லேபிள்கள்

புதன், 22 பிப்ரவரி, 2012

மகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்



நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.

* ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை... ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம்.

வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூக்கம் வந்து விடும்.

தூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும் நல்ல புத்தகங்கள் உதவும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று புத்தகங்களாவது விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இது மாதிரியான உங்களுக்கு ஒத்து வரக்கூடிய நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து செய்தால், உங்களை அறியாமலேயே, உங்களிடம் ஒரு ஒழுங்கு வந்து, அந்த ஒழுங்கே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதுக்கு இனிமை தருபவை உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.

* காலையில் எட்டு மணி வரை தூங்கி விட்டு, அதன் பிறகு அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிக்கும் ஆளா நீங்கள்? உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா? இல்லை தானே... காரணம், லேட்டாக எழுவதால் காலையில் உங்கள் வேலையை தாமதமாக அரக்கப் பரக்கத் துவங்குகிறீர்கள். விளைவு, எல்லா வேலைகளிலும் டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன். இதைத் தவிர்க்க இரவு கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். காலையில் சற்று சீக்கிரமாக எழுங்கள். இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.

உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று சூரியன் உதிப்பதை ரசித்துப் பாருங்கள். கோயில் மணி, பக்கத்து வீட்டு சுப்ரபாதம், பால்காரனின் கூப்பாடு... எல்லாவற்றையும் ஒரு பத்து நிமிஷம் நோட்டமிடுங்கள். ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியும் குதூகலமும் உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்.

உங்களைச் சுற்றி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* யாரிடமும் பேசாமல், தனியாகவே வாழ்வதினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா சொல்லுங்கள்? கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான்! நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா? உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா? டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்டு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன? மெல்ல மெல்ல அவர்கள் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் பர்ஸனலான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆஹா பைக் பயணம்!

* நீங்களும், உங்கள் கணவரும் மிகவும் டிப்ரஸ்டாக உணருகிறீர்களா? உடனே இருவரும் பைக்கில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்யுங்கள். (சாயங்கால நேரம் இது மாதிரியான பயணங்களுக்கு ஏற்றது) சில்லென்ற காற்று முகத்திலடிக்க பயணிக்கும் போது, உங்களுக்குள் ஒரு ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டு விடும்.

அப்புறம் டிப்ரஷனாவது ஒண்ணாவது?

உணவிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்!

* ‘சாக்லெட்மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்.

* ‘காரச் சுவைக்குமகிழ்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால். மாதம் ஒருமுறையாவது ஸ்பைஸியான, காரமான உணவுகளைச் சாப்பிடுங்கள். (அடிக்கடி காரம் சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு. ஜாக்கிரதை!)

* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்களேன். டிப்ரஷனைக் குறைக்கும் சக்தி ஆப்பிளுக்கு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கக் கூடிய ஃபிரக்டோஸ்எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும்.

மகிழ்ச்சியாய் இருக்க மசாஜ்!

* அதிகமான டிப்ரஷனால் (மனச்சோர்வினால்) அவதிப்படுகிறீர்களா? நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும்! மஸாஜ்க்கு டென்ஷன் மற்றும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

* நாய், பூனை, புறா, முயல், லவ் பேர்ட்ஸ் ஆட்டுக் குட்டி என்று நீங்கள் விரும்பும் ஒன்றை வளர்த்துப் பாருங்களேன். டயர்டாக நீங்கள் உணரும் போதெல்லாம் அது உங்களை மகிழ்விக்கும்.

* பண்டிகை நாட்களை பேருக்கு கொண்டாடி விட்டு டீ.வி. முன்னாலேயே பழியாகக் கிடக்காமல், அன்று ஒரு நாளாவது, உறவினர்களை சந்தித்து அவர்களுடன் சந்தோஷமாக மட்டும் (கவனிக்க... சந்தோஷமாக மட்டும்) பேசி பொழுதைக் கழியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு, ‘உறவுகளை நேசிக்க வேண்டும்என்கிற விஷயத்தைப் புரிய வைக்கும்.

* பூக்கள், குழந்தைகள் இரண்டையும் போல மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வேறெதுவும் இல்லை. பூச்செடிகளை வளர்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய ரிலாக்சேஷன் கிடைக்கும். உங்கள் வீட்டு அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆசை ஆசையாகக் கொஞ்சுங்கள். அது அதைவிடப் பெரிய ரிலாக்சேஷன்.

* மனசு கஷ்டமாக உணருகிறீர்களா? கவிதை, ஓவியம், கைவேலை (எம்பிராய்டரி, கூடை பின்னுவது போன்றவை) என எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில் மனதைச் செலுத்துங்கள். உங்களின் கான்ஸன்ட்ரேஷன் செய்கிற வேலையில் திரும்பி விடும்

* சில பேரைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு சந்தோஷம் வந்து விடும். பேசினாலோ, உற்சாகம் தொற்றிக் கொண்டு, வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும். நீங்கள் சோர்வாய் உணரும் போது, இப்படிப்பட்ட உற்சாகஆட்களை சந்தியுங்கள் அல்லது ஃபோனில் பேசி,இழந்த எனர்ஜியை ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

* மனசு பாரமாக இருக்குமபோது, நீங்கள் பளிச்சென்று டிரெஸ் பண்ணிக் கொண்டு எங்கேயாவது வெளியில் செல்லுங்கள். நம்பிக்கையாக உணர்வீர்கள். அழுது வடியும் உடைகள் உங்களை இன்னமும் சோர்வாக்கும்.

* நீங்கள் மிகவும் சென்ஸிடிவ்வான ஆளாக இருந்தால், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி உங்களை ஒவ்வொருவரும் சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர்களின் வார்த்தகளைத் தவிர மற்றவர்களின் டைம் பாஸ்கமெண்ட்களை கண்டு கொள்ளாதீர்கள். புறக்கணியுங்கள்.

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts