லேபிள்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

இன்டர்வியூக்குப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்..

இன்டர்வியூக்குப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்..

இன்டர்வியூல என்னென்ன கேள்விகளெல்லாம் பொதுவா கேப்பாங்கனு ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். இன்டர்வியூக்குப் போகும்போது நம்மளை எப்படி தயார் படுத்திக்கணும்னு, அதாவது எந்தமாதிரி போகணும்னு நிறைய பேருக்குத் தெரியிறதேயில்ல. ஒருத்தருடைய பதில்களை வச்சுமட்டும் அவரை வேலைக்கு செலக்ட் பண்றதில்ல. தோற்றத்தை வைத்தும், பதில் சொல்லும் விதத்தை வைத்தும் முதலில் எடைபோட்டதுக்குப் பிறகுதான் சொல்லப்டுற பதில்களை வைத்து தேர்வுசெய்யலாமா வேணாமானு முடிவெடுப்பாங்க.
1. First impression is the best Impressionனு சொல்வாங்க. அதுக்கு முதல் அடிப்படையா அமையிறது உடைகள் தான். ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது எந்தமாதிரி உடுத்தணும்குறதுல தெளிவிருக்கணும். கண்ணைப் பறிக்கிற மாதிரியான வண்ணங்கள்ல உடுத்தாம, பார்த்தவுடனேயே ஒரு நிதானத்தை உணர்த்துற மாதிரி உடுத்தணும். சினிமாவில் டான்ஸ் ஆடப்போறதுமாதிரி ஜிகுஜிகுனு உடுத்தக்கூடாது. பெண்களாயிருந்தா இன்னும் கவனமாயிருக்கணும். தவறான அபிப்ராயம் வராதபடி நாகரிகமா உடையணியனும்.
2. கமகமனு, அறையே மணக்குற மாதிரி கண்டகண்ட சென்ட் அல்லது Body Spray போட்டுகிட்டுப் போகக்கூடாது. மெலிதான, தனித்துத் தெரியாதபடியான Spray உபயோகிச்சுக்கலாம்.
3. உட்காரும்போதும் எழுந்திரிக்கும்போது தடாலடியா நாற்காலிய இழுத்துப்போட்டுகிட்டு சத்தமெழுப்பக்கூடாது. அது அநாகரிகமா நெனப்பாங்க. (இத ஒரு காரணமா சொல்லி என் ஆபீசர் ஒருத்தர நிராகரிச்சாரு.. அவ்வ்வ்)
4. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தெளிவா சொல்லணும். சந்தேகமாவோ.. இல்ல தயக்கமாவோ பதில் சொல்லக்கூடாது. தன்னுடைய பதில்களில் உறுதியாக இருக்குறதா காட்டிக்கணும். உள்ளுக்குள்ள பயமிருந்தாலும், வெளியே தெனாவெட்டா இருக்கணும். வாய்க்குள்ளயே முனங்காம, தீர்க்கமா பதில் சொல்லணும்.
5. இன்டர்வியூ நடக்கும்போது நடக்கும் உரையாடல்களில் நேருக்குநேராகப் பார்த்து பதில் சொல்லணும். மொபைலைப் பார்த்தோ, தரையைப் பார்த்தோ, நகத்தை ஆராய்ந்துகிட்டோ பதில் சொல்லக்கூடாது. Eye Contact ரொம்ப முக்கியமானது. அதுக்காக திருதிருனு முழிக்கக்கூடாது. திடமான பார்வை வேணும்.
6. ஏதாவது எதிர்மறையா கேள்வி கேட்டா, அதாவது வேலைக்கான தகுதி உங்களிடம் இல்லைங்குற மாதிரி ஏதாவது சொன்னா, உடனே சோகமா பேசக்கூடாது. எதையும் ஏத்துக்குற மாதிரியான பக்குவத்துல இருக்குறதா காட்டிக்கணும்.
7. ஸ்டைல்ங்குற பேர்ல தலைக்கு கோமாளி மாதிரி கலரிங்கெல்லாம் பண்ணிகிட்டு போகாதீங்க. ஜீன்ஸ் டீசர்ட்னு போடாம, Casual உடைகள் உடுத்துங்க. பார்க்குறதுக்கு ப்ளேபாய் மாதிரி தோற்றத்தக் கொண்டுவந்துடாதீங்க.
8. சர்ட்டிபிகேட்களை ஃபைல்ல ஒரு கோர்வையா அடுக்கி வச்சுக்கங்க. கல்வித்தர வரிசைப்படி இருக்கணும். ஒவ்வொண்ணா அவங்க பார்க்கும்போது தேடும்படி இருக்கக்கூடாது.
9. உங்க RESUMEஐ ஏனோதானோனு இல்லாம ஒழுங்கா டைப் பண்ணி வச்சுக்கங்க. அது, உங்களைப்பற்றிய எல்லா விபரங்களும் சர்ட்டிபிகேட்டைப் பார்க்கவே தேவையில்லாதபடி அமைந்திருக்கணும்.
10. முன் அனுபவம் ஏதாவது இருக்கும்பட்சத்துல, பழைய அலுவலகத்தைப் பத்தி ஏதாவது கேள்விகேட்டா சொதப்பாம தெளிவான, அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமான பதில்களை அளிக்கணும்.
11. முடிஞ்சவரைக்கும் இன்டர்வியூக்கு வீட்டிலிருந்து துணைக்கு ஆளைக் கூட்டிகிட்டுப் போகக்கூடாது. தெரியா இடங்களாயின் பெண்களுக்கு இத தவிர்க்க முடியாது. அப்படியே துணைக்கு யாராவது வந்தாலும் அலுவலக கட்டிடத்தின் வெளியே நிற்கச் செய்யலாம். (இது சாதாரண காரணமாகத் தெரியலாம். ஆனா தனித்தன்மை, ஆளுமை, தைரியம் மாதிரியான விஷயங்களை இதைவைத்து யூகிக்க வாய்ப்புண்டு. என் அலுவலத்தில் மூன்று பெண்களை நிராகரித்ததற்கு சொல்லப்பட்ட காரணமிது.)
கலந்துக்கப்போற இன்டர்வியூக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
http://chellakirukkalgal.blogspot.in/2012/09/blog-post_14.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts