லேபிள்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே
செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.

5. PAN CARD - ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2)
 வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3)
 ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4)
 அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசியம்.
5)
 ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6)
 வங்கி கணக்கு துவங்கும் போது.
7)
 தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8)
 தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9)
 ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10)
 வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11)
 சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12)
 முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.
"மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை http://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or) www.incometaxindia.gov.in, ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய

இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி
1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ்
2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ்
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில்
5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு
6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது
7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட்
8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை
9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம்
10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணையத்தளத்தை நாடலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
C - Company
P - Person
H - HUF(Hindu Undivided Family)
F - Firm
A - Association of Persons (AOP)
T - AOP (Trust)
B - Body of Individuals (BOI)
L - Local Authority
J  - Artificial Juridical Person
G - Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 13 நவம்பர், 2015

CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி ?

பென்டிரைவில் தகவல்களை எளிதாக சேமிக்க முடிவதோடு  தேவை இல்லாத போது அதை அழித்து விட்டு வேறு தகவல்களை சேமித்துக்கொள்ளலாம் என்பதால் இன்றைய தொழில்நுட்ப உலகில் பென்டிரைவ் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது 1GB, 2GB என ஆரம்பித்து 1TB , 2TB என சேமிப்பகங்களின் கொள்ளளவு அதிகரித்து கொண்டே செல்கிறது சரி வாருங்கள்  நாம் CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி என்று அறிவோம் .
CD / DVD ஆனது Read only Memory எனப்படும் ROM வகையைச்சார்ந்தது அதில்  நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் ஒரு முறை தகவல்களை எழுதிவிட்டால் அதை அழிக்க முடியாது ஆனால் அதை எத்தனை முறை வேண்டுமானலும் படித்துக்கொள்ளலாம் . Read and Write எனப்படும் CD / DVD களும் கிடைக்கின்றன ஆனால் அவற்றின் விலை மிக அதிகம்
நாம் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD யை பொன்டிரைவ் போல பயன்படுத்த போகின்றோம் .
பென்டிரைவ்கும் CD / DVD க்கும் ஒரு வித்தியாசம் உண்டு பென்டிரைவ்வில் நாம் வெட்ட(Cut) ,  நகலெடுக்க (Coppy ) , ஒட்ட (Paste  ) தகவல்களை அழிக்க முடியும் ஆனால் CD / DVD யிலிருந்து நகலெடுக்க மட்டுமே முடியும் நமது  CD / DVD களிலும் பென்டிரைவ் போல வெட்ட,ஒட்ட,நகலெடுக்க தகவல்களை அழித்தல்  போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும் அதில் தகவல்களை எழுத நீரோ போன்ற மென்பொருட்களும் தேவை இல்லை  இந்த செயல்பாடுகளை செய்வதற்கு உங்களிடம் வின்டோஸ் 7 அல்லது வின்டோஸ் 8 ஆபரேட்டிங்சிஸ்டம் இருக்க வேண்டும் . 
நீங்கள் புதிய CD / DVD யை உங்களது டிரைவில் போட்ட உடனே
பின்வரும் புதிய வின்டோ திறக்கும்  இதில் Burn files to disc என்பதை தேர்வு செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்
அதில் Like a USB Flash Drive என்பதை தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களது CD / DVD ஆனது Formatting ஆக தொடங்கும் சில வினாடிகளுக்குப்பிறகு பின்வரும் விண்டோ திறக்கும் அவ்வளவுதான் நன்பர்களே உங்களது CD / DVD ஆனது பென்டிரைவ் போல மாறிவிட்டிருக்கும்  இனி உங்களாது CD / DVD யில் Cut ,Copy, Paste போன்ற செயல்களை செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்களாது CD / DVD யில் இருக்கும் தகவல்களை அழித்துவிட்டு(delete) மீண்டும் புதிய தகவல்களை எழுதிக்கொள்ள முடியும்   இந்த செயல்களை செய்யத்தானே அதிக செலவு செய்து பென்டிரைவ்களை வாங்குகின்றோம்  மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD க்களிலே இந்த செயல்களை செய்து கொண்டால் பென்டிரைவ் வாங்கும் செலவு மிச்சந்தானே அதுமட்டுமில்லாமல் பென்டிரைவ் இல்லாத சிக்கலான சூழ்நிலைகளில் CD / DVD யை பென்டிரைவ் போல பயன்படுத்திக்கொள்ளலாம் பயன்படுத்தி பாருங்கள் நன்பர்களே . உங்களுக்கு பயன்பட்டால் சமூக வலைதளங்களில் பகிருங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 11 நவம்பர், 2015

டெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping )

அவசரமாய் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய பூமிப் பந்தில் நிறைய மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் "வியாபாரம்" என்ற ஒன்று அசுர வளர்ச்சி கண்டு வருகிறது! அதிலும் குறிப்பாக "டெலி-ஷாப்பிங்". முன்பெல்லாம் ஒரு இலவச எண்ணை கொடுத்து அதில் அழைத்தால் போதும் வீடு தேடி வரும் எங்களின் பொருள் என்று வாய் கிழிய கூவிக்கொண்டிருந்த வெள்ளைக்காரி, வெள்ளைக்காரனையும் சமீப காலமாக காணோம்! மாற்றம் வேண்டுமல்லவா ?

திடீர்னு பார்த்தா நம்ம ஊரு அண்ணாச்சி, அயல்நாட்டுக்காரனுக்காக அடி வயிறு குலுங்க குலுங்க கூவிக் கொண்டிருக்கிறார்! (இங்க தான் நாம வால்மார்ட்டை எதிர்ப்பதை மனசில் வைத்துக்கொள்ளவேண்டும்) ஒரே ஒரு டேபுள் தாம்யா, 18 வகையான பயன்பாட்டினை கொண்டது என்று, படிக்கலாம், எழுதலாம்,  நறுக்கலாம், உண்ணலாம் என்று ஏகப்பட்ட புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார். 

இவிங்க சொல்ற பயன்பாடுகள்
 அனைத்துமே சாதரணமாக அன்றாடம் நாம் செய்யும் அன்றாட/அவசிய செயல்கள் தான். இதில் சொகுசு என்ன வேண்டி கெடக்கு? சோறு திங்க வலிக்குதுன்னா என்ன #@:+=க்கு சாப்பிடனுங்கறேன்! முதியோர்களால் முடியாது என்று சப்பை கட்டு வேறு! தெரியாமத்தான் கேக்குறேன் முப்பது வயசை எவன்யா முதியோர்கள் லிஸ்டில் சேர்த்தது ?  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதே அவனுங்க தான் என்பதை உணர மறுக்கும் சோம்பேறி மக்களை வைத்துக்கொண்டு என்னைக்கு நாம முன்னேறுவது ...?

மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்று சொல்வதில் பெரிய நுண்ணரசியலே ஒளிந்திருக்கிறது! ஒத்த ரூவாய்க்கு போன் பக்க வக்கில்லாதவன் எப்படி சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குவான் என்று
 யோசிக்கிறதில்லை என நண்பர் ஒருத்தர் ஏளனமாய் சொன்னார். சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குபவனுக்கு ஒரு ரூபாய்க்கு கால் பண்ண தகுதி இருக்காதா? என்று ஏன் அவன் யோசிக்கவில்லை என்று நான் கேட்டேன்! மொத்தத்தில் எலி பொறிக்குள் இருக்கும் வடை மட்டுமே நம் கண்ணுக்கு பிரதானமாக தெரிகிறது, சுற்றி இருக்கும் கண்ணி கண்ணுக்கு தெரிவதில்லை, தெரியப் போவதுமில்லை! (இங்கு இலவசத்துக்கும், விலையில்லா பொருளுக்கும் முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்)   
அவனுக்கு நம்மை பற்றியும், நம்மின் கவர்ச்சி மோகம் பற்றியும் துல்லியமாய் தெரிந்து வைத்திருப்பதினால் எப்படி கொள்ளை அடிக்க முடியுமோ ? அப்படி திட்டம் போட்டு கொள்ளை அடிக்கிறான்! அதுக்கு நம்ம ஊரு நடிகனுங்க கூஜா தூக்கி வயிறு கழுவுவது தான் கண்றாவியாக இருக்கிறது. அடிக்கடி வந்து தொலையும் அந்த விளம்பரத்துல வரையலாம்னு சொல்லி உருண்டையா ஒரு பாப்பா படம் வரையுற மாதிரி காட்டுறான், நாமளும் நம்ம புள்ளை வலிக்காம வரையட்டுமே!  என்று வாங்கி கொடுத்து அகமகிழும் நாம் தான் நான்கு கிலோ மீட்டர் நடந்து போய் படித்தோம் என்பதை எளிதில் மறந்து விடுகிறோம். இப்படி எல்லாத்துக்குமே சொகுசாக உடலை பழக்கி விட்டால் முப்பது வயசுல மூட்டு வலி வராம வேற என்ன வரும் ?

ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் நாம், எளிதில் கிடைக்கிறதே என்று வாங்கி மனசையும், உடலையும் பாழாக்கி கொள்வது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர் பொருளாதாரங்களை, அதை நம்பி தினசரி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்களை நசுக்கி கொண்டிருக்கிறோம். இதன் விளைவுகள் எவ்வளவு பெரிய
 தாக்கத்தை உண்டு பண்ண போகிறதோ ? என்று எண்ணி பார்த்தால் மூச்சு திணறுகிறது. மீண்டும் ஒரு அடிமை வாழ்வுக்கு நாம் நம்மை தயார் படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது! 

நான் ஸ்டிக் வந்ததிலிருந்து, மண் சட்டி, நம்மூர் பாத்திரப் பொருட்கள் அனைத்தும் முகவரி இழக்க தொடங்கவிட்டது! அதை சார்ந்த தொழிலாளர்களின் நிலை ? இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்! நடிப்பவன் நடித்துக் கொண்டு தான் இருப்பான், நாம் ஏன் ஏமாற வேண்டும்! உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, பிறகு உலகப் பொருளாதாரம் நோக்கி நகரலாம்!
 ஏமாற்றுவது குற்றமல்ல, ஏமாறுவது தான் குற்றம் என்கிற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 9 நவம்பர், 2015

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் உள்மன ஆய்வு மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.
10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.
முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?
- வாசகர்: இளைய வைகை
Source : http://www.archive.inneram.com/2010110811723/10-principles-for-peace-of-mind


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 7 நவம்பர், 2015

செலவு வைக்கும் “பல்” பிரச்சனை

ற்போது நம் உடல் சம்பந்தப்பட்ட சிறியளவு பிரச்சனைகளில் பெரியளவு செலவு வைக்கும் பிரச்சனையாக "பல் பிரச்சனை" உருவெடுத்து இருக்கிறது. தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே துவங்கி விடுகிறது. இதற்கு காரணமாக இனிப்பு, பாக்கு, பற்களை சரியாக பராமரிக்காமை என்று அனைவருக்கும் தெரிந்த பட்டியல் இருக்கும்.
என்னுடைய சிறிய வயதில் எங்கள் வீட்டில் எனக்கு சாக்லேட் அதிகம் கொடுத்தது இல்லை. இதன் காரணமாகவோ என்னவோ எனக்கு சொத்தைப் பல் மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் இதுவரை வந்தது இல்லை.
ஏற்கனவே பல குழந்தைகள் அதிகம் சாக்லேட் சாப்பிட்டு பற்கள் படு மோசமாகி வலியால் அவதிப்பட்டதை கண்ணுற்றதால், என்னுடைய மகன் வினய்க்கு சாக்லேட் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பேன். அவன் என்னை தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி என்று அதிகம் சாக்லேட் சாப்பிட விட மாட்டேன். அப்படியும் மற்றவர்கள் கொடுப்பது, இவன் அம்மா கொடுப்பது என்று சாப்பிட்டு விடுவான். ஓரளவுக்கு தான் தடுக்க முடியும் அதற்கென்று ரொம்ப முறுக்கிட்டும் இருக்க முடியாது. நான் என் மனைவி கிட்டே சொல்லிட்டே இருப்பேன் அவனுக்கு கொடுக்காதே! என்று. எதிர்பார்த்தது போல சொத்தைப் பல் ஆகி விட்டது. செம டென்ஷன் ஆகி விட்டது.
பல் வலி நான் அனுபவித்தது இல்லை ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். சாப்பிட, பேசக் கூட முடியாது என்று கூறக் கேட்கும் போதே எனக்கு வலிக்கும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை . அந்த அளவிற்கு கொடுமையானது என்று கூறுவார்கள். இது போன்று வினய்க்கு ஆகி விடக் கூடாது என்பது என்னுடைய கவலை. கடந்த வாரம் இரவு பல் வலி என்று வினய் அழுது பின் சரியாகி விட்டது. சரியாக சாப்பிடுவதில்லை என்று என்னுடைய மனைவி இவனை கோயமுத்தூரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று இருந்தார். குழந்தைகள் சரியா சாப்பிடாம இருப்பது பெரிய விசயமில்லை, இருந்தாலும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டுக்கலாம் என்று பெற்றோருக்கே உண்டான மன நிலையில் சென்று இருந்தார்.
அதற்கு மருத்துவர் ஆலோசனை கூறி விட்டு இவனுக்கு பல்லில் சொத்தை இருக்கிறது என்று சாக்லேட் கொடுக்காமல் ஒரு பென்சிலும் ரப்பரும் கொடுத்து இருக்கிறார்கள். இதன் பிறகு இவர் கூறியது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதாவது இரவில் குழந்தைகள் படுக்கப் போகும் முன் பால் அருந்துவதால், அதில் உள்ள சக்கரையால் சொத்தைப் பல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தாராம். நம்மில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது அல்லது தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூக்கத்திலேயே பால் கொடுப்பது வழக்கம். எனவே இது முக்கியமாகப் பட்டது.
குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தாலும் எப்படியாவது பால் குடிக்க வைத்து விடலாம். சரியாக சாப்பிடவில்லை என்றால், சரி! பாலையாவது குடித்தால் உடல் தெம்பாக இருக்கும் என்று எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இரவு படுக்கும் முன்பு பால் கொடுப்பார்கள். அதோடு பால் சத்துள்ளது என்ற இயல்பான எண்ணமும் ஒரு காரணம்.
இவர்கள் சென்று வந்த பிறகு இவர்களிடம் தொலைபேசியில் பேசினேன்..
டேய்! டாக்டர் என்னடா சொன்னாங்க
அப்பாபாபாபா! நானுனுஊசி போட்டாங்களா.. அழுகவே இல்லைஸ்ட்ராங் பாய். அதனால எனக்கு டாக்டர் பென்சில், எரேசர் கொடுத்தாங்க
சரி! உனக்கு சாக்லேட் ஏன் கொடுக்கலைனு சொல்லவே இல்ல..
அது.. எனக்கு சொத்தைப் பல் இருக்குனு தரல [தவறு அவனுக்கு புரிந்ததால் அசட்டு சிரிப்பு சிரிச்சான் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை ]
நான் டெய்லி நைட் பிரஷ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. டாக்டர் என்னை தூங்குறதுக்கு முன்னாடி டெய்லி பிரஷ் பண்ண சொன்னாங்க என்று நீட்டி முழக்கினான்.
எப்போதுமே நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும் அதோட தொடர்புடைய / அது போல செய்திகள் நாம் கேட்க நேரிடும். இது உங்களுக்கு நடக்கிறதா என்று தெரியலை, எனக்கு அடிக்கடி நடக்கும். இரவு என்னுடைய அக்காவுடன் தொலைபேசியில் பேசிய போது அவருடைய மகளுக்கும் இது போல பிரச்சனை என்று கூறினார். அந்த டாக்டரும், இரவில் பால் குடிப்பதால் சொத்தை வரும் என்று கூறியதாக கூறினார். அதோடு இரவில் பால் குடித்து பல் துலக்கினாலும் இந்தப் பிரச்சனை இருக்கும். எனவே, மாலை மட்டும் பால் கொடுங்கள் இரவில் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகக் கூறினார்.
எனக்கு இது குழப்பமாக இருந்தது. இரவில் பால் குடித்தால் சொத்தைப் பல் வரும் என்பது லாஜிக்காக இருந்தது ஆனால், பல் துலக்கிய பிறகும் எப்படி சாத்தியம் என்று கேட்டேன். அது பல் இடுக்குகளில் இருக்கும், போகாது என்று கூறியதாகக் கூறினார். எனக்கு இது சந்தேகமாகவே இருக்கிறது. இதைப் படிக்கும் உங்களில் யாராவது நிச்சயம் இது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனவே பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் பல் விழுந்து இயல்பான பற்கள் முளைக்கும் போது இந்த சொத்தைப் பல் பிரச்சனை சரியானால் பரவாயில்லை. முன்பே சிகிச்சை எடுக்காமல் வேரிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் பால் பற்கள் விழுந்து புது பல் முளைக்கும் போதும் இந்தப் பிரச்சனை தொடரும். சரியாக கவனிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பல் வலி நமக்கு "தலைவலியாக" மாறி விடும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை . பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.
இதைப் பற்றி நான் எழுதி இருக்க மாட்டேன் ஆனால், என்னுடைய தளத்தை பல குடும்ப இஸ்திரிகளும் இஸ்திரன்களும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை படிப்பதால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று இங்கே எழுதுகிறேன். எல்லோருடைய குழந்தைகளும் ஒன்று தானே! அதோட குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப விருப்பம். இது வரை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே சொத்தைப் பல் வருகிறது என்று நினைத்து இருந்தேன். இது போல ஒரு கோணத்தில் யோசித்தது இல்லை. அதை விட முக்கியம் இது போல யார் கூறியும் இதுவரை நான் கேட்டதில்லை. என்னைப் போல தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.
பற்களுக்கு ஆகும் செலவை நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. தற்போது இருக்கும் விலை வாசி உயர்வில் ஏற்கனவே பலர் திண்டாடிட்டு இருக்காங்க.. அதில் இந்த செலவும் அடிக்கடி சேர்ந்து கொண்டு பலரை பாடாய் படுத்துகிறது. சிங்கப்பூரில் ஒரு பல்லை பிடுங்க ஆகும் செலவை கேட்டு எனக்கு தலை சுற்றி விட்டது. என்னுடைய பரிந்துரை, குழந்தைகளுக்கு அதிகம் சாக்லேட் கொடுத்து பழக்காதீங்க, இரவில் தூங்கப் போகும் முன் பல் துலக்குவதை அவர்களுக்கு ஒரு வழக்கமாக உணர வையுங்கள். இன்று அவர்களுக்கு அது சிரமப் படுத்துவது போல தெரிந்தாலும் அவர்கள் வளர்ந்து நிச்சயம் உங்களை வாழ்த்துவார்கள், பிரச்சனைகள் இல்லாத பற்களுக்காக.
பலரின் அனுபவங்களைக் கேட்கும் போது, பெரியவர்கள் பல் பிரச்சனைகளுக்காக தற்போது செலவு செய்வது ரொம்ப அதிகம் ஆனது போல தோன்றுகிறது. ஒரு முறை சென்று வந்தாலே 4000 சர்வசாதரணமாக வருவதாகக் கூறினார்கள். ஆலோசனைக் கட்டணமே [பெரியவர்களுக்கு] 5000 வாங்கினார் என்று என் அக்கா கூறிய போது மிரட்சியாக இருந்தது. இது போல தற்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு பல்லுக்கு 1000 என்றும், தள்ளுபடியால்!! 750 ருபாய் என்று கூறினார். என்னங்கய்யா நடக்குது?!
அதனால் மக்களே! பற்களை சரியாகப் பராமரியுங்கள் அதோட எதுவும் பிரச்சனை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்து சரி செய்து கொள்ளுங்கள். செலவாகும் என்று தள்ளிப்போட்டால் பின்னால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செலவை வைக்கும். இதனால் நானும் இப்ப உஷார் ஆகிட்டேன். மனுஷங்க இருவகை, பிரச்னையை கேள்விப்பட்டு தன்னை திருத்திக்கொள்பவர்கள். இரண்டாம் வகை பட்டால் மட்டுமே திருந்துபவர்கள். தம்மடிப்பவர்கள் எல்லாம் இரண்டாம் வகையில் வருவார்கள் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை நான் முதல் வகை நீங்கள் எந்த வகை?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். உறுதியான பற்களைக் கொண்டவர்கள் கரும்பைக் கடித்து கொண்டாடவும் மற்றவர்கள் பொங்கல் சாப்பிட்டு & கரும்பு ஜுஸ் குடித்து கொண்டாடவும் சிறப்பு வாழ்த்துகள் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை .


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மூட்டு வலிகளால் தொல்லையா - என்ன செய்யலாம்

வலிகள் என்றுமே துயர் தருவன. விரல்கள், முழங்கால், கழுத்து, இடும்பு, தோள் மூட்டு என எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளனவோ அங்கெல்லாம் வலி வரலாம்.

சிலர் ஓரிரு மூட்டு வலிகளுடன் தப்பிவிடுவர்.
எவ்வாறாயினும் நீங்கள் அவற்றில் அக்கறை எடுத்து பராமரித்து வருவதன் மூலம்
  • உங்கள் வேதனைகளைத் தணிக்க முடியும்.  
  • அவற்றின் செயலாற்றும் திறன் குன்றாமல் தடுக்கவும் முடியும். 
  • அத்துடன் உங்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். செலவைக் குறைப்பது என்பது நீங்களாக மருந்தை நிறுத்துவது என அர்த்தம் அல்ல. மருத்துவ ஆலோசனையுடன் சில மருந்துகளின் அளவைக் குறைக்கவோ மாற்றவோ முடியும் என்பதேயாகும்.
தினமும் ஏதாவது உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சி செய்வதன் மூலம் மூட்டுகளின் செயற்பாட்டை குறையவிடாமல் தடுங்கள். தினமும் 30 நிமிடங்கள் செய்வது நல்லது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் இயலாததாயின் 10 நிமிடங்கள் செய்யுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள்.

உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்றதாக அளவாக வைத்திருங்கள். உடலுக்கு ஏற்ற எடையை, உடற் திணிவுக் குறியீடு
 (Body mass Index – BMI)  என்பதாக கணக்கிடுவர். இது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரையோ இணையத்தையோ நாடுங்கள்.

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

எடை அதிகமாக இருந்தால் அது மூட்டுகளுக்கான வேலைப் பழுவை அதிகரித்து அவற்றை மேலும் சேதமாக்கும். எடைக் குறைப்பிற்கு ஏற்றதாக கொழுப்பு இனிப்பு மாப்பொருள் குறைந்த போசாக்கான உணவு முறையைக் கடைப்பிடியு;கள். உடற் பயிற்சி மூலமும் குறைக்க நடவடிக்கை எடுங்கள்.

உங்களது தொழில் அல்லது நீங்கள் செய்யும் உடற் பயிற்சியானது ஓரு சில மூட்டுகளுக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக இருந்தால் அதற்கு ஊறு ஏற்படலாம்.அவ்வாறின்றி மாற்றி மாற்றி வேலை அல்லது பயிற்சி கொடுப்பது உதவும்.

பெரும்பாலன மூட்டு நோய்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை தேவை. அது மாதம் ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஓரு தடவையோ என நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். மருத்துவர் சொல்லும் காலக்கெடுவில் அவரை தவறாது சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/01/blog-post.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 5 நவம்பர், 2015

ஆன்லைனில் பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி..?

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.https://passport.gov.in/pms/Information.jspContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்.

Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) 
First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும் Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும் Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) Place of Birth: பிறந்த ஊர் District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு Profession: தொழில் Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) Height (cms): உயரம் Present Address: தற்போதைய முகவரி Permanent Address: நிரந்தர முகவரி Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை Phone No: தொலைபேசி எண் Mobile No : மொபையில் எண் Email Address: இமெயில் முகவரி Marital Status: திருமணமான தகவல் Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர் Mother's Name: தாயார் பெயர் தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும் உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண் Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள் Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம் File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்) Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம். முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு) · ரேசன் கார்டு · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · வாக்காளர் அடையாள அட்டை · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) · துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_ · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் ·
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும் வேறு சான்றிதல்கள் · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும் · உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். · பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்
http://iminder.blogspot.in/2014/01/blog-post_22.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 3 நவம்பர், 2015

உறவுகளை உதாசினப்படுத்தாதீர் !

முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிறது. சொந்தபந்தங்களை தூக்கிஎறிந்தும், வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் வஞ்சிக்கப்படுவதும் வயதில் மூத்தவர்களோ கேலிக்கு ஆளாக்கவும்படுகின்றனர்.காசுபணம் உள்ளவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.தூக்கிவளர்த்த உறவினர்கள் தூரமாக்கப்படுகிறது. குடும்பப்பிரச்சனைகள் மூன்றாம் நபர்கள் அறியும்படி வீதிக்கு வருகிறது.இப்படிப்பட்ட அவலநிலைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
  உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லலாம் அதில் முதலிடம் பெறுவது பணவசதியாகத்தான் இருக்கமுடியும் ஆவதும் பணத்தாலே அழிவதும் பணத்தாலே என்று சொல்வது போல பணவசதிகளைப் பொறுத்து உறவுமுறைகள் மதிக்கப்படுகின்றது.வசதி நிறைந்த உறவினர்களிடம் போலியான பாசம்காட்டி மிக அருகாமையில் அவர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உறவினர் என்றதோற்றத்தை தனது உயரிய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டு உள்ளொன்றும் புறமொன்றுமாய் இருமாப்புடன் உள்ள இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து சொலவதானால் காலம் செல்லச் செல்ல விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் மனிதர்கள் தன் கவனத்தை முழுமையாக வேறுபக்கம் திருப்பி மாற்றலாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்விளைவு குடும்ப உறவினரின் அன்பு பாசமென்பது நம்மையும் அறியாது நாளுக்கு நாள் விலகிச்சென்று கொண்டிருக்கின்றது. இடைப்பட்ட புதுப்புது சொந்தங்கள் மிக அன்னியோனியமாகவும் நெருங்கிய இரத்த சொந்தங்கள் யாரோ எவரோ போல வெகு தூரமாக விலகிப் போயிருப்பதும் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாத்தன்மையில் விலகிப் போகும் இத்தகைய உறவினர்களின் தவறான முடிவினால் ஏதும் அறியா குழந்தைகள் கூட உறவுகளின் பாசத்திற்கு ஏங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளடைவில் என்ன உறவு முறையென்று கூட தெரியாமல் போய் விடுகிறது.
உதாரணத்திற்குச் சொல்வதானால் தனது சொந்த சகோதரர், சகோதரியின் பிள்ளைகளுடைய பெயர் கூட சரியாகத் தெரியாமல் இருப்பவர்களும் உண்டு. அதே சமயம் தனது மனைவி வழிச் சொந்தங்களின் பெயர் மற்றும் விபரங்களை மறக்காமல் அறிந்து வைத்து இருப்பார்கள்.காரணம் காலப்போக்கில் அவர்களது அன்பைப்பெற்று அங்கு தனது பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டி அந்த புதுவழிச் சொந்தங்களிடம் பாசம் காட்டி தன்னாலான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தேவைகள் பூர்த்தியானதும் வளர்த்தகிடா மார்பில் பாய்வதுபோல் அவர்களின் உண்மைக் குணத்தைக் காண்பித்து உறவினர்களை உதாசினப்படுத்தி உறவை முறித்துக் கொள்கிறார்கள்.. பாதிக்கப்படுபவர் தன்னிலையை நினைத்து வேதனைப் படுவதுதான் மிச்சமாக இருக்கும். இதுவே தற்ப்போது நடை முறையில் நடந்து கொண்டு இருக்கும் உண்மை நிலையாகும்.
தனது சொந்தபந்தம் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.பெரியோர்களை மதித்து நடத்தல் உறவுகளை மதித்து பேசுதல் உள்ளன்புடன் பாசம் வைத்தல் ஆகியவை மனதினில் ஆழப்பத்திந்து இருக்க வேண்டும்.இப்படி இருப்பதன் மூலம் உறவுகளில் பிளவு வர வாய்ப்பில்லாமல் இருக்கும்.
எது எப்படியிருந்தாலும் கடைசியில் நமக்குக் கைகூடி நிற்ப்பதும் எங்கோ ஒரு மூலையில் இருந்து நம் நிலைமையை நினைத்துக் கவலைப்படுவதும் நமது இரத்த உறவாகத்தான் இருக்கும். ஆகவே இதைஅனைவரும் உணர்ந்து நமது வாரிசுச் சொந்தங்கள் பாசத்திற்கு ஏங்காமல் ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளித்து தனது உறவுகளை கைவிட்டு விடாமல் கூடி வாழ்வோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்லா வாழ்க்கையில் நம் சன்னதிகள் தொடர உறவுகளைப் பிரியாமல் ஒற்றுமையுடன் தொடர்ந்து மகிழ்ந்திருப்போம்
ஆகவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறலாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப உறவுகளை உதாசினப்படுத்தாமல் உள்ளன்புடன் நேசிப்போமாக.!!!
அதிரை மெய்சா
நன்றி http://nijampage.blogspot.ae/2014/01/blog-post_6544.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பல நாட்டு பழமொழிகள்!

அமெரிக்க பழமொழிகள்
  1.      உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு
  2.      வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
  3.      நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  4.      பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
  5.      தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
  6.      பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
  7.      சொந்த் நாற்காலியில்தான்  சுகமாக உட்காரமுடியும்.
ரக்ஷ்ய பழமொழிகள்
  1.      பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
  2.      திருடின விறகும் எரியும்.
  3.      விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
  4.      நோயாளிக்கு தேனும் கசக்கும்.
  5.      பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
  6.      மனைவிக்கு கணவனே சட்டம்.
  7.      பன்றி்க்கு உணவு நேரம் எது?.
ஸ்பெயின் பழமொழிகள்
  1.       பெண்கள் கிடைததை விரு்ம்பமாட்டார்கள்,மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
  2.       விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
  3.       அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
  4.       கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
  5.       எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.
இத்தாலி பழமொழிகள்
  1.       வாலைஆட்டினால்தான் நாய்க்குகூட உணவு கிடைக்கும்.
  2.       குழந்தை இல்லாதவனுக்கு அன்புதெரியாது.
  3.      இதயம் குறைவானால் நாவு அதிகம்.
  4.      நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்.
  5.       5.உன் பகைவனே உன்னை அறிவாளி ஆக்குபவன்.
  6.       6.தாமதித்து வருபவன் மிச்சம் உள்ளதையே உண்ணவேண்டும்.
கிரீஸ் பழமொழிகள்
  1.     இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
  2.     ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
  3.     பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
  4.     அதிர்ஸ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
  5.     நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
  6.     ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.
ஆப்பிரிக்க பழமொழிகள்
  1.    பல ப்ழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால்,கடைசியில் அழுகிய ப்ழங்களைத்தான் வாங்க நேரிடும்.
  2.    மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
  3.    கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
  4.    செல்வம் தேயும்,கல்வி வள்ரும்.
  5.    பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
  6.    வீட்டுத் தலைவன்மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
  7.    நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்கவேண்டும்.
எஸ்டொனிய பழமொழிகள்
  1.  மல்ட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
  2.  நீ எதற்கு அஞ்சுகிறாயோ அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
  3.  உங்களை நேசிப்பவகளைவிட ,வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால்- பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  4.  தொழில் தெரிந்தவனிடம்  வேலையே நடுங்கும்.
  5.  காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.
தொகுப்பு எழிலன்.
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts