லேபிள்கள்

வியாழன், 23 ஜனவரி, 2014

பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ!

பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ!

குளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. இது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இத்தகைய பொடுகை நீக்க பல வழிகள் உள்ளன. மேலும் இந்த பொடுகுத் தொல்லை நீண்ட நாட்கள் நீடித்தால் முகப்பரு, சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆகவே பொடுகு இருந்தால் சாதாரணமாக நினைக்காமல், அதனை உடனடியாக நீக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் ஒரு முறை அதனை நீக்க முயற்சித்தால், அது மறுமுறையும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அது சருமத்தை பாதிப்பதற்கு முன் பொடுகை நீக்கிவிட வேண்டும்.
அதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
அனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம்.
அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.
தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
பொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும்.
பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
செம்பருத்தி எண்ணெய்
குளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும்.
எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்
வெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால் பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.
நல்லெண்ணெய்
கூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி பொடுகு வராமல் இருக்கும்.
அதிலும் இதனை லேசாக சூடேற்றி வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.
நன்றி:http://www.sikams.com


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 22 ஜனவரி, 2014

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பொருள் ஈட்டச் செல்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு பொருள் ஈட்டச் செல்லும் போது, சிலர் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலரோ, குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு, தாங்கள் மட்டும் செல்கிறார்கள். வெளிநாடு செல்லும் பலரும் தங்கள் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்கிறார்கள். தங்களின் ஓய்வுக் காலத்திற்காகவும் மற்றும் குழந்தைகளின் நலனிற்காகவும் இந்தியாவில் சேமிக்க/ முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இவை அனைத்திற்கும் வங்கிக் கணக்கு என்பது இன்றியமையாதது ஆகிவிடுகிறது. வங்கிக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO – Persons of Indian Origin) ஆகிய இருவரும் செயல்படுத்திக் கொள்ளலாம். வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை இந்த இருவகையினரும் ஒன்றாகவே கருதப்படுகின்றனர். இக்கணக்குகளைத் திறப்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. அன்னியச் செலவாணியில் பரிமாற்றம் செய்யும் வங்கிகள் அனைத்திலும் இந்தக் கணக்குகளைத் தொடங்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென்று பொதுவாக வங்கிகள் மூன்று விதமாக கணக்குகளை செயல்படுத்துகின்றன. அவையாவன:
1.என்.ஆர்.ஓ [NRO Account – Non-Resident Ordinary Rupee Account]
2.என்.ஆர்.ஈ [NRE Account – Non-Resident (External) Rupee Account]
3.எஃப்.சி.என்.ஆர் (பி) [FCNR (B) Account – Foreign Currency Non-Resident (Bank) Account].
ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்கும் சேமிப்புக் கணக்கை, தான் வெளிநாடுவாழ் இந்தியர் ஆகிவிட்டதை குறிப்பிட்டு, என்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். இனி வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கணக்கைத் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1.பாஸ்போர்ட்
2.விசா
3.பான் கார்டு
4.வெளிநாடு மற்றும் உள்நாட்டு முகவரிக்கான ஆதாரம்
5.பாஸ்போர்ட் சைஸ் போஃட்டோ
6.முதல் சேமிப்பிற்கான காசோலை
பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற கணக்குகளைத் தொடங்குவதற்கு நேரடியாக வரச் சொல்கின்றன. ஆகவே அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் முன்போ அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும்பொழுதோ இக்கணக்குகளைத் தொடங்கிக்கொள்ளலாம். சில வங்கிகள் வெளிநாட்டில் இருந்தவாறே கணக்குகளைத் தொடங்குவதற்கும் வழிவகை செய்து தருகின்றன.
இனி நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான கணக்குகளுக்கான குணாதிசியங்களை கீழே காண்போம்.
என்.ஆர்.ஓ (NRO) (நான் ரெசிடண்ட் ஆர்டினரி – NON-RESIDENT ORDINARY)
இந்த வகையான சேமிப்பு கணக்கினை வங்கிகளில் அல்லது அஞ்சலகங்களில் திறந்து கொள்ளலாம். என்.ஆர்.ஓ அடிப்படையில் கீழ்க்கண்ட வகையான பிற கணக்குகளையும் திறந்து கொள்ளலாம்: நடப்புக் கணக்கு, டெப்பாஸிட் கணக்கு, ரெக்கரிங் டெப்பாஸிட் கணக்கு. வங்கிகள் தங்கள் விருப்பம் போல இந்தக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அளிக்கலாம். ஆனால் என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளுக்கு கொடுக்கப்படும் வட்டி, உள்நாட்டு டெப்பாஸிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டியைவிட அதிகமாக இருத்தல் கூடாது.
இந்தக் கணக்கினில், வெளிநாடு வாழ் இந்தியர் வெளிநாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டிலோ பணத்தைச் செலுத்தலாம். அவர்கள் பெயரில் இந்தியாவில் கிடைக்கும் வீட்டு வாடகை, டிவிடெண்ட் மற்றும் பிற வருமானங்களை இந்த கணக்கில் செலுத்தலாம். இந்த கணக்கில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல காசோலை கொடுக்கலாம். ஆனால் இக்கணக்கிலிருந்து என்.ஆர்.ஈ (NRE) கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாது. என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். மூலத்தில் வரி பிடித்தமும் (TDS – Tax Deduction at Source) இவ்விதமான கணக்குகளுக்கு உண்டு. இந்தக் கணக்கு இந்திய ரூபாயில்தான் இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வரும்பொழுது, வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கொண்டுவந்த டிராவலர் செக், கரன்சி நோட்டுகள் போன்றவற்றை இந்தக் கணக்கினில் டெப்பாஸிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் உள்ள பணத்தை (சொத்துவிற்ற பணம் உட்பட) வருமான வரி விதிமுறைகளுக்கு உள்பட்டு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இன்றைய மதிப்பில் ரூ 6.10 கோடி) வரை தாங்கள் வசிக்கும் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதியும் இந்த கணக்குகளில் உள்ளது.
என்.ஆர்.ஓ கணக்கினை வெளிநாட்டில் வசிக்கும் அல்லது இந்தியாவில் வசிக்கும் மற்றொருவருடன் இணைந்து வைத்துக் கொள்ளலாம். நாமினியை பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டினை அடமானம் வைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ வங்கிகள் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது.
சொக்கலிங்கம் பழனியப்பன் – prakala@gmail.com
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 21 ஜனவரி, 2014

குழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியுமா?



--
*more articles click*
www.sahabudeen.com


குழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியுமா?
(நன்றி : ஒன் இந்தியா வலைத்தளம் )

பிறந்த குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவோடும் இருப்பதற்கு காரணம் தாய்ப்பால் தான். அதிலும் பிரசவம் முடிந்ததும், முதலில் வெளிவரும் தாய்ப்பாலானது மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். இந்த பாலைத் தான் கொலஸ்ட்ரம் என்று சொல்வார்கள். இந்த பாலானது குழந்தை பிறந்து ஒரு மணிநேரத்திற்குள் வெளிவரும். இந்த நேரத்தில் சிலர் இந்த பாலை குழந்தைக்கு கொடுக்காமல், அப்போது பவுடர் பாலைக் கொடுப்பார்கள் அல்லது சர்க்கரை தண்ணீரை கொடுப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியாததே ஆகும்.

உண்மையில் இந்த பாலில் தான், சாதாரண தாய்ப்பாலை விட அதிகமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பாலை குழந்தைகள் பருகினால், குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். எனவே இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவு என்னவென்று பார்த்தால், அது கொலஸ்ட்ரம் தான். இப்போது அந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

* கொலஸ்ட்ரம் பாலில் புரோட்டீன்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பால் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம், இதில் அதிகமான அளவில் கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

* அதுமட்டுமின்றி இந்த பாலில் கரையக்கூடிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இது சற்று கெட்டியான நீர்மமாக இருப்பதால், இதனை குழந்தைக்குக் கொடுக்கும் போது, இதுவரை நீரில் ஊறிக் கொண்டிருந்த குழந்தையின் உடலானது வெளியே ஒரு புதிய சுற்றுசூழலுக்கு வருவதால் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.

* கொலஸ்ட்ரம் பாலில் சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் குளோரைடு போன்ற குழந்தையின் முறையான நரம்பு மண்டலம், மூளை மற்றும் இதய வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

* இந்த பாலை குழந்தைக்கு கொடுக்கும் போது, அவர்களுக்கு உடலில் இருந்து வெளிவரும் முதல் கழிவானது (மலம்) எந்த ஒரு பிரச்சனையுமின்றி எளிதாக வெளிவரும்.

* மேலும் இந்த பாலில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிபாடிகள் குழந்தையின் இரைப்பையில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கும்.

* இந்த பாலின் மற்றொரு சிறப்பு என்னவெனில், இந்த பாலை குழந்தைக்கு கொடுத்தால், அதில் உள்ள சத்தானது, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நன்மையைத் தரும்.

* அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு மிகவும் சிறிய சிறுநீரகம் என்பதால், அதற்கு போதிய நீர்மத்தை வைத்திருக்கும் சக்தி இல்லாதால், சிறுநீரகமானது ஒருவித அழுத்தத்துடன் இருக்கும். எனவே இதனை குழந்தைகள் குடிக்க, அவர்களின் சிறுநீரகமானது சற்று வலுப்பெறும்.

எனவே இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய கொலஸ்ட்ரம் பாலை குழந்தைகளுக்கு கொடுக்க மறக்க வேண்டாம்.

திங்கள், 20 ஜனவரி, 2014

பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்!

பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்!

சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால்,  பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி என மெட்ராஸ் காயின் சொஸைட்டியின் நிறுவனர் டி.ஹெச்.ராவிடம் கேட்டோம்.
நாணயச் சங்கம்!
"மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். இதனால் நாணயங்கள் நாளடைவில் துரு பிடித்துவிடும். சேகரிக்கப்படும் நாணயங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். அதைவிட கடையில் விற்கப்படும் காயின் ஆல்பங்களை வாங்கி அதில் நாணயங்களைப் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும்முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போடலாம்.
விற்பனையும், விலை நிர்ணயமும்!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடுவார்கள். அங்கு அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மெட்ராஸ் காயின் சொஸைட்டியில் உள்ள மூத்த நாணயம் சேகரிப்பாளர்கள் நிவர்த்தி செய்வார்கள். பின்னர் வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.
நாணயம் விற்பவர்கள் நிர்ணயிக்கும் விலையானது வாங்கும் ஆர்வலர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அவர்கள் எங்களை நாடினால், அதற்கான விலையை நிர்ணயிக்க நாங்கள் உதவுவோம். 1 அணா, 10 பைசா, 20 பைசா, குறிப்பிட்ட தலைவர்களின் உருவம் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் வெளிநாட்டு அரிய நாணயங்கள் போன்றவற்றுக்கு சந்தையில் தனியாக விலை மதிப்பிடப்படுகிறது. இந்த விலை டிமாண்ட் பொறுத்து மாறும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள நாணயங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கி நாணயம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது" என்றார் டி.ஹெச்.ராவ்.
போலி நாணயங்கள் உஷார்!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றில், 'இங்குப் பழங்கால நாணயங்கள் விலைக்கு வாங்கப்படும்' என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அதற்குள் நுழைந்து விசாரித்தோம். அந்தக் கடையின் ஊழியர் ஒருவர், "வாடிக்கையாளரிடமிருந்து பழங்கால நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அந்த நாணயங்களின் தரத்திற்கேற்ப விலை தருகிறோம். இந்த நாணயங்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஆல்பம் செய்து சந்தையில் விற்றுவிடுவோம். இந்த ஆல்பங்கள் தலைவர்களின் உருவங்கள் மற்றும் பல உருவங்கள் அச்சிடப்பட்ட தொகுப்புகளாகவும், அது தயாரிக்கப்பட்ட காலம் சார்ந்தும் இருக்கும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவையாக இருந்தால், அவற்றின் நிலைக்கேற்ப 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய்வரை தருவோம். மன்னர் காலத்து நாணயங்கள், மேலும் சில அரிய வகை நாணயங்கள் லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடியவை.
இதைச் சாக்காக வைத்து சிலர் போலியான நாணயங்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் காட்டி மக்களை ஏமாற்றி சந்தையில் விற்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகம் நேராக இருப்பது போன்ற நாணயம் அரசால் அச்சிடப்படவேயில்லை. ஆனால், அப்படி ஒரு நாணயம் இருப்பதாகவும் அதன் விலை 20,000 ரூபாய் என்றும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் பழைய நூறு ரூபாய் நோட்டில், உலக உருண்டையில் பாம்புகள் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதுபோல போலி நோட்டுகளை அச்சிட்டு லட்சக்கணக்கில் சந்தையில் விற்கின்றனர். மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்தியன் காயின் சொஸைட்டி என்ற அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் பழங்காலத்திலிருந்து தற்போதுள்ள நாணயங்கள் வரை இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களின் எடை, அளவு, நிறம், செய்யப்பட்ட உலோகம், காலம் போன்ற குறிப்புகள் தரப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களைப் பார்த்து, வாங்கும் நாணயம் உண்மையானதுதானா எனத் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
கவனிக்க!
பழங்கால நாணயங்களை வாங்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனிப்பது நல்லது.
* போலியான நாணயங்கள் பாலிஷ் செய்யப்பட்டிருக்கும், எடையில் மாறுதல்கள், வடிவம் மற்றும் தர வேறுபாடுகள் இருக்குமானால் அவை போலியானவை.
* எந்தெந்த கடைகள் உண்மையானவை என்று ஆராய்ந்தபின் நாணயங்கள் வாங்க வேண்டும்.
* அரசு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாட்களில் பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதற்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படும். அங்கு சென்று பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். சிலர் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் நாணயங்களை விற்க முன்வருவார்கள். அவர்களிடமும் பெறலாம்.
இது ஓர் அறிவு சேகரிப்பு!
"என் பத்தாவது வயதில் இருந்தே பழைய ஒரு பைசாவை சேகரிக்கத் தொடங்கினேன். இன்னும் நாணயம் சேகரிக்கும் ஆர்வம் எனக்கு குறையவில்லை" என்கிறார் சதீஷ்குமார். சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியில் மின்சார்பு மற்றும் மின்னணுவியல் துறையில் படித்துவரும் இவர், ராஜராஜசோழன் காலத்திலிருந்த பழங்கால நாணயங்கள் முதல் தற்போதுள்ள பத்து ரூபாய் நாணயம் வரை ஆண்டுகள், அடையாளங்கள், சுதந்திரத்திற்கு முன், பின் என ஏராளமான நாணயங்களை ஆல்பங்களில் சேகரித்து வைத்திருக்கிறார்.
பிளாட்ஃபாரத்தில் பழங்கால நாணயம்!
பழங்காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் என பல அரிய பொக்கிஷங்களை மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் முருகன் என்பவர் பிளாட்ஃபார கடையாக வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தத் தொழில் மூலம் மாதம் சுமார் 10,000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கிறார்.
"பழசுக்கு மவுசு என்றுமே குறையாது. என் சிறு வயது முதலே சேகரித்த நாணயங்களையும், விலை தந்து வாங்கிய நாணயங்களையும் வைத்து இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்தத் தொழிலுக்கு வந்த ஆரம்பத்தில் மதுரை நாணய சேகரிப்பாளர் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அங்கே என்னைப் போல நாணயங்களைச் சேகரிப்பவர்கள் நண்பர்களானார்கள். அவர்களே என்னை இந்தத் தொழில் தொடங்க ஊக்கமளித்தனர். பின்னர் என்னால் இயன்றவரை இதில் முதலீடு செய்தேன். சிலரிடம் இதுபோல பழைய காலத்து நாணயங்கள் இருக்கும். ஆனால், அதன் மதிப்பு தெரியாது. இதுபோன்றவர்களை தேடிப் பிடித்து அவர்களிடம் உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாங்கினேன். அவற்றை வைத்து பிளாட்ஃபார கடையாக வைத்திருக்கிறேன். இந்தத் தொழிலில் நான் செய்திருக்கும் முதலீடு 40,000 ரூபாய்தான். ஆனால், எனக்கு இதிலிருந்து மாதம் சுமார் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது" என்றார் பெருமையாக.
அறிவுக்கு விருந்தாகவும், நிலையான வருமானத்தையும் தரும் இந்த நாணயம் சேகரிப்பை இனி நீங்கள்கூட செய்யலாமே!
- செ.கார்த்திகேயன்,
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

மரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள்

மரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள்


முன்னைய காலங்களில் உணவுடன் நீர்தான் அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது கூடவே மென்பானம்  பலருக்கும் தேவைப்படுகிறது.  கோக்கோ கோலா, பன்ரா, கிரீம் சோடா எனப் பல.  போதாக்குறைக்கு இப்பொழுது Energy drinks ம் சேர்ந்துவிட்டன.

அந் நாட்களில் காய்ச்சல் வந்தால் ஒரு ஒரேஜ் பார்லி, வயிறுப் பொருமல் என்றால் ஒரு ஜின்ஜபியர் என ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் என எப்பொழுதாவதுதான் மென்பானம் அருந்துவார்கள். இப்பொழுது இனிப்பு பானங்களின் பாவனை அதீதமாக அதிகரித்திருப்பதை அறிவீர்கள்.
முன்பு Dinner என வெளியே சாப்பிடப் போனால் சூப் எடுப்பார்கள். இப்போ மென்பானங்கள்தான். மற்றைய பானங்கள் (மது) பற்றி இதில் நான் பேசவில்லை.

இவற்றை அருந்துவதால் 2010 ல் இல், உலகளாவிய ரீதியில் 180,000 மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது,
அவற்றில்...
  • நீரிழிவு இருந்து 132.000 பேரும், (சுமார் 75%) 
  • இருதய நோய்களிலிருந்து (CVD) 44.000 மரணங்களும், மற்றும்
  • புற்றுநோய் காரணமாக 6000 இறப்புகளும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
இனிப்புப் பானங்களில் கலோரிப் பெறுமானம் அதிகம் உள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிக்கிறது, அதனால் உடற் திணிவுக் குறியீடு (BMI) அதிகரிக்கிறது.

இதன் காரணமாக நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இந்த இனிப்புப் பானங்கள் என்றால் என்ன? கீழே உள்ளவற்றைப் பாருங்கள். ஆனால் இவை மாத்திரமல்ல வேறு பலவும் இருக்கலாம்.
  • கலோரி குறைப்புச் செய்யாத எல்லா மென் பானங்கள் 
  • இனிபூட்டப்பட்ட பழச் சாறுப் பானங்கள்
  • ஸ்போர்ட் பானங்கள்
  • எனர்ஜிப் பானங்கள்
  • இனிப்பூட்டப்பட்ட தேயிலைப் பானங்கள்
(Sugary drinks include, but are not limited to, the following types of drinks:
Non-diet carbonated beverages
Fruit-ades such as lemonade, fruit punch, powdered fruit drinks, and fruit drinks containing less than 100% fruit juice
Sports drinks
Flavored waters
Energy drinks
Sweetened teas)

பொதுவாக 30 அவுன்ஸ் அளவுள்ள மென்பானத்தில் 15 முதல் 18 தேக் கரண்டி சீனி இருக்கிறது. இது 240 கலோரிகளைக் கொடுக்கிறது. 

மேற் கூறியவற்றில் பெரும்பாலன மரணங்கள் மத்திய மற்றும் குறைந்தளவு வருமானங்கள் உள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன. அதாவது நமது நாடுகளில்

அமெரிக்க இருதய சங்கம் (American Heart Association ) கீழ்கண்ட பரிந்துரையைச் செய்துள்ளது.

The AHA recommends that adults don't exceed 450 calories a day or 36 oz a week from sugar-sweetened beverages.

In a 2012 statement position statement, the AHA and American Diabetes Association stated that non-nutritive artificial sweeteners can be a tool to help people lower their added sugar and calorie intake, as long as they don't eat extra calories to compensate for the lower calories in the diet drinks.

குறைந்த கலோரி இனிப்பூட்டிகள், கலோரி வலுவற்ற இனிப்பூட்டிகள்,செயற்கை இனிப்புகள், (Low-calorie sweeteners, artificial sweeteners, and noncaloric sweeteners) என போசாக்கற்ற இனிப்புகளை (Non-nutritive sweeteners) வகைப்படுத்துகிறது அமெரிக்க இருதயச்சங்கம்.

இனிப்புப் பிரியமானவர்கள் இனிப்புச் சத்தற்ற அத்தகைய இனிப்புகளை எடுக்கலாம் என அமெரிக்க இருதய சங்கம் கூறுகிறது. 

அத்தகைய போசாக்கற்ற அதாவது கலோரி வலுவற்ற இனிப்புகள் எவை?
உதாரணங்கள் கீழே,
  • Aspartame (NutraSweet® and Equal®)
  • Acesulfame-K (Sweet One®)
  • Neotame
  • Saccharin (Sweet'N Low®)
  • Sucralose (Splenda®)
வளர்ந்த ஒருவருக்கான தினசரி கலோரித் தேவை 2500 ஆகும். பெண்களுக்கு 2000 கலோரிகள். இது தினமும் சாப்பிடும் சகல உணவு மற்றும் பானங்கள், நீராகாரம் அடங்கலாக  யாவற்றிலிருந்து கிடைக்க வேண்டியதாகும்.

எனவே அத்தகைய இனிப்பான மென்பானங்களிலிருந்து 450 கலோரிக்கு மேல் எடுக்கக் கூடாது என்கிறது. இது அமெரிக்கர்களுக்கான அறிவுரை. 

நாம் அந்தளவு கூட எடுக்கக் கூடாது. எமது உடலமைப்பு வித்தியாசமானது. நாம் மேலும் குறைந்தளவு எடுப்பதே உசிதமானது. 

நீங்களும் உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் மேற் கூறிய நோய்களுக்கு ஆட்பட்டு காலத்திற்கு முந்திய மரணங்களுக்கு ஆளாகக் கூடாது எனின் இனிப்புச் செறிவு அதிகமான  அத்தகைய பானங்களை முற்றாகத் தவிருங்கள்.

முடியாவிட்டால் மிகக் குறைந்தளவே குடியுங்கள். 

Facebook
ல் இது பற்றி நான் எழுதியிருந்தபோது நண்பர் Kkshivak Kumar அவர்கள் எமது மூதாதையர் இளநீர்,பதநீர்,மோர் போன்றவற்றைப் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்ததை நினைவூட்டினார்.


--
*more articles click*
www.sahabudeen.com


மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts