லேபிள்கள்

சனி, 13 ஏப்ரல், 2019

ஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா? இதை டிரை பண்ணுங்க!

சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களை சேர்த்து, அரைத்துத் தலையில் தடவிக் குளிக்கலாம்.

பெண்களுக்குத் தலையில் வரும் பிரச்னைகளில் ஒன்று, பொடுகு. பொடுகு வந்துவிட்டால்... அரிப்பு, ஸ்கால்ப் கட்டிகள் எனப் பெரும் தொந்தரவாக இருக்கும். தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர ஆரம்பிக்கும். இதற்குப் பொடுகு ஷாம்புவைத் தவிர, இயற்கை முறை தீர்வுகளும் உண்டு என்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

*
  2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை, இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் எழுந்ததும், இதனுடன் ஃபிரிட்ஜில் வைக்காத மோர் அல்லது தயிர் கலக்கவும். ஸ்கால்ப்பில் படுவதுபோல தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். வெந்தய பேஸ்ட்டைத் தலையில் தடவுவதற்கு முன்பு, தலையை நன்கு வாருங்கள். அப்போதுதான் தளர்வாக இருக்கும் பொடுகுத் துகள்கள் உதிரும். ஆனால், சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் இதை ஃபாலோ செய்யாமல் இருப்பது நல்லது. 

   * தலையில் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயைத் தடவுங்கள். பிறகு, எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு அலசுங்கள். ஒரே வாஷில் பொடுகு குறைந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால், எலுமிச்சம் சாற்றை எண்ணெய் தடவாத தலையில் அப்ளை செய்யவே கூடாது. 

   * சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து, நல்ல தண்ணீரில் போட்டு வாஷ் செய்யவும். தண்ணீரின் மேலாக வெள்ளைப் படலம் ஒன்று படியும். இது அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கீழே தங்கிவிட்ட ஜெல்லை மட்டும் எடுத்து, அதனுடன் கால் டீஸ்பூன் வால் மிளகு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும். இது, பொடுகை நீக்குவதுடன் முடிக்கும் நல்ல பளபளப்பு தரும்.

*
சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களைச் சேர்த்து, அரைத்து தலையில் தடவிக் குளிக்கலாம். தலைமுடி ஷாம்பு போட்டது போலவும் இருக்கும்; பொடுகு வராது, பொடுகு இருந்தாலும் சரியாகிவிடும்.

*
நாட்டு மருந்துக் கடைகளில் நெல்லிக்காய் பவுடர் கிடைக்கும். அதில் 4 டீஸ்பூன், தயிர் 4 டீஸ்பூன் இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, வாஷ் செய்யவும். பொடுகு படிப்படியாகக் குறைந்து, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.

* 4
டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு, இந்தக் கலவையைத் தலையின் ஸ்காப்பில் தடவி, 5 நிமிடம் கழித்து வாஷ் செய்துவிடுங்கள். இதுவும் பொடுகை விரட்டும். பொடுகுப் பிரச்னைக்கு காஸ்மெட்டிக் வினிகரும் பயன்படுத்தலாம். வினிகர் வேண்டாம் என்பவர்கள், ஆப்பிளைத் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்துவிடவும்.

*
டீ ட்ரீ ஆயிலில் 8 துளிகள் எடுத்து, அதைத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து வாஷ் செய்துவிடவும். பொடுகு எங்கே இருக்கு என்றே தெரியாமல் போய்விடும்.

* 10
மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் 10 கிராம் தனியா பவுடரைக் கலந்து, தலையில் தடவி ஊறவைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து தலையை வாஷ் செய்துவிடவும். விளக்கெண்ணெயும் தனியாவும் பொடுகையும் போக்கும்; முடியையும் வளர்க்கும்.

* 10
மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் கைப்பிடி துளசியைப் போட்டு அந்த எண்ணெய்யையும் பொடுகு நீக்கப் பயன்படுத்தலாம். 


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts