லேபிள்கள்

சனி, 3 செப்டம்பர், 2022

இரவு நேரங்களில் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

 

பலருக்கு அஜீரணம், மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட இது போன்று நேரத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடாதது தான் காரணமாய் இருக்கிறது. இதில் பெரும்பாலும் காலை மற்றும் மதிய வேலை உணவுகள் பிரச்சனை அளிக்காது. இரவு நேர உணவுகளில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

சிலர் படுக்கைக்கு போகும் முன் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது சரியான முறை அல்ல. நீங்கள் மது அருந்திவிட்டு அப்படியே தூங்கும்  போது, வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ள மது தங்குவதால் பல உடலநல கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இரவு நேர உணவுகளுடன் சோடாவை சேர்ப்பது தவறானது. இது குடல் வால்வுகளை பாதித்து விடும். இயற்கையிலேயே சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து  இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

சாக்லேட்டில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் இரவு வேளைகளில் சாக்லேட் சாப்பிடுவது உங்களது உடல் பருமனை அதிகரித்துவிடும்.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் முதன்மை உணவு பால் உணவுகள். அதிலும் சீஸில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இரவு நேரத்தில் சீஸை சாப்பிடுவதும் உடல் எடையை கூட்டிக்கொள்வதும் ஒன்றுதான்.

இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லது அல்ல என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கு பதிலாக  நீங்கள் ஆப்பிள் போன்ற பழங்களை நேரடியாக உண்பது உடல்நலத்திற்கு உகந்தது

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-foods-to-avoid-at-night-121020100115_1.html

--

கருத்துகள் இல்லை:

நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாகப்   பார்த்து துடைக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும்...

Popular Posts