லேபிள்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2015

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

எக்ஸாமை ஏமாற்றாதீர்கள்
ஹலோ ப்ரெண்ட்ஸ்,
காலாண்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது ?
பாடங்களை படித்திருக்கிறார்களா, புரிந்து கொண்டிருக்கிறார்களா, என்பதற்கான சோதனைகள்தான் தேர்வுகள். இந்த நோக்கத்தையே புரிந்துகொள்ளாமல் பாடங்களை புரிந்து கொள்ளவே முயற்சியே செய்யாமல், மக்கப் எனும் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வெழுதுவது பல மாணவர்களின் பழக்கமாகி விட்டது.
காப்பியடிப்பது, பிட் அடிப்பது போன்ற ஏமாற்றுவேலைதான். பாடங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் குருட்டு மனப்பாடம் செய்வதும்.
குருட்டு மனப்பாடம் செய்தோ, அருகில் உள்ள மாணவரைப் பார்த்து காப்பியடித்தோ ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டால் அப்புறம் உண்மையாக உழைக்கும் எண்ணம் வராது. முயற்சி செய்து படிக்கத் தோன்றாது.
எல்லாத் தேர்வுகளிலும் ஏமாற்றி மதிப்பெண் வாங்கிவிடலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி முடியாது. அதனால் எக்ஸாமை ஏமாற்றுவது என்பது நம்மையே ஏமாற்றிக்கொள்வது மாதிரிதான்.
நாளை நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை காப்பியடித்து செய்து விட முடியாது. நீங்கள் டாக்டராக விரும்பினால் ஆப்ரேஷன் தியேட்டருக்கு பிட் எடுத்துக்கொண்டு போக முடியுமா? யோசியுங்கள்.
இப்போதுதான் இந்த பழக்கம். வளர்ந்த பிறகு நிச்சயம் மாற்றிக்கொள்வேன் என்று நீங்கள் சொல்ல முடியாது. காரணம், பல முறை செய்யும் செயல்கள் நமக்கு பழக்கமாகவே மாறிவிடும். பிறகு எப்போதும் மாற்ற முடியாது.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் தரும் ரிசல்டால்தான் எல்லோரும் மதிக்கப் படுகிறார்கள். டாக்டர், அட்வகேட், சைன்டிஸ்ட் என நாளை நீ என்னவாக ஆனாலும் நீ தரும் ரிசல்டால்தான் மதிக்கப்படுவாய்.
நோயை நன்றாக குணப்படுத்துகிறாரா என்று பார்த்துதான் ஒரு டாக்டரை தேர்ந்தெடுக்கிறார்கள். சிறப்பாக வீடு கட்டுகிறாரா என்று பார்த்துதான் ஒரு இன்ஜினியரை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர அவர் டிகிரி வாங்கும்போது என்ன மதிப்பெண் வாங்கினார் என்பதை வைத்து அல்ல. எனவே, குறுக்கு வழியில் மதிப்பெண் பெற முயற்சிக்காதீர்கள். அது உங்கள் வெற்றியின் அளவை குறுக்கிவிடும்.
நூற்றுக்கு நூறு வாங்க எக்ஸாம் டிப்ஸ்
1.நோ லீவு
மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்றால், 'மதிப்பெண் குறைந்தால் மரியாதையாக இருக்காது' என்ற எண்ணத்தில், லீவு போட்டு விடலாம் என்று நினைப்பார்கள். தேர்ச்சி அறிக்கையில் குறைந்த மதிப்பெண்கள் இருப்பதற்கு பதில், லீவு என்று இருந்தால் அது பலருக்கு கௌரவமான தோல்வி என்று நினைப்பு. இதனால் தேர்வு பயம் அதிகரித்தபடியே இருக்குமே தவிர ஒரு நாளும் குறையாது. எனவே தேர்வை எதிர்கொள்ள ஆசைப்படுங்கள். ஒரு போதும் தவிர்க்க முயற்சிக்காதீர்கள்.
2. நீங்களே தேர்வு வைத்துக்கொள்ளுங்கள்
தேர்வு பயம் முழுவதுமாக போக வேண்டும் என்றால் உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்துக் கொள்ளுங்கள். பாடத்தைப் படித்து முடிந்தவுடன் பாடத்தின் இறுதியில் உள்ள கேள்விகளை பார்க்காமல் 1,3,5 கேள்விகள்தான் தேர்வுக்கான கேள்விகள் என முடிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்தக் கேள்விகளைப் பார்த்து தேர்வெழுதுங்கள்.
3.நாளையே எக்ஸாம்
எக்ஸாம் என்றால்தான் முழுமுயற்சியோடு படிக்கிற அளவுக்கு நம் மனதை பழக்கப்படுத்தி விட்டோம். எனவே ஒவ்வொரு பாடம் நடத்தி முடித்தவுடனும் நாளையே அதில் தேர்வு என நினைத்துப் படியுங்கள்.
4.பய டைரி
ஒவ்வொரு தேர்வின்போதும் உங்களுக்கு ஏற்படுகிற பயத்தையும் அப்போது உங்களுக்கு தோன்றுகிற எண்ணங்களையும் டைரியில் குறித்து வையுங்கள். தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தபின் படித்துப் பாருங்கள். சில விஷயங்கள் உங்களுக்கே சிரிப்பாக இருக்கும். சில விஷயங்கள் சீரியஸாக இருக்கும். இந்த பயம் இனிமேல் நமக்கு வேண்டாம் என்று அன்றிலிருந்து முறையாக படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
5.விளையாட்டு முக்கியம்
தேர்வு நாட்களில்கூட தாராளமாக விளையாடுங்கள். ஆனால் தேவைக்கும் அதிகமாக விளையாடாதீர்கள். விளையாடும்போது நம் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால் நமக்கு புத்துணச்சியும் உற்சாகமும் கிடைக்கிறது. அதனால் அவசியம் விளையாடுங்கள். காலையில் அரை மணிநேரம் சீக்கிரமாக எழுந்து அந்த நேரத்தை விளையாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களோடு விளையாட நண்பர்கள் யாரும் இல்லை என்றால் ஜாகிங் செல்லுங்கள்.
6.ஐந்து முறை சாப்பிடுங்கள்
சுவையான உணவென்றால் நம்மையும் அறியாமல் சில நேரங்களில் கூடுதலாக சாப்பிட்டு விடுவோம். அல்லது நம் வீட்டிலேயே, படிக்கிற பையன் நல்லா சாப்பிடு என்று அதிகம் போட்டு விடுவார்கள். இதனால் சாப்பிட்டவுடன் அசதி ஏற்பட்டு படிக்கமுடியாமல் போய்விடும். இதனை தவிர்க்க உங்கள் வழக்கமான உணவை ஒரு ஹாட் பாக்ஸில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டு முறையாக பிரித்து சாப்பிடுங்கள். தேவையான சக்தியும் கிடைத்து விடும். சோர்வும் ஏற்படாது.
7.தூக்கம் நல்லது
முறையான ஓய்வுதான் நம்மை சிறப்பாகச் செயல்பட வைக்கும். கண்விழித்து படித்தால்தான் வெற்றிக்காக கடினமாக முயற்சிக்கிறோம் என்று சில மாணவர்களுக்கு தவறான நம்பிக்கை இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே முறையாக படித்து வந்திருந்தால் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீள்பார்வை பார்த்தால் போதும். எனவே கண் விழித்து படிக்க நேர்ந்தால் நாம் சரியான முறையில் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
8.தேர்வு தேர்வு செய்வதற்கே
எக்ஸாம் என்பது நம் கற்றலை சோதித்து பாராட்ட என்றும் முறையாக கற்காததை மாற்றி மேலும் சிறப்பாக கற்க கூடுதல் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
9.டென்ஷனால்தான் டென்ஷனே
தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுவோமோ என்று அதிகம் குழம்பி டென்ஷன் ஆகிறோம். ஆனால் இப்படி டென்ஷன் ஆவதால்தான் மூளை திறம்பட செயல்பட முடியாமல்போய், மறதி ஏற்பட்டு, பாடங்களை மறந்து விடுகிறோம். கடைசியில் நாம் பயப்பட்டது போலவே மார்க்கும் குறைந்துவிடுகிறது.
10. சொந்தக்காசுல சூன்யம்
இன்னும் சில பேர் இருக்கிறார்கள். தேர்வின் போது தைரியமாக பள்ளிக்கு செல்வார்கள். அங்கே மற்றவர்களிடம் பேசி பயத்தை வரவழைத்துக் கொள்வார்கள். எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று நான்கு பேர் சொல்வதை கேட்டவுடன் இவர்களுக்கு நான்கு பேருடைய பயமும் சேர்ந்து வந்துவிடும். எனவே தேர்வுக்கு முன் மற்றவர்களிடம் அரட்டைகளை தவிர்த்துவிடுங்கள்.
நன்றி: சாதனா நமதுநம்பிக்கை
http://chittarkottai.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts