீட்டிற்கு வரும் கீரை விற்கும் ஆயா, தனது வருமானத்தை பெருக்கிட செய்யும் வழிமுறை கூட ஒரு நல்ல உதாரணம்தான். 5 ரூபாய்க்கு கிடைக்கும் கீரையை வாங்கி, நம் இல்லம் வந்து அங்கு 10 ரூபாய்க்கு விற்கிறாள். 5 ரூபாய் இலாபம். பத்து வீடுகளில் விற்றால் 50 ரூபாய். 20 கற்றை கீரை விற்று முடித்தால் நிகர லாபகம் ரூபாய் 100.

ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தை தன்னுடைய 100 ரூபாய் மூலதனத்தின் மூலம் பெற்றுவிடுகிறாள். ஆக, செய்யும் தொழில் எதுவாக இருப்பினும், அது தரமானதா, பயன்மிக்கதா, அதிலிருந்து நல்ல வருமானம் கிடைக்குமா என்றுதான் கணக்கிட வேண்டுமே தவிர, அது செய்தால் இப்படி ஆகிவிடும்,இது செய்தால் அப்படி ஆகிவிடும்..
செய்து நசிந்துவிட்டான். இவன் கடன்காரன் ஆகிவிட்டான் என்ற எதிர்மறை எண்ணங்களை வளர விட்டால் ஆபத்துதான். துவகத்திலேயே அதுபோன்ற எண்ணங்களை விட்டு, அந்தந்த பகுதியில் என்னென்ன தேவைகள் இருக்கிறது? போட்டிகள் குறைவாக இருக்கிறது என ஆய்ந்தறிந்து, அதற்கேற்ற வகையில் தொழில் அமைத்து, அதை விரும்பிச் செய்தால் கண்டிப்பாக தொழிலில் வெற்றி பெறலாம்.

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள் என தலைப்பிட்டுவிட்டு கதை கதையாக எழுதுகிறீர்களே என உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.

100 வழிகளை 100 தலைப்பிட்டு எழுதிவிடலாம். அதற்கு சிறிய விளக்கமும் கொடுத்துவிடலாம். அது போன்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எழுதினால் அது ஒரு பாட புத்தகம் மாதிரி (தியரி) ஆகிவிடும். பாடம் படித்து விடுவதினால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில், தொழிலில் வெற்றி பெற முடியுமா என்றால் 100% இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

செயல்படுவதில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது. அதில்தான் தொழிலின் நிரந்தர வெற்றி அடங்கியிருக்கிறது.

உங்கள் தெருவில், நகரத்தில் கூட நீங்கள் நிறைய கடைகளை பார்த்திருப்பீர்கள். ஒரு சிலர் புதியதாக தொடங்கி சில மாதங்களில் கடையை மூடிவிடுவார்கள். ஒருவர் அந்த தொழிலில் அதிகம் சம்பாதிக்கிறார் நாமும் அதைப் போலவே செய்து சம்பாதித்து விட வேண்டும் என்ற போட்டியில் கடை வைத்தால், உண்மையில் ஒரு சில மாதங்களில் காணாமல்தான் போவார்கள்.

அந்த தொழில் எப்படி செய்வது? என்ன செய்தால் "வாடிக்கையாளர்"களை கவரலாம் என்பன போன்ற சுவாரஷ்யமிக்க தொழில்நுட்பம்/சாதுர்யம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி பொருள் கொடுத்தால் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்ற நேர்த்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை வாடிக்கையாளர்களிடம் காட்ட வேண்டும்.

கடின உழைப்பு, அதிக பொறுமை இரண்டுமே தொழிலில் வெற்றிப் பெறுவதற்கான இருவழிகள்.

எனக்கு பிசினஸ் செய்ய ஆசை? யாருமே சப்போர்ட் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.
 

இப்படி சொல்பவர்களை முட்டாள் என்று கூட சொல்லலாம். உனக்கு யாருமே வழிகாட்டவில்லை, உதவவில்லை என்றால், உனக்கான வழிகளை நீயே அமைத்துக்கொள். தேடிக்கொள். அப்படி இருந்தால்தான் எவரையும் எதிர்பார்க்காமல் உன்னால் சொந்தக் காலில் நிற்க முடியும்.

சாதாரணமாக கண்ணுக்குத் தட்டுப்படும் ஒரு தென்னங்கீற்றைக் கூட , லாவகமாக பின்னி, கீற்றாக்கி விற்க முடியும். நாலு தென்னை மட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குச்சிகள் ஒரு துடைப்பமாக உருவாகிறது. இன்று நகரங்களில் ஒரு துடைப்பத்தின் விலை
  50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கண்ணில் காண்பவை அனைத்துமே உங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடியவைதான். தேவை ஆக்கப்பூர்வான சிந்தனை. அவ்வளவுதான்.

ஹா..ஹா... இதென்னா பணம் சம்பாதிக்க வழிகள் சொல்றேன்னுட்டு 100 க்கும், 50க்கும் சம்பாதிக்கிற பாட்டி கதைகள் சொல்றீங்களேன்னு உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம்.

என் பாட்டி அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொன்னாதான் நூறாகும், ஒட்டுக்கா நூறாகாது. 100 என்பது துவக்கத்திலேயே வந்துவிடாது. ஒன்று, இரண்டு என ஆரம்பித்து 99 முடிந்த பிறகு 100 என்ற இலக்கம் வரும்.

அதுபோலதான், படிப்படியான முன்னேற்றம் தான் சரியானதாக இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பல லட்சங்கள் முதலீட்டில் அனுபவமில்லாமல் குதித்துவிட்டு, பணத்தை வியாபாரத்தில் தொலைத்துவிட்டு, பிறகு வருந்துவதால் பயனேதும் இல்லை.

எந்த ஒன்றுக்குமே துவக்கப்புள்ளி உண்டு. அது சுழியத்தில்தான் தொடங்கும். அது முடியும்போது, அதன் மதிப்பு எண்ணிலடங்காது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

துவழக்கூடாது
என்ன இது? எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கிறதே? ஒரு நாளைக்கு பத்து துடைப்பம் விற்பது இலக்கு. ஆனால் ஒன்று கூட விற்காமல் இன்று நாள் கடந்து விட்டதே என்று வருத்தப்படக்கூடாது. இந்த இடத்தில்தான் வாடிக்கையாளர்களின் மனதை படிக்க வேண்டும். வியாபார யுக்தியை செயல்படுத்த வேண்டும். உங்களிடம் பொருள் இருப்பதை அவர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அதனுடைய தரத்தை எடுத்தியம்ப வேண்டும். பொருளுக்கு தேவை இருக்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் வந்தே தீருவார்கள். இங்கு போனால், இந்த பொருள் இவ்வளவு தரத்தில் கிடைக்கும் என்பதை அவர்களின் மனதில் ஆழ பதியவிட்டால் போதும். உங்களுக்கு அவர்கள் மூலம் இலவச விளம்பரம் கிடைத்துவிடும்.

விற்பனை இல்லையென துவழாமல், அன்றைய தினத்தை மறந்துவிட்டு, அடுத்த தினத்தில் நடக்கப் போவற்றை நின்று கவனிக்க வேண்டும். மனதளவில் துவழந்து வாடினால், நீங்கள் துடைப்பம் பிசினஸ் செய்யக்கூட தகுதியற்றவர்.

எனக்குத் தெரிந்த பணம் சம்பாதிக்க 100 ஆக்கப்பூர்வான வழிகள் என்னென்ன என்பதை இனிவரும் கட்டுரைத் தொடர்ச்சியில் காணலாம். அதுவரைக்கும் ஒன்றுக்கு 100 முறை இந்த கட்டுரையை வாசியுங்கள்.

https://www.softwareshops.net/2018/07/100-creative-way-to-earn-money.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts