லேபிள்கள்

திங்கள், 25 பிப்ரவரி, 2019

அல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்!

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

'அல்லாஹ்வின் மீதே உண்மை முஸ்லிம் முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்' என்று அல்-குர்ஆனில் பல இடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் "குத்பு நாயகம் (???) இடம் நமது காரியங்களை பொருப்புச் சாட்டுவோம்" என்று கூறி, நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆக்குவதற்காக மக்களை இணைவைப்பின் பால் அழைத்துக் கொண்டு இருக்கும் வழிகெட்ட சூஃபிகளுக்கு இந்த இறை வசனங்கள் 'என்ன கூறுகின்றது' என்று விளங்கவில்லையா? அல்லது 'விளங்காதது போன்று நடிக்கின்றார்களா?' அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன்!
அல்லாஹ் கூறுகின்றான்:
"ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்" (3:122)
"பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்" (3:159)
"ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்" (4:81)
"(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்" (3:160)
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
நபியவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை சார்ந்து அவனிடம் உங்கள் கருமங்களை பொருப்புச் சாட்டுவீர்களேயானால், பறவைகளுக்கு உணவளிக்கப்படுவது போல் நீங்களும் உணவளிக்கப்படுவீர்கள், அப்பறவைகள் கலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிற்றை நிறைத்துக் கொண்டு திரும்புகின்றது" ஆதாரம் திர்மிதி 2344, இப்னு மாஜா 4164.
இமாம் அல்பானி 'ஸஹீஹ்' என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.
மரணிக்காத எல்லாம் வல்ல 'அல்லாஹ்விடமே நீங்கள் பொறுப்புச் சாட்டுங்கள்' என்று கட்டளை இடப்பட்டிருக்க,
"இல்லை! இல்லை! நாங்கள் அப்துல் காதிர் முஹையித்தீன் என்ற மரணித்தவரிடமே நாம் பொறுப்புக்களை சாட்டுவோம்!"என்பது எவ்வளவு அறிவீனம்? என்று சிந்தித்துப் பாருங்கள்!
"எனவே மரிக்கமாட்டானே! அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக! இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்." (25:58)
"இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்." (26:217,218)
எனவே நமது எல்லாக் காரியங்களையும் எல்லாம வல்ல அல்லாஹ்விடம் மாத்திரம் பொறுப்புச் சாட்டி நமது ஈமானை பாதுகாத்துக் கொள்வோம்--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts