லேபிள்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பாதங்களை நல்ல முறையில் பராமரிக்க உதவும் டிப்ஸ் !!

 

வெதுவெதுப்பான தண்ணீரில் ஷாம்பூ, சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தின் சாரை கலந்து அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை நனைத்து வைத்து பின்பு பியூமிக் கற்களால் கால் பாதங்களையும் நகங்களையும் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கால்களைக் கழுவி நன்றாக துடைத்து 

எடுக்கவேண்டும்.

உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள், பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும்.

பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணெய்யை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதம் மிருதுவாகி விடும்.

சிறிது கற்றாழை ஜெல் மற்றும் கடலை மாவையும் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால்கள், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்து கழுவ வேண்டும்.

4 துளி விளக்கெண்ணெய் உள்ளங் கையில் எடுத்து நன்றாக சூடு பறக்கத் இரண்டு பாதங்களிலும் தேய்த்து வந்தால் மினுமினுப்பாக மாறும். மாதத்தில் இரண்டு முறை வெள்ளை எள் அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்து அதை விரல்கள், பாத வெடிப்புகள் மீது தேய்த்து வந்தால் பாத வெடிப்புகளும் நகங்களும் பட்டு போல மாறிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக காலணிகளையும் சரியான அளவில் போடவேண்டும் தரமானதாகவும் சரியான அளவில் வாங்கி அணியும் போது தான் பாதம் கறுத்துப்
போகாமல் இயல்பாக இருக்கும்

https://tamil.webdunia.com/article/home-remedies/tips-to-help-maintain-good-feet-121020400140_1.html


--

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கர்ப்பிணிகளுக்கு என்னென்ன உணவுகள் சிசுவின் எடையை அதிகரிக்க உதவுகிறது...?


 

பிறக்கும் குழந்தை குறைந்த பட்சம் 2.75 கிலோ வரை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதைவிட குறைவாக இருந்தால் ஊட்டசத்து குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கருவில் குழந்தை வளரும்போதே சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், குழந்தை குறித்துக் கவலையின்றி  வாழலாம்.

முட்டையில் அதிகளவு புரோட்டின் இருக்கிறது. மேலும் இதில் கூடுதலாக போலிக் ஆசிட், கோலின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் உள்ளதால் தினமும் ஒரு வேகவைத்த முட்டையைச் சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் போதுமானது.

கேரட், பீட்ரூட், வெண்டைக் காய் போன்ற பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ, ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது .

முருங்கைக் கீரை, அரைக் கீரை, மணத்தக்காளி என எந்த வகை கீரையாக இருந்தாலும் கர்ப்பிணிகள் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். அகத்திக் கீரையைத்  தவிர்ப்பது நல்லது. கீரை வகைகளில், வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பெரிதும்  உதவுகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் தினசரி குறைந்தது 2 டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டியது அவசியம். தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள்  அறிவுறுத்துகிறார்கள்.

ஃபைபர், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டசத்துகள் நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது

https://tamil.webdunia.com/article/child-rearing-feature/what-foods-for-pregnant-women-helps-to-increase-the-weight-of-the-baby-121020400064_1.html

--

சனி, 3 செப்டம்பர், 2022

இரவு நேரங்களில் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

 

பலருக்கு அஜீரணம், மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட இது போன்று நேரத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடாதது தான் காரணமாய் இருக்கிறது. இதில் பெரும்பாலும் காலை மற்றும் மதிய வேலை உணவுகள் பிரச்சனை அளிக்காது. இரவு நேர உணவுகளில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

சிலர் படுக்கைக்கு போகும் முன் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது சரியான முறை அல்ல. நீங்கள் மது அருந்திவிட்டு அப்படியே தூங்கும்  போது, வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ள மது தங்குவதால் பல உடலநல கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இரவு நேர உணவுகளுடன் சோடாவை சேர்ப்பது தவறானது. இது குடல் வால்வுகளை பாதித்து விடும். இயற்கையிலேயே சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து  இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

சாக்லேட்டில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் இரவு வேளைகளில் சாக்லேட் சாப்பிடுவது உங்களது உடல் பருமனை அதிகரித்துவிடும்.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் முதன்மை உணவு பால் உணவுகள். அதிலும் சீஸில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இரவு நேரத்தில் சீஸை சாப்பிடுவதும் உடல் எடையை கூட்டிக்கொள்வதும் ஒன்றுதான்.

இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லது அல்ல என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கு பதிலாக  நீங்கள் ஆப்பிள் போன்ற பழங்களை நேரடியாக உண்பது உடல்நலத்திற்கு உகந்தது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-foods-to-avoid-at-night-121020100115_1.html

--

குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்படுவதைத்தடுப்பதற்கான வழி முறைகள்.

பற்சிதைவு அல்லது பல் சொத்தை என்பது தான் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மத்தியில் பொதுவான பிரச்சினையாக இருந்து வருகிறது. ...

Popular Posts