லேபிள்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2021

உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு சத்தா..இனி தூக்கி வீசாதீங்க.. நீங்கள் அழகில் மிளிர அதுவே போதும்..!

உருளைக்கிழங்கு வாயு என்றாலும் அதன் சுவையே தனிதான். சாம்பார் முதல் சப்பாத்திக்கு தயாரிக்கப்படும் பிரத்யேக உருளை குருமாவரை சைவச் சாப்பாடு என்றாலும், அசைவம் என்றாலும் உருளைக் கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. அதனால் அனைத்து வீடுகளிலும் வாங்கிப்போடும் உணவுகளில் உருளைக் கிழங்கும் இருக்கும்.

அந்தவகையில், உருளைக் கிழங்கு எப்போதும் வீடுகளில் இருக்கும். உருளைக் கிழங்கின் தோலை நாம் சீவி குப்பையும் வீசுவோம். ஆனால் அந்த தோலில் நம் சரும அழகை பராமரிக்கும் மிகப்பெரிய சூட்சமமே இருக்கிறது. ஆம், நாம் நம் சரும அழகைப் பராமரிக்க இயற்கையான சில நுட்பங்களையே கையாளலாம். ரசாயனக் கலவைக்குப் பதில் இயற்கைமுறையில் சருமப் பொலிவுக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. இதற்கு அதன் தோலே போதும்.

பொதுவாகவே நாம் உருளைக் கிழங்கின் சீவிய தோலை முகத்தில் பரு உள்ள இடத்திலும், கருவளையம் உள்ள இடத்திலும் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதேபோல் உருளைக்கிழங்கின் தோலை பேஸ்பேக்காக கூடப் போடலாம். இதனால் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

இதேபோல் உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் போலவும் முகத்தில் தடவிவர முகம் பொலிவு பெறும். இதற்கு உருளையின் தோலை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து முகத்தில் பூசிப்பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். அப்புறமென்ன..உங்க சருமமும் பள,பளன்னு மின்னும்!

https://tamizstar.com/?p=3400


--

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts