லேபிள்கள்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்!

மின் சாதனங்கள்... பாத்ரூம் இணைப்புகள்!

கனவு வீட்டை ஏறக்குறைய கட்டிமுடிக்கும் தருவாயில் இருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியவை வொயரிங் மற்றும் பாத்ரூம் பொருத்துவகை வேலைகள் மட்டுமே. அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

வொயரிங் வேலைகளைப் பொறுத்தவரை, நாம் ஏற்கெனவே இதற்கான ஃப்ளக் பாயின்ட்கள் தேவையான இடங்களில் வைத்துள் ளோம். இந்த வொயரிங் வேலைகள் முடிந்தபிறகு பெயின்ட் பூசுவதே நல்லது. தனி வீடு கட்டுபவர்கள் பலரும் அருகிலுள்ள கடைகளில் இருந்து வொயரிங் பொருட்களை வாங்குவதையே வழக்கமாக வைத்திருக் கின்றனர். இதைத் தவிர்ப்பது நல்லது. நம்பிகையான மொத்த விற்பனையாளர்களிடம் வாங்குவதன் மூலம் தரமான பொருளை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐஎஸ்ஐ தரம் கொண்ட பொருட்களையே வாங்குவது பாதுகாப்பானது. இந்தப் பொருட்களை வாங்கும்போது அதற்கான ரசீதுகள், கேரன்டி அட்டைகள்  உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.

நமது வீட்டில் பயன்படுத்த உள்ள மின் சாதனத்துக்கேற்ப நமது வொயரிங் வேலைகளில் தரம் இருப்பது அவசியம். எதிர்காலத்தில் சில வசதிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதுதான் சிறப்பு.

முக்கியமாக, இப்போது ஏ.சி அல்லது வாட்டர் ஹீட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப இணைப்புகள் கொடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கேற்ப வொயரிங் வேலைகள் இருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒவ்வொரு பிளக் ஃபாயின்டுக்கும் இரண்டு தனித்தனி வொயர்கள் மூலம் மின் இணைப்பு தர வேண்டும். அதிக மின்சக்தி மற்றும் குறைந்த மின் சக்தியை இழுக்கும் வொயர்கள் தனித்தனியாக கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக, இன்வெர்ட்டர்கள், ஹீட்டர்கள், வாஷிங் மெஷின் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவை அதிக மின்சக்தி இழுக்கும் மின் சாதனங்களாக இருக்கும். மின்விளக்கு, விசிறி போன்றவைக் குறைந்த மின்சக்தியையும் இழுக்கும் தன்மை கொண்டவை. எனவே, இதற்கேற்ப அனைத்து இடங்களிலும் பக்காவாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏ.சி மற்றும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் பிளக் பாயின்ட்களுக்கு (15 ஆம்ஸ்) 7/20 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷின், கிரைண்டர், ஃப்ரிட்ஜ், இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ ஓவன், இன்வெர்ட்டர் போன்ற சாதனங்கள் பயன்படுத்தும் இடங்களில் (15 ஆம்ஸ்) 3/20 திறன் கொண்ட வொயர்களும், அயர்ன் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்கள் பயன்படுத்தும் ப்ளக் பாயின்ட்களில் 1/80 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்தவேண்டும்.

பொதுவாக, மூன்று பின்கள் உள்ள பிளக்கையே பயன்படுத்த வேண்டும். ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை, பாதுகாப்பு நிறைந்த பலவகை பாக்ஸ்கள் இப்போது நிறையவே கிடைக்கின்றன.

உதாரணமாக, பிளக்கில் 'பின்' சொருகும்போது துவாரப் பகுதி திறந்தும், வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான குளோஸிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக, ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி போன்றவற்றுக்குத் தனியாக இணைப்பு தருவதுபோல 'எர்த் கனெக்ஷனும்' தனித்தனியாகத் தரவேண்டும். 'எர்த் கனெக்ஷன்' தரும்போது அது சரியான முறையில், அதாவது, ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு 'எர்த் கனெக்ஷன்' தரவேண்டும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால், அங்குப் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் பாதுகாப்புக்கு ELCB (Earth leakage circuit breaker)  என்ற கருவியை மெயினில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு.

 பாத்ரூம் இணைப்புகள்!
பாத்ரூமில் நாம் ஏற்கெனவே குழாய்கள் பதித்து வைத்துள்ளோம். இதில் தேவையான ஃபிட்டிங்குகளைப் பொருத்தவேண்டும். முக்கியமாக, வால் மிக்ஸர் அவசியம் அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் சுடுதண்ணீர் மற்றும் சாதாரணத் தண்ணீர் இரண்டையும் பிரித்துக் கொடுக்கும். பொதுவாக, இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனத்தில் சிறப்பாக இருக்கும். எல்லாப் பொருட்களையும் ஒரே நிறுவன பொருட்களாக வாங்குவதைவிட, நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

முன்பு இந்தியன் மாடல் டாய்லெட்கள்தான் எல்லா வீடு களிலும் பொருத்தப்பட்டு வந்தன. இப்போது மெள்ள மெள்ள வெஸ்டர்ன் டைப் டாய்லெட் செட்டுகள் பல வீடுகளில் வரத் தொடங்கிவிட்டன. தற்போது கட்டப்படும் வீடுகளில் இளவயதினருக்கு இந்தியன் மாடல் டாய்லெட்டையும் வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், வெந்நீர் பைப்புகள், ஷவர், முகம் கழுவும் பேசின், இதற்கு அருகில் வைக்க ஒரு ஸ்டாண்ட், துண்டு போடுவதற்கான ராடு, பாத்ரூம் கிளீனிங் பொருட்கள் வைப்பதற்கான கப்போர்டுகள் அல்லது ஸ்டாண்ட், வயதானவர்கள் பிடித்துக்கொள்ள வசதியான கைப்பிடிகள் ஆகியவற்றைப் பொருத்துவது அவசியம்.

இதுதவிர, எக்ஜாஸ்ட் ஃபேன், பாத்ரூமில் நல்ல வெளிச்சம் கிடைப்பதுபோல கிரவுன்ட் கிளா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts