லேபிள்கள்

புதன், 13 ஜனவரி, 2016

குதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்

"கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை" என்றவரை நோக்கி "மற்ற வேளைகளிலை வலி வாறதில்லையோ" எனக் கேட்டேன்.
"கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்" என்றார் அப் பெண்மணி.

ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் காலம் செல்லச் செல்ல வலியானது நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.

இதனை பிளான்டர் பஷியடிஸ்
(Planter fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். தமிழில் குதிவாதம் என்றே பலரும் குறிப்படுவார்கள்.

வாதம் என எம்மவர்கள் குறிபிட்ட போதும் பக்கவாதம் பாரிசவாதம் போன்ற ஆபத்தான நோயல்ல. சிலவேளைகளில் அப்பகுதி சிவந்து வீங்கி சூடாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவை எதுவுமே வெளிப்படையாகத் தெரிவதில்லை. வலி மட்டுமே ஒரே ஒரு அறிகுறியாக இருக்கும். பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளில ஏற்படும்; அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. இது மூட்டுகளில் ஏற்படும் நோய் அல்ல.

ஏன் வருகிறது

ஆனால் இத்தகைய சவ்வு அழற்சி தவிர்ந்த வேறு காரணங்களாலும் குதிக்காலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

பொதுவான நாம் நடக்கும்போது எமது பாதங்களை முழுமையாக ஊன்றி நடப்போம், ஆனால் பாதத்தில் ஆணிக் கூடு, தோற்தடிப்பு
(Callocity), புண்கள், மூட்டு வலிகள், போன்றவை இருந்தால் பாதங்களை சரியாக தரையில் பதியாமல் உட்பக்கமாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரிந்து நடப்பதாலும் அவ்வாறான வலி ஏற்படலாம்.

பாதத்தின் பிரதான எலும்பான கல்கேனியத்தில்; வழமைக்கு மாறான எலும்புத் துருதல் இருந்தாலும் அவ்வாறான வலி ஏற்பட வாய்ப்புண்டு.
கெண்டைக் காலின் பின்புறமாக இருக்கும் பிரதான சவ்வான அக்கிலிஸ் ரென்டனில் ஏற்படும் அழற்சியும் இவ்வாறான வலியை ஏற்படுத்தலாம்.

இவற்றைத் தவிர பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலைவுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாகவும் அத்தகைய வலி ஏற்பட வாயப்புண்டு.

சவ்வுகளின் இறுக்கம் மட்டுமின்றி பாதப்பகுதியின் தளர்ச்சி,
 
உடற்பயிற்சிகளைத் தவறான முறைகளில் செய்வதும் காரணமாகலாம். பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவும் மற்றொரு காரணமாகும். மிக
  நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகள் சிலருக்கு வலியை ஏற்படுத்துவதுண்டு.

அளவுப் பொருத்தமற்ற காலணிகளும், அடிப் பகுதி தேய்நத காலணிகளும் குதியில் வலி ஏற்படுத்த வாய்ப்புண்டு.

சிகிச்சை

சிகிச்சைகள் பல வகைப்படலாம். வலி ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளுடன், தசை சவ்வுகளுக்கான பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்றவற்றை உங்கள் மருத்துவர் சிபார்சு செய்யக் கூடும்.
 

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து சில நிமிடங்களுக்கு மஸாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
அதேபோல நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நடக்க நேர்ந்தால், நடக்க ஆரம்பிக்க முன்னர் மசாஸ் செய்யுங்கள்.

பகலில் பதமான சூட்டு வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருப்பதும் வலியைத் தணிக்க உதவும். இது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதை ஒத்தது. மாறாக ஐஸ் கலந்த தண்ணீரில் கால்களை வைப்பதும் உதவலாம்.

பாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து அதை முன் பின்னாக உருட்டுவதும் மற்றொரு பயிற்சியாகும்.
அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.  இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.
கெண்டைத் தசைகளுக்கான பயிற்சிகள்.

முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலியைத் தணிக்க உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்ய வேண்டும். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள்.
  1. முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் முழங்கைப் பகுதியில் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரை இறுகத் தள்ளுங்கள். தள்ளும்போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னே மடியாதிருக்கும் காலின் குதிப் பகுதியில் பாரம் பொறுக்குமாறு செய்யுங்கள்.  அடுத்த தடவை கால்களை மாற்றி மறுகாலில் பாரம் பொறுக்குமாறு பயிற்சியைச்; செய்யுங்கள்.  
  2. இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் முழங்கைப் பகுதியில் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும்.
உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால்  எதிர்காலத்தில் வலிகள் தொடராது வேதனையைக் குறைக்க உதவும்.

பாதத்து தசைகளுக்கான பயிற்சிகள்

பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகள் பல வகைப்படலாம். துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் போன்றவை சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.

துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.
மார்பிள் பொறுக்கல் பயிற்சி

இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை,
  நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள்.

உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.

கால்விரல் தட்டல்
     

கால்விரல் தட்டல்
(Toe tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதியை தரையில் திடமாக இருக்கும்படி வையுங்கள். காலின் முற்பகுதியை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள்.  இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.
இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஐம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை  அதிகரியுங்கள்.
மருந்துகள் ஊசி

வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.

சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்
http://hainallama.blogspot.in/2014/03/blog-post_10.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 11 ஜனவரி, 2016

இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள்!

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம். ஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).
இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டொக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.
மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
குடிநீர் "விஷமானால்" அனைத்து நரம்பு பாகங்களையும் பாதிக்கும்!
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
  • அடிப்புற முக்கோணத்திற்குள் எண் "1" இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.எண் "2" இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.
  • எண் "3" என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
  • எண் "4" எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.எண் "5" பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
  • எண் "6" இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.
  • இதுதவிர எண் "7" இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், "மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. "ஒன்ஸ் யூஸ்" பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி "மெல்லக் கொல்லும் விஷமாகி" நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்" என்றார்."


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 9 ஜனவரி, 2016

நீரும்... ஆரோக்கிய வாழ்வும்...


நீர் இன்றி அமையாது உலகு. நம் அன்றாட வாழ்வில் குளிப்பது, துவைப்பது, சமைப்பது என நீரின் அவசியம் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நீரின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு போதுமான அளவு இல்லை. 'ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?' என்ற ஒரு கேள்விக்குக் கூட நம்மில் பலராலும் எளிதில் பதில் சொல்ல முடியாது. தனி மனித ஆரோக்கியத்தில் தண்ணீர், எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி சிறுநீரகவில் மருத்துவர் சேகரிடம் கேட்டோம்.

'நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. நம் உடலில் 60 சதவிகிதம் நீர்தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால்தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். 

சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்கவைக்க, சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும். 

உடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.

ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 

நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். 

சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 

மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.

 உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
 தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும். 

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்
 வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

 தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 7 ஜனவரி, 2016

வீடியோ கேம்ஸ் வில்லன்... மொபைல் பூதம்!

குழந்தைகள் பத்திரம்

''ஹாய் சுரேஷ்.. நான் அந்த புல்டோசர் மண்டையனை ஷூட் பண்ணிட்டேன்டா.. ஆனா, அந்த வைரத்தை என்னால எடுக்க முடியல. இன்னொரு டைனோசர் தலையன் இடையில புகுந்துட்டான்''
''ஆமாண்டா.. நானும் டிரை பண்ணி பாத்தேன்.. முடியல! சரின்னு நேத்துலருந்து ஆண்ட்ராய்ட்ல ஆஸ்டான் மார்டின் கார் ரேஸ்க்கு மாறிட்டேன்.. செமையா இருக்குடா! பேசாம நீயும் உங்க அப்பாகிட்ட சொல்லி ஆண்ட்ராய்ட் போன் வாங்கிடு... அப்புறம் நாம எங்க இருந்தாலும் நெட், ஃபேஸ் புக் மூலமா போன்லயே ஜாலியா விளையாடலாம்!''
- இப்படி பள்ளிக் குழந்தைகளை முழுமையாக அடிமைப்படுத்தி வருகிறது வீடியோ கேம்கள். செல்போன், டாப், ஐபாட் மூலம் நெட்டிலிருந்து நேரடியாக டவுன்லோடு செய்து வகை வகையான விளையாட்டுக்களை விளையாடலாம். நாமே, களத்தில் இறங்கி விளையாடுவது போன்ற உணர்வு மேலிடுவதால், பள்ளி செல்லும் பிள்ளைகள் பலரும் படிப்பையும் தாண்டி, இதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற ஆரோக்கியமான விளையாட்டுகளை செல்போன், கணினியில் மட்டுமே இன்றைய குழந்தைகள் விளையாடுகின்றனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நான்கு சுவற்றுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால், ஓடி விளையாடக்கூடிய குழந்தைகளை எந்தத் தெருக்களிலும் பார்க்கமுடிவதில்லை. செல்போன் கேம்களில் உள்ள கதாபாத்திரங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்களை ஓட வைக்கிறார்கள் நம் பிள்ளைகள்.

பிள்ளைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் நடேசன் மற்றும் திருச்சி மூத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செங்குட்டுவனும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை கல்வியாளரும், சமூக சிந்தனையாளருமாகிய ஆயிஷா இரா.நடராசனும் இங்கே அலசுகின்றனர்.  

போதையைப் போன்றது வீடியோ கேம்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் மூன்று வருடங்கள் அபரிதமாக இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். 

ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழகவேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவுகளை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும். 

இதுவும் ஒரு போதைப் பழக்கத்தைப் போன்றதுதான். பெரும்பாலான பெற்றோர்களே, குழந்தைகளிடம் போன், லேப்டாப் போன்றவற்றைத் தந்து கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்குகின்றனர். சிறு வயதில் கை கால்களை அசைத்து தெருக்களில் ஓடி ஆடும் குழந்தைகளை எந்தவித மன அழுத்த நோய்களும் தாக்காது.

வியாதிகள் வீடு தேடி வரும்!
கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்.  வீடியோ கேம்களில் ஒரு நொடி கண்ணசைவு ஏற்பட்டாலும் தோல்வி என வடிவமைத்திருப்பார்கள்.. இதனால் கண்களை இமைப்பது குறைவதனால் கண்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து, சிறுவயதிலேயே கண்ணாடி போட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகலாம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலன் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிக்காற்றை சுவாசிக்காமல் வீட்டுக்கு உள்ளேயே, ஒரே சூழலில் இருக்கும்போது மன இறுக்கம், கவலைகள் ஏற்படும். ஒரு விஷயத்தின் மீது வெறுப்பு, கவனமின்மை, கோபம், எந்த செயல்களையும் முழுமையாக செய்யாமல், மேலோட்டமாகச் செய்வது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். சாலையில் செல்லும் போதுகூட கவனமில்லாமல் சென்று விபத்துகளைச் சந்திப்பார்கள். வளர்ந்த பிறகும் எதிர்காலத்தில் முடிவு எடுப்பதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.  

ஓடி விளையாடினால் நோய்கள் ஓடிவிடும்!
சூரிய வெளிச்சம் படும்படி விளையாடும்போது வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வியர்வை மூலம் வெளியேறுகின்றன. அணியாகச் சேர்ந்து விளையாடும்போது கூட்டு முயற்சியின் முக்கியத்துவமும், விட்டுகொடுத்தல், தன்னம்பிக்கை போன்ற நல்ல குணநலன்களும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தசை நார்களும் சீராக இயங்குவதால் உடல்பருமன், மன அழுத்தப் பிரச்னைகள் வருவதில்லை.

உறவும், சமூகமும் பகை!
8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயங்கரமான காட்சிகள் மற்றும் வன்முறைகளைப் பார்த்து வளரும்போது, வன்முறைகளும் பயங்கரவாதம் மட்டுமே நிறைந்தது இந்த சமுதாயம் என்று தவறாகப் புரிந்துகொண்டு, நிஜ உலக வாழ்வை எதிர்கொள்ள முடியாத தேவையற்ற பயத்துக்கு ஆளாகிறார்கள்.
தொடர்ச்சியாக விளையாடுபவர்கள், தங்கள் வீட்டுக்கு உறவினர் வந்தால் கூட, அதைத் தங்கள் விளையாட்டுக்கு இடையூறாக எண்ணி எரிச்சலடைவார்கள். கோபம், எரிச்சல் இருந்து கொண்டேயிருக்கும். தனியாகத் தூங்கி எழுவது, குடும்பத்துக்குள் பாசம் குறைவது, பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது போன்றவை தலைதூக்கும்.
திருமணம் ஆனாலும் கூட மனைவியிடம் விட்டுகொடுக்க முடியாமல், இடையிலேயே பிரிதல் என எதிர்காலமே கேள்விக்குறியாக மாறலாம்.

மனதைக் கெடுக்கும் வன்முறை விளையாட்டு!
இப்போது வரும் அனைத்து வீடியோ கேம்களிலும் வன்முறைகள் அதிகம் புகுத்தப்பட்டிருக்கின்றன. வாளை எடுத்து வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது,   எதிராளியை வீழ்த்துவது, கை, கால்களால் உதைத்து சாகடிப்பது என எல்லா வகையான வன்முறைகளையும் வகுத்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலான விளையாட்டுகளில் எதிரியை வீழ்த்திய பிறகே, அடுத்த கட்டத்துக்குச் செல்வது மாதிரியான வகையில்தான் செட் செய்திருப்பார்கள். இந்த கேம்களை பொறுத்தமட்டில் தோல்வி என்பதே கிடையாது. இது அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். இதன் பிரதிபலிப்பாக அவர்களால் ஒரு சின்ன தோல்வியைகூட தாங்க முடியாது.

நண்பர்களிடையே ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்னைகள், ஆசிரியர்கள் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மதிப்பெண்களை வீட்டில் காட்ட முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளைச் சந்திக்கும் போது மனதில் பதிந்துள்ள வன்முறைகள் வெளிப்பட்டு தற்கொலைவரை சென்று விடுகிறார்கள். அவர்கள் மனதைப் பொருத்தமட்டில் உயிரைவிடுவதுகூட பெரிய விஷயம் இல்லை. வீட்டை விட்டு வெளி இடங்களுக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்குப் போகிறார்கள். அங்கேயும், 'வர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் கேம்களைக் கொடுக்கிறார்கள். இதில் விளையாடுபவர்கள் கேம் நடக்கும் களத்துக்குள் நேரடியாகச் சென்று விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஆனால், அது அவர்கள் மட்டும் தனியாக விளையாடும் நரகம் என்பது புரிவதில்லை.

வாழ்க்கையைக் கற்றுத்தரும் குழு விளையாட்டு!
பள்ளி மைதானத்திலோ அல்லது தெருவிலோ பல பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து வியர்வை வெளியேறும் வரை விளையாடும் போது புத்துணர்ச்சி ஏற்படும். அவரவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பள்ளியில் நடந்தவை, வீட்டில் நடந்தவை என ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது பெண் பிள்ளைகள் பூப்பெய்தலுக்குப் பிறகு எப்படி நடக்க வேண்டும் என்பது வரை கற்றுக்கொள்கிறார்கள். 

விட்டுக்கொடுத்தல், குழு நண்பர்களை அனுசரித்துப் போவது, தோல்விகளைத் தாங்கும் மனப்பான்மை மற்றும் புதுவித சிந்தனைகளை உருவாக்கும். இந்த அனுபவம்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் திறனை வளர்க்க உதவுகிறது. ஆனால், பல பள்ளிகளில் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் அட்டவணையில் மட்டுமே உள்ளது. இந்த நேரத்தையும் பாட வேளையாக மாற்றி விளையாட்டுக்கும் வேட்டு வைத்து விட்டார்கள்! இதை, பெற்றோர்கள்தான் கவனித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளி நிர்வாகத்துடன் பேசித் தீர்வு காணலாம்.   தினமும் ஆயிரக்கணக்கான புதுவித கேம்களைக் கொடுத்து அடிமையாக்கி விட்டன நவீன ஆண்ட்ராய்ட் போன்கள். சினிமாப் படங்களை கேம்களாக மாற்றி விட்டன கம்ப்யூட்டர் கேம்கள். இந்த அறிவியல் வளர்ச்சியின் ஆதிக்கத்தால் ஆரோக்கியம் கெடுவதுதான் மிச்சம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்தால், பெருகி வரும் வீடியோ வில்லன்களிடமிருந்து நம் இளைய தலைமுறையைக் காப்பாற்றலாம்!

ஒரு நாளைக்கு அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்கள் விளையாடவோ, டி.வி. பார்க்கவோ குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.
 குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
 குழந்தையின் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பள்ளியில் நடந்த நிகழ்வுகளை ஆர்வமுடன் கேட்கவேண்டும்.
 குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லமும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பையும் காட்டவேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 5 ஜனவரி, 2016

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், 
சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்!

மின் சாதனங்கள்... பாத்ரூம் இணைப்புகள்!

கனவு வீட்டை ஏறக்குறைய கட்டிமுடிக்கும் தருவாயில் இருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியவை வொயரிங் மற்றும் பாத்ரூம் பொருத்துவகை வேலைகள் மட்டுமே. அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

வொயரிங் வேலைகளைப் பொறுத்தவரை, நாம் ஏற்கெனவே இதற்கான ஃப்ளக் பாயின்ட்கள் தேவையான இடங்களில் வைத்துள் ளோம். இந்த வொயரிங் வேலைகள் முடிந்தபிறகு பெயின்ட் பூசுவதே நல்லது. தனி வீடு கட்டுபவர்கள் பலரும் அருகிலுள்ள கடைகளில் இருந்து வொயரிங் பொருட்களை வாங்குவதையே வழக்கமாக வைத்திருக் கின்றனர். இதைத் தவிர்ப்பது நல்லது. நம்பிகையான மொத்த விற்பனையாளர்களிடம் வாங்குவதன் மூலம் தரமான பொருளை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐஎஸ்ஐ தரம் கொண்ட பொருட்களையே வாங்குவது பாதுகாப்பானது. இந்தப் பொருட்களை வாங்கும்போது அதற்கான ரசீதுகள், கேரன்டி அட்டைகள்  உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.

நமது வீட்டில் பயன்படுத்த உள்ள மின் சாதனத்துக்கேற்ப நமது வொயரிங் வேலைகளில் தரம் இருப்பது அவசியம். எதிர்காலத்தில் சில வசதிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதுதான் சிறப்பு.

முக்கியமாக, இப்போது ஏ.சி அல்லது வாட்டர் ஹீட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப இணைப்புகள் கொடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கேற்ப வொயரிங் வேலைகள் இருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒவ்வொரு பிளக் ஃபாயின்டுக்கும் இரண்டு தனித்தனி வொயர்கள் மூலம் மின் இணைப்பு தர வேண்டும். அதிக மின்சக்தி மற்றும் குறைந்த மின் சக்தியை இழுக்கும் வொயர்கள் தனித்தனியாக கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக, இன்வெர்ட்டர்கள், ஹீட்டர்கள், வாஷிங் மெஷின் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவை அதிக மின்சக்தி இழுக்கும் மின் சாதனங்களாக இருக்கும். மின்விளக்கு, விசிறி போன்றவைக் குறைந்த மின்சக்தியையும் இழுக்கும் தன்மை கொண்டவை. எனவே, இதற்கேற்ப அனைத்து இடங்களிலும் பக்காவாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏ.சி மற்றும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் பிளக் பாயின்ட்களுக்கு (15 ஆம்ஸ்) 7/20 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷின், கிரைண்டர், ஃப்ரிட்ஜ், இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ ஓவன், இன்வெர்ட்டர் போன்ற சாதனங்கள் பயன்படுத்தும் இடங்களில் (15 ஆம்ஸ்) 3/20 திறன் கொண்ட வொயர்களும், அயர்ன் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்கள் பயன்படுத்தும் ப்ளக் பாயின்ட்களில் 1/80 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்தவேண்டும்.

பொதுவாக, மூன்று பின்கள் உள்ள பிளக்கையே பயன்படுத்த வேண்டும். ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை, பாதுகாப்பு நிறைந்த பலவகை பாக்ஸ்கள் இப்போது நிறையவே கிடைக்கின்றன.

உதாரணமாக, பிளக்கில் 'பின்' சொருகும்போது துவாரப் பகுதி திறந்தும், வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான குளோஸிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக, ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி போன்றவற்றுக்குத் தனியாக இணைப்பு தருவதுபோல 'எர்த் கனெக்ஷனும்' தனித்தனியாகத் தரவேண்டும். 'எர்த் கனெக்ஷன்' தரும்போது அது சரியான முறையில், அதாவது, ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு 'எர்த் கனெக்ஷன்' தரவேண்டும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால், அங்குப் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் பாதுகாப்புக்கு ELCB (Earth leakage circuit breaker)  என்ற கருவியை மெயினில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு.

 பாத்ரூம் இணைப்புகள்!
பாத்ரூமில் நாம் ஏற்கெனவே குழாய்கள் பதித்து வைத்துள்ளோம். இதில் தேவையான ஃபிட்டிங்குகளைப் பொருத்தவேண்டும். முக்கியமாக, வால் மிக்ஸர் அவசியம் அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் சுடுதண்ணீர் மற்றும் சாதாரணத் தண்ணீர் இரண்டையும் பிரித்துக் கொடுக்கும். பொதுவாக, இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனத்தில் சிறப்பாக இருக்கும். எல்லாப் பொருட்களையும் ஒரே நிறுவன பொருட்களாக வாங்குவதைவிட, நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

முன்பு இந்தியன் மாடல் டாய்லெட்கள்தான் எல்லா வீடு களிலும் பொருத்தப்பட்டு வந்தன. இப்போது மெள்ள மெள்ள வெஸ்டர்ன் டைப் டாய்லெட் செட்டுகள் பல வீடுகளில் வரத் தொடங்கிவிட்டன. தற்போது கட்டப்படும் வீடுகளில் இளவயதினருக்கு இந்தியன் மாடல் டாய்லெட்டையும் வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், வெந்நீர் பைப்புகள், ஷவர், முகம் கழுவும் பேசின், இதற்கு அருகில் வைக்க ஒரு ஸ்டாண்ட், துண்டு போடுவதற்கான ராடு, பாத்ரூம் கிளீனிங் பொருட்கள் வைப்பதற்கான கப்போர்டுகள் அல்லது ஸ்டாண்ட், வயதானவர்கள் பிடித்துக்கொள்ள வசதியான கைப்பிடிகள் ஆகியவற்றைப் பொருத்துவது அவசியம்.

இதுதவிர, எக்ஜாஸ்ட் ஃபேன், பாத்ரூமில் நல்ல வெளிச்சம் கிடைப்பதுபோல கிரவுன்ட் கிளா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 1 ஜனவரி, 2016

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!
தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.
அந்த வகையில் எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
தேன்
காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.

மூலிகை டீ
டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை
தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால்
பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

கோதுமை பிரட்
நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

வாழைப்பழம்
காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும். அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் போதுமான அளவில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இயற்கையான சர்க்கரையானது நிறைந்துள்ளது. எனவே இத்தகைய ஆப்பிளை காலையில் ஒன்றோ அல்லது செரிலுடன் சேர்த்தோ சாப்பிட்டால், மிகவும் நல்லது.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

காபி
காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும். மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts