லேபிள்கள்

சனி, 19 டிசம்பர், 2020

உலகத்தையே ஒன்றுதிரட்டி வழங்கப்பட்டவன்..!

"தன் சுற்றத்தார் குறித்து அச்சமற்றும், உடல் நலமோடு இருந்தும், அன்றைய நாளின் உணவும் ஒருவனிடம் இருந்து விட்டால் அவன் உலகத்தையே ஒன்று திரட்டி வழங்கப்பட்டவனைப் போலாவான்" என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உபைதுல்லாஹ் பின் மிஹஸனுல் அன்ஸாரி (ரலி) நூல்: அல்அதபுல் முஃப்ரத், திர்மிதி)
رواه البخاري في الأدب المفرد والإمام الترمذي في سننه من حديث عبيدالله بن محصن الخطمي: أن النبي صلى الله عليه وسلم قال: من أصبح منكم آمنًا في سربه، معافى في جسده، عنده قوت يومه، فكأنما حيزت له الدنيا
மனிதன் ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகக் கழிப்பதற்கு அவனுக்கு மூன்று விஷயங்களில் எந்த குறைபாடும் இல்லாதவனாக இருக்கவேண்டும்.


முதலாவது: பாதுகாப்பு (அச்சமற்ற நிலை)
இஸ்லாம், ஈமான் என்ற அல்லாஹுவின் இரண்டு அருளுக்குப் பிறகு மிகப்பெரிய இறைவனின் அருள் "பாதுகாப்பு'' என்ற அச்சமற்ற நிலையாகும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
எவர் ஈமான் கொண்டு, பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்:06:82)
மனிதன் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற்கு அவனுக்குப் பாதுகாப்பு (அச்சமற்ற நிலை) மிகவும் அவசியமானதாகும். இன்று உலகம் முழுவதும் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தேவையான பாதுகாப்புதான் மிகப்பெரிய கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தும்போதும், அல்லது அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்போதும் மனிதன் அச்ச நிலையை உணருகின்றான்.
பூமியில் நிகழும் குழப்பம் மற்றும் கொடுமைகள் மூலம்தான் அச்சநிலை ஏற்படுகின்றது. அச்சநிலை என்றால் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம். மரணத்திற்கு அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும். வெளியில் சென்ற மனைவி, மக்கள் வீட்டிற்குத் திரும்பலாம் அல்லது சென்ற இடத்தில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படலாம். அல்லது முற்றிலும் அழிக்கப்படலாம். சொத்து சுகங்கள் சூறையாடப்படலாம். இதுபோன்ற பாதுகாப்பற்ற, நிம்மதியற்ற வாழ்க்கை நிலைதான் அச்ச நிலையாகும்.
ஒருவனுக்கு தன் எதிரியால் அல்லது பகைவனால் அச்ச நிலை ஏற்படலாம். ஆனால் தன் சுற்றத்தாரால் அச்ச நிலை ஏற்பட்டால்? அவன் நிம்மதியாக வாழ முடியுமா?
ஒருவனைச் சுற்றியுள்ளவர்களில் உற்றார், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர், அறிந்தவர் எனப் பலரும் இருப்பர். எல்லா வளங்களும் ஒருவனுக்கு வழங்கப்பட்டு, கேடு விளைவிக்கும் சுற்றத்தார்கள் அவனுக்கு அமைந்துவிட்டால் அவனால் நிம்மதியாக வாழ முடியாது. அவனுக்கு வழங்கப்பட்ட அந்த அத்தனை வளங்களையும், மிகவும் இக்கட்டான சிரமங்களுக்கு மத்தியில்தான் அவன் அனுபவிப்பான்.
ஒருவன் ஒரு அரசு அதிகார பொறுப்பிலிருந்தால், இவன் பெயரைப் பயன்படுத்தி இவனது சுற்றத்தார்கள் நிகழ்த்தும் கொடுமைகள் ஏராளம். சில சமயம் நற்காரியங்களுக்கு அழைக்கும்போது சுற்றம் சூழ வருகைதந்து…, என்று அழைப்பார்கள். அவனோடு சுற்றம் சூழ இருப்பவர்கள்தான் சிலசமயம் இவனைத் தீர்த்தும் கட்டுவார்கள், சில சுற்றத்தாரோ அவனுக்கு எதிராகச் சதிசெய்து ஆள் வைத்து அவன் கதையை முடிப்பார்கள். ஆகவே அன்றைய பொழுதை நிம்மதியாக ஒருவன் கழிப்பதற்கு இதுபோன்ற கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சுற்றத்தார்கள் மனிதனுக்கு அமைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது: உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் உள்ளதாகும். எவனுக்கு நோயற்ற வாழ்வு வழங்கப்பட்டதோ, அவன் குறைவற்ற செல்வம் வழங்கப்பட்டவன் என்ற அளவுக்கு நோயில்லாதவனைச் சிறப்பித்து சொல்லப்படுவதுண்டு.
நோய்க்கு மருத்துவம் பார்த்தே செல்வங்களை இழந்தவர்களும் உண்டு. நோயை நீக்கி ஆரோக்கியத்தைப் பெற அன்றாடம் மனிதன் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கின்றான். ஆரோக்கியம் அற்ற மனிதன் அவன் விரும்பினாலும் அவனால் நிம்மதியாக வாழ முடியாது. அவன் தானும் துன்புற்று தன் கூட இருக்கும் பிறரையும் துன்புறுத்துவான் ஆக அன்றைய நாளை நிம்மதியாகக் கழிப்பதற்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் உடல் ஆரோக்கியம் நிறைந்தவனாக அவன் இருக்கவேண்டும்.
மூன்றாவது: உண்ண உணவு
அன்றைய நாளை பசி இல்லாமல் நல்லமுறையில் கழிப்பதற்கு அவனது தேக சக்திக்குத் தேவையான உணவு இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய வளர்ந்த நாடாக (இந்தியா) இருந்தாலும் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் பசிக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர். 2030 க்குள் இந்த பசிக்கொடுமைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்றெல்லாம் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புகள் சொல்லிக் கொண்டுள்ளன.
இன்றுவரை மனிதன் பசிக்கொடுமையால் பூமியில் செத்து மடிந்து கொண்டுதான் இருக்கின்றான். காரணம் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டிய உணவு பதுக்கப்படுகின்றது! சில நாடுகளில் உணவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. ஆக ஒருவன் அன்றைய நாளை நல்ல முறையில் கழிப்பதற்கு அவனுக்கு உண்ண உணவு இருக்கவேண்டும்.
இந்த மூன்று அம்சங்களும் எவ்வித சிரமங்களும் இல்லாமல் யாருக்கு வழங்கப்பட்டுவிட்டதோ அவன் இந்த "உலகம் முழுவதும் வழங்கப்பட்டவனைப் போலாவான்". இது சாதாரண ஒருவர் சொன்ன சொல்லல்ல! தன் வாழ்நாளில் பொய்யே சொல்லாத ஒருவர் சொன்ன சொல் இது.
1- பாதுகாப்பற்ற நிலை (அதுவும் தன் சுற்றத்தாரால்), 2- உண்ண உணவு, 3- ஆரோக்கியம்,
பொதுவாகவே உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இந்த மூன்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் குறைபாடு உள்ளவர்களாகத்தான் இருக்கின்றனர். தன் சுற்றத்தாரால் நல்ல நெருங்கிய பாதுகாப்பில் இருப்பான், அவனுக்கு உணவுக்கும் பஞ்சம் இருக்காது ஆனால் மிகப்பெரும் நோயைச் சுமந்துகொண்டிருப்பான். அல்லது உடல் ஆரோக்கியமாக இருப்பான், உண்ண உணவும் இருக்கும் ஆனால் தன் சுற்றத்தார் அனைவரும் இவனுக்கு எதிரியாக இருப்பார்கள். இப்படி இந்த விஷயத்தில் மனிதன் குறை உள்ளவனாகத்தான் இருக்கின்றான்.
ஆனால் இதில் எவ்வித குறையும் இல்லாமல் இந்த மூன்று அம்சங்களும் யாருக்கு வழங்கப்பட்டதோ அவன்தான் இந்த "உலகம் முழுவதையும் ஒன்றுதிரட்டி வழங்கப்பட்டவனைப் போலாவான்"

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 16 டிசம்பர், 2020

ஷஃபான் மாதமும் மூடநம்பிக்கையும்!

ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம். ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புறம் இருக்க, அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது கப்ரில் வேதனை நீங்கவாம்? மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள். இதற்காக இரண்டு விஷேசமான கதையைக் கட்டி வைத்துள்ளார்கள்.


"யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வருமாம்?
இரண்டாவது கட்டுக் கதை அதாவது,
யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வருமாம்?
புராணங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நம்மவர்களிடம் கதைகளும், கப்ஸாக்களும் கொடிக் கட்டி பறக்கிறது. இப்படி மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்துவதை விட பிச்சை எடுத்து சாப்பிடுவது மேலாகும். ஏன் எனறால் யாசகத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
பொதுமக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உலக தர வரிசையில் மத குருமார்கள் தான் முன்னணியில் உள்ளார்கள்? இந்த ஏமாற்றுபவர்களை நம்பி சுட்ட ரொட்டியையும், வாழைப் பழத்தையும், வீடு, வீடாகவும், பள்ளிவாசல்தோறும் பங்கு வைப்பதையும் காணலாம். கூடுதலாக பள்ளிக்கு அனுப்புவார்கள். எவ்வளவுதான் பள்ளி இமாமும், முஅத்தினும் சாப்பிடுவார்கள். காலையில் பார்த்தால் குப்பையிலும், காண்களிலும் வீசப்பட்டு கிடக்கும். அல்லாஹ்வுடைய ரிஸ்க் சீரழிவதை காணலாம். அதிலும் நெட்டி உடையாத வாழைப் பழம் அனுப்ப வேண்டுமாம்? அப்ப தான் இரண்டு, மூன்று நாளைக்கு வைத்து சாப்பிடலாம்? மேலும் இந்த பராத் இரவை உறுதிப் படுத்த ஒருகுர்ஆன் வசனத்தையும் ஆதாரமாக காட்டுவார்கள்.
அதாவது "ஹா மீம் இது தெளிவான வேதநூல், இதை நாம் பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். நுட்பமான எல்லா காரியங்களும் பிரித்தறிவிக்கப்படுகிறது…" (44 : 1, 2)
"இந்த வசனம் பராஅத் இரவுப் பற்றி பேசுகிறது. ஏன் என்றால் பராத் இரவில் தான் மனிதர்களுடைய சகல காரியங்களும் மீண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வசனமும் இந்த பரக்கத் பொருந்திய இரவில் தான் காரியங்கள் பிரித்தறிவிக்கப்படுகிறது என்று கூறுகிறது" என்று கண்மூடித்தனமாக விளக்கம் சொல்வதை காணலாம்.
உண்மையில் இவர்கள் சொல்லும் இந்த விளக்கம் சரிதானா என்று பார்த்தால், இது தெளிவான பிழையான விளக்கமாகும். ஏன் என்றால் மீண்டும் அந்த வசனத்தை சற்று அவதானியுங்கள். ஹா மீம் இது தெளிவான வேதநூலாகும். அதை பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். என்று அல்லாஹ் கூறி விட்டு, அந்த பரகத் பொருந்திய இரவிலே காரியங்கள் பிரித்தறிவிக்கப் படுகிறது என்று கூறுகிறான். அப்படியானால் அந்த பரகத் பொருந்திய இரவை கண்டு பிடித்து விட்டால், இந்த வசனத்திற்கும், பராத் இரவுக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்று விளங்கி விடலாம்.
இந்த வசனம் குர்ஆனோடும், லைலதுல் கத்ர் இரவோடும் சம்பந்தப் படுவதை காணலாம். குர்அன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.
"ரமலான் மாதத்தில் தான் இந்த குர்ஆன் அருளப்பட்டது…" (02 : 185)
இந்த வசனத்தில் குர்ஆன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி பேசுகிறான். எந்த இரவில் இந்த குர்ஆன் அருளப்பட்டது என்று 97 ம் அத்தியாயத்தில் இப்படி கூறுகிறான். லைலதுல் கத்ர் இரவில் இறக்கினோம் என்று 97ம் அத்தியாயமான சூரத்துல் கத்ரில் சுட்டிக் காட்டுகிறான். எனவே நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 44 ம் அத்தியாயம் பராத் இரவுப் பற்றி பேசவில்லை, மாறாக லைலதுல் கத்ர் இரவைப்பற்றி தான் பேசுகிறது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பராத் என்ற மாதமோ, பராத் என்ற இரவோ, கிடையாது என்பதோடு, தாயியுடைய கர்ப அறையிலே மனிதனின் சகல விடயங்களும் எடுத்து எழுதப்பட்டு விடுகிறது. மீண்டும், மீண்டும் ஒவ்வொரு வருடமும் புதுசு, புதுசா எழுதப்படுவது கிடையாது. (அதிகமாக நோன்பு நோற்பதைத் தவிர) ஷஃபான் மாதத்தில் எந்த விசேட அமல்களும் கிடையாது என்பதை விளங்கி, வழமையான அமல்களை நிறைவாக செய்வோமாக!.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 9 டிசம்பர், 2020

அறிவென்பது மகிழ்ச்சியைஇருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய்கொண்டு வருவதிலும் அடங்கும்தானே


எனக்கும் உங்களுக்கும் "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று கணவன் மனைவி பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சில பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம்.



"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.

பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.

சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?
அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !

மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கிச்சன்டிப்ஸ்


காய்ந்த மிளகாயை நீளவாக்கில் கிழித்த பிறகு எண்ணெயில் விதைகள் சிவக்கும் அளவுக்கு வறுத்துப் பிறகு துவையல் செய்தால் சுவையும், மணமும் அலாதியாக இருக்கும்.

அடுப்பில் வைக்கும்போது பாத்திரங்களின் மேல் விளிம்பிலிருந்து உள்புறம் வரை அரை அங்குல அளவிற்கு ஏதாவது எண்ணெயைச் சுற்றித் தடவினால் பொங்கி வழியாது.

 ஈரமான காபி ஃபில்டரில் காபிப் பொடியைப் போட்டால் அடைத்துக்கொள்ளும். எனவே ஃபில்டரை சூடு காட்டிய பிறகு பொடியைப் போட்டு வெந்நீர் ஊற்றினால் டிகாஷன் நன்றாகவும், சீராகவும் இறங்கும்.



 ஜாம் கெட்டியாகி விட்டால், அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம் சுடுநீரில் வைக்க இளகி வந்துவிடும்.

 வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு எண்ணெய் கறி தயாரிக்கும்போது ஒரு கைப்பிடி பலாக்கொட்டையை தோல் நீக்கி, துருவி சேர்த்து செய்ய பொரியல் மொறு, மொறுவென்று சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

 உளுத்தம்பருப்பு - 1 கப், மிளகாய் வற்றல் - 6, பச்சரிசி - 1 டீஸ்பூன் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டால் தேங்காய் சேர்க்கும் வகைக்கு உபயோகித்தால் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.

கேக் மாவுடன் கொஞ்சம் ஆரஞ்சுப்பழச்சாறு சேர்த்தால் கேக் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

சின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.

முருங்கைக்கீரையும், வெங்காயமும் பொடியாக அரிந்து வைத்துக்கொண்டு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கடலை மாவு மூன்றையும் சம அளவில் கலந்து, அத்துடன் முருங்கைக்கீரையையும், வெங்காயமும் சேர்த்து பிசைந்து போண்டாவாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்தாகவும் இருக்கும்.


 பேரீச்சம்பழ சுளைகளை நன்றாகக் கழுவி, தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து அப்படியே மிக்ஸியில் இட்டு அரைத்து ஏலக்காய் தூள், தேன் கலந்து சாப்பிடவும். இது ஒரு இரும்புச்சத்து மிக்க டானிக்காகும். எலும்பு வளர்ச்சி, நரம்பு உறுதி, மூளைக்கு வலிமை, இருதய பலம் பெற உதவுகிறது. கண் பார்வைக்கும் நன்மை அளிக்கிறது.

குருமாவில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி மேலே தூவி உலர் திராட்சைப்பழம் சேர்த்தால் சுவை சூப்பராகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.

*
 எலுமிச்சை ஊறுகாய் போடும்போது தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகளாக வதக்கி அதனுடன் சேர்த்தால் சுவை கூடும். எந்த ஊறுகாயும் கடுகு எண்ணெய் சேர்த்துச் செய்தால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

 பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்புக்கூட்டு கெட்டியாக இருக்கும்.

நல்ல மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் இரண்டு நாட்களானாலும் குழம்பு கெடாமல் வாசனையாக இருக்கும்.

 முட்டைகளின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்தால் முட்டை கெட்டுப் போகாது.

ஜவ்வரிசி கஞ்சியில் வெல்லம் போட்டு சாப்பிட்டால் குளிர்ச்சியாக பாயசம் போல இருக்கும்.

பாத்திரங்கள் அடிபிடித்து விடும்போது வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் ஊற்றி வேக வைத்து பிறகு தேய்த்துக் கழுவினால் அடி பிடித்த சுவடே இருக்காது.


தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.


 பீன்ஸ் பருப்புகளை வேக வைக்கும்போது முதலிலேயே உப்பு போடக்கூடாது. வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

 பச்சை மிளகாயை காம்பை எடுத்துவிட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

சப்பாத்தி - பூரிக்கு மாவு பிசையும்போது சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, முன்னதாகச் சிறிது வெல்லம் அதில் போட்டு இறக்கவும். நெய் கூடுதல் மணத்துடன், சுவையுடன் இருக்கும்.

முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்புச் சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்றப் பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 3 டிசம்பர், 2020

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

#மாரடைப்பு
சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

*
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS



ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (
சிரிக்க சொல்வது),*
*TALK (
பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (
இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல்
 *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*,
 அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!

#பகிர்வு#
உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts