இனி நோ டென்ஷன்!
''டென்சன் ஆகாதீங்கண்ணே... லெஸ் டென்சன்... மோர் வொர்க்!'' - ஒரு படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். இன்றைய காலகட்டத்தில் இது எல்லோருக்கும் பொருந்தும். ''டென்ஷனா இருக்கு'' என்ற சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில், வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு, 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு, சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து, கார்ப்பரேட் களத்தில் இறங்கும் நமக்கு, சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன? அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்னைகள். அலுவலக வேலைச் சூழலில் தங்களது வாழ்க்கையைச் சிக்கவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் டென்ஷன்! விளைவு, ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக, சந்தோஷமாக மாற்றிக்கொள்ளும் நான்கு வித்தைகளைச் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள் அசோகன் மற்றும் தியாகராஜன் இருவரும்.
தெளிவாகத் திட்டமிடலாம்!
உற்சாகமாக உழைக்கலாம்!
வேலையில் வெற்றி காணலாம்!
குறுகிய வழிகளை யோசிக்கக் கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால், 'நம்மால் வாங்க முடியவில்லையே' என்று வருத்தப்படலாம். ஆனால், 'வேறு ஒருவர் வாங்கிவிட்டார், அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது' என்கிற ரீதியில் யோசிக்கக் கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- ரேவதி, உ.அருண்குமார்
மருந்தும் மன அழுத்தத்தைக் குறைக்கும்
''நம் மூளை நரம்பு மண்டலத்தில் 'அட்டானமஸ் நெர்வஸ் சிஸ்டம்' (Autonomous nervous system) என்று ஒரு பகுதி உள்ளது. இதில் 'பீட்டா'(Beta) என்ற நரம்புத் தொகுதி கூடுதலாகத் தூண்டப்பட்டு ஒரு சிலருக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது, அதிகம் வியர்ப்பது, தசை துடிப்பது, கை கால் நடுங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை மருத்துவர்கள் 'பீட்டா பிளாக்கர்' Beta Blocker (Propranolol/Atenolol) எனும் ஒரு வகை மருந்தினால் கட்டுப்படுத்துவது உண்டு. அதேபோல் ஆங்சைட்டி என்ற மனம் சார்ந்த பதட்டம் ஏற்படும் நபருக்கு 'மைனர் ட்ரான்க்குலைஸர்' (Minor Tranquillizer) எனும் ஒரு வகை மன அமைதிக்கான மாத்திரைகளை சில காலம் பயன்படுத்துவது நல்ல பயனைத் தரும். மருத்துவரைக் கலந்து ஆலோசித்து அறிவுரையின் பேரில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது நல்லது
--
*more articles click*
www.sahabudeen.com