கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!
எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.- வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
- நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.
- பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.
- பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.
http://kulasaisulthan.wordpress.com
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக