லேபிள்கள்

திங்கள், 9 ஜூலை, 2018

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன.
இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக உள்ளது. அதனால் தான் இவ்வகை உரிமைமீறல் தொடர்பாகக் கண்டிப்பான கட்டளைகள் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா நெடுகிலும்

பதிவாகியுள்ளன.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ ۚ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ ۗ

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிடுமாறும் மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் எதனை உங்களுக்கு உபதேசிக்கிறானோ அது மிக்க நல்லதாகும்." (அன்னிஸா: 58)
இப்படியிருக்க அதிகமான மனிதர்கள் பொடுபோக்காக இருக்கக்கூடிய ஒரு விடயம் தான் கடனாகும்! உண்மையில் கடனாகப் பெற்ற பணமானது குறித்ததொரு சகோதரனின் உரிமையாகும். அது விடயத்தில் பராமுகமாக நடந்து கொள்வது அவனுடைய உரிமை மீறலுக்கு நிகரானதாகும். நிச்சயமாக இது தொடர்பாக மறுமைநாளில் சம்பந்தப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பதை கவனத்திற்கொள்க!
நபியவர்கள் கூறினார்கள்: "பிற முஸ்லிமின் இரத்தம், செல்வம், மானம் ஆகியன அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஹராமானதாகும்". (முஸ்லிம்)
மேலும், கடனானது உரிய முறையில் நிறைவேற்றப்படாத போது அது மறுமைநாளில் கடன் எடுத்தவருக்குப் பெரும் நஷ்டத்தைத் தேடித்தரும்!
நபியவர்கள் கூறினார்கள்: "எவரிடத்தில் தன்னுடைய சகோதரனுக்குரிய ஓர் அநியாயம் இருக்கின்றதோ அவர் (இப்போதே) அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்! நிச்சயமாக எந்த தீனாரும் திர்ஹமும் பயனளிக்காத நாள் வரும் முன் (இவ்வாறு செய்து கொள்ளட்டும்! அந்நாளில் அநியாயம் இழைக்கப்பட்ட) தனது சகோதரனுக்காக அவனுடைய நன்மைகளில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவ்வாறு அவனிடத்தில் நன்மைகள் இல்லாத பட்சத்தில் தனது சகோதரனின் தீமைகளில் இருந்து எடுக்கப்பட்டு அவன் மீது வீசப்படும்." (புகாரி)
எனவே, நீங்கள் கடனைத் திருப்பி வழங்க சக்தியற்ற நிலையில் இருக்கும் போது அதிகமாகக் கடன் பெறுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ

பொருள்: "விசுவாங்கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள்!" (அன்னிஸா: 29)
இன்னும், அல்குர்ஆனில் இடம்பெறும் மிகப் பெரிய வசனம் கடன் தொடர்பான வசனமாகும். இவ்விடயம் கூட கடனானது சாதாரணமான ஒரு விடயமல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றது.
மேலும், நபியவர்கள் கடனாளிகளுக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தாமல் பின்வாங்கிய சம்பவங்களும் கூட கடனைத் திருப்பியளிக்கும் விடயத்தில் அவர்கள் எவ்வளவு கரிசனை காட்டியுள்ளார்கள் என்பதைப் புரிய வைக்கின்றது.
அல்லாஹ்வுடைய பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் சிறப்புக்கள் தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். எடுத்துக்காட்டாக
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

பொருள்: (விசுவாசங்கொண்டோரே) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளளோராக இருக்கிறார்கள். அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (ஆலு இம்ரான்: 169)
எனவே, இத்தகைய சிறப்பைப் பெற்ற உயிர்த்தியாகிக்குக் கூட கடன் மன்னிக்கப்பட மாட்டாது என்றால் எங்களில் யாருக்குத்தான் எனது கடன் மன்னிக்கப்படும் என்று ஆதாரவு வைக்க முடியும்! இதோ இச்செய்தியை நன்கு படித்துப்பாருங்கள்!
நபியவர்களிடத்தில் ஒரு தோழர் வந்து: அல்லாஹ்வின் "தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டால், அது என்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அமையுமா?" எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: "ஆம். நீ பொருமைசாலியாகவும் கூலியை எதிர்பார்க்கக்கூடியவனாகவும் பின்வாங்காமல் முன்னோக்கிச் சென்று போர் புரியக்கூடியவனாகவும் இருக்க அல்லாஹ்வுடைய பாதையில் கொலை செய்யப்பட்டால் (அக்கூலி உனக்குக் கிடைக்கும்)" என்றார்கள். பிறகு நபியவர்கள் மீண்டும் அத்தோழரை அழைத்து, "நீ எவ்வாறு வினவினாய்?" எனக் கேட்க அத்தோழரும் அவர் கேட்ட கேள்வியை மீண்டும் கூறினார். அதற்கு நபியவர்கள் முன்பு கூறிய அதே பதிலைக் கூறிவிட்டு, "கடனைத் தவிர" என்று கூறினார்கள். "இதனை நிச்சயமாக ஜிப்ரீல் இப்போது தான் எனக்குக் கூறிவிட்டுச் சென்றார்" எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)
மேலும், இக்கடன் விடயமானது நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய ஓர் அம்சமாக உள்ளது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபியவர்கள் தொழுகையில் பின்வருமாறு பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
اللهُمّ إنِّي أعُوْذُ بِكَ مِنَ المَأثَمِ وَالمَغْرَمِ
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் தீமை செய்யும் விடயம் மற்றும் கடன் ஆகியவற்றை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்.
அப்போது ஒரு தோழர்: அல்லாஹ்வின் தூதரே! கடனில் இருந்து அதிகமாகப் பாதுகாவல் தேடுகின்றீர்களே?! என்று வியப்புடன் வினவ, அதற்கு நபியவர்கள்: நிச்சயமாக மனிதன் கடன் பெற்றால், பேசும் போது பொய் பேசுவான். மற்றும், வாக்களிக்கும் போது அதற்கு மாறு செய்வான்" எனக் கூறினார்கள். (புகாரி)
அதே போன்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நான் நபியவர்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவனாக இருந்தேன். அவர்களிடத்தில் நான் வரும்போதெல்லாம் அதிகமாகச் செவிமடுக்கும் பிரார்த்தனையாவது:

اللهُمَّ إنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمّ وَالحَزَن وَالعَجْز وَالكَسَل وَالبُخلِ وَالجُبْن وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَال

பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் வருங்காலத்துடன் தொடர்புடைய கவலை, சென்ற காலத்துடன் தொடர்புடைய கவலை, இயலாமை, சோம்பேறித்தனம், உலோபித்தனம், கோலைத்தனம், கடன்சுமை மற்றும் மனிதர்களின் மிகைப்பு ஆகியவற்றை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்." (புகாரி)
அதிகமான மக்கள் கடன் வாங்கும் போது அதனைத் திருப்பியளிப்பது பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக, நினைக்கின்ற போதொல்லாம் கடன் வாங்குகின்றார்கள். மீளச் செலுத்தும் வேளை வரும் போது பொய், ஏமாற்று, மோசடி போன்ற தீய நடத்தைகளைக் கையாளுகின்றார்கள். இந்நிலை மாற்றம் பெற வேண்டும். எப்போதும் நாம் எமது தேவைக்கு அவசியமான அளவு கடன் வாங்க வேண்டும். மற்றும், கடன் வாங்கும் போது அதனை நல்ல முறையில் திருப்பியளிக்கும் நோக்கத்தில் வாங்க வேண்டும். அப்போது தான் அல்லாஹ் எமக்கு அக்கடனை மீளக் கையளிக்க உதவி புரிவான்.
நபியவர்கள் கூறினார்கள்: "யார் திருப்பியளிக்கும் நோக்கில் மனிதர்களின் செல்வங்களை எடுக்கின்றாரோ, அல்லாஹ் அவருக்குப் பதிலாக அதனை நிறைவேற்றிவிடுவான். மேலும், அழித்துவிடும் நோக்கில் யார் அதனை எடுக்கின்றாரோ அல்லாஹ் அதனை அழித்துவிடுகின்றான்." (புகாரி)
மேலும், எங்களுடைய கடன்கள் அதிகரித்தால் நாங்கள் அல்லாஹ்விடத்தில் மீள வேண்டும். நிச்சயமாக அவன் அவற்றை நல்ல முறையில் நிறைவேற்ற உதவி புரியப் போதுமானவனாக உள்ளான்.
ஒரு முறை அடிமை உரிமைச் சீட்டு எழுதப்பட்ட ஓர் அடிமை அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் வந்து: "நிச்சயமாக என்டைய உரிமைச் சீட்டை நிறைவேற்றும் விடையத்தில் இயலாமைப்பட்டுள்ளேன், எனக்கு சற்று உதவி புரியுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எனக்குக் கற்றுத்தந்த சில வார்த்தைகளை நானும் உனக்குக் கற்றுத் தரட்டுமா? எனக் கேட்டுவிட்டு, "உன்மீது ஸீர் என்ற மலையைப் போன்றளவு கடன் இருந்தாலும் அல்லாஹ் அதனை உன்னைவிட்டும் நீக்கிவிடுவான்." என்று கூறி பின்வரும் பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள்.

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

பொருள்: அல்லாஹ்வே! உன்னுடைய ஹராத்தைவிட்டும் உன்னுடைய ஹலாலைக் கொண்டு என்னைப் போதுமாக்குவாயாக! மேலும், உன்னைத் தவிர்ந்தவற்றை விட்டும் உன்னுடைய சிறப்பைக் கொண்டு என்னைத் தேவையற்றவனாக்குவாயாக! (திர்மிதி)
மேலும், ஒரு முறை நபியவர்கள் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கும் போது அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டார்கள். அப்போது அவரை நோக்கி: "தொழுகையுடைய நேரமல்லாத ஒரு நேரத்தில் உங்களைப் பள்ளிவாசலில் உட்கார்;ந்திருக்கக் காண்கிறேனே!?" என ஆச்சரியத்துடன் வினவினார்கள். அதற்கவர்: "என்னைப் பீடித்த துயரமும் கடன்களுமாகும் அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள்: "நீ மொழிந்தால் அல்லாஹுத்தஆலா உன்னுடைய துயரத்தைப் போக்கக்கூடியதும் உன்னுடைய கடனை நிறைவேற்றி வைக்கக்கூடியதுமான ஒரு வார்த்தையை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா?" என வினவினார்கள். அதற்கு அத்தோழர்: "ஆம். அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளிக்க, பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
"நீ காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்தால்

اللهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ وَأعوْذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَل وَأعوذ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ وَأعوذ بك مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்கள் கற்றுத்தந்த இவ்வார்த்தைகளை ஓதிவந்தேன். அல்லாஹ் என்றுடைய துயரத்தைப் போக்கி என்னுடைய கடனையும் நிறைவேற்றி வைத்தான்." (அபூதாவுத்)
எனவே, நாங்கள் கடனில்லாமல் மரணத்தைத் தழுவ முயற்சி செய்வோமாக! ஏனெனில், நபியவர்கள் கூறினார்கள்: "எவருடைய உயிர் உடம்பைவிட்டும் பிரியும்போது மூன்று விடயங்களைவிட்டும் நிரபராதியாகப் பிரிகின்றதோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். (அவை) பெருமையும் மோசடியும் கடனுமாகும்." (இப்னு மாஜா)
நன்றி: salaf.co


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

சனி, 7 ஜூலை, 2018

ஏன் இந்த நிலை

ஏன் இந்த நிலை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது.
ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன?
இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான தெளிவை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியமாகும்.
சோதனை அல்லாஹ்வின் ஒரு சுன்னத்:


ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் சோதிப்பதென்பது அவனது சுன்னா வழிமுறை யாகும். அந்த சோதனை முஃமின்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். இழிவை ஏற்படுத்தாது. மாறாக உயர்வைத்தான் தரும்.

29:2 – "நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம்' என்று மனிதர்கள் கூறியதனால் அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார் கள் என எண்ணிக் கொண்டனரா?"
29:3 – "நிச்சயமாக இவர்களுக்கு முன்பிருந்தவ ர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் உண்மை உரைத்தவர் களையும் நன்கறிவான், மேலும், பொய்யுரைத்த வர்களையும் நன்கறிவான்."
2:214 – "உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்றது உங்களுக்கு வராமல் நீங்கள் சுவர்க்கம் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? அவர்களை வறுமையும், துன்பமும் பீடித்தன. மேலும், அத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் 'அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்' என்று கூறுமளவுக்கு அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கின்றது."
எனவே, இது சோதனைதானே தவிர இழிவோ அழிவோ அல்ல!
மரணம் என்பது தோல்வியன்று:
முஸ்லிம்களைப் பொருத்தவரையில் மார்க்கத்திற்காக மரணிப்பது தோல்வியன்று. அதை இஸ்லாம் பெரும் பேறாகப் பார்க்கின்றது. ஒரு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நெருப்பில் போட்டு படுகொலை செய்யப் பட்டனர். அவர்கள் அனைவரும் சுவனத்தைப் பெற்றனர். இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, 'பவ்சுல் கபீர்' இது மிகப்பெரும் வெற்றி என்று கூறுகின்றான். அல்லாஹ்வுக்காக உயிரையும் பொருளையும் இழப்பது இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் வெற்றியாகும். அது தோல்வி கிடையாது.

நல்லது:
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் வெற்றியைத்தான் ஆசை வைப்பர். இதுதான் இயல்பு. வெற்றி இலக்கை எனது கண்களால் காண வேண்டும் என்பதே ஒரு போராளியின் இலட்சியமாக இருக்கும். ஆனால், வெற்றியை விட வீர மரணமே மேலானது, சிறந்தது என அல்லாஹ் கூறுகின்றான்.

61:10 – "நம்பிக்கை கொண்டோரே! நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?"
61:11 – "நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும், உங்களது செல்வங்களாலும், உங்களது உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்ததாகும்."
61:12 – "(அவ்வாறு செய்தால்) அவன் உங்களது பாவங்களை உங்களுக்கு மன்னித்து, சுவனச் சோலைகளில் உங்களை நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மேலும், நிலையான சுவனச் சோலைகளிலுள்ள தூய்மையான வாழ்விடங்களிலும் (உங்களை நுழைவிப்பான்.) இதுவே மகத்தான வெற்றியாகும்."
61:13 – "நீங்கள் விரும்பும் மற்றொன்றும் உண்டு. (அது) அல்லாஹ்விடமிருந்துள்ள உதவியும், சமீபமான வெற்றியுமாகும். (நபியே!) நம்பிக்கை யாளர்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!"
அல்லாஹ்வுக்காக உயிரையும் பொருளையும் இழப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் வெற்றியையும் அல்லாஹ்வின் உதவியையும் விரும்புகின்றீர்கள். அதுவும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று அல்லாஹ் இங்கே கூறுகின்றான். இந்த அடிப்படையில் இழப்பது நல்லதுதான் என குர்ஆன் கூறுகின்றது.
இழப்பு அவர்களுக்கும் வரும்:
முஸ்லிம்களுக்கு இழப்பை ஏற்படுத்துப வர்களும் இழப்புக்களைச் சந்திக்கின்றனர். உஹது யுத்தத்தின் பின்னர் அல்லாஹ் முஃமின்களுக்குக் கூறிய ஆறுதல் வசனத்தின் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

3:139 – "நீங்கள் மனம் தளர வேண்டாம். துக்கப் படவும் வேண்டாம். நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள்தான் மிக உயர்வானவர்கள்."
3:140 – "உங்களுக்கு ஒரு காயம் (உஹதில்) எற்பட்டால் அது போன்றதொரு காயம் அந்தக் கூட்டத்திற்கும் (பத்ரில்) ஏற்பட்டே உள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (இவ்வாறு செய்வது) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிந்து கொள்வதற்கும், உங்களிலிருந்து உயிர்த்த தியாகிகளை எடுத்துக் கொள்வதற்குமேயாகும். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்வானவர்கள் என்ற உத்தர வாதம் தரப்படுகின்றது. அடுத்து உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்பட்டால் அந்த இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் இழப்பு ஏற்படுகின்றன என அல்லாஹ் கூறுகின்றான். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களும் பல்வேறுபட்ட நேரடி, மறைமுக இழப்புக்களை சந்தித்தே வருகின்றனர். அண்மைய இஸ்ரேலின் காட்டுத் தீ இதற்கொரு நல்ல உதாரணமாகும்.
வெற்றி, தோல்வி மாறி மாறி வரும்:
ஒரு சமூகம் தொடர்ந்து வெற்றியை மட்டும் அடைந்து வராது. பத்ரில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். உஹதில் உங்களுக்குத் தோல்வி என்றதும் துவண்டுவிடக் கூடாது. தொடர் வெற்றி மமதையை ஏற்படுத்தும். தொடர் தோல்வி தொய்வை ஏற்படுத்தும். வெற்றி, தோல்வி மாறி மாறித்தான் வரும் என்று இங்கே ஆறுதல் கூறப்படுகின்றது.

உங்களை ஷஹீதுகளாக அல்லாஹ் ஆக்க விரும்புகின்றான்:
இந்த யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்குக் கூட அல்லாஹ் இரண்டு காரணத்தைக் கூறுகின்றான்.
1. உண்மையான முஃமின்களை இனம் காணுதல்.
2. உங்களில் சிலரை ஷஹீத் எனும் உயர்ந்த அந்தஸ்துக்குரியவர்களாக ஆக்குவது.

ஒரு முஸ்லிம் ஷஹாதத் எனும் உயர் அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால் காபிர்களால் கொல்லப்பட வேண்டும். காபிர்களால் கொல்லப்படுவதென்றால் அவர்களின் கை ஓங்க வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இறுதி வெற்றி இஸ்லாத்திற்காக இருக்கும் என்பதை இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது. இஸ்லாமிய உம்மத் நோயுறும், மரணிக்காது. இழப்புக்களையும் அழிவுகளையும் சந்திக்கும். ஆனால், அது அவர்களது மறுமையின் மகத்தான வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்.
இஸ்லாம் உயிர்வாழ்கின்றது:
சிரியா, மியன்மார் காட்சிகளைக் காணும் போது இஸ்லாம் இன்னும் மனித உள்ளங்களில் வீரியத்துடன் உயிர் வாழ்வதைக் காணலாம். உயிருடன் புதைத்து மண்ணைப் போடும் போதும், கலிமாவைக் கைவிடாமல் மொழியும் முஸ்லிம்களின் உள்ளம் வீரியத்துடன் இருக்கின்றது. உயிருடன் எரிக்கப்படும் போதும் இஸ்லாத்தை விடாமல் உயிரை விடும் மக்கள் இஸ்லாம் வலிமையுடன் இருப்பதை நிரூபித்து விட்டே மரணத்தைத் தழுவுகின்றனர். ஆரம்ப கால வரலாறு மீண்டும் கண்முன்னே காட்சி தருகின்றது. வரலாறு உண்மைப்படுத்தப் படுகின்றது.

இந்தச் சோதனைகள், இழப்புக்கள், சோர்வுக்கும் அவநம்பிக்கைக்குமான அத்திவாரம் அல்ல. மாறாக, ஈமானை உரமூட்டவும் வலுவூட்டவுமான நிகழ்வுகளாகும். இந்த அடிப்படையில் இத்தகைய நிகழ்வுகள் எமது ஈமானை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர பலவீனப்படுத்திவிடக் கூடாது எனும் உண்மையை உணர்ந்து கொள்வோமாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

வியாழன், 5 ஜூலை, 2018

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?
பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.
காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள்.
இதன் நிழலாகத்தான் தற்போது பரவிக் கிடக்கும் இயற்கை உணவங்களிலும் கருப்பட்டிக்காபி வாசனை பரவ ஆரம்பித்திருக்கிறது. இது தவிர கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என நீண்டு கொண்டே போகும்.
 கருப்பட்டி கலந்த பதார்த்தங்களில் கலந்திருப்பது உண்மையான கருப்பட்டிதானா..? நாம் கடைகளில் வாங்கும் கருப்பட்டியும் உண்மையான கருப்பட்டிதானா..?

ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி கூறுகிறார்,

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, கருப்பட்டி காய்ச்சும் தொழிலில் 20 வருடம் அனுபவமுள்ள மகாராஜா.


* கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.

* முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

* கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.

* கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

* வயது முதிர்ந்த கிராமத்து ஆட்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை வைத்து ஒரிஜினலா, போலியா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

* தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.

* ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

* நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப்
 புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

* கருப்பட்டி வாங்கும்போது தட்டிப்பார்த்தும், நுகர்ந்தும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு மென்று பாருங்கள். கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையில் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.

போலிக்கான காரணங்கள்:
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் முழுமையாகவும், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் பனைமரங்கள் இருந்தது. ஆனால், தற்போது பனைமரத்தின் அளவு கால்வாசியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும். வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருசம் முழுக்க இருந்துக்கிட்டே இருக்கு. தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துலயும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.

கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சுவில் (இரும்பிலான வட்டவடிவினான பாத்திரம்) 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் ரெண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். அதனால்தான் சர்க்கரை நிறைந்த போலி கருப்பட்டிகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

செவ்வாய், 3 ஜூலை, 2018

அதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்?!

அதிகாலையில் படித்தால் என்னவெல்லாம் பலன்?!
''அதிகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்'' எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.

''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.



தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று ஸ்பரிசம் பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனனம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                                           
'அறிவுக்கு மேற்கு, வெளிச்சத்துக்கு கிழக்கு, பயணத்துக்கு வடக்கு, முடிவுக்கு தெற்கு' எனச் சொல்வார்கள். அதன்படி பார்க்கும்போது, மேற்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது, நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். கவனச்சிதறல் இன்றி படிக்க முடியும். இன்றைக்கும் கிராமப்புறப் பகுதி பாடசாலைகளில் ஆசிரியர் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாணவர்கள் மேற்கு நோக்கி அமர்ந்தும்தான் படிப்பார்கள்'' என்கிறார்
  மாதேஸ்வரன்.

''10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 - 10 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்கள் அதிகாலை 5.30 - 6 மணிபோல எழுந்து, அதன் பின்னர் படிப்பதே சிறந்தது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் எழுந்து படிக்கலாம்'' எனக் கூறும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காலை நேரம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.
''அதிகாலை நேரம் இரைச்சல், ஆள் நடமாட்டம் என எந்தவித வெளிப்புற தொந்தரவும் இன்றி
  சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். குழந்தைகளுக்கு முந்தைய நாள் நினைவுகள் மறந்து, உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடங்கும். மூளை வேகமாக இயங்கும். மேலும் அதிகாலை நேரம் ஆக்ஸிடோசின் (Oxytocin), சிரோடோனின் (Serotonin), டோபமைன் (Dopamine) உள்ளிட்ட பயனுள்ள ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்வதுடன், நல்ல மன அமைதியையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். அதனால் அதிகாலை நேரம் படிப்பதால், மிகுந்த பலன் கிடைக்கும்.

அதிகாலை நேரம் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, ஜுஸ், பால், சத்துமாவு கஞ்சி என ஏதாவது ஒரு திரவ உணவு சாப்பிட்டுவிட்டு படிக்க அமரலாம்'' என்றார் டாக்டர்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

ஞாயிறு, 1 ஜூலை, 2018

நாற்பது குழந்தைக்கா? தாயிக்கா?

நாற்பது குழந்தைக்கா? தாயிக்கா?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்
ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் (தேன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் நமக்கு மார்க்கமாக வழிக் காட்டியுள்ளார்கள்.
ஆனால் குழந்தை பிறந்து நாற்பதாவது நாள் என்று சாப்பாடு போட்டு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். "பெயர் சூட்டும் விழா" என்று பத்திரிகை அடித்து பந்தல் போட்டு, (மண்டபங்களிலும்) கொண்டாடக் கூடிய நிலையை பார்க்கிறோம். இந்த நாற்பதுக்கும் அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? என்று தேடிப் பார்த்தால் குழந்தைக்கும் நாற்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் தாயிக்கும், நாட்பதுக்கும் சம்பந்தம் உள்ளது.


குழந்தைக்கு ஏழு அன்று செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விடுகிறார்கள் பிறகு ஏன் ஒரு நாற்பது என்று சிந்தித்தால் குழந்தைக்கு நாற்பது இல்லை, தாயிக்கு தான் நாற்பதாகும். குழந்தையை பெற்றெடுத்த பின் தாயிக்கு தொடரான உதிரப் போக்கு நாற்பது நாட்கள் இருக்கும். நாற்பதாவது நாள் குளித்து விட்டு சுத்தமாகி தொழுகை போன்ற மார்க்க விடயங்களில் ஈடுபடலாம் என்ற அடிப்படையில் தான் இந்த நாற்பதை ஏற்பாடாக்கியுள்ளார்கள்.
தனது மனைவிக்கு இரத்தம் நின்றதற்காக போடும் சாப்பாடு தான் இந்த நாற்பது சாப்பாடாகும். எனது மனைவிக்கு இரத்தம் நின்று விட்டது அதற்காக சாப்பாடு போடுறேன் வாங்க என்று அழைத்தால் என்னடா இதற்கு ஒரு சாப்பாடா என்று மக்கள் எண்ணிக் கொள்வார்கள், அதனால் குழந்தையின் பெயரை பயன்படுத்தி தாயிக்காக சாப்பாடு பரிமாறப்படுகிறது. இனி மேல் நாற்பது சாப்பாட்டிக்கு என்று யாராவது அழைத்தால் இது தான் விசயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதோடு, அது தவறான வழிமுறை என்பதை அழகான முறையில் எடுத்துக் காட்டுங்கள்.
நபியவர்கள் காட்டித் தராத ஒரு செயல்பாட்டை மார்க்கம் என்ற பெயரில் வெகு விமர்சையாக மவ்லவியின் தலைமையில் கொண்டாடப்படுகிறது
மார்க்கத்தைப் படித்த மவ்லவிகள் உண்மையை பேச முடியாமல் மௌனிகளாக காலத்தை கழிக்க கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம். அல்லாஹ்விற்காக பணியாற்ற வேண்டியவர்கள் மக்களுக்காக மார்க்கத்தை மாற்றி மக்களுக்கு தவறான வழியை காட்டிக் காண்டிருக்கிறார்கள்.
பாவத்தை கண்டால் கையால் தடுங்கள் அல்லது வாயால் தடுங்கள் அல்லது ஒதுங்குங்கள் என்று நபியவர்கள் தெளிவாக கூறியிருக்க, மக்களோடு மக்களாக படித்த மவ்லவியும் கூட்டு சேர்ந்து பாவத்தை செய்து விட்டு வருகிறார் என்றால் இவர்களை என்ன என்று சொல்வது?
தவறை கண்டால் தடுக்க கூடிய மவ்லவிமார்களே இப்படி என்றால் மக்கள் எப்படி சரியான மார்க்கத்தை விளங்க போகிறார்கள். இந்த நாற்பது என்பது அன்னிய கலாசாரமாகும்."யார் பிறருடைய கலாசாரத்தை நடைமுறைப் படுத்துகிறாரோ இவரும் அவரை சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னியர்கள் தான் தனது குழந்தைக்காக பெயர் சூட்டும் விழா என்று பத்திரிகை அடித்து, பந்தல் போட்டு, பாட்டு, கூத்து, கச்சேரி, என்று அமோகமாக கொண்டாடுவார்கள். அதை அப்படியே காப்பி அடித்து நமது மவ்லவிமார்கள் மார்க்கமாக நடைமுறைப் படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட மவ்லவிமார்கள் எப்படி உங்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லித்தர போகிறார்கள்.
வேலியே பயிரை மேய்கின்ற கதையாக தான் இன்று மார்க்கத்தின் நிலை போய் கொண்டிருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கதான் செய்வார்கள்.
(குறிப்பு -தாய் உதிரப் போக்கிலிருந்து எப்போது சுத்தம் அடைகின்றாலோ அப்போதிருந்து தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம். சிலருக்கு பத்து நாட்கள் தொடர் உதிரப் போக்கு வரலாம், இன்னும் சிலருக்கு இருபது நாட்கள் வரலாம் எப்படியோ எத்தனையாவது நாளில் உதிரப் போக்கு நிற்கிறதோ அப்போதிலிருந்து அந்த தாய் சுத்தமடைகின்றாள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்)
http://www.islamkalvi.com/?p=110045

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts