லேபிள்கள்

புதன், 3 ஜூன், 2020

சீத்தாப் பழத்தை தொடர்ந்துசாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய இயற்கை மருத்துவ குணங்களை கொண்டது. அதனால் தான் மனித உடலுக்கு இது ஒரு  நல்ல நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளது.
 இந்த பழத்தில் குளுக்கோஸ்  உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும்.
 சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவைகளால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும்.
 சீத்தாப்பழம் குளிர் காய்ச்சலுக்கு ஒரு நல்ல நிவாரணம் தரும் மருந்தாக செயல்படும் .மேலும் சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை  சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிர்வு நிற்கும்.
 எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்சத்து சீத்தாப்பழத்தில் உள்ளது. 100 கிராம பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் குடற்புற்று நோயை உருவாக்கும் நச்சுப்  பொருட்கல் குடலில் படியாமல் பாதுகாப்பதிலும் செயலாற்றுகிறது.
 சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமையாக உள்ளது. இந்த வைட்டமினால் மூச்சுக்குழாய் அழற்சி குறைந்து ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படும்.
 சீத்தாப்பழத்தில் வளமையான பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம். இந்த இரண்டுமே உங்கள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

வயிற்றில் புண் உள்ளவர்கள் அடிக்கடிபீட்ரூட் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதா...

Popular Posts