லேபிள்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

Mobile Phone திருடனைப் பிடிப்போம்…


இந்தக் காலப்பகுதியில் அதிகளவில் Mobile Phone திருட்டுக்கள் இடம் பெறுகின்றன. இவற்றைத் தடுக்க பல முறைகள் இருக்கின்ற போதிலும், அவற்றில் சில நடைமுறைச் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன. நாம் இங்கே பார்க்கப் போவது நாமாகவே நமது மொபைலில் நிறுவிப் பாவிக்கக்கூடிய  ஒரு முன் பாதுகாப்பு மென்பொருள் பற்றியாகும். (இது பெரும்பாலும் Smart Phome வகைகளுக்கெ பொருந்தும்)
அதாவது உங்கள் மொபைல் போன் திருடப்பட்டுவிட்டால், அதனை Lock செய்ய, இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, இருக்கும் தரவுகளை அழைக்க என பல வேளைகளைச் செய்யக்கூடிய ஒரு மென்பொருள் பற்றியே நாம் இப்போது பார்க்கிறோம். F-Secure Anti-Theft மென்பொருள் உங்கள் Mobileஇல் நிறுவப்பட்டிருந்தால் மேலே சொன்ன விடயங்கள் சாத்தியமாகும். www.f-secure.com/antiTheft_PC இந்த Link மூலம் மென்பொருளை உங்கள் கணனிக்கு தரவிரக்கிக்கொள்ள முடியும். அல்லது உங்கள் Mobile Phone இல் (http://f-secure.mobi) எனும் முகவரியில் சென்று நேரடியாகவே Mobile Phone இற்கு தரவிரக்கிக்கொள்ள முடியும்.
Anti-Theft மென்பொருளை Mobile இல் நிறுவும் பொழுது ஒரு இரகசிய இலக்கத்தை வேண்டி நிற்கு, இது ஒருவகையில் Password போன்றது, ஏனெனில் உங்கள் மொபைல் தொழைந்துவிட்டால் இந்த இரகசியக் இலக்கதின் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும். பின்னர் இன்னொருMobile Phone இலக்கம் (Trust Number) கேற்கப்படும், இது Phone தொழைந்ததும் அதனை SMS மூலம் அறிவிப்பதற்கான இலக்கமாகும்.
இந்த Anti-Theft மூலம் உங்கள் Mobile பின்வருமாறு பாதுகாக்கப் படுகிறது.

  1. தெஃப்ட் கொன்ட்ரோல் (Theft Control) - Anti-Theft மென்பொருள் உள்ள மொபைலில் புதிய ஒரு SIM இனைக்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்த இலக்கத்திலிருந்து முன்னர் வழங்கப்பட்ட Trust Number இற்கு அது SMS மூலம் அறிவிக்கப்படும். இதன் மூலம் திருடியவர் நமது SIM இனை அகற்றி வேறு ஒன்றை இனைக்கும் ஔவொரு முறையும் நமக்கி அந்த புதிய இலக்கம் தெரியப்படுத்தப்படும். இத்ச்ன் மூலம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் நகர்த்தப்படும்.
  2. ரிமோட் லொக் (Remote Lock) தொழைந்த நமது Mobile Lock செய்யும் முறையே இதுவாகும். அதாவது, இன்னொரு Mobile Phone இலிருந்து நமது இரகசிய இலக்கத்துடனான ஒரு SMS இன் மூலம் மொபைலை லொக் செய்யலாம். #LOCKM#<இரகசிய இலக்கம்> எனும் விததில் ஒரு SMS அனுப்பியதும் உங்கள் Mobile தானாக Lock ஆகி விடும். இனி அதனை Un Lock செய்வதாயின் உங்கள் இரகசிய இலக்கம் வழங்கப்பட வேண்டும்.
  3. லொகேட் பொன் (Locate Phone) மொபைல் தொழைந்ததும் முன்னர் செய்தது போல#LOCATE# <இரகசிய இலக்கம்> எனும் விததில் ஒரு SMS அனுப்பியதும் அதற்குப் பதிலாக Google Map இன் Link ஒன்று உங்களுக்கு வரும். அந்த லிங்கை Google Map இல் சென்று வழங்கினால் கிடைக்கப்படும் Map ஆனது நமது Mobile இப்போது பாவிக்கப்படும் இடமாகும்.
  4. ரிமொட் வைப் (Remote Wipe) மேலே கூறப்பட்ட மூன்று முறைகளிலும் நமது Mobile கண்டுபிடிக்க முடியா விட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள், தரவுகள் இன்னொருவருக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக அதனை அழித்துவிட முடியும். அதற்காக மேலே நாம் SMS அனுப்பிய விததில் #WIPE#<இரகசிய இலக்கம்>எனும் விததில் ஒரு SMS அனுப்பியதும் உங்கள் Mobile Phone இல் உள்ள சகல தகவல்களும் அழிந்துவிடும்.
இனி என்ன ஒருமுறை Try பன்னலாமே

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts