லேபிள்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2019

கணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்!

அல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
"
சரியென நியாயப்படுத்தக்கூடிய காரணி எதுவுமே இல்லாமல் கணவனை வெறுத்து, அவனுக்கு மாறு செய்து நடப்பது மனைவிக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. இல்லற சுகம் அனுபவிக்க மனைவியை கணவன் அழைக்கும்போது அதற்கு அவள் பதிலளிக்காதிருத்தல், அல்லது மனைவியிடம் கணவன் இதை வேண்டும்போது அதில் அவள் தாமதப் போக்கைக் கடைப்பிடித்து பிற்படுத்துதல் போன்ற மாறுசெய்தலுக்கான அடையாளங்கள் தனது மனைவியிடமிருந்து கணவனுக்கு வெளிப்பட்டால், அந்நேரம் கணவன் கீழ்வருமாறு நடந்துகொள்ள வேண்டும்.
அவளுக்கு அவன் உபதேசிக்க வேண்டும்; அல்லாஹ்வைக்கொண்டு அவளுக்குப் பயம் காட்ட வேண்டும்; அவள்மீது கடமையாக இருக்கின்ற கணவனுக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமை குறித்தும், அவனுக்கு மாறு செய்து நடக்கும்போது அவளுக்குக் கிடைக்கும் பாவம் குறித்தும் அவளுக்கு அவன் நினைவூட்ட வேண்டும்.
உபதேசத்தின் பின்னரும் மாறு செய்து நடப்பதை அவள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், அவளோடு படுத்துறங்குவதை விட்டுவிடுவதன் மூலம் படுக்கையில் அவளை வெறுத்து ஒதுக்கி வைக்க வேண்டும். அத்துடன் மூன்று நாட்களுக்கு அவளுடன் அவன் பேசவும் கூடாது.
படுக்கையில் வெறுத்து ஒதுக்கி வைத்ததன் பின்னரும் தனது நிலைப்பாட்டில் அவள் தொடர்ந்தால், காயம் ஏற்படாத வகையில் இலேசாக அவளுக்கு அவன் அடிக்க வேண்டும்.
"எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் நீங்கள் தேடாதீர்கள்!" (அல்குர்ஆன்,04: 34)
என்ற அல்குர்ஆன் வசனம் இதற்கான ஆதாரமாகும்.
கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர், தனக்கு மற்றவரால் அநீதி நடந்துவிட்டதாக வாதிட்டு, அவ்விருவருக்கிடையில் சமாதான நல்லிணக்க முயற்சியும் கஷ்டமாகி விடுமாக இருந்தால், (அவ்விருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக) அவ்விருவருடைய குடும்பத்திலிருந்து (தீர்ப்புக் கூறும்) நீதமான இரு நடுவர்களை நீதிபதி அவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும். (குடும்பத்திலிருந்து இவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால்) 'குடும்பத்தினர்தான், மறைமுக காரணிகளை நன்கு தெரிந்தவர்கள்; அமானிதம் பேணுவதற்கு மிகவும் நெருக்கமானவர்கள்; நலவு விடயத்தில் கூடிய கவனம் செலுத்தக்கூடியவர்கள்' என்பதினாலாகும். சமாதானத்தை ஏற்படுத்துவதையே இவ்விரு நடுவர்கள் எண்ணிக்கொள்வதும் அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: "(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் (சமாதானத்திற்கான) நடுவர்களாக அனுப்பி வையுங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் (கணவன் மனைவி ஆகிய) இருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், கவனிப்பவனாகவும் இருக்கின்றான்". (அல்குர்ஆன், 04: 35)
ஏதாவது ஒன்றைப் பகரமாகக் கொடுத்தோ அல்லது எதையும் கொடுக்காமலோ (கணவனையும், மனைவியையும்) சேர்த்து வைத்தல், அல்லது பிரித்து வைத்தல் என்பதில் எது மிகப் பொருத்தமானதோ அதையே நடுவர்கள் இருவரும் செய்ய வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எந்த முடிவுக்கு இவ்விருவரும் வந்தார்களோ அதுவே அங்கு செயல்படுத்தப்படும்; அல்லாஹ் மிக அறிந்தவன்!".
{ நூல்: 'அல்முலஹ்ஹஸுல் fபிக்ஹீ ', 02/376,373 }
قال العلّامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:-
{
يحرم على الزوجة النّشوز من غير مبرّر. فإذا ظهر للزوج من زوجته شيئ من علامات النّشوز، كأن لا تجيبه إلى الإستمتاع، أو تتثاقل إذا طلبها؛ فإنه عند ذلك يعظها ويخوّفها بالله ويذكّرها بحقه عليها وما عليها من الإثم إذا خالفته، فإن أصرّت على النّشوز بعد الوعظ؛ فإنه يهجرها في المضجع بأن يترك مضاجعتها ولا يكلّمها مدة ثلاثة أيام؛ فإن أصرّت بعد الهجر فإنه يضربها ضربا غير مبرّح؛ لقوله تعالى: « والّاتي تخافون نشوزهنّ فعظوهنّ واهجروهنّ في المضاجع واضربوهنّ فإن أطعنكم فلا تبغوا عليهنّ سبيلا » (سورة النساء، الآية٣٤)
وإذا ادّعى كلّ من الزوجين ظلم الآخر له، وتعذّر الإصلاح بينهما؛ فإن الحاكم يبعث حكمين عدلين من أهلهما؛ لأن الأقارب أخبر بالعلل الباطنة وأقرب إلى الأمانة والنّظر في المصلحة، وعليهما أن ينويا الإصلاح؛ لقوله تعالى: « وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفّق الله بينهما إن الله كان عليما خبيرا » (سورة النساء، الآية٣٥)
والحكمان يفعلان الأصلح من جمع وتفريق بعوض أو بدون عوض، وماانتهيا إليه عمل به حلّا للإشكال، والله أعلم }.
[
الملخّص الفقهي للشيخ فوزان، ٢/٣٧٦،٣٧٧ ]
தமிழில்
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts