சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும்.
அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 'நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில் தெரியவந்தது.
தயிர் என்பது புளிக்கவைக்கப்பட்ட, ஆரோக்கியமான மற்றும் புரோபயாடிக் கொண்ட ஒரு பாலில் இருந்து பிரிக்கப்படும் ஒரு உணவு பொருள் ஆகும்.
தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.
தயிர் நன்மைகள் :
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தயிர் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்துகிறது :
தயிர் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்புசத்தை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது :
தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :
தயிரில் உள்ள மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. மேலும், இது ஆற்றலை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது :
தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.
நுண்ணுயிர் சமநிலை :
தயிரில் ஆக்ஸிஜனேற்றிகளுடன் புரோபயாடிக் நுண்ணுயிரிகளும் இருப்பதன் காரணமாக உடலில் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் சமநிலை செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
தயிர் சாப்பிடுவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் :
தயிர் உட்கொள்வது சரும வரட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப் படுகிறது. தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.
எலும்பு, பற்கள் ஆரோக்கியம் :
தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்து கிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது :
தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :
தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
தயிர் பயன்கள் :
தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தயிரை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ உட்கொள்ளலாம்.
பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது.
தயிரில் தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களின் முக்கிய அங்கமாக பயன்படுத்தப் படுகிறது.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக