லேபிள்கள்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 – 60)

51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று

அத்தியாயம் 51
வசனங்கள் 60
புழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான்.
(நன்மை, தீமைக்குக்) 'கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?' என்று அவர்கள் கேட்கின்றனர்.
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
'உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்' எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.(51:12-14)
52) சூரதுத் தூர் – தூர் மலை
அத்தியாயம் 52
வசனங்கள் 49
தூர் மலை, எழுத்ப்பட்ட வேதம், பைதுல் மஃமூர், உயர்ந் முகடு, பொங்கும் கடல் என்பவற்றில் சத்தியம் செய்து மறுமை நிகழ்ந்தே தீரும் என்கின்றான்.
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.(52:7,8)
இன்னும் அந்நாளில் வானம் சுற்றிக் குமுறி, மலைகள் தூள் தூளாகிடுன் என்று கூறிவிட்டு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை எல்லாம் வல்ல அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு விடுக்கின்றான்.
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். (52:11)
53) சூரதுன் நஜ்ம் – நட்சத்திரம்
அத்தியாயம் 53
வசனங்கள் 62
முஹம்மது நபியவர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விழுகின்ற நட்சத்திரம் மீது சத்தியம் செய்து, உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அவர் பேசுவது எல்லாம் அவருக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (53:1-4)
மேலும் இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில்
"ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்." என்று மனித சமுதாயத்திற்கு கட்டளை இடுகின்றான்.
54) சூரதுல் கமர் – சந்திரன்
அத்தியாயம் 54
வசனங்கள் 55
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அத்தாட்சிகளில் ஒன்றாகிய சந்திரன் பிளக்கப்பட்ட சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றான்.
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், 'இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்' என்றும் கூறுகிறார்கள்.
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். (54:1-3)
அன்று நிராகரிப்பாளர்கள் இதனை பொய்ப்பித்தாலும் இன்றைய நவீன யுகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.
55) சூரதுர் ரஹ்மான் – அளவற்ற அருளாளன்
அத்தியாயம் 55
வசனங்கள் 78
அல்லாஹ் மனிதனை படைத்து, மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டியல் இடுகின்றான். அதில் அல்குர்ஆனை கற்றுத்தநந்ததை ஞாபகப்டுத்திவிட்டு பின்னர் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றான். இந்த கேள்வியை இந்த அத்தியாயம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் மனித, ஜின் வர்கங்களாகிய நம் இரு சாராரைப் பார்த்தும் பல தடவை எழுப்புகின்றான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
மீண்டும் இந்த அத்தியாயத்தின் இருதியில் சுவர்க்கத்தில் நல்லாடியார்களுக்கு சித்தப்படுத்தியுள்ள சுவண்டிகளை ஞாபகப்படுத்தி இருதியாக
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. (55:78)
என்ற வசனத்துடன் இவ்வத்தியாயத்தை நிறைவு செய்கின்றான்.
56) சூரதுல் வாகிஆ – மாபெரும் நிகழ்ச்சி
அத்தியாயம் 56
வசனங்கள் 96
நிராகரிப்பவர்கள் இறுதி நாள் தொடர்பில் அவநம்பிக்கையில் இருந்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதனை இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றான்.
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்இ (நல்லோரை) உயர்த்தி விடும். (56:1-3)
தொடர்ந்தும் மறுமை நாளில் இடம் பெரும் சில சம்பங்களை குறிப்பிடுகின்றான்.
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். (56:4-6)
57) சூரதுல் ஹதீத் – இரும்பு
அத்தியாயம் 57
வசனங்கள் 29
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம் இன்னும், இரும்பையும் இறக்கினோம், அதில் (போருக்கு வேண்டடிய) கடும் சக்தியும், மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (57:25)
மேலும் இவ்வத்தியாயத்தின் நடுப்பகுதியில் மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் தொடர்பாக ஞாபகப்படுத்தி, நேர்வழியை கொடுத்தது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன். (57:9)
58) சூரதுல் முஜாதலா – தர்க்கிப்பவள்
அத்தியாயம் 58
வசனங்கள் 22
அவ்ஸ் இப்னு ஸாமித் என்பரின் மனைவி ஹவ்லா பின்து தஃலபா அவர்கள் நபியவர்களிடம் தனது கணவன் தொடர்பாக முறையிட்ட சம்பவத்தை குறிப்பிடும் இவ்வத்தியாயம் லிஹார் என்கின்ற 'மணைவியை பார்த்து நீ எனது தாய் என்று கூறி அவளை விட்டும் தூரமாகும் செயலில் ஈடுபடும் கணவன்மார்கள் தொடர்பான சட்டதிட்டங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
'உங்களில் சிலர் தம் மனைவியரைத் 'தாய்கள்' எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்' (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான். (58:2,3)
59) சூரதுல் ஹஷ்ர் – ஒன்று திரட்டுதல்
அத்தியாயம் 59
வசனங்கள் 24
மறுமை நாள் கபுருகளில் இருந்து எழுப்பபட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் இரண்டாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும் பாவிகள் ஆவார்கள். (59:18,19)
60) சூரதுல் மும்தஹினா -சோதிப்பவள்
அத்தியாயம் 60
வசனங்கள் 13
மக்காவில் இருந்து மதீனாவை நோக்கி வரக்கூடிய பெண்களின் ஈமானை பரிசோதித்து அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள் என்ற கட்டளையை இவ்வத்தியாயத்தின் 10வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம். அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள். (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் – இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும். உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் – மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (60:10)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 பிப்ரவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 – 70)

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

61) சூரதுஸ் ஸப்- அணிவகுப்பு
அத்தியாயம் 61
வசனங்கள்14
இவ்வத்தியாயத்தின் 4வது வசனத்தில் இறைவழிப் போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகின்றான்.
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுஇ அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோஇ அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்)நேசிக்கின்றான்.
பினனர் இறைவிசுவாசிகளுடன் ஒரு வியாபாரத்தை பற்றி பேசுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது(அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
நீங்கள் இந்த வியாபாரத்தை செய்தால் அல்லாஹ்விடம் இருந்து இலாபமாக பின்வருவனவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும்,நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:10-12)
62) சூரதுல் ஜுமுஆ – வெள்ளிக் கிழமை
அத்தியாயம் 62
வசனங்கள் 11
வெள்ளிக் கிழமை தினத்தின் மகத்துவம் தொடர்பாக பேசப்படும் அத்தியாயம் இவ்வத்தியாயத்தின் 9வது வசனத்தில் ஜுமுஆ தொழுகையின் முக்கியத்துவம் தொடர்பாகபின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்துசெல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)
ஜுமுஆ தொழுகை முடிந்ததும் உங்கள் வாழ்வாதாரங்களை தேடி தாரளமாக செல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
பின்னர்இ (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்.அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)
63) சூரதுல் முனாபிகூன் – நயவஞ்சகர்கள்
அத்தியாயம் 63
வசனங்கள் 11
அல்குர்ஆனில் பல இடங்களில் நயவஞ்சகர்களை பற்றி குறிப்பிட்டு அவர்களின் முகத்திரையை அகற்றிய அல்லாஹ் அவர்கள் பெயரிலே ஒரு அத்தியாயத்தை இறக்கி வைத்தான்.
'(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, 'நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்' என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்' என்று கூறுகின்றனர்.மேலும், அல்லாஹ், 'நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்' என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்)பொய்யுரைப்பவர்கள்' என்பதாகச் சாட்சி சொல்கிறான். (63:1)
இந்த நயவஞ்சகர்கள் பொய் சொல்லுகின்றனர் என அல்லாஹ் கூறுகின்றான். இவர்களுக்கு ஏன் இந்த நிலமை ஏற்பட்டது என்பதை பற்றி அல்லாஹ் பின்வருமாறுகுறிப்பிடுகின்றான்.
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும். ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். (63:3)
64) சூரதுத் தகாஃபுன்- நஷ்டம்
அத்தியாயம் 64
வசனங்கள் 18
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நல்லரங்கள் செய்தவர்களை தவிர மற்றவர்கள் நஷ்டம் அடையும் மறுமை நாளைப் பற்றி இவ்வத்தியாயம் பேசுகின்றது.
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும். ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு,ஸாலிஹான – நல்ல – அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும்அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான பாக்கியமாகும். (64:9)
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும்கெட்ட சேருமிடமாகும். (64:10)
65) சூரதுத் தலாக் – மணவிலக்கு
அத்தியாயம் 65
வசனங்கள் 12
கணவன் மணைவியாக வாழும் இருவருக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டு தமது குடும்ப வாழ்க்கையை தொடர முடியாத நிர்பந்தம் ஏற்படும் போது மணவிலக்கை (தலாக்)இஸ்லாம் எமக்கு அனுமதி அளித்துள்ளது. இவ்வாரான பிரவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டநிலைகளை பற்றி இவ்வத்தியாயத்தின் ஆரம்பப்பகுதிவிபரிக்கின்றது.
நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள்இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்துநீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர். (65:1)
66) சூரதுத் தஹ்ரீம்- விலக்கிக் கொள்ளல்
அத்தியாயம் 66
வசனங்கள் 12
நபி (ஸல்) அவர்கள் தனது அன்பு மனைவி ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடம் தேன் அருந்தினார்கள். இதனை நபியவர்களின் சில மனைவியர்கள் விரும்பாது உங்களிடம்ஏதோ மோசமான வாசனை வீசுகின்றது என்று நபியவர்களை பார்த்து சொன்னதும், தமது மனைமார்களில் சிலரை திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டதேனை நான் இனி குடிக்கமாட்டேன் என்று விலக்கிக் கொண்டார்கள். இச்செயலை கண்டித்து இந்த அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்ககிருபையுடையவன். (66:1)
67) சூரதுல் முல்க் – ஆட்சி
அத்தியாயம் 67
வசனங்கள் 30
அல்லாஹ்வின் வல்லமை, ஆட்சி அதிகாரம் தொடர்பாக பேசும் இந்த அத்தியாயம் உலக வாழ்வு மற்றும் மறுமையில் மனிதனின் நிலை என்பற்றை எடுத்தக் காட்டுகின்றது.
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்;
மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர். பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (67:1-3)
68) சூரதுல் கலம் – எழுதுகோல்
அத்தியாயம் 68
வசனங்கள் 52
எடுதுகோலின் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தில் பல முக்கியமான விடயங்களை அல்லாஹ் ஞாபகப்படுத்துகிறான்.
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:8-11)
69) சூரதுல் ஹாக்கா – நிகழக்கூடியது
அத்தியாயம் 69
வசனங்கள் 52
நிச்சியமாக நிகழ்ந்தே ஆகக்கூடிய மறுமை நாளை பொய்ப்பித்த சமுதாயங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றியும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில்ஞாபகப்படுத்துகின்றான்.
மேலும் அந்த நாளில் நிகழும் அதிசய சம்பவங்கள், மனித அவலங்கள் என்பற்றையும் குறிப்பிடுகின்றான்.
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.(69:49-52)
70) சூரதுல் மஆரிஜ் – சிறப்புக்கள்
அத்தியாயம் 70
வசனங்கள் 42
மறுமையின் அமலிதுமலிகள் தொடர்பாக பேசும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் நிராகரிப்போருக்கு நிகழக் கூடிய தண்டனை குறித்து அவர்கள் கேட்கின்றனர்.சிறப்புக்களுடைய அல்லாஹ்விடம் இருந்து அந்த தண்டனையை தடுப்பன் எவரும் இல்லை என்று பிரச்தாபிக்கின்றான்.
மேலும் இந்த அத்தியாயத்தின் நடுப்பகுதியில் மனிதனின் நிலை குறித்து இறைவன் பேசுகின்றான்.
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்.
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
தொழுகையாளிகளைத் தவிர (70:19-22)
பின்னர் தொழுகையாளிகளின் பண்புகளை பட்டியலிடுகின்றான்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 7 பிப்ரவரி, 2019

உளவியலும் கசப்பான உண்மைகளும்

ஷைய்க் இன்திகாப் உமரீ  

ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும்.
பெண்களே..!
உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..?
என்ற பல கேள்விகளை அடுக்கி அதற்கு தாமே வர்ணனைகளை செய்து பேசும் ஒரு சில உளவியலாளர்களின் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் பல நல்ல குடும்பங்களை தேவையற்ற சந்தேகங்களை கொண்டு பிரித்துள்ளது.
ஒரு ஆண் எப்படிபட்டவன் என்பதை விட, ஒரு முஃமினான கணவன் எப்படிபட்ட பண்புடையவன் என்ற தலைப்பில் பேசினால் எம் சமூகத்தில் சிறந்த மாற்றங்கள் நிச்சயம் ஏற்படலாம்.
நபிகளார் முஃமீன்களுக்கு மத்தியில் சந்தேகம் ஏற்படுகின்ற விதத்தில் உபதேசங்களை நான் அறிந்த வரை செய்தது கிடையாது, தடைகளை தெளிவாக சொன்னார்கள். உங்கள் கணவனும் ஒரு மனிதனே..! அவனையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம் என்ற தோரணையில் அவர்கள் எங்கும் பேசியது கிடையாது.
ஒரு முஃமீன் மற்ற முஃமீனை முழுமையாக நம்ப வேண்டும் அவனிடம் தெளிவாக தவறை காணும் வரை இதுவே இஸ்லாம் எமக்கு கற்றுத் தரும் பாடமாகும்.
சந்தேகங்களை மனதில் வைத்து கொண்டு வாழ இஸ்லாம் எமக்கு எங்கும் கற்றுத்தர வில்லை
குறிப்பு:
இவை நான் சமூகத்தில் கண்ட, என்னுடன் தொடர்பு கொண்டு பலர் சொன்ன பிரச்சினைகளை வைத்து எழுதிய கருத்தாகும். பிழைகள் இருந்தால் யாரும் சுட்டிக்காண்பிக்க முடியும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

டென்ஷன் பிரச்சனை

டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன்.

பலரையும் பாடாய்படுத்தி வரும்டென்ஷன் பிரச்சனைக்கு வழிசொல்கிறார் பிசியோதெரபிடாக்டர் கார்த்திகேயன்.வாழ்க்கையை எளிமையானஎதிர்பார்ப்புகளுடன் நடத்தவேண்டும். சின்னச் சின்னசந்தோஷங்களையும்கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல்வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன்ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.ஆம் என்றுபதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறதுஎன்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில்இருந்துஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம்லேசாக இருக்கும்.
உணவு விஷயங்களிலும் கவனம் தேவை.நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்துகிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதைஉணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்துகொள்ள வேண்டும். டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம்உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்கவழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கைமுறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்டமுடியும். அடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதைகண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின்குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றைமருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன்மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனைதடுக்கலாம்.
தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும்போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின்தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம்உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாகஅமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள்ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல்வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனானமனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில்ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது.இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதானஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கும் துரிதஉணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளைசாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்தஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயேசமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம்ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும்.அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண்ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.
இந்த வயதில் வாக்கிங் செல்லும்பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களதுபிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பானசூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம். நேரத்தைதிட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளைமுடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதுபோன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாகவைத்திருக்க முடியும். தேவையற்ற விஷயங்களை மனதில்இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில்இடம் கிடைக்கும்.

நன்றி www.inneram.com


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

மூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற கைவைத்தியங்கள்!!

மூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற கைவைத்தியங்கள்!!

நீண்ட நாட்கள் தொடர் வேலை பளுவிற்கு பிறகு கிடைக்கும் விடுமுறை நாட்களில் , மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக பாதிக்கும். படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், மூச்சு திணறல் மற்றும் தொடர் தும்மல் போன்ற விஷயங்கள் பாடாய் படுத்தும்.

முடிவில், தூக்கமில்லா இரவாக, மறுநாள், சோர்வும் அசதியும் நம்மை வாட்டி எடுக்கும்.

நமது இந்திய பாரம்பரியத்தில், நம் முன்னோர்களால் பல வழிகள் பின்பற்றபட்டு வந்தது .

பாரம்பரிய வைத்திய முறைகள் பல நம் வீட்டு பாட்டிகளால் பின்பற்றப்பட்டு, மிகுந்த பலனளிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த மூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறலை ஒரே இரவில் சரி செய்யும் சக்தி இந்த பாட்டி வைத்தியத்திற்கு உண்டு.

மூக்கடைப்பை போக்க அவற்றுள் சில வழிமுறைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முயற்சித்து பார்க்க மேலும் படியுங்கள்.

பல சுவாச சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு நீராவி பிடிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். நாட்பட்ட சளி, சைனஸ் போன்ற உபாதைகளுக்கும் நீராவி பிடிப்பது நல்ல பலனை தருகிறது. சைனஸ் தொந்தரவால், தலையில் பயங்கர வலி உண்டாகிறது. நீராவி பிடிப்பதன் மூலம், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது . ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியேறும் ஆவி முகத்தில் படுமாறு குனிந்து கொள்ள வேண்டும். அந்த ஆவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடவும். தேவைபட்டால், புதினா அல்லது மற்ற எதாவது ஒரு மூலிகையை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தீர்வு இரட்டிப்பு ஆரோக்கியத்தை தரும்.

வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது மூலிகைகளை சேர்த்து பயன்படுத்துவது மூக்கடைப்பை விலக்கும். தைல எண்ணெய்யின் வாசம் மூக்கடைப்பை தீர்க்க வல்லது. கொதிக்க வைத்த நீரில், சில துளி தைல எண்ணெய்யை தெளிக்கவும். அந்த நீரில், நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்பு உடனே சீராகி, மூச்சு திணறல் குறைகிறது. புதினா எண்ணெயையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் .

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். இப்பொது இந்த திரவத்தை சலைன் திரவம் என்று கூறலாம். இந்த திரவத்தை சில துளிகள் மூக்கிற்குள் விடவும். இதனை செய்வதன் மூலம் , மூக்கில் கட்டியுள்ள சளி மென்மையாகி மூக்கு வழியே வடியத் துவங்கும். மேலும், தூசு, சளி போன்றவை விலகி, சீரான சுவாசம் கிடைக்கும்.

பூண்டிற்கு பலவித மருத்துவ குணங்கள் உண்டு. குறிப்பாக மூக்கடைப்பிற்கு இது மிக சிறந்த தீர்வாகிறது. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம். பூண்டில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் தன்மை, தொற்றுகளை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்கிறது.

வெங்காயத்தை அறியும் போது கண்களிலும் மூக்கிலும் நீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதே போல், மூக்கடைப்பு ஏற்படும்போது 5 நிமிடம் தொடர்ந்து வெங்காயத்தை நுகரும்போது, மூக்கடைப்பு சரியாகி, மூச்சு சீராகிறது. முயற்சித்து பாருங்கள்.

வெதுவெதுப்பான நீருடன் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு நாளில் 3 முறை இந்த நீரை பருகி வரவும். நாளின் இறுதியில் உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். மூக்கடைப்பிற்கு மட்டுமில்லாமல், சைனஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகிறது.

வைட்டமின் சி அதிகமுள்ள இந்த சிட்ரஸ் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. எலுமிச்சை , சிறந்த ஒரு அன்டி ஆக்ஸ்சிடென்ட். 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து, இந்த திரவத்தை மூக்கில் சில துளிகள் விடவும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு குணமாகிறது.

தக்காளியை மசித்து, உப்பு சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். இந்த கலவையில் சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும். நன்றாக கொதித்த இந்த நீரை ஒரு நாளில் 2 முறை பருகவும். தக்காளிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. ஆகவே மூக்கு பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவை இந்த நீரை பருக்வதால் குறைகிறது. சைனஸ் பிரச்சனைக்கும் இது ஒரு தீர்வாகும்.

துளசி இலைக்கு ஒரு புனிதத்தன்மை உண்டு. மேலும், இதற்கு மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. துளசி இலைகள் சிலவற்றை எடுத்து, கழுவி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காலை உணவிற்கு முன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் டீ பருகும்போதும், சில துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பருகுவது நல்லது. இதனால் மூக்கடைப்பு முழுதும் காணாமல் போகும்.

http://pettagum.blogspot.com/2018/01/blog-post_51.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

உங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா?

 

இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால், அவர்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அதற்கான சில சிம்பிள் வழிகளை இங்கே சொல்லித்தருகிறார், கல்வியாளர் ஜெயா சாஸ்திரி.
1. நடிகை ஜோதிகா, ஒரு வசனத்தைப் பேசும்போது, அவரின் வாயுடன் சேர்ந்து கண்கள், கைகள் எல்லாமே பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதேமாதிரி, ஒரு புதுத் தகவலை உங்கள் பிள்ளையிடம் சொல்லும்போது, அதை வார்த்தைகள் மட்டுமின்றி, உடல் மொழியாலும் நன்கு வெளிப்படுத்துங்கள். இது டிராமா மாதிரி இருந்தாலும், நீங்கள் சொல்கிற தகவலைப் பிள்ளைகள் சுலபமாகப் பிடித்துக்கொள்வார்கள்.

2. குழந்தையை உங்கள் மடியில் உட்காரவைத்து, அவர்கள் மடியில் கதைப் புத்தகத்தை வைத்து, வரிவரியாகப் படித்து, கதையைச் சொல்லுங்கள். கான்செப்ட் புத்தகங்களையும் அறிமுகப்படுத்துங்கள். அதாவது, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றின் கான்செப்ட் புத்தகங்களை முதலில் அறிமுகப்படுத்துங்கள். பிறகு இந்தியாவில் உள்ள நாடுகளின் பெயர்கள், மொழிகள், தலைநகரங்கள் என ஆரம்பியுங்கள். ஐ.க்யூ. நன்கு வளரும்.
3. 'டாக்கிங் டாம்' விளையாட்டில், கார்டு விளையாட்டு ஒன்று வரும். அதில் நிறைய கார்டுகள் வரும். அவற்றில் இரண்டு கார்டுகளில் ஒரே படம் வரும். சில நொடிகளில் மாறிவிடும் அந்த கார்டுகளில் எந்த இரண்டு கார்டுகளில் ஒரே படம் வருகிறது என்று கண்டுபிடிக்கும் விளையாட்டு அது. அதுபோல, பத்து, பதினைந்து படங்களை குழந்தையிடம் காட்டிவிட்டு, மறைத்துவிடுங்கள். பிறகு, அந்தப் படங்களை வரிசையாகவோ, வரிசை மாறியோ சொல்லச் சொல்லுங்கள். ஐ.க்யூ. வளர்ச்சிக்கு இதுபோன்ற ஞாபகசக்தி வெகு அவசியம்.
4. 'உன்னிடம் பத்து சாக்லெட் இருக்கிறது. அதில் ஐந்தை தம்பி பாப்பாவுக்குக் கொடுத்துவிட்டால், மீதம் எவ்வளவு இருக்கும்?' என்பது போன்ற சின்னச் சின்ன கணக்குகளைப் பிள்ளைகளிடம் தினமும் கேளுங்கள். கணிதத்தில் ஸ்டிராங்காக இருக்கும் குழந்தைகள், ஐ.க்யூ.விலும் அசத்துவார்கள். கணிதம் என்றாலே அல்ஜீப்ரா ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு, பிள்ளைகளுக்கும் அலர்ஜியை ஏற்படுத்திவிடாதீர்கள்.

5. பில்டிங் பிளாக்ஸில் விதவிதமாக வீடுகள் கட்டுவது, டோரா புஜ்ஜி, மோட்டு பட்லு போன்ற ஜிக்ஸாக் புதிர்களைக் கொடுத்து பயிற்றுவியுங்கள். பிரித்துச் சேர்ப்பதை அவர்களே தனியாகச் செய்யும் அளவுக்குப் பழக்குங்கள். ஐ.க்யூ. செம ஷார்ப்பாகும்.

6. பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது பிரச்னையைச் சொல்ல வந்தால், காது கொடுத்துக் கேளுங்கள். ஆனால், உடனடியாக தீர்வைச் சொல்லிவிடாதீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேளுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை தானே கண்டுபிடிக்கும் குழந்தைகள், ஐ.க்யூ.வில் ஸ்டிராங்காக வளர்வார்கள்.
7. பிள்ளைகள் நன்றாக ஓடியாடி விளையாடுவதும் ஐ.க்யூ வளர்வதற்கான வழி. எப்படி என்கிறீர்களா? நன்றாக விளையாடும் பிள்ளைகளுக்கு கால் நரம்புகளில் ஆரம்பித்து மூளை வரை ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கும். இது ஐ.க்யூவை வளர்க்கும் அவ்வளவுதான்.

8. பரமபதம், தாயக்கட்டை மாதிரி குழந்தைகளுக்கும் சில போர்டு கேம்கள் இருக்கின்றன. இவை, பிள்ளைகளின் லாஜிக்கலைத் தூண்டுவதோடு, குழுவாகச் சேர்ந்து விளையாடும் மனப்பான்மையையும் வளர்க்கும்.

9. உங்கள் தெருவில் உள்ள பிள்ளைகள், அப்பார்ட்மென்ட் பிள்ளைகள், சொந்தக்காரப் பிள்ளைகள் என எல்லோருடனும் விளையாட அனுமதியுங்கள். தன் வயது பிள்ளைகளுடன் உறவாடுவது அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும். சமூகத்துடன் ஒட்டி உறவாடும் பிள்ளைகள், ஐ.க்யூ.வில் சிறந்து விளங்குவதாகச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
10. நம் சிறு வயதில், ஒரு படத்தின் பெயரை யாராவது ஒருத்தர் நடித்துக்காட்ட, அதை மற்றவர்கள் கண்டுபிடிப்பார்கள் இல்லையா? இந்த ஊகித்தல், யோசித்தல், கண்டுபிடித்தல் போன்ற விஷயங்களும் பிள்ளைகளின் அறிவுத்திறனை வளர்க்கும்.

11. பெயின்டிங், டிராயிங், இசை கேட்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால், அதற்கான கோச்சிங் சென்டருக்கு அனுப்புங்கள். இந்த ரசனைகள் எல்லாமே ஐ.க்யூ.வை வளர்க்கும் அற்புத விஷயங்களே.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…!


உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?
– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?
– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
… இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் ! அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.
சரி, இன்னொரு கேள்வி!. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் ?
– இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.
`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே' என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.' என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ' வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி "தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா" என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.
பல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா பிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.
தோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு' என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.
தோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் – வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.
மனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்… இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.
இந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்டதாக மிரண்டு விடுகிறார்கள்.
தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.
மேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)
தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.
தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்' தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.
இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.
"தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்" என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.
விளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி
M.B., D.Orth, M.S., F.R.C.S



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts