லேபிள்கள்

வியாழன், 9 டிசம்பர், 2021

உடல் எடை குறைக்க வெளிநாட்டு உணவுகளை தேட வேண்டாம்... நம்ம ஊர் உணவே போதும் !

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே செலரி போன்ற கிடைக்காத காய்கறிகளை நாடி செல்ல ஆரம்பித்து விடுவோம். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நம் வீட்டில் இருக்கும் இந்திய உணவுப் பொருட்களைக் கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். நம் பராம்பரிய உணவுகளில் உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

இனி உங்க உடல் எடையை குறைக்க ஆடம்பரமான செலரி மற்றும் சாலட் வகைகள் தேவையில்லை. நம்முடைய இந்திய உணவுகளில் கூட நிறைய பொருட்கள் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க இனி ஆங்கில உணவுகளை நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நம் நாட்டில் உள்ள காய்கறிகள் தானியங்களுமே உடல் எடையில் முக்கிய பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். உடல் எடையை குறைக்க செலரி மற்றும் பெர்ரி என்று கிடைக்காத விஷயங்களை தேடி அலையாமல் உங்க வீட்லயே சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை நீங்கள் பெறலாம். இவைகள் விலை மலிவானது மட்டுமல்லாமல் எளிதில் கிடைக்க கூடியதாகவும் உள்ளது. அந்த வகை உணவுகளை பற்றி தற்போது அறிந்து கொள்வோம்.

#
டாலியா

டாலியாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. நார்ச்சத்து செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் உங்களை முழுமையாக வயிறு நிரம்பிய உணர்எை தருகிறது. இதனால் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தடுக்கிறது . அதேசமயம், புரோட்டீன் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், எனவே பசியைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே இனி காலை உணவிற்கு இந்த ஆரோக்கியமான டாலியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

#
பிஸ்தா_பருப்பு

பிஸ்தா பருப்பு கலோரிகள் மிகக் குறைவான ஒன்றாகும். இது எடை இழப்பிற்கான சிறந்த சிற்றுண்டி ஆகும். அமெரிக்கன் நியூட்ரிஷன் கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ப்ரீட்ஜெல்களுக்கு பதிலாக பிஸ்தா வைத்திருந்த பங்கேற்பாளர்கள் தங்கள் உடல் நிறை குறியீட்டில் (பிஎம்ஐ) இரு மடங்கு குறைப்பை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.

#
தயிர்

தயிர் மற்றும் யோகார்ட் இரண்டுமே சிறந்த புரோபயாடிக் உணவுகள் ஆகும். இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் நல்ல மூலமாகும். இது செரிமான அமைப்பு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நல்ல செரிமானம் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இதில் அதிக கால்சியம் இருப்பதால் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

சர்வதேச உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 12 வாரங்களுக்கு கொழுப்பு இல்லாத தயிரை உட்கொண்ட பருமனான பெரியவர்கள் அதிக எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைத்து இருப்பதில் தெரிய வந்துள்ளது. 81 % குறைந்த கொழுப்பு வயிற்று பகுதியில் எரிக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால் தயிர் சிறந்த ஒன்றாக இருக்கும்.

#
புளி

நம் இந்திய பாரம்பரிய சமையலில்

பயன்படுத்தப்படும் புளியில் ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் (எச்.சி.) எனப்படும் அமிலம் உள்ளது. இது பசியை அடக்குகிறது மற்றும் உடல் எடை குறைகிறது. மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை அதிகரித்து பசியை குறைக்கிறது.

#
சர்க்கரை_வள்ளிக்_கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே வழக்கமான ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். இவை நார்ச்சத்துக்கள், நீர்ச்சத்து நிறைந்தவை. எளிதில் சீரணிக்க உதவுகின்றன.

உண்மையில், ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுடில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சர்க்கரை வள்ளிக் கிழங்கு உங்கள் கொழுப்பு செல்களை சுருக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

#
தக்காளி

உங்க பசியை அடக்குவதற்கு தக்காளி சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த பழத்தில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்த ஒன்று. தைவானில் உள்ள சீனா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வில், இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 250 மில்லி தக்காளி சாறு குடித்த பெண்கள் உடலில் கொழுப்பு மற்றும் எடை கணிசமாகக் குறைந்து வருவதைக் கண்டறிந்தனர். இந்த பெண்கள் தக்காளி சாற்றை குடித்ததை தவிர உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லையாம்.

#
திரிபலா

திரிபலா உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி அழற்சியை குறைக்கிறது.நிரப்பு மருத்துவ இதழின் ஒரு ஆய்வு, திரிபலா ஒரு எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கும் பொருள் என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வில் பருமனான எலிகளுக்கு திரிபலா சூரணத்தை 10 வாரங்களுக்கு கொடுத்தனர். இந்த சிகிச்சையின் போது உடல் கொழுப்பு, உடல் எடை ஆகியவற்றின் சதவீதத்தை குறைத்தது தெரிய வந்துள்ளது.

#
கொண்டைக்கடலை

டாலியாவைப் போலவே கொண்டைக்கடலை புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. இது எடை இழப்புக்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்களை உங்களை அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதிலுள்ள புரதம் உங்க பசியை தணிக்கும்.

ஒரு ஆய்வில், கொண்டைக்கடலை உட்கொண்டவர்களுக்கு ஆரோக்கியமான பி.எம். இருப்பதற்கான வாய்ப்பு 53% அதிகம் என்று கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வில், தினமும் கொண்டைக்கடலை உட்கொள்வது எடை இழப்பை 25% அதிகரித்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

#
பாசிப்பருப்பு

இந்தியா முழுவதும் காணப்படும் மிகவும் பிரபலமான பருப்பு வகைகளில் பாசிப்பருப்பும் ஒன்றாகும். இது புரதம் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பி உள்ளது. இவை இரண்டும் எடை இழப்பிற்கு சிறந்தது.

#
தேங்காய்_எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்களுக்கு மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை கொடுப்பதில் இருந்து வலுவான கூந்தல் வரை பல நன்மைகளைக் தருகிறது. ஆனால் இது எடை இழப்புக்கும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தேங்காய் எண்ணெயை உட்கொள்ளும்போது, அது உங்கள் பசியைக் குறைத்து, வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை கொடுக்கிறது. ஒரு ஆய்வில், 20 பருமனான பெரியவர்கள் இரண்டு வாரங்களுக்கு தேங்காய் எண்ணெய்யை 30 மில்லி லிட்டர் எடுத்துக் கொண்டனர். அவர்களின் இடுப்பின் சுற்றளவு கண்கூடாக குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே இனி எடை இழப்புக்கு என்று பிரத்யேகமாக தயாராக வேண்டாம். வீட்டில் இருக்கும் நம் இந்திய உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்தாலே உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்

https://pettagum.blogspot.com/2020/08/blog-post_81.html    

--

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts