லேபிள்கள்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்


அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
''
ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.


இயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
அதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)
கேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.


அகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.
பர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.
வெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
முகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.
அதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.
நமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.
தக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது.  இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.
(
தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)

வெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.
தர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
எண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.


வெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
எலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும்  எடுக்கக் கூடாது.
கேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.
பழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.


மஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
ஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
எண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.
பேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.


பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
சரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.


நார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts