லேபிள்கள்

வியாழன், 23 பிப்ரவரி, 2012

உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!



இதில் வைட்டமின் பிமற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

`கிஸ்மிஸ் பழம்என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இனி, உலர் திராட்சையின் பயன்கள்!

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

*உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

*இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

*குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

*தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.

*மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

*உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

புதன், 22 பிப்ரவரி, 2012

மகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்



நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.

* ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை... ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம்.

வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூக்கம் வந்து விடும்.

தூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும் நல்ல புத்தகங்கள் உதவும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று புத்தகங்களாவது விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இது மாதிரியான உங்களுக்கு ஒத்து வரக்கூடிய நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து செய்தால், உங்களை அறியாமலேயே, உங்களிடம் ஒரு ஒழுங்கு வந்து, அந்த ஒழுங்கே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதுக்கு இனிமை தருபவை உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.

* காலையில் எட்டு மணி வரை தூங்கி விட்டு, அதன் பிறகு அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிக்கும் ஆளா நீங்கள்? உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா? இல்லை தானே... காரணம், லேட்டாக எழுவதால் காலையில் உங்கள் வேலையை தாமதமாக அரக்கப் பரக்கத் துவங்குகிறீர்கள். விளைவு, எல்லா வேலைகளிலும் டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன். இதைத் தவிர்க்க இரவு கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். காலையில் சற்று சீக்கிரமாக எழுங்கள். இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.

உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று சூரியன் உதிப்பதை ரசித்துப் பாருங்கள். கோயில் மணி, பக்கத்து வீட்டு சுப்ரபாதம், பால்காரனின் கூப்பாடு... எல்லாவற்றையும் ஒரு பத்து நிமிஷம் நோட்டமிடுங்கள். ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியும் குதூகலமும் உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்.

உங்களைச் சுற்றி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* யாரிடமும் பேசாமல், தனியாகவே வாழ்வதினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா சொல்லுங்கள்? கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான்! நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா? உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா? டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்டு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன? மெல்ல மெல்ல அவர்கள் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் பர்ஸனலான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆஹா பைக் பயணம்!

* நீங்களும், உங்கள் கணவரும் மிகவும் டிப்ரஸ்டாக உணருகிறீர்களா? உடனே இருவரும் பைக்கில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்யுங்கள். (சாயங்கால நேரம் இது மாதிரியான பயணங்களுக்கு ஏற்றது) சில்லென்ற காற்று முகத்திலடிக்க பயணிக்கும் போது, உங்களுக்குள் ஒரு ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டு விடும்.

அப்புறம் டிப்ரஷனாவது ஒண்ணாவது?

உணவிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்!

* ‘சாக்லெட்மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்.

* ‘காரச் சுவைக்குமகிழ்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால். மாதம் ஒருமுறையாவது ஸ்பைஸியான, காரமான உணவுகளைச் சாப்பிடுங்கள். (அடிக்கடி காரம் சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு. ஜாக்கிரதை!)

* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்களேன். டிப்ரஷனைக் குறைக்கும் சக்தி ஆப்பிளுக்கு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கக் கூடிய ஃபிரக்டோஸ்எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும்.

மகிழ்ச்சியாய் இருக்க மசாஜ்!

* அதிகமான டிப்ரஷனால் (மனச்சோர்வினால்) அவதிப்படுகிறீர்களா? நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும்! மஸாஜ்க்கு டென்ஷன் மற்றும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

* நாய், பூனை, புறா, முயல், லவ் பேர்ட்ஸ் ஆட்டுக் குட்டி என்று நீங்கள் விரும்பும் ஒன்றை வளர்த்துப் பாருங்களேன். டயர்டாக நீங்கள் உணரும் போதெல்லாம் அது உங்களை மகிழ்விக்கும்.

* பண்டிகை நாட்களை பேருக்கு கொண்டாடி விட்டு டீ.வி. முன்னாலேயே பழியாகக் கிடக்காமல், அன்று ஒரு நாளாவது, உறவினர்களை சந்தித்து அவர்களுடன் சந்தோஷமாக மட்டும் (கவனிக்க... சந்தோஷமாக மட்டும்) பேசி பொழுதைக் கழியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு, ‘உறவுகளை நேசிக்க வேண்டும்என்கிற விஷயத்தைப் புரிய வைக்கும்.

* பூக்கள், குழந்தைகள் இரண்டையும் போல மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வேறெதுவும் இல்லை. பூச்செடிகளை வளர்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய ரிலாக்சேஷன் கிடைக்கும். உங்கள் வீட்டு அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆசை ஆசையாகக் கொஞ்சுங்கள். அது அதைவிடப் பெரிய ரிலாக்சேஷன்.

* மனசு கஷ்டமாக உணருகிறீர்களா? கவிதை, ஓவியம், கைவேலை (எம்பிராய்டரி, கூடை பின்னுவது போன்றவை) என எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில் மனதைச் செலுத்துங்கள். உங்களின் கான்ஸன்ட்ரேஷன் செய்கிற வேலையில் திரும்பி விடும்

* சில பேரைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு சந்தோஷம் வந்து விடும். பேசினாலோ, உற்சாகம் தொற்றிக் கொண்டு, வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும். நீங்கள் சோர்வாய் உணரும் போது, இப்படிப்பட்ட உற்சாகஆட்களை சந்தியுங்கள் அல்லது ஃபோனில் பேசி,இழந்த எனர்ஜியை ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

* மனசு பாரமாக இருக்குமபோது, நீங்கள் பளிச்சென்று டிரெஸ் பண்ணிக் கொண்டு எங்கேயாவது வெளியில் செல்லுங்கள். நம்பிக்கையாக உணர்வீர்கள். அழுது வடியும் உடைகள் உங்களை இன்னமும் சோர்வாக்கும்.

* நீங்கள் மிகவும் சென்ஸிடிவ்வான ஆளாக இருந்தால், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி உங்களை ஒவ்வொருவரும் சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர்களின் வார்த்தகளைத் தவிர மற்றவர்களின் டைம் பாஸ்கமெண்ட்களை கண்டு கொள்ளாதீர்கள். புறக்கணியுங்கள்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?




சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. 

* வாஷிங்மெஷின்-. 

உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால் வம்புப் பிரசாதமாகி, ஏண்டா வாங்கினோம் என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.
 

* இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் 'ஸ்ரீசர்வீஸஸ்' என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை என்று நீங்களே சொல்வீர்கள்! என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.

** எப்படித் தேர்ந்தெடுப்பது? 

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது;
 
அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை;
 
நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.
 

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.
 

*அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ராடுபோன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.
 

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
 

*** என்ன விலை மெஷினே? 

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
 
ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.
 

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன.
 
4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.
 

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள்.
 

செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்செய்ய வேண்டும். துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.
 

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்- துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.
 

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.
 

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ? குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ? செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.
 

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.
 
* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.
 

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.
 

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.
 

*** பயன்படுத்துவது எப்படி? 

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.
 

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ணீரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.
 

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.
 

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.
 

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.
 

இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.
 

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.
 

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.
 

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ஃபஸ்ஸி லாஜிக்என்று பெயர்.
 

மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு நியூரோ ஃபஸ்ஸிஎன்று பெயர்.
 

இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.
 

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும். *** "வாழ்க வளமுடன்"
 

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)



சிறியதாக, எங்கும் எடுத்துச் செல்வதாக, அதிகத் திறன் கொண்டதாக இன்று மாணவர்கள், அலுவலர்கள் ஆகியோர்கள் அன்போடு பயன்படுத்தும் சாதனங்களில் ஒன்று லேப் டாப் கம்ப்யூட்டராகும். 

குறைவான விலையில், அதிக திறனோடு, கூடுதல் வசதிகளோடு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வருவதால், நீங்கள் நிச்சயமாய் ஒன்றை வாங்கியிருப்பீர்கள்.
 
புதிதே வாங்கிப் பயன்படுத்தும் வேளையில் சில பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்கள்.
 
***
 
அவை குறித்தும், அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.
 
1. தொடக்கத்தில் நாம் விரும்பிய, எதிர்பார்த்ததற்கு மேலாகவே லேப்டாப் செயல்பட்டிருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் வேலைத்திறன் வேகம் குறைந்திருக்கும்.
 
2. பேட்டரியின் திறன் எதிர்பார்த்த செயல் நேரத்தை அளிக்கத் தவறும்.
 
3. இன்டர்நெட் இணைப்புகள் தேவையான வேகத்தில் செயல்படாமல் தவங்கும்.
 
இந்த தடைகளை நீக்கி எப்படி உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை அதிக வேகத்துடன் செயல்பட.....
 
***
 
வழிகளை இங்கு காணலாம்:
 

1. முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப்படுத்தும்.
 
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என்றால் கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அதில் ஆட் / ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs) தேர்ந்தெடுத்து தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.
 
விஸ்டா எனில் புரோகிராம்ஸ் அன்ட் பீச்சர்ஸ் (Programs and Features)தேர்ந்தெடுத்து நீக்குங்கள்.
 
*
 
2. உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள்.
 
இவை எல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லேப்டாப்பில் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சார்பாக இருக்கும் ஐகான்கள்.
 
*
 
3. உங்கள் மவுஸின் கர்சரை, அவற்றின் மேலாகக் கொண்டு சென்றால் அந்த ஐகான்கள் எந்த புரோகிராம்களைக் காட்டுகின்றன என்று தெரியவரும். அவை வேண்டுமா என்று முடிவு செய்து, தேவையில்லை என்றால் உடனே அவற்றை நீக்கலாம்.
 
*
 
4. இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது.
 
இதற்கு சிறிது செலவாகும். இப்போதைய லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ராம் மெமரியை அதிகப்படுத்தும் வசதிகளோடுதான் வருகின்றனர்.
 
எனவே உங்களுடைய லேப்டாப்பில் 512 எம்பி மெமரி உள்ளது எனில் அதனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். அப்படி உயர்த்தினால் உங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டா நிச்சயம் சண்டிக் குதிரை வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.
 
*
 
5. இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியதுதான்.
 
*
 
6. லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பேட்டரி. காலப் போக்கில் இவை தங்களின் முழுத் திறனை இழக்கத் தொடங்கும். இதன் இடத்தில் புதிய பேட்டரிகளை வாங்கிப் பொருத்துவது நல்ல முடிவு என்றாலும், இப்போதைய லேப்டாப்களில் பேட்டரி மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
 
*
 
7. மெயின் இணைப்பிலிருந்து லேப்டாப்பினை நீக்கியவுடன், குறைவான மின்சக்தியைப் பயன்படுத்த இந்த சாப்ட்வேர்கள் இயங்கும். மேலும் தேவையில்லாத போது ஹார்ட் டிஸ்க்குகள் சுழல்வது நிறுத்தப்படும். இந்த ஏற்பாட்டினை நாமாகவும் மேற்கொள்ளலாம்.
 
*
 
8. கண்ட்ரோல் பேனல் சென்று பவர் ஆப்ஷன்ஸ் (Power options) என்பதனைத் தேர்ந்தெடுத்து அந்த அந்த விண்டோவில் தந்திருக்கும் ஒவ்வொன்றையும் செட் செய்திடலாம்.
 
*
 
9. இதில் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்கினை, லேப்டாப் எவ்வளவுநேரம் வேலை எதுவுமின்றி இருந்தால், நிறுத்தி வைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதனால் பேட்டரியின் சக்தி கணிசமாக மிச்சம் ஆகும்.
 
*
 
10. இதனால் பெரிய அளவில் மின்சக்தி மிச்சமாகும் என எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவிற்கு பேட்டரியின் வாழ் நாள் கூடும்.
 
*
 
11. நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த ஒரு இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம்.
 
இந்த புரோகிராமின் பெயர் விஸ்டா பேட்டரி சேவர் (Vista Battery Saver). இதனை www.codeplex.com/vistabattery என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது தானாகவே, லேப்டாப் மெயின் இணைப்பிலிருந்து விலக்கப்படுகையில் , அதிகம் பவர் எடுக்கும் ஏரோ ஸ்பேஸ் மற்றும் சைட் பார் டூல் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்.
 
**
 

இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ளலாம்.
 
1. சிடி அல்லது டிவிடி ட்ரைவில் எந்த ஒரு சிடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிடி ஏதேனும் இருந்தால், நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கும் போதெல்லாம், இந்த டிரைவ் சுழன்று செயல்பட ஆரம்பிக்கும்.
 
*
 
2. புதிய பேட்டரி ஒன்றை லேப்டாப்பிற்கென வாங்குவதாக இருந்தால், லேப்டாப் தயாரித்த நிறுவனம் பரிந்துரைத்த பேட்டரியினை மட்டுமே வாங்கிப் பொருத்த வேண்டும். அந்நிறுவனத்தின் இணையதளத்தினைக் காண்பது இதற்கு உதவிடும்.
 
விலை குறைவாக உள்ளது என்று அதே போன்ற வேறு பேட்டரியினை வாங்கிப் பயன்படுத்துவது லேப்டாப்பிற்கு கேடு விளைவிக்கும்.
 
*
 
3. புத்திய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை.
 
எடுத்துக் காட்டாக வெப் கேம், டிவி ட்யூனர் போன்றவற்றைக் கூறலாம். இது கம்ப்யூட்டர் உலகில் சகஜம் தான். தொடர்ந்து நமக்கான வசதிகள் பெருகி, நவீன சாதனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. இதனை எளிதாகச் சமாளிக்கலாம்.
 
*
 
4. நூற்றுக்கணக்கான சாதனங்கள் இன்று லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் உள்ளன.
 
எடுத்துக் காட்டாக டிவி ட்யூனரை இணைக்கலாம்; இணைத்த பின்னர் உங்கள் லேப்டாப் ஒரு டிவியாகவும், வீடியோ ரெகார்டராகவும் செயல்படும்.
 
*
 
5. இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
 

யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள்.
 
அங்கு பி.சி. கார்ட் அல்லது புதிதாக வந்துள்ள எக்ஸ்பிரஸ் கார்ட் ஸ்லாட் இருக்கும். இதன் மூலம் கூடுதல் சாதனங்களை இணைக்கலாம்.
 
*
 
6. எவ்வலவுக் கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
 
லேப்டாப் செயல்படாமல் போவதற்கான காரணங்களில் வெப்பமும் ஒன்று. லேப்டாப்பின் உள்ளே தரப்பட்டிருக்கும் சிறிய மின்விசிறிகள் இந்த வெப்பத்தைக் கடத்தி உள்ளே உள்ள சிப்களைக் காப்பாற்றும் என்றாலும், கூடுதலாக ஒரு கூலிங் பேட் ஒன்றை வாங்கி இணைத்துப் பயன்படுத்துவது இவ்வகையில் பாதுகாப்பினைத் தரும்.
 
*
 
7. லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம்.
 
*
 
8. மேலும் நாம் இதனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கையில், நாம் அறியாமல் மற்றவர் இதனைப் பயன்படுத்தவும் கூடும். இதனைத் தடுக்கக் கம்ப்யூட்டரில் ஒவ்வொரு விண்டோஸ் அக்கவுண்ட்டுக்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது அவசியம். லேப்டாப்பினை இன்ஸூர் செய்வதும் நம் இழப்பை ஒரு வகையில் ஈடு செய்திடும்.
 
*
 
9. உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப்பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
 
ஒவ்வொரு நிறுவனமும் தன் லேப்டாப் கம்ப்யூட்டரினை, அதற்கெனத் தயாரிக்கப்பட்ட கேரி பேக்கில் வைத்தே விற்பனை செய்கின்றன. எனவே அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
 
*
 
10. இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின் சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது.
 
இது மெயின் பவர் சாக்கெட்டுக்கும், லேப் டாப் அடாப்டருக்கும் இடையே அமர்ந்து தேவையற்ற மின் ஏற்ற இறக்கத்தினைச் சமாளிக்கின்றன.
 
*
 
எந்த சாதனமும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் தன் புதுமையையும், பயன்பாட்டுத் தன்மையையும் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கிவிடும்.
 
இருப்பினும் மேலே கூறப்பட்டுள்ள சில வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பயன்பாட்டு நலனை கூடுதலாகச் சில ஆண்டுகள் தக்கவைக்கலாமே!
 

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்



நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல் பட்டவர்கள் . மக்களை அறியாமை இருளிலிருந்து ஒளியின் பால் அழைப்பதற்காக பாடுபட்டவர்கள். அவர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்றவர்களும் உண்டு. ஏற்காதவர்களும் உண்டு. ஏற்காதோர் இறைத் தண்டனைக்கு ஆளாகி அழிந்தனர். ஓரிறைக் கொள்கையை உலகில் பிரச்சாரம் செய்த அந்த உத்தமர்கள் பற்றிய அரிய தகவல்களை வினா விடைவாயிலாக கீழே காண்போம்.
1. (மர்யம் பின்த் இம்ரான்) இம்ரானின் மகள் மர்யத்தை வளர்ப்பதற்கு பொறுப்பேற்றவர்
யார்?
நபி ஸகரிய்யா ( அலை).
2. மூஸா (அலை) அவர்களின் அமைச்சராகச் செய்ல்பட்டவர் யார்?
ஹாரூன் (அலை).
3. மீனால் விழுங்கப்பட்ட இறைதூதர் யர்?
நபி யூனுஸ் ( அலை).
4. யூஸுஃப் (அலை) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் யார்?
புன்யாமீன்.
5. தந்தையில்லாது பிறந்த இறைதூதர் யார்?
நபி ஈஸா(அலை)
6. எந்த இறைதூதரின் மகன் (காஃபிர்) இறை நிராகரிப்பாளன்?
நூஹ் நபியன் மகன்.
7. எந்த நபியின் தந்தை (காஃபிர்)இறை நிராகிப்பாளன்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை.
8. தான் உழைக்காமல் உண்ணமாட்டார். அந்த நபி யார்?
நபி தாவூது (அலை)
9. தாவூது நபியின் நோன்பு எவ்வாறிருந்தது?
ஒருநாள் நோன்பிருப்பார். மறுநாள் நோன்பை விட்டுவிடுவார்.
10. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்?
நபி அய்யூபு (அலை)
11. கொடுங்கோலன் பிர்அவ்னிடம் நீங்கள் இருவரும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்!
என்று யாருக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான்?
மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவருக்கும்.( 20:43)
12. யூனுஸ் (அலை) எந்த மக்களுக்கு இறைதூதராக அனுப்பப்ட்டார்கள்?
நீனவா மக்களுக்கு.
13. எந்த நபியை நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் போட்டான்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களை.
14. ஈஸா நபியவர்கள் எந்த சமூயத்திற்கு நபியாக அனுபப்பட்டார்கள்?
பனீ இஸ்ரவேலர்களுக்கு!
15. சிறையிலடைக்கபட்ட இறை தூதர் யார்? நபி யூஸுஃப் (அலை).
16. “இப்னுத் தபீஹைன்”(அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரின்) மகன் யார்?
நபி முஹம்மது (ஸல்). (இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீலும், அப்துல் முத்தலிபின் மகன்
அப்துல்லாஹ்வும் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்).
17. “கலீலுல்லாஹ்” (இறைவனின் உற்ற நண்பர்) என அழைக்கப்பட்டவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை)
18. “கலீமுல்லாஹ்” (இறைவனிடம் உரையாடியவர்) என அழைக்கப்படுபவர் யார்?
நபி மூஸா (அலை)
19. “ஹபீபுல்லாஹ்” ( இறைவனின் நேசத்தை அதிகம் பெற்றவர்) யார்? நபி முஹம்மத் (ஸல்)
20. “தபீஹுல்லாஹ்” ( பலியிட அழைத்துச் செயல்லப்பட்டவர்) யார்?
நபி இஸ்மாயீல் (அலை)
21.ரூஹுல்லாஹ் ( இறைவனால் ரூஹ் ஊதப்பட்டவர்) யார்?
நபி ஈஸா (அலை).
22. அபுல் பஷர் ( மனிதத்தந்தை) யார்.
முதல் மனிதர் ஆதம் (அலை).
23. அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை எனப்படுபவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை). இவர்களிலிருந்தே அதிகமான நபிமார்கள் தோன்றியதால் இவ்வாறு
அழைக்கப்படுகின்றனர்.
24.நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கிணற்றில் எறியப்பட்டு எத்தனை நாட்கள் அங்கே
இருந்தனர்?
மூன்று நாட்கள்.
25. நபி யூஸுஃப் (அலை) அவர்கள் எத்தனை நாட்கள் சிறவைக்கப்பட்டனர்?
ஏழு வருடங்கள்.
26. எந்த மலையில் வைத்து நபி மூஸா (அலை) அவர்களிடம் இறைவனிடம் பேசினான்?
தூர்ஸீனா மலையில் .(2:63)
27. நபி ஹூது (அலை) அவர்கள் எந்த சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்?
ஆது மக்களுக்கு!
28. ஷுஐபு (அலை) அவர்கள் எந்த மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்?
மத்யன் மக்களுக்கு!
29. ஹாரூன் (அலை) அவர்கள் எதில் சிறந்து விளங்கினர்?
நாவன்மையில் (ஃபஸாஹத்துல் லிஸான்)
30. அறிஞர் கிள்ரை காண்பதற்காக மூஸா (அலை) அவர்களுடன் சென்ற இளைஞர் யார் ?
யூஷஃ பின் நூன்.
31. இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்பிலிட்ட மன்னன் யார்? அவன் எவ்வாறு
அழிக்கப்பட்டான்?
நம்ரூத் என்னும் கொடியவன். மூக்கு வழியாகக் ஒரு கொசுவை அனுப்பி அதன்
கொடுமையால் அழிக்கப்பட்டான்.
32. தமூத் மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர் யார்?
நபி ஸாலிஹ் (அலை).
33. தாவூது (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
ஸபூர் வேதம்.
34. நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கி நின்ற மலை எது?
ஜூதி மலை.(அல்-குர்ஆன் 11:54)
35. மகன்,தந்தை,பாட்டனார் மூவரும் இறைதூதராக இருந்தனர், அவர்கள் யார்?யூஸுஃப்
அவர் தந்தை யஃகூபு, அவர் தந்தை இப்றாஹீம் ஆகியோர் இறை தூதர்களாவர்.
36. மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
தவ்ராத் வேதம்.
37. ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
இன்ஜீல் வேதம்.
38. ஈஸா (அலை)அவர்களின் தோழர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?ஹவாரிய்யூன்.(3:52)
39.மன்னன் ஜாலூத்தை கொன்ற நபியார்?
நபி தாவூது (அலை) (2:251)
40.தச்சராக வேலை செய்த நபி யார்?
ஸகரிய்யா (அலை).
37.ஈஸா (அலை) அவர்கள் பிறந்த ஊர் எது?
பலஸ்தீன்.
38.நபி ஸுலைமான் அவர்களின் கடிதத்தை பல்கீஸ் அரசிக்கு கொண்டு சென்ற தூதர் யார்?
ஹுத்ஹுத் பறவை. (27:20)
39. தந்தையும் மகனும் நபியாக இருந்தவர்கள் யார் யார்?
நபி இப்றாஹீமும் நபி இஸ்மாயீலும்,நபி இஸஹாக்கும், நபி யஃகூபும், நபி யஃகூபும் நபி
யூஸுஃபும், நபி தாவூதும் நபி ஸுலைமானும், நபி ஸகரிய்யாவும் நபி யஹ்யாவும்
ஆகியோராவார் (அலைஹிமுஸ்ஸலாம்)
40. நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை?
அவை ஒன்பது (17:101) 1.அஸா பாம்பாக மாறுதல் ,2.கை ஒளி பெறுவது,4.தூஃபான் வெள்ளம்,
5.வெட்டுக்கிளி, 6.பேன், 7.தவளை,8.இரத்தம்,9. கடும் பஞ்சம் ( அல் குர்ஆன்.27:12,
7:108)
41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்?
ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.
42.இப்றாஹீம் நபியின் மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தனர்?சிலைகளையும்,
நட்சத்திரங்களையும்.
43.இப்றாஹீம் நபியின் மனைவியும் இஸ்ஹாக் நபியின் தாயாரும் யார்?
ஸாரா அம்மையார்.
44.கத்தீபுல் அன்பியா ( நபிமார்களில் நாவலர்) யார்?
நபி ஷுஐபு (அலை)
45.உலகில் தோன்றிய நபிமார்களின் தலைவர் யார்?
நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
46.நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை? 1. களி மண்ணால்
செய்த பறவை உயிர் பெறுதல். 2. பிறவிக்குருர் கண்பார்வை பெறுதல்.3. குஷ்டரோகிகள் நலம்
பெறுதல் 4. இறந்தோரை உயிர்பித்தல் 5. பிறர் உண்பதை (வீட்டில் உள்ளவற்றை பார்க்காமலே)
கூறுதல்) ( குர்ஆன்: 3:49,5:110)
47. ஸூரா கஹ்பில் கூறப்பட்ட அப்துன் ஸாலிஹ்” (நல்லடியார்) யார்?
கிள்ர் (களிர்) (அலை)
48. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் முக்கியமானவை யாவை?
1.உலகுக்கே சவாலாவிருக்கும் பொதுமறை அல் குர்ஆன்.2. மிஃராஜ் (விண்வெளிப்) பயணம்.3.
சந்திரனைப் பிளந்தது. 4.கைவிரல்களிலிருந்து தண்ணீர் ஊற்றாக ஓடியது.5. வஹீ மூலம்
மறைவான செய்திகளைக் கூறியது.6. கல் ஸலாம் உரைத்தது.7. மாடு பேசியது. 8. நோயாளரை நலம்
பெறச் செய்தது. 9. சிறிதளவு உணவை பெரும் கூட்டம் உண்ணுமளவு அதிகரித்தது.10.
பேரீத்தம் மரம் அழுதது.11. பேரீத்தம் பழங்கள் பெரும் குவியலாகப் பெருகியது.12.
எதிரிகளின் கொலைச் சூழ்ச்சிகளிலிருந்து காத்தது.13. துஆக்களை இறைவனால்
ஏற்க்கப்படுவது. போன்ற நூற்றுக்கணக்கான அற்புதங்கள் நிகழ்ந்தன.
49. இப்றாஹீம் நபி செய்த தொழில் என்ன?
விவசாயம்.
50. ஆதம் (அலை) அவர்களின் மகன் ஹாபீலைக் கொன்றது அவரது சகோதரர் காபீல்
41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்?
ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்?
42.நபிமார்களின் தந்தையென யார் அழைக்கப்படுகிறார்?

நபி இப்றாஹீம் (அலை)
43.இப்றாஹீம் நபியின் மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தனர்?
சிலைகளையும், நட்சத்திரங்களையும்
44.இப்றாஹீம் கபியின் மனைவியும் இஸ்ஹாக் நபியின் தாயாரும் யார்?
ஸாரா
45.கத்தீபுல் அன்பியா ( நபிமார்களில் நாவலர்) யார்?
நபி ஷுஐபு (அலை)
46.உலகில் தோன்றிய நபிமார்களின் தலைவர் யார்?
நபி முஹம்மது (ஸல்) அவர்கள்

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி மற்றும் தலை சுற்றல் வருவது ஏன்?

அலுவகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து பணியாற்றுவது கழுத்து வலியை உண்டாக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அ...

Popular Posts