லேபிள்கள்

செவ்வாய், 23 ஜூன், 2020

எண்ணெய் தேய்த்துகுளிக்கும் நாட்களில் நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது...?

எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால்  எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும்.
நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம்  சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில்  படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில்  நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
 எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று  ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. தலைக்கு சீயக்காய், அரப்பு, சாதம் கஞ்சி போன்றவைகளை பயன்படுத்தலாம்.
 தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக  இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. ஏனென்றால் இந்த நாட்கள்  குளிர்ச்சியான நாட்கள் ஆகும்
 குளிர்ச்சியான நாட்களில் பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பது விதி. நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்  குளிக்கலாம். பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் ஆகும்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.  மேலும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நம் உடல் சிறிது சோர்வாக இருக்கும். அதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சிறிது  நடை பயிற்சி அல்லது வீட்டிலுள்ள சிறிய வேலைகளை செய்தாலும் உங்கள் சோர்வு நீங்கி விடும். உடல் சோர்வாக இருப்பதற்காக உறங்கச் செல்லக்கூடாது.  அப்படி நீங்கள் உறங்கினால், உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கி விடும். இதனால் கண் எரிச்சல், வயிற்று வலி, தலைவலி  போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 ஜூன், 2020

உலர் திராட்சையில் உள்ளஊட்டச்சத்துக்கள் என்ன.....?

உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான  சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.
 தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.
 சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.
 சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு  காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-nutrients-in-dry-grapes-120022500024_1.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 16 ஜூன், 2020

பூண்டை பச்சையாக வெறும்வயிற்றில் சாப்பிடுவதால் என்ன பயன்...?

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும்.  அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான்  புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. 
 வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
 பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும்  பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
 இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.
 பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு  நல்லது.ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 13 ஜூன், 2020

பொடுகு வருவதற்கானகாரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்...!!

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். வறட்சியான சருமத்தினால் வரும். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.
அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்ப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு  உற்பத்தியாகும்.

ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும். "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
 கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம்  பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.
 பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். வாரம் ஒரு முறையாவது  நல்லண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து  நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம். தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப  எண்ணெய்யையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
 தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
 மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தலையில் தடவி ஊறவைத்து குளித்து வரலாம். வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கனு

--
V
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 9 ஜூன், 2020

பிரியாணி இலையில் உள்ளமருத்துவ குணங்களும் நன்மைகளும்....!

முடி உதிர்தல் என்பது இந்த தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. பொதுவாகவே பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
இதை வெறும் வாசனைக்காக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இது அதையும் தாண்டி முடியின் ஆரோக்கியம், அழகுக்குறிப்புக்கும் பயன்படுகிறது. இதில்  இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நம்மை இளமையாக வைக்கவும் உதவுகிறது.
 பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
 பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.  எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.
 தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும். 
 பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சருமனத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும். இதேபோல் பிரியாணி இலைக்கு விசத்தை முறிக்கும் தன்மையும் இருப்பதால் இது பாம்புகடிக்கும் மருந்தாகும்.
 பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை  இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.
 சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 6 ஜூன், 2020

முட்டைகோஸ் இத்தனைமருத்துவ பயன்களை கொண்டுள்ளதா...?

ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா  போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. 
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும்  புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். 
 முட்டைகோஸ் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும்  போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.
 முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள்  வளர்வதை முற்றிலும் தடுக்கும். 
 ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள்,  முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக  அளவில் நிறைந்துள்ளது.
 முட்டைகோஸில் அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில்  பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ்  அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
 பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
 முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 3 ஜூன், 2020

சீத்தாப் பழத்தை தொடர்ந்துசாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய இயற்கை மருத்துவ குணங்களை கொண்டது. அதனால் தான் மனித உடலுக்கு இது ஒரு  நல்ல நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளது.
 இந்த பழத்தில் குளுக்கோஸ்  உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும்.
 சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவைகளால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
 சீத்தாப்பழம் குளிர் காய்ச்சலுக்கு ஒரு நல்ல நிவாரணம் தரும் மருந்தாக செயல்படும் .மேலும் சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை  சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிர்வு நிற்கும்.
 எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்சத்து சீத்தாப்பழத்தில் உள்ளது. 100 கிராம பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் குடற்புற்று நோயை உருவாக்கும் நச்சுப்  பொருட்கல் குடலில் படியாமல் பாதுகாப்பதிலும் செயலாற்றுகிறது.
 சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக உள்ளது. இந்த வைட்டமினால் மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படும்.
 சீத்தாப்பழத்தில் வளமையான பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம். இந்த இரண்டுமே உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts