லேபிள்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2019

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்?

 எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்?
ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: "எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில், அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்".
{
நூல்: 'முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்', பக்கம்:102 }
قال رجل للحسن البصري رحمه الله تعالى: « ممّن أزوّج إبنتي؟ » قال: « ممّن يتّقي الله؛ فإن أحبّها أكرمها، وإن أبغضها لم يظلمها »
{
مختصر منهاج القاصدين، ص١٠٢ }
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
"
மார்க்கப் பற்றிலும், நற்பண்பிலும் நீங்கள் திருப்திப்படும் ஒருவர் (பெண் கேட்டு) உங்களிடம் வந்தால், அவருக்கு நீங்கள் திருமணம் முடித்துக் கொடுங்கள்! அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் பூமியில் சோதனையும், பெரியதோர் குழப்பமும் ஏற்பட்டு விடும்!"
{
நூல்: 'அல்முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைன்' லில்ஹாகிம் – 2695 }
عن أبي هريرة رضي الله عنه قال، قال رسول الله صلّى الله عليه وسلم: [ إذا أتاكم من ترضون خلقه ودينه فانكحوه. ألّا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض ]
{
المستدرك على الصحيحين للحاكم٢٦٩٥ }
தமிழில்
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts