லேபிள்கள்

புதன், 27 பிப்ரவரி, 2019

குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாக குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாகப் படம் ஒன்று கடந்த சில நாள்களாக வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டிருக்கிறது. அது பழைய மெசேஜா என்கிற ஆராய்ச்சியைவிட, இதுபோன்ற ஆபத்து எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்ற பதற்றமே நம்மைப் பற்றிக்கொண்டது. காலை நேர பரபரப்பில் பருப்பு வேகவைப்பதிலிருந்து வெஜிடபிள் பிரியாணி வரை சமைக்க குக்கர் இன்றைக்கு கட்டாயம் வேண்டும். குக்கரின் நல்ல பக்கம் வேகமான சமையல் என்றால், மறுபக்கம் நீராவி அடிப்பது, மேலே போட்ட வெயிட் வீசியெறியப்பட்டு கிச்சன் முழுக்க சாதமும் பருப்பும் சிதறுவது எனச் சில இருக்கின்றன. நம் சமையல்கட்டில் ஒன்றாகிவிட்ட குக்கரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? மூத்த குடும்பத் தலைவி லஷ்மி சீனிவாசனிடமும், குக்கரால் கண்களில் காயம்பட்டுவிட்டால் உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி பற்றி கண் மருத்துவர் நிஷாந்திடமும் பேசினோம்.
லஷ்மி சீனிவாசன் (குடும்பத் தலைவி):
''அரிசியோ, பருப்போ எதுவாக இருந்தாலும் அதற்குத் தேவையான அளவான தண்ணீர் மட்டும் வையுங்கள். தண்ணீர் அதிகமாகும்போதுதான் பொங்கி வழிவது, கேஸ் ஸ்டவ்வை அணைத்து லீக்காவது எனப் பிரச்னைகளை ஏற்படுத்தும். தேவைக்கு அதிகமாக ஊற்றப்பட்ட தண்ணீர், விசில் வழியாகச் சீறிக்கொண்டு வெளியேறும்போது, உடனே கரண்டியால் விசிலின் தலைமேல் ஒரு தட்டு தட்டுவார்கள். விசில் அடங்கிவிட்டால் ஓகே. சில நேரம், சீறியடிக்கிற அந்தச் சூடான நீர் முகத்திலோ, கைகளிலோ பட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அதிகமாகத் தண்ணீரைவைத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

குக்கரில் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, வெயிட் போடவேண்டிய இடத்தில் இருக்கும் துளை மூடிக்கொண்டிருக்கிறதா என்று செக் பண்ணுங்கள். துளை மூடிக்கொண்டிருந்தால் வாயால் ஊதியோ, மெல்லியக் குச்சியால் குத்தியோ அடைப்பை நீக்கிவிட்டு பயன்படுத்துங்கள். துளை அடைப்பைக் கவனிக்காமல் வெயிட் போட்டு ஸ்டவ்வில் ஏற்றுவது ஆபத்து. விசில் மூலமாக வெளியேற வழியில்லாமல் பிரஷர், ஒரு கட்டத்தில் விசிலை தூக்கியடித்து வெடித்துச் சிதறும். சமையல்கட்டின் சீலிங் வரை சாதமும் பருப்பும் பறக்கும். பக்கத்தில் நின்றிருப்பவரின் முகம், உடலிலும் கொதிக்கும் சாதமும் பருப்பும் அபிஷேகம் செய்துவிடும் ஜாக்கிரதை.

குக்கரில் சமையல் வேலை முடித்ததும், கேஸ்கட்டை தண்ணீரில் முக்கி வைத்துவிடுங்கள், அல்லது இரவில் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். அப்போதுதான் கேஸ்கட்டில் சீக்கிரம் விரிசல் விழாது. விரிசல் விழுந்த கேஸ்கட்டை, 'லேசாகத்தான் விரிசல் விட்டிருக்கு' என்று சிலர் பயன்படுத்துவார்கள். கேஸ்கட்டில் விரிசல் இருந்தால், அதன் வழியாகச் சூடான நீராவி வெளியேறி, பக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கிற நம் கைகளில் படும்.

சில பெண்கள் குக்கரில் ரொம்ப நேரம் விசில் வரவில்லையென, கத்தி அல்லது கரண்டியால் வெயிட்டை லேசாக தூக்கிவிடுவார்கள். வெயிட் டைட்டாக இருந்தாலும் சரி, பல காலமாகப் பயன்படுத்தி லூசாக இருந்தாலும் சரி, சடாரென்று கழன்று வந்துவிட்டால் விபரீதம்தான். கொதிக்கிற தண்ணீர் படு ஃபோர்ஸாக பீய்ச்சி அடிக்கும். இதுவும் சமைக்கும் பெண்களுக்கு ஆபத்தான விஷயம்தான்.

குக்கர் விஷயத்தில் பல பெண்களும் ஒரு தவற்றை செய்கிறார்கள். அதாவது, ஒரு பிராண்டு குக்கரின் வெயிட்டை அவசரத்துக்கு இன்னொரு குக்கரில் பயன்படுத்துகிறார்கள். இது செய்யவே கூடாத தவறு. சரியாக ஃபிட்டாகாமல் வெயிட் வீசியெறியப்படலாம். அப்படி நடக்கும்போது, கண்களிலோ முகத்திலோ பட்டால் நிலைமை என்னவாகும் நினைத்துப் பாருங்கள்.
குக்கரின் பிடி லூசாக இருந்தால், அதை டைட்டாக்கிவிட்டு பயன்படுத்துங்கள். சூடாக இறக்கிவைக்கும்போது, கைப்பிடி உடைந்து விழுவதைத் தவிர்க்கலாம்.

குக்கரின் ஸ்பேர் பார்ட்ஸை தனியாக வாங்குகிறீர்கள் என்றால், அந்த பிராண்டு தயாரிப்புகளையே வாங்குங்கள். கடையில் கொடுத்து ரிப்பேர் செய்யும்போதும் இதில் கவனமாக இருங்கள்.

சில குக்கர்கள் சமைக்கும்போது வித்தியாசமாகச் சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும். இதற்கு, 'நான் பழசாகிவிட்டேன். என்னை மாற்றிவிடு' என்று அர்த்தம். எனவே, தாமதிக்காமல் புதிய குக்கர் வாங்குங்கள்.

நிஷாந்த்
 
(கண் மருத்துவர்):
குக்கரின் நீராவி, பிரஷர் போன்றவை உங்கள் கண்களில் பட்டுவிட்டால், உடனடியாக ரன்னிங் வாட்டரில் கண்களைக் கழுவிவிட்டு, தாமதிக்காமல் கண் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். நீராவி பட்டால் ஒரு சொட்டு மருந்து, பிரஷர் பட்டால் ஒரு சொட்டு மருந்து என தனித்தனியாக மருந்துகள் இருக்கிறது. கண் பாதிப்பை வைத்து சொட்டு மருந்து பரிந்துரைக்கப்படும். அதை உடனடியாக பயன்படுத்த ஆரம்பித்தால், ஒரு வாரத்தில் கண்
 
சரியாகிவிடும். அதைவிடுத்து, வீட்டிலேயே தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் என்று சுயவைத்தியம் செய்யாதீர்கள். இது, கண்களுக்குப் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். மற்றபடி கண்ணில் பிரஷர் குக்கரின் விசில் வந்து உட்கார்ந்து கொள்வது என்பதை நான் கேள்விபடவேயில்லைலப்படி சாத்தியமும் இல்லை என்பதுதான் என் கருத்து.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts