லேபிள்கள்

திங்கள், 17 நவம்பர், 2014

அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது

அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது

அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது கடமையிலும் கடமையானதாகும்".
இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின், ஒரு முஸ்லிமின் மீது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் எவ்வாறு முதன்நிலைக் கடமைகளாக இருக்கின்றதோ அதனைப் போலவே, அனுமதிக்கப்பட்ட வழிகளில் பொருளீட்டுவதும் அதே போன்றதொரு கடமையானதாகும்.
இந்த மிகச் சுருக்கமான நபிமொழியானது நமக்கு மிகத் தெளிவானதும் முக்கியமானதுமானதொரு செய்தியைத் தாங்கி நிற்கிறது. முதலாவதாக, இந்த உலக வாழ்க்கைக்கும் அல்லது சடவாத வாழ்க்கைக்கும் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கி, இஸ்லாமிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைத் தெளிவாக்குகின்றது.
இன்றைக்கு மக்கள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தை விட்டும் எதிர்த்திசையில் நடைபோடுவதைப் பார்க்கின்றோம். ஒரு மனிதன் இந்த உலக வாழ்க்கையிலேயே மூழ்கி விடுவானாகில், அவனை அது ஆன்மீகப் பாதையை விட்டும் வெளியே கொண்டு போய் விட்டு விடும். இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், தங்களது வாழ்க்கை இஸ்லாமியமயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள், இத்தகைய உலகாதாயப் போக்கிலிருந்து தங்களை விடுவிடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பிரச்னைகளும், கருத்துவேறுபாடுகளும் கூட உள்ளன? இந்த உலக வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும் பங்கு கொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா? அல்லது இரண்டையும் விட்டு விடுவதா? அனைத்து மதங்களிலும் இதுவே மையப் பிரச்னையாக இருக்கின்றது, பலர் இரண்டையும் விட்டு விட்டு துறவறம் நோக்கிச் செல்வதையே தேர்ந்தெடுத்து, மனித இனத்திற்கு அதன் மூலம் முன்மாதிரி மிக்கவர்களாகத் திகழலாம் என்று கூறுவார்கள். இவ்வாறு செல்வது மனித நேயத்தையே இழக்கச் செய்து, அதனை விட்டும் அவர்களைத் தூர மாக்கி விடுவதை, நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு ஆன்மீகத்தின் மூலம் துறவறத்தைத் தேடிக் கொண்ட, இந்து மற்றும் கிறிஸ்தவ துறவிகளைப் பற்றிய கொடுமையான கதைகளைப் பற்றி நாம் அறிந்து வருகின்றோம்.
இதன் காரணமாக, பலர் இன்றைக்கு உலகாதாய அல்லது சடவாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் லயித்து விடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்கு இன்றைய மேற்குலகின் போக்கை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு இத்தகைய வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் காரணமாக, அவர்களிடம் உடல் மற்றும் உள நோய்களும், மரணங்களும் அதிகரித்து வருவதானது, அவர்களுடைய வாழ்க்கைப் போக்கில் ஏதோ கோளாறு இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.
இந்த இரண்டு முரண்பாடான வாழ்க்கைப் போக்கிலிருந்து விலகி, இஸ்லாம் தெளிவான, நேரான வாழ்க்கைப் போக்கை காட்டுகின்றது. பொருளாதார வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையும் இணைத்தே வாழ வழிகாட்டுகின்றது. மனிதன் உண்மையிலேயே உலக ஆசாபாசங்கள் மற்றும் ஆன்மீகத் தேட்டம் நிறைந்தவன். இந்த இரண்டையும் அவனுக்கு மறுப்பதன் மூலம் அவனது பிரச்னைக்கான தீர்வு கிடைத்து விடாது, ஆனால் தனக்கு மட்டுமே அவை உரித்தானது என்ற சுயநலப் போக்கைத் தான் இஸ்லாம் தடை செய்கின்றது. செல்வங்கள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமே, அதுவே நம்முடைய வாழ்க்கையாகி விடாது. பிரச்னை என்பது செல்வத்தில் இல்லை, அதிலேயே தன்னை மூழ்கடித்து விடுவதிலேயே தான் இருக்கின்றது. வாழ்க்கையின் வளங்கள் ஒன்றும் மோசமானதல்ல. இதனைக் குர்ஆனை இவ்வாறு கூறுகின்றது ..
அல்லாஹ் உங்களிடம் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக ஆக்கித் தந்த செல்வத்தை (4:5)
ஒரு மனிதன் ஆகுமான வழிகளில் தேடிச் சேர்த்த செல்வதைப் பற்றி நபிமொழிகள் புகழ்ந்து கூறுகின்றன. செல்வத்தைச் சேர்க்க முயற்சிப்பதானது ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல, அது ஒரு ஆன்மீகக் கடமையும் கூட!
ஆனால், நாம் தேடக் கூடிய செல்வங்கள் ஆகுமான வழியில் பெறக் கூடியவைகளாக இருக்க வேண்டும். இது மேற்கண்ட நபிமொழியின் இரண்டாவது பாகமாகும். பணத்தை மட்டும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டும் நமது குறிக்கோள் அல்ல, மாறாக ஆகுமான வழியில் பணம் தேடுவதும் அதனை வளர்த்தெடுப்பதும் தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இது மனித சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை இஸ்லாமியமயமாக்குதவற்காக வேண்டிய அடிப்படைத் திட்டமாகவும் இருக்கின்றது. அனைத்து வியாபாரங்களும் மற்றும் அது சார்ந்த யுக்திகளும் இந்த மனித சமுதாயத்திற்கு ஆகுமானதாக ஆகி விடுவதில்லை.
வியாபாரத்தில் நல்லது எது மற்றும் கெட்டது எது என்பதை இன்றைக்கு இருக்கின்ற வியாபார ஜாம்பவான்கள் தீர்மானிக்கக் கூடியதல்ல. மனிதனது பொருளாதார வாழ்வில் நல்லது எது அல்லது கெட்டது எது என்பதையும், அது மட்டுமல்ல முழு வாழ்க்கைக்கும் எது நல்லது அல்லது எது கெட்டது என்பதையும் தீர்மானிக்கும் சக்தி ஒன்றிருக்கின்றது, அனைத்து உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் வல்ல சக்தியான அல்லாஹ் என்ற சக்தி மட்டும் தான் இதனைத் தீர்மானிக்க முடியும். ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் கூட்டு வாழ்விலும், அவனது பொருளாதார வாழ்விலும், அதன் நடைமுறைகளிலும் இஸ்லாமியச் சட்டங்கள் அவனுக்கு முழுமையான வழிகாட்டுதல்களைக் காட்டுகின்றன, எனவே அத்தகைய சட்டங்களைத் தனிப்பட்ட முறையிலும் மற்றும் கூட்டுமுறையிலும் பின்பற்றுவது என்பது நம்மீது உள்ள கடமையாக இருக்கின்றது.
இன்றைய உலகில் இருக்கின்ற நடைமுறைகளோடு இந்த இஸ்லாமியச் சட்டங்கள் மோதக் கூடிய சூழ்நிலைகள் எழலாம். உதாரணமாக, வட்டி, சூதாட்டம், மது, அபகரித்தல் போன்றவைகளை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது, இத்தகைய தடை செய்யப்பட்ட அம்சங்கள் எத்தகைய கவர்ச்சிகரமானதாக, செல்வ வளத்தைக் கொட்டிக் குவிக்கக் கூடியதாக இருப்பினும் சரியே, இதிலிருந்து முஸ்லிம்கள் முழுமையாக விலகி இருத்தல் வேண்டும். ஒரு இறைநம்பிக்கையாளருடைய இந்த பொருளாதாரப் போரட்ட வாழ்வானது, அந்தப் பொருளாதாரத்தைத் தேடுவது கூட மார்க்கக் கடமையாக இஸ்லாம் ஏன் ஆக்கி வைத்திருக்கின்றது என்பதை அவருக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கும். கூட்டு வாழ்வில் இதனைக் கடைபிடிக்கும் பொழுது, தனிப்பட்ட நபர்கள் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற வழிகளில் பொருளீட்டுவதன் மீதுள்ள மோகத்தைக் குறைப்பதோடு, அவர்களும் ஆகுமான வழிகளில் பொருளீட்டுவதற்குண்டான வழிகளை இலகுவாக்கி வைக்கும்.
சில நேரங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான கடமைகளில் உள்ள நடுநிலைப் போக்கிலிருந்து தவறி விடுகின்றோம். நம் மீதுள்ள முதல் நிலைக் கடமை என்னவெனில், தனிப்பட்ட ரீதியில் நாம் பொறுப்பாளிகள் என்பதை உணர்வது, மறுமை நாளிலே நம்முடைய வாழ்வைப் பற்றி நாம் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்வது.
அதே நேரம், இன்றைக்கு நம்முடைய காலத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான ஊNN, உலக பன்னாட்டு நிதியம் (ஐஆகு), உலக வங்கி (றுழசடன டீயமெ) மற்றும் காட் (புயவவ) போன்றவற்றை தனிப்பட்ட நபரொருவர் எதிர்த்து, அதன் மூலம் ஆகுமான வழிகளில் பொருளீட்டக் கூடிய வாழ்க்கைக்கு சமூகத்தை இட்டுச் செல்ல இயலாது.
வட்டியினைத் தவிர்ந்து வாழ்வதென்பது இன்றைக்கு இயலாத காரியமாக இருக்கின்றதே, ஏன்? அவை யாவும் மிகச் சிறந்த பொருளாதார வழிமுறை என்பதன் காரணமாக அவற்றைத் தவிர்க்க இயலாவில்லை என்பதை விட, அவை சமூகத்தில் வேர் பிடித்து வளர்ந்திருக்கின்றன என்பதே காரணமாகும்.
நமது வீட்டினுள் ஊNN 24 மணி நேரமும் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது, இஸ்லாமிய சமூக வாழ்வைக் கட்டி அமைப்பதென்பது எவ்வாறு? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் இஸ்லாமிய நாடுகளின் பட்ஜெட், மற்றும் வரி விதிப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஹலால் மற்றும் ஹரமான வரி விதிப்புகள் பற்றிய பிரச்னைகளை அங்கு எவ்வாறு தீர்க்க இயலும்? (இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, வரிவிதிப்பானது தேவையானதாகவும், காரணத்துடனும், பாகுபாடற்றதாகவும், செலுத்துவதற்கு இயலுமானதாகவும், மற்றும் வரியை வசூலிப்பதில் கடினம் காட்டாமலும் இருக்க வேண்டும். இல்லையென்றால், வரிவிதிப்பானது அநீதமானது மற்றும் ஹரமானது தடை செய்யப்பட வேண்டியது, என்று கூறுகின்றார்கள்). தனிப்பட்ட ரீதியில் ஹராமான வழிகளில் ஈடுபடாமல் இருப்பது ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமையாகவும், அவசியமானதாகவும் இருக்கின்றது, இன்னும் ஹராமான வழிகளில் ஒருவரை இட்டுச் செல்லக் கூடிய சக்திகளை எதிர்த்து போராடுவதும், அத்தகைய வழிமுறைகளை மாற்றி அமைப்பதற்கு முனைப்புக் காட்டுவதும் அவசியமாகும்.
மூன்றாவதாக, ஹலாலான ஆகுமான வழிகளில் சம்பாதிக்கின்றோம்.., சம்பாதிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு, மார்க்கம் அடிப்படைக் கடமைகளாக்கி வைத்திருக்கின்ற கடமைகளில் இருந்து அவரது அந்த வருமானம் அவரை கவனமற்றதாhக்கி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய வருமானங்களை பெருக்கக் கூடிய நிறுவனங்கள் ஹலாலானவைகளாக இருந்தாலும் கூட, அவை அடிப்படைக் கடமைகளான தொழுகை, ஹஜ், நோன்பு போன்ற அடிப்டைக் கடமைகளில் இருந்து நம்மை மறக்கடிக்கச் செய்து விடக் கூடாது.
இதனை நாம் நமது கவனத்தில் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், சில இஸ்லாமிய அமைப்புகள் அடிப்படையான வணக்க வழிபாடுகள் பற்றிக் கூறும் பொழுது, தவறிழைத்து விடுகின்றார்கள். தொழுகையை நிறைவேற்றுவது என்பது அவரது சொந்த கடமைகளை நிறைவேற்றி விடுதல் என்பதில் மட்டுமல்ல, இஸ்லாமிய சமூக வாழ்வினை சமூக அமைப்பை அமைப்பதற்குண்டான தடைகளை அகற்றுவதற்குண்டான பயிற்சித் தளமாக தொழுகை இருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்தத் தவறி விடுகின்றார்கள். இவ்வாறாக ரீதியில் அடிப்படைக் கடமைகளை மக்களுக்கு உணர்த்தி இருப்பார்களென்று சொன்னால், இத்தகைய அமைப்பினை உருவாக்கக் கூடிய வழிமுறைகளின் பால் மக்களின் கவனத்தைத் திருப்பி இருக்கக் கூடும். ஆனால் பிரச்சாரகர்கள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழித்ததன் விளைவாக, அடிப்படைக் கடமைகளுக்கும் இன்னும் அது வலியுறுத்தும் பொறுப்பிற்கும் உள்ள தொடர்புகள் வலுவிழந்து போய் விட்டன. இதன் காரணமாக அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கூட்டுப் போராட்டத்திற்குத் தயாராகுபவர்கள் சில நேரங்களில், மிகப் பெரிய போராட்டக் களமாக தங்களது இயக்கத்தை மாற்றுவதற்கு அடிப்படைக் கடமைகளைக் கூட மறந்து விடக் கூடியவர்களாக ஆகி விடுகின்றார்கள்.
நாம் சரியான விதத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்குத் தெளிவினைத் தரும் : பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு முயற்சிப்பது என்பது நமது அடிப்படைக் கடமைகளுக்கு அடுத்தபடியாக உள்ள கடமையாகும். பொருளாதாரமாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும், எதற்கு சரியானபடி முன்னுரிமை கொடுப்பது என்பதை வைத்துத் தான் நாம் சரியான திசையில் பயணிக்கின்றோமா என்பதைக் கூற முடியும்.
http://www.tamilislam.com/economy/Halal_earning.htm



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts