லேபிள்கள்

வெள்ளி, 13 ஜூலை, 2012

தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'


அப்படியே சாப்பிடலாம்

மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...

`தேனகம்':
 இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.

தேன்-
 அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியம் தரும் `சாலட்' தயார்.

`சக்தி'
 பானம்: இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற்றிப் பரிமாறுங்கள்.

சூடான
 பானத்தில்...: காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கம். சர்க்கரையை விட தேன் இனிப்பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.

`தேன்
 வாழைக்கனி': வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிட்டு துண்டு துண்டாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி!

தேன்
 `பேசியல்': நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் முகத்தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'!

சாப்பிடலாம்...
 முகத்தில் பூசலாம்...: ஒரு வெம்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.

குளியலுக்கு...:
 உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது!

முகத்தின்
 ஈரப்பதம் காக்க...: குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன்,
2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.

கரும்புள்ளிகள்
 மறைய...: வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.

தொண்டை
 இதமாக...: தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.

கேசம்
 பளபளக்கும்: தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தம் புதிய எலுமிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடுள் என்று பயப்படாதீர்கம். பளபளக்கும்.

`கொழுப்பை'க்
 கட்டுப்படுத்தும்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கம் உடம்பில் தேவையற்ற கொழுப்புச் சேர விடாது இது.

தலைமுடியின்
 வறட்சியைப் போக்கலாம்: தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்

புதன், 11 ஜூலை, 2012

உங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால், உங்கள் எடையில் சராசரியாக ஐந்து கிலோ எடை குறையும். ஆனால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போல ஏதேனும் நீண்டநாள் பிரச்னை இருக்கிறவர்களுக்கு இது பயன்படுத்தத் தகுந்தது அல்ல. நல்ல ஆரோக்கியமான நிலையில் வெறும் உடல் எடை மட்டுமே பிரச்னையாக இருக்கிறவர்கள் ஒருமுறை உங்கள் மருத்துவரைச் சந்தித்து விவாதித்துவிட்டு, இந்த உணவு அட்டவணையை ஏழு நாட்களுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதல் நாள் : வெறும் பழங்கள். (வாழைப்பழம் தவிர). பழரசம் எதுவும் சாப்பிடவேண்டாம்.

இரண்டாம் நாள் :
 வெறும் காய்கறிகள். பழங்கள் இல்லை. இந்த இரண்டாவது நாளை ஒரு பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் தொடங்கலாம்.

மூன்றாம் நாள் :
 அனைத்து பழங்கள் + அனைத்து காய்கறிகள் (வாழைப்பழம், உருளைக்கிழங்கு இரண்டைத் தவிர)

நான்காம் நாள் :
 எட்டு வாழைப்பழங்கள் + மூன்று கிளாஸ் பால் அந்த நாள் முழுக்க (சர்க்கரை சேர்க்காதது).

ஐந்தாம் நாள் :
 எட்டு உருளைக்கிழங்குகள் கொஞ்சம் சிக்கன் அல்லது மீன் அல்லது மூன்று முட்டை அல்லது பன்னீர். (காய்கறிகள் இல்லை)

ஆறாம் நாள் :
 அனைத்துக் காய்கறிகள் மற்றும் அனைத்துப் பழங்கள். (தக்காளி, உருளைக்கிழங்கு தவிர)

ஏழாம் நாள் :
 அனைத்துக் காய்கறிகள், பழங்கள் வாழைப்பழம் உட்பட சிக்கன், மீன் இல்லை. சிறிய கப்பில் ப்ரௌன் அரிசிச் சாதம்.

இந்த அட்டவணையைப் பயன் படுத்தும் முன் உங்கள் டாக்டரிடம் ஒருமுறை உங்கள் உடல்நிலை பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள். ஒருவாரம் சிரமப்பட்டு எடை குறைத்து விட்டு அடுத்த வாரம் சோமாலியாவில் சிக்கித் தவித்துத் தப்பித்ததைப் போல உங்கள் வீட்டு சமயலறையைச் சூறையாடாதீர்கள். எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்..

நார்மல் உடம்புடன் இருந்தாலும்... குண்டாவதற்குரிய அறிகுறிகம் உங்களுக்கு தெரிந்தால்... உடனடியாக உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே...

இதோ, அரிசி, உளுந்து, தானியம் சேர்த்த உணவுகளைக் குறைக்கணும். கண்டிப்பாக இறைச்சி வகைகளை சாப் பிடவே கூடாது. கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் பாதிக்கும். பால் மற்றும் பால்வகை உணவுகம், முட்டை, ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், தேங்காய் எண்ணை, குளிர்பானங்கம், பாக்கெட்டில் அடைத்த உணவுகம் ஆகியவற்றை முழுமையாக தவிர்க் கவும்.

அதேபோல், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா, சப்பாத்தி, நாண் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஒருவருக்கு தினமும் 1500 கலோரி தேவை. ஆனால் நாம் அனை வருமே தினமும் 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறோம்.

இதை தவிர்க்க... பயறு வகைகம், காய்கறி வகைகம், சோயா, முருங்கை இலை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், இரண்டு கேரட்டுகளை துண்டு களாக்கி சாப்பிடவும். அல்லது முட்டைக் கோஸ், வெம்ளரித் துண்டுகளை சாப்பிடலாம். இதனால் மதிய உணவின் அளவும் குறையும், உடம்புக்கும் சத்து கிடைக்கும்.

நாட்டுக் கோழி, காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது. சிறிய வகை மீன்களை சாப்பிடவும். ருசிக்காக பெரிய வகை மீன்களை சாப்பிட வேண்டாம்.

தினமும் ஒரு வேளையாவது கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். சர்க்கரை சேர்க்காமல் டீ சாப்பிடலாம். தாளிக்காத குழம்பை பயன்படுத்தலாம். ஏனென்றால்... கடுகு, எண்ணை போன்றவை தவிர்க்கப்படும். எக்காரணத்தைக் கொண் டும் இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது. தினமும் மதிய உணவை, 12.30 மணியிலிருந்து 1.30 மணிக்கும்ளும், இரவு உணவை 9 மணிக்கும்ளும் சாப்பிட வேண்டும்.

மதிய உணவிலிருந்து இரவு உணவுக்கு நீண்ட இடைவெளி வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் குறையும். இல்லாவிட்டால் தோட்ட வேலை, ஏரோபிக்ஸ், யோகா ஆகியவை சிறந்தது

திங்கள், 9 ஜூலை, 2012

கவலைக்கு முதல் மருந்து


கவலைக்கு முதல் மருந்து
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ஜாக்கிங்செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். தியானமும், ஜாக்கிங்கும் கொஞ்ச நேரம் கழித்து ஓய்வு நிலையைத் தரும். உடனடி நிவாரணத்திற்கு உடற்பயிற்சி நல்லதாம்.

கவலைப்படாதே சகோதரா

உடல் நலமும் நல்ல உற்சாகமான மனநிலையும் தேவை என்றால் கவலைப்படாதீர்கள்!

எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.

இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம். மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை அதிகமாவதைவிட, நம் உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் சக்தியுடையது. அது நன்றாகக் குணமாகிவிடும் என்று மனப்பூர்வமாக ஒரு இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் முழுமையாக நம்பினால் முற்றிலும் குணமாகிவிடும். எனவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்.

இந்த உண்மைகளை ஆஸ்திரிய மனோதத்துவ டாக்டரான ஆல்பிசட் ஆட்லர் கண்டுபிடித்து நிரூபித்தும் காட்டினார்.

கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.

உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். கஷ்டங்கள் அகலும் என்று நம்புங்கள்.

இத்துடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள்.

மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக் காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில் சூழ்நிலைகள் உருவாகின்றன.

ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.

இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்துங்கள்.

சட்டென்று குணம் மாறி வள் வள் என்று விழுதல் என்பது கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி (B) குறைந்தாலும் எளிதில் கோபம் கொள்ளுதல் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.

உணர்ச்சிக் கொந்தளிப்பால் உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நன்கு சேர்த்துப் பலப்படுத்த ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் ரொட்டி போன்ற மாவு வகைகளையும் ரொட்டி வகைகளையும் உணவில் சேர்க்கவும்.

மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் டாக்டர்களையும் மாற்றுவார்கள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.

தினமும் மூளையுடன் தொடர்புள்ள இரண்டு கட்டை விரல்களையும் சரியாக 5 நிமிடங்கள் பிடித்து விடுங்கள். பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கண்களைமூடி அமைதியாக இருங்கள். கடல் என்றோ அமைதி என்றோ மனதுக்குள் சொல்லித் கொள்ளலாம். இந்த இரண்டு அம்சங்களாலும் மனம் உண்மையில் அமைதியடையும். கவலையை முறியடிக்கும் உணவுகளும் தினமும் சேர மன அமைதி தொடர்ந்து கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும்

சனி, 7 ஜூலை, 2012

என்றும் பதினாறாக இருக்க....


என்றும் பதினாறாக இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்- சில வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால்...! 
அப்படியான எளிமையான உணவுகள் பட்டியல் இதோ:
பாதாம்: 
பாதாம் பருப்பில் முதுமையை தடுக்கும் வைட்டமின் "ஈ" அதிக அளவில் அடங்கியுள்ளது.ஆரோக்கியமான மேனி,தலைமுடி மற்றும் நகங்களை அளிப்பதில் பாதாமின் பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள் டயட்டீசியன்களும்,அழகு கலை நிபுணர்களும்.பாதாமில் உள்ள வைட்டமின் "ஈ", சூரியனின் புற ஊதா கதிர்கள்,காற்று மாசு போன்றவற்றால் நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.நாளொன்றுக்கு 12 பாதாம் பருப்புகளை ஒருவர் உண்ணலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 
அக்ரூட் பருப்பு
வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "ஈ" சத்து நிறைந்துள்ளது.நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் அது உங்களது மேனியை மிளிர வைக்கும்.
வெள்ளரிக்காய்: 
பாதாம், அக்ரூட் பருப்புகளெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள் சல்லிசான விலையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.நீர் சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் நமது மேனியை பட்டுபோல் மென்மையாகவும்,மினு மினுப்பாகவும் வைத்துக்கொள்ள அபார பங்களிப்பை செய்கிறது. 
வெண்ணெய்
உடல் முதுமை அடைவதை தடுக்கும் உணவு வகைகளில் வெண்ணெயும் ஒன்று.சோர்வை போக்கி, தோல் வறண்டு போவதை தடுத்து,மேனியை பளபளக்க வைக்கிறது. 
கற்றாழை: 
கற்றாழையில் பல வகை உண்டென்றாலும், வீடுகளில் வளர்க்கப்படும் சோத்து கற்றாழை ஜூஸை தினமும் அருந்தி வந்தால், என்றும் இளமையாக தோற்றமளிப்பது சர்வ நிச்சயம்.வைட்டமின் ஈ,சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.முதுமையை தடுக்கும் இந்த சோத்துக்கற்றாழையின் மடலில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது.சற்று கூடுதலான கசப்பு சுவை கொண்ட இந்த மடலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், 35 வயது பெண்ணை கூட,"எக்ஸ்கியூஸ் மீ... நீங்க எந்த காலேஜ்ல் படிக்கிறீங்க?" என்று கேட்பார்கள்.இளமை தோற்றத்தை கொடுப்பது மட்டுமல்ல, உடல் பருமனை தடுக்கும் விதமாக கொழுப்பை கரைத்து, இருதயத்தையும் பாதுகாக்கிறது.மடலை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதனை சுமார் 30 மி.லி. அளவுக்கு ஜூஸ் எடுத்து, அதனுடன் 100 மி.லி. தண்ணீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 
எள்: 
மளிகை கடைகளில் மிக சாதாரணமாக கிடைக்கும் இந்த எள்ளை பலவிதமாக உணவில் சேர்த்துக்கொள்வார்கள்.இதிலும் வைட்டமின் "ஈ" சத்துக்கள் நிறைந்துள்ளதால், மேற்கூறிய பலன்களெல்லாம் இதிலும் அடங்கியுள்ளது. 
செர்ரி: 
செர்ரிபழங்களில் உடலில் செல்களை புதுப்பிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட் அதிக அளவில் உள்ளது. நாளொன்றுக்கு ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கப் செர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
கிரீன் டீ: 
கிரீன் டீயின் நன்மை குறித்து நாம் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டோம்.இதிலும் ஆண்டியாக்ஸிடண்ட் மட்டுமல்லாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது வரை பல அற்புதங்கள் அடங்கியுள்ளது. 
தண்ணீர்:
நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது சருமம் வறண்டு போகாமல் தடுக்கும். 
மேற்கூறிய உணவு பட்டியல் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய சாத்தியமானவை என்பதால்,சிறிது நேரம் ஒதுக்கி இவற்றை உண்டு வந்தால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்காது!
http://atozthagavalkalangiyam.blogspot.in

வியாழன், 5 ஜூலை, 2012

உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்


உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும்? பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.
Love everyone!

மனதில்
 எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று!

There are no bad Guys!

நாம்
 இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா... அப்பவே நினைச்சேன்...’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.

Hear Your Mind Voice!

நன்றாக
 இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.

Key is to believe!

சில
 நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.

Be ashared of your mistakes!

உங்களுக்கு
 தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

Heal yourself Spiritually and mentally.

பிறக்கும்போதே
 எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.

Happiness is your birthsight!

எந்தத்தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

Forgive!

ஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.

No good or bad.. Thinking Makes it so!

இந்தச்
 சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.

Towards the Spiritual !

உங்கள்துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.

Wait for your day

பயம்என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.

Away From Fear!

உங்களுக்குச்
 சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.

Dont take things for granted.

நாம்
 என்ன இப்படி இருக்கிறோம்? நாம் எதற்குமே லாயக்கில்லை? தொட்டாலே தோல்விதான்? நாம் போதுமான தகுதியுடன் இல்லையே? இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும்? எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ? எவ்வளவு திறமை இருக்கிறதோ? அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.

Accept who you are!

நீங்கள்
 அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா? இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள்

செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.

Sky what your are going to do!

இதற்குச்
 சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.

Count your blessings!

இதன்மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா? அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

பெருந்தன்மையை
 மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

Be the person you most want to be!

ஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

World is your mirror!

பேச்சுபணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.

Silence is gold!

நீங்கள்சரிஎன்பதை அடைய விரும்புகிறீர்களா? அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா? என்பதை யோசியுங்கள்.

தவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

கூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.

Accept your mistakes!

தனிமையில்
 ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா?

Are you serving? Find a way to serve!

ங்கள்கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா?’ போன்றவற்றை தவிர்க்கலாம். கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.

Walk towards to your Dreams!

ஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா? ஈகோவா? பொறாமையா? என்னவென்று யோசித்து வெளியேற்றுங்கள்.

No Romance with your inner enemy!

இதுமற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம்? உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம்,

விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம்? இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.

Get out of the Fear!

நல்ல
 மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.

Be a good tree!

உங்களுக்கு
 கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.

Do your best every time!

உதவிசெய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.

Help those who need help!

ஒவ்வொரு
 செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.

No such thing as Failure!

ஒவ்வொருவருமே
 ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.

Live every moment!

இதை
 நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.

All prayers are answered!

எதுதேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை
கைப்பற்றுங்கள். கண் வையுங்கள்.

Focus!

பகிர்ந்துகொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.

Share your life!

இதுஎதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் தரும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.

Give without expectation!

செய்ததையே
 செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.
http://atozthagavalkalangiyam.blogspot.in

செவ்வாய், 3 ஜூலை, 2012

அஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?


சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.

தொடர்ந்து அஜின மோட்டோ. எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?

வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?

இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

அதென்ன அஜினமோட்டோ?

உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ. உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதவது M.S.G என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.

இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.

அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!

MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்! மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது. தூக்கக் குறைவால் மூளையில் டோபாமின் அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் உயிரின் முக்கிய அணுவான ஞிழிகி என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள். இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.

சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5 மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.

ஃபாஸ்ட் புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?

u பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

u சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)

u கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட், சூப் பவுடர்கள்.

புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts