லேபிள்கள்

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.

கம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.

அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம்.
ஷிப்ட் கீ + மவுஸ் கிளிக்: 
அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்கள் மற்றும் புரோகிராம்கள், அனைத்து டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியினை ஷிப்ட் கீ மற்றும் மவுஸ் இணைத்துப் பயன்படுத்தி ஹைலைட் செய்வதனை அனுமதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் ஒன்றின் பாரா தொடக்கத்தில், கர்சரைக் கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பாராவின் இறுதி நிலையில், கிளிக் செய்தால், பாரா முழுவதும் ஹை லைட் செய்யப்படும்.
இதில் இன்னொரு வழியும் உள்ளது. டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றில், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் பாரா, நெட்டு பத்தியாக இருந்தால், இந்த கீ செயல்பாடு பயன் தரும்.
ஸ்குரோல் வீலின் பயன்கள்:
 நாம் எல்லாரும், மவுஸ் வீலைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் பக்கம் ஒன்றில், மேலும் கீழுமாகப் போகும் வழியினைத் தெரிந்து வைத்திருப்போம். மவுஸ் வீலைக் கொண்டு மேலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
மவுஸ் வீல், வீல் மட்டுமல்ல. அது ஒரு பட்டனாகவும் செயல்படும். இதனை அழுத்தினால், மவுஸின் மூன்றாவது பட்டனாகச் செயல்படும். இதன் மூலம் ஒரு டேப் அல்லது லிங்க்கில் கிளிக் செய்து, இணையதளப் பக்கம் ஒன்றைத் திறக்கலாம். திறந்திருக்கும் டேப் மீது வீலை அழுத்தினால், அந்த இணையப் பக்கம் மூடப்படும்.
பிரவுசர் ஒன்றில், மேலும் கீழுமாகச் செல்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு செயல்பட்டால், இணையப் பக்கங்கள் ஊடாக, இன்னும் சற்று வேகமாகச் செல்ல முடியும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலை மேலாக ஸ்குரோல் செய்தால், பக்கமானது ஸூம் செய்யப்படும். கீழாக ஸ்குரோல் செய்தால், பக்கம் ஸூம் அவுட் செய்யப்படும்.
இணையத்தில் உலா வருகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், முன்னும் பின்னுமாகச் செல்ல முடியும். பின்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் கீழாகவும். முன்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் மேலாகவும் செல்லலாம். சில மவுஸ் வீல்களை இடது அல்லது வலதாக அழுத்திச் சென்று, இணையப் பக்கத்தின் முன், பின்னாகச் செல்லலாம்.

டபுள், ட்ரிபிள் கிளிக்: 
சொல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டும். பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, பாராவில் எந்த இடத்திலும் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, மூன்று முறை கிளிக் செய்தால் போதும். டபுள் கிளிக் செய்தபடி, மவுஸை அப்படியே இழுத்துக் கொண்டு சென்றால், செல்லும் வழியில் உள்ள டெக்ஸ்ட் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.
ரைட் கிளிக் பயன்பாடு: 
டெக்ஸ்ட் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அதனை உங்கள் விருப்பப்படி கையாள, ரைட் கிளிக் செய்திடலாம். மேலும், ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் பண்புகள் அறியவும், அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். கிடைக்கும் மெனுவில் இதற்கான ஆப்ஷன் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்த பின்னர், காப்பி செய்து, பின்னர் வேறு ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம் பேஸ்ட் செய்திடலாம்.
பைல் அல்லது டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்து மவுஸின் ரைட் பட்டனை அழுத்தியவாறு, குறிப்பிட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று விடலாம். அங்கு, அதனை காப்பி செய்திடவா, நகர்த்திடவா என்ற ஆப்ஷன் கேட்கப்படும். நாம் தேர்ந்தெடுப்பதற்கேற்ப, செயல்பாடு மேற்கொள்ளப்படும். பிரவுசர் ஒன்றில், ஏதேனும் லிங்க் ஒன்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, கிளிக் செய்தால், அந்த லிங்க் காட்டும் இணைய தளம் திறக்கப்படும்.
கண்ட்ரோல் கீ + மவுஸ் கிளிக் /ஹைலைட்டிங்: 
கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டிருக்கையில், இடது பட்டன் கிளிக் செய்து, நாம் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட்களைத் தேர்ந்தெடுக்கலாம். தொடர்ச்சியாக இல்லாமல் உள்ள டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்களைத் தேர்ந்தெடுக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸின் இடது பட்டனை அழுத்தலாம்.
மவுஸ் பக்கவாட்டு பட்டன்கள்: 
புதியதாக வரும் மவுஸ்களில் பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இந்த பட்டன்களை இயக்கினால் எந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை புரோகிராம் செய்திடலாம். மாறா நிலையில், இடது கட்டைவிரல் பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல உதவுகிறது. இதனால், இணையப் பக்கத்தில் செல்வது நமக்கு மகிழ்ச்சி தரும் செயலாக உள்ளது. ஏனென்றால், மவுஸ் கர்சரை நகர்த்தி நாம் இணையப் பக்கத்தில் அங்கும் இங்குமாகச் செல்ல வேண்டியதில்லை.
மவுஸில் உள்ள Snap To வசதி: 
நம்மில் பலர் இந்த வசதியினைப் பயன்படுத்துவதே இல்லை. இந்த வசதியினைத் தேர்வு செய்து விட்டால், எந்த ஒரு டயலாக் பாக்ஸிலும், உங்கள் செயல்பாட்டிற்குப் பின்னர், மவுஸின் கர்சர் தானாக, அதில் உள்ள பட்டன்களுக்குச் செல்லும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு பைலை அழிக்கிறீர்கள் அல்லது புரோகிராம் ஒன்றை மூடுகிறீர்கள். உடனே உங்களுக்கு நீங்கள் பைலை அழிக்க விரும்புகிறீர்களா? அல்லது புரோகிராமினை மூட விரும்புகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். உடனே, நீங்கள் மவுஸை நகர்த்தி, கர்சரைக் கீழாகத் தரப்படும் பட்டன்களுக்குக் கொண்டு சென்று கிளிக் செய்திட வேண்டும். இந்த Snap To வசதியை இயக்கிவிட்டால், மவுஸ் கர்சர் தானாகவே, ஓகே பட்டனில் சென்று நிற்கும். எனவே, நீங்கள் கேட்கப்படும் செயல்பாட்டிற்கு இணங்கினால், மவுஸ் பட்டனை அழுத்தினால் போதும். இது மவுஸின் கர்சரை எடுத்துச் செல்லும் நேரத்தை நமக்கு மிச்சப்படுத்துகிறது.


இந்த Snap To வசதியை எப்படி இயக்கி வைப்பது? என்ற கேள்வி எழுகிறதா, உங்கள் மனதில்? கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Mouse properties என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு Pointer Options என்ற டேப்பின் கீழாக, Snap To என்பதன் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸின் மற்ற செயல்பாடுகளையும் இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் நகர்த்தல் வேகத்தினை அதிகப்படுத்த ஆப்ஷன் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். இது நம் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கும்.
விண்டோ டைட்டில் பாரில் மவுஸ் கிளிக்: 
எந்த விண்டோவாக இருந்தாலும், அதன் டைட்டில் பாரில், மவுஸ் கொண்டு டபுள் கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். ஏற்கனவே மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால், அது விரிக்கப்படும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தேனை சூடாக்குவது அல்லது சமைப்பது பாதுகாப்பானதா?

நாம் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துகிறோம் , குறிப்பாக அதன் செழுமையான சுவை மற்றும் அமைப்புக்காக. ஆனால் தேனை சமைத்தால் அல்லத...

Popular Posts