லேபிள்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

தீபாவளிக்கு கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.
2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.
3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.
4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை "பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே" என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.
5. "மின்சாரத்தைச் சேமிக்கும்" என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.
6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.
7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.
10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். "சர்வீஸ் நல்லாயில்லை" என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.
http://seasonsnidur.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts