லேபிள்கள்

செவ்வாய், 31 மே, 2011

கடி..கடி...கடி.. இது செம காமெடி...



கடி..கடி...கடி.. இது செம காமெடி...

நான் அவளை பார்த்தேன்....
அவள் என்னைப் பார்த்தாள்....
மீண்டும் அவளை பார்த்தேன்...
அப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
அப்புறம் என்னங்க? பரீட்சை ஹால்ல கேள்விக்கு பதில் தெரியலேன்னா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் மாறி மாறி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்... வேற என்ன செய்றது?

கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உன்னை  பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?
விமலா: ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி
கமலா: எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் கணவரோடு ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே..  இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌த்தா‌ன் இரு‌க்‌கியா?
விமலா: இ‌ல்லடி.. இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
கமலா :அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?
விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!

நடிகர் விஜய் ரஞ்சிதாவிடம் கேட்கிறார்:- நீங்க ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க அதனால என் கூட ஒரு படத்துல ஆட வர்றிங்களா...ப்ளீஸ்...?
ரஞ்சிதா:- சாமி முன்னாடி மட்டும் தான் ஆடுவேண்டா...உன்ன மாதிரி சாக்கடை முன்னாடி இல்ல...
அவர் எப்ப பேசினாலும் பயங்கரமா அறு அறுன்னு அறுக்கறாரே, 
அவரால மட்டும் எப்படி முடியுது?
நாக்குக்கு டெய்லி சாண புடிச்சுட்டு வராருல்ல...
ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்... 
ராமு : யானை ஒண்ணு குளத்த எட்டிப் பார்க்கும்போது அங்கிருந்த எறும்பு யானையை கடிச்சிதாம் 
சோமு :எதுக்கு?
ராமு : குளத்துல அந்த எறும்போட ஆளு குளிச்சிக்கிட்டு இருந்துதாம். 
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடு‌க்கணு‌ம்..
அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்.. முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க... 
எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்.. ‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர் ‌கி‌ட்ட பேச‌ச் சொ‌ல்‌றீ‌ங்க?
அவரோட பைய‌ன‌க் காணோ‌ம்னு இ‌ப்போ‌த்தா‌ன் புகா‌ர் கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன். 
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா. 
கார் ஓட்டி பாரேன். 
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன். 
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
சர்தார் கோயிலில் சத்தமாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்.
சர்தார் சிறுவன் : கடவுளே பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக நியுயார்க்கை சிக்கிரமாக மாற்று என்று.
அருகில் இருப்பவர் : தம்பி ஏன்பா இப்படி வேண்டுகிறாய்?
சர்தார் சிறுவன் : இல்ல சார் நான் பரிட்சையில் அவ்வாறு எழுதிவிட்டேன். அவரு மாத்திவிட்டால் விடை சரியாகிவிடும் அதனால் தான் என்று.
 
பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், எனக்கு 5 லட்சம் குடுங்கஎன்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னது இதைத்தான், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு
 
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.
25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்
சர்தார்ஜி ஒரு முறை அவருடைய சீன நண்பரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். சீன நண்பர் சர்தார்ஜியிடம் சிங் சங் சும் சாம் சிங்என்று சொல்லி இறந்துவிட்டார். சர்தார்ஜிக்கு சீன மொழி தெரியாது என்பதால், சீன நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார். நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் சர்தார்ஜி அதிர்ச்சி அடைந்தார். அதன் அர்த்தம் இது தான். 

டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு

சொந்த சரக்கில்லை!!...



சொந்த சரக்கில்லை!!...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து: 
மனைவி ஊருக்குச் சென்றிருந்தார்.  கணவர் தன் மனைவி மேல் இருக்கும் கோபத்தை சுதந்தரமாகக் காட்ட நினைத்து, மனைவியின் படத்தை வைத்து, தூரத்திலிருந்து அதன் மேல் டார்ட்ஸ்(darts) அடித்துக் கொண்டிருந்தார்.  எதுவும் சரியாகப் படத்தின் மேல் படவில்லை.  அப்போது மனைவியிடமிருந்து கைப்பேசி அழைப்பு - " என்ன செய்ஞ்சுட்டிருக்கீங்க?" என்று மனைவி கேட்க, 'உன்னை மிஸ் செய்ஞ்சுட்டிருக்கேன்" என்று கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.

(
பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: மனைவி அந்தப் பக்கம், 'நான் உங்கள் ஃபோட்டாவை பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் - உங்களை மிஸ் பண்ணலை!' என்றாள்!!)
***********************************************************************************
அமெரிக்காவில் ஒரு தந்தை தன் மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள, தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.  மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியாதென்றான்.  பெண்ணின் தந்தை பில் கேட்ஸ் என்று தந்தை சொல்லவும்மகன் ஒத்துக் கொண்டான்!  

பின்னர், தந்தை பில் கேட்ஸிடம் போய் அவர் மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்கக் கேட்க, பில் கேட்ஸ் மறுத்தார்! 'மாப்பிள்ளை வேர்ல்ட் பாங்கின் CEO வாக இருந்தாற்கூடவா மறுப்பீர்கள்?' என இந்த வியாபாரத் தந்தை கேட்க, பில் கேட்ஸ் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்!

இந்தத் தந்தை அடுத்துச் சென்றது வேர்ல்ட் பாங்கின் தலைவரிடம்.  அவரிடம் தன் மகனுக்கு CEO வேலை கேட்டார் - தலைவர் மறுக்க, 'பில் கேட்ஸின் மாப்பிள்ளைக்கு இந்த வேலையைத் தர மாட்டீர்களா?' என்று தந்தை கேட்டார்! பிறகென்ன, வேலையும் கிடைத்தது!

இதற்குப் பெயர் தான் பிஸினஸாம்!
####################################################################
காதலி தன் காதலனிடம், 'என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டாள்; காதலன், 'அதோ, அங்கு செக்கச் செவேல்னு ஒரு BMW கார் நிற்குதில்லையா,..' என்று ஆரம்பித்தவுடன், காதலி, 'அடடா, உங்களுக்கு என் மேல் எத்தனை அன்பு!' என்று சொன்னாள்.  கலவரமடைந்த காதலன், 'அந்தக் கலரில் nail polish வாங்கியிருக்கேன்!' என்று கூறி முடித்தான்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மதிப்பெண்கள் குறைந்த மகனிடம் அப்பா காரணம் கேட்டார்; மகன்- 'ஒரு டீச்சர் எல்லா சப்ஜெக்டையும் நடத்த முடியாத போது, ஒரு ஸ்டூடண்ட்டை மட்டும் எல்லா சப்ஜெக்டையும் படிக்கச் சொல்வது என்ன நியாயம்?' என்று கேட்டான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒரு பள்ளியில் அனைவரும் இனி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ஆணையிடப்பட்டது.  அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத ஒரு பி.டி. மாஸ்டர் மாணவர்களிடம் பேசியதிலிருந்து:
1. There is no wind in the football
2. I talk, he talk, why you middle talk?
3. You rotate the ground 4 times
4. You go and understand the tree
5. Bring your parents with your mother and father
6. Why haircut not cut?
7. Stand in a straight circle

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. 
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.. 
மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.. 
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் 
காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்". 
இவன் அடுத்தபடியாக கேட்டான்,, 
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
என்னப்பா ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வரே.. ?
ஒரு பெரிய எருமைமாடு என்னை துரத்துச்சுப்பா.. வடிவேலு போல ஸ்பீடை
குறைக்காம வந்துகிட்டு இருக்கேன்.. அதுவும் விடாம துரத்துது.. இடையில் ரெண்டு மூணு தடைவை வழுக்கி கீழே கூட விழுந்துட்டேன்.. நல்லவேளை தப்பிச்சேன்..
ஏயப்பா.. கில்லாடிதாண்டா நீ..! நானா இருந்தா அந்த மாட்டைப்
பார்த்ததும் பயத்தில கழிஞ்சிருப்பேன்..!
நானும்தாண்டா.. நான் வழுக்கி விழுந்தது எப்படின்னு நினைச்சே..?

காட்டு ஆமை: நீ கூப்பிட்ட அந்த படத்துக்கு என்னால வர முடியாது?
கிராம ஆமை: ஏன்?
காட்டு ஆமை: அது தான் "நாட்டாமை" ஆச்சே...

"ஏண்டா...பொய் சொன்ன?" "இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு" என மகனை அடி அடியேன அடித்தார் தந்தை.
"இனி மேலும் பொய் சொல்வேன் அப்பா" என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
தந்தை திகைத்து போய், "ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?" என்றார்.
பையன் சொன்னான், "இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே அப்பா"

காதலி: நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம், இல்லையேல் தற்கொலை தான்..
காதலன்: (மனசுக்குள்) ம்க்ஹும், எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவி: அது கொசு இல்லா காலம் சார்!

ஆசிரியர்: அக்கால ஆட்சி முறைக்கும், இக்கால ஆட்சி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மாணவி: அக்கால ஆட்சிமுறை "கல்வெட்டு" ஆட்சி. இக்கால ஆட்சிமுறை "கட்-அவுட்" ஆட்சி.

ராமு: உன் காதலி உனக்கு மோதிரம் பரிசாக கொடுத்தாளே! என்ன சொல்லி கொடுத்தா?
சோமு: நாலு கை மாறி வந்த ராசியான மோதிரம் என சொல்லி கொடுத்தாள்.

ராமு: டேய்...நான் டி வி இல தெரின்சேண்டா.
சோமு: எப்ப, எத்தன மணிக்கு?
ராமு: நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு...
சோமு: அப்ப தான் கரண்ட் இல்லையேடா..
ராமு: அப்பத்தான் டி.வி. கண்ணாடியில தெரிஞ்சேன்.

ஆசிரியர்: தண்ணியில என்ன இருக்கு? சொல்லு பார்ப்போம்.
மாணவன்: குடிக்கிற தண்ணியிலயா, இல்ல போடற தண்ணியிலயா?

அரசியல்வாதி: மாணவர்களே! நீங்க யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்.
மாணவர்கள்: ஏன்?
அரசியல்வாதி: நாங்கள் யாரவது படிப்பில் ஈடுபடுகிறோமா?

சமையல்காரர்: உங்க வீட்டில் நான் சமைக்கனும்னா ஒரு கண்டிசன்?
வீட்டுக்காரர்: என்ன கண்டிசன் சொல்லு.
சமையல்காரர்: இங்க வீட்டுல என்னை சாப்பிட சொல்லக்கூடாது.

ராமு: ஏண்டா, சோகமா இருக்க?
சோமு: என் பொண்டாட்டி கார் டிரைவரோட ஓடிப் போய்ட்டா.
ராமு: இதுக்கு தான் கவலையா இருக்கியா? வேற கார் டிரைவரை வச்சுக்கற வேண்டியது தானே!

"குடிகாரர்கள் எல்லோரும் தலைவர் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காங்களே? எதுக்கு?"
தலைவர் கிட்ட சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க, அதான்...

உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்கும் வெந்நீரில் இத்தனை நன்மைகளா?

குடிநீர் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி தருகிறது....

Popular Posts