லேபிள்கள்

புதன், 25 ஏப்ரல், 2018

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன.
அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும்.
மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான்.
இந்த ஆரோக்கியம் விசயத்13தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது.
அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு முறையாகும். ஆரோக்கியமும், சிறுநீரும் இரண்டரக் கலந்த அம்சமாகும். சிறுநீர் என்ற அசுத்தத்திலிருந்து தன்னை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதை இக் கட்டுரை மூலம் நாம் அறிந்து கொள்வோம்.


கத்னா (சுன்னத்) செய்தல்
கத்னா என்றால் மர்ம உறுப்பின் முன் தோலை சிறிதாக வெட்டுதலாகும்.

இஸ்லாம் ஒரு விசயத்தை செய்யும் படி ஏவுகிறது என்றால் அதில் பல உண்மைகள் அடங்கி இருக்கும். சிறு பராயத்திலே ஆண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று ஏன் இஸ்லாம் சொல்கிறது என்றால், அதில் பல நலன்கள் இருந்தாலும், இதனால் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் இலகுவாக வெளிவந்து விடும். கத்னா செய்யா விட்டால் சிறுநீரின் ஓரிரு துளிகள் அந்த தோலுக்குள்ளே இருக்கும் இதனால் தான் அணிந்திருக்கும் ஆடையும் அசுத்தமடைகிறது, மேலும் தோலுக்குள் இருக்கும் ஓரிரு சிறுநீர் துளிகள் மூலம் நோய்கள் ஏற்ப்பட்டு விடும்.
எனவே கத்னாவின் மூலம் மனிதன் ஆரோக்கியம் அடைகிறான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர்
'ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 239)

நமது உடம்பை ஆரோக்கியாக வைத்துக் கொள்வதற்காக தான் நீங்கள் குளிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மேற்ச் சென்ற ஹதீஸ் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஓடக்கூடிய தண்ணீர் என்றால் அதில் சிறுநீர் கழித்தாலும் தண்ணீரோடு, தண்ணீராக சிறுநீர் ஓடிவிடும். ஆனால் தேங்கி நிற்க கூடிய குறைவான தண்ணீரில் சிறுநீர் கழித்தால் அந்த தண்ணீர் அசுத்தமாக மாறிவிடும். எனவே தான் இப்படியான இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது என்று ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி இஸ்லாம் நமக்கு வழிக் காட்டுகிறது. .
சிறு நீர் தரையில் பட்டால்
" அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள் (முஸ்லிம் 480)
நாம் பயன் படுத்தப்படும் மண் தரையில் சிறுநீர் கழிக்கப்பட்டுவிட்டால் அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினால் போதுமாகும். அதே நேரம் டையில்ஸ் போன்ற கல் பதித்த பகுதியாக இருந்தால் சிறுநீர் பட்ட இடத்தை தண்ணீரால் துடைத்து எடுக்க வேண்டும் அல்லது தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும், என்பதை ஆரோக்கியத்தை முதன்மை படுத்தி நபியவர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.
சிறு பிள்ளையின் சிறுநீர்
" உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டவரும் ஆரம்பமாக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பெண்மணிகளில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரான உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் மகவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள். அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை. (முஸ்லிம் 484)
"நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார்கள். அதைக் கழுவவில்லை (முஸ்லிம் 481)
'அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். 'இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்' எனக் கூறுவார். 'அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே' என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்' என்று கூறினார்' என அபூ வாயில் அறிவித்தார்.(புகாரி 226)

எனவே சிறு பிள்ளையின் சிறு நீருக்கு தாக்கம் இல்லாவிட்டாலும் கூட சிறுநீர் பட்ட இடத்தில் தண்ணீரை இலேசாக தெளிப்பதன் மூலம் நமது ஆடையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.
சிறு நீர் கழிக்கும் போது மறைப்பு
நின்று கொண்டு சிறு நீர் கழித்தல்…?
" அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.

(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன். (முஸ்லிம் 454)
பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். நின்று கொண்டு கழிக்க வேண்டிய இக்கட்டான ஓரிரு சந்தர்ப்பங்கள் வந்துவிட்டால் நின்று கொண்டு கழிக்கலாம். எது எப்படியோ சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் துளிகள் நமது மேனியில் படாத அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கிப்லாவை முன்னோக்க தடையா?
" நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 145)

திறந்த வெளியாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது, பின் நோக்கவும் கூடாது. ஆனால் சுவர்களால் மறைக்கப்பட்ட இடமாக இருந்தால் எந்த திசையையும் முன்னோக்கியும், பின்நோக்கியும், உட்காரலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts