லேபிள்கள்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்


ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன. நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற விசயங்களை இன்று பார்ப்போம்.

1. Return Policy
 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.

இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும்  பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.

2. Shipping Cost and Time

இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை தவிர்த்தல் நலம். 

இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.

பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை Registered Post வாயிலாக அனுப்புகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.

அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும் Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில் சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள் கிடைத்து விடும்.

உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச் செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள் உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம் செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.

3. Cash Back
 

ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள்.

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.

4. Product Quality & Customer Review
 

பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை.

பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான் செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க வேண்டும்.

குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.

eBay
தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட விற்பனையாளருக்கு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.

5. Payment Options 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன. ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை கவனியுங்கள்.

பணம் செலுத்தும் பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.வெறும் HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.

இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.

EMI
மூலம் வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும். அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில் Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு பணம் மிச்சம் ஆகும்.

6.
மற்ற விஷயங்கள்
·         பொருளுக்கு வரும் இலவசங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
·         ஆர்டர் குறித்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை Delivery ஆகும் வரை டெலீட் செய்யாமல் வைத்து இருங்கள். 
http://www.karpom.com/2013/01/Things-To-Remember-While-Shopping-Online.html

--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா? உஷார்


வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டன.
 இவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும்.

 இதன் மூலம் நம் கணக்கினைக் கண்காணிக்கலாம்; நிதியை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றலாம்.பில்களைச் செலுத்தலாம். டிக்கட் எடுக்கலாம், என வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நம் பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருட்டுத்தனமாகப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.

இவை பிரபலமான வங்கிகளின் இணைய தளம் போலவே தளங்களைத் தயார் செய்து, நம்மை ஏமாற்றி அதில் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் என்டர் செய்திட வழி தந்து அவற்றைப் பெற்றுவிடுகின்றனர்.

பின் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எளிதாகத் திருடுகின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குகளில் இந்த திருட்டு அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

1. முதலாவதாக இந்த வங்கிகளிலிருந்து உங்கள் இமெயிலுக்கு ஏதேனும் இமெயில் மெசேஜ் வந்தால் அவற்றைத் திறக்கவோ, அல்லது திறந்த பின்னர் அதில் காணப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்திடவோ வேண்டாம். இது போன்ற மெயில்களை இந்த பேங்குகள் அனுப்புவதில்லை.

2. இந்த வங்கிகளின் தளங்களை அணுகிய உடனேயே அதன் முகவரியைப் பார்க்கவும். அதில்
 https என்ற எழுத்துக்களில் முதல் முகவரி சொல் இருக்க வேண்டும். இதில் s என்பது செக்யூரிட்டி என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிப், பாதுகாப்பான தளம் என்பதைக் குறிக்கிறது. இந்த s இல்லை என்றால் அது போலி. எனவே உடனே வெளியேறவும்.

3. பூட்டு மாட்டும் பேட்லாக் சிறிய படம் ஒன்று இந்த தளத்தின் அதே முகப்புப் பக்கத்தில் எங்கேணும் இருக்கும். இது பெரும்பாலும் அட்ரஸ் பாரின் ஓரத்தில் அல்லது கீழாக ஒரு இடத்தில் இருக்கும். இதன் மீது கிளிக் செய்தால், இந்த தளம் குறித்த பாதுகாப்பு சர்டிபிகேட் கிடைக்கும். இந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சி இதுவாகும்.

4. அட்ரஸ் பாரின் முகவரிக்கு முன்னால் உள்ள பாகம் பச்சை நிறமாக இருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும். இதுவும் இந்த தளம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.

5. மேலும் இந்த தளங்களில் லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் தரப்பட்டிருக்கும். ஏதேனும் பாப் அப் விண்டோ கொடுத்து, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் தர வேண்டாம். தளத்தைவிட்டு வெளியேறவும்.

இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும்.

ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது.

சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்.
 http://www.anbuthil.com/2012/12/online-banking.html#ixzz2HrVKghNJ

--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 13 செப்டம்பர், 2013

இன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல!

புகழனைத்தும் விண்ணையும், மண்ணையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும், நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எனது சகோதரியின் அழைப்பிற்கிணங்க அவளுக்கு துணையாக அவளுடைய தோழியின் திருமண வைபவத்திற்கு சென்று இருந்தேன். அங்கு உறவினர்கள் என்றோ அல்லது நண்பர்கள் என்றோ அல்லது அறிமுகமானவர்கள் என்றோ சொல்வதற்கு எவரும் இல்லை, என்னுடைய சகோதரியை தவிர. முஸ்லிம் என்ற வகையில் மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பது. அந்த ஸலாமுக்கு பதில் கூட அளிக்க முடியாத அளவிற்கு, திருமண மண்டபத்தில் ஏகப்பட்ட பரபரப்பு. ஸலாம் சொன்னால் அதற்கு பதில் கூட அளிக்காமல், இந்த உலகில் அப்படி எதை தான் சாதிக்கப் போகிறார்கள்?.  எனது சகோதரியோ, "நாம் இங்கு ஏன்டா வந்தோம்" என்பது போல என்னை பார்ப்பதை அவளது பார்வையின்  மூலம் புரிந்து கொண்டேன் .

பொதுவாக  நிக்காஹ் வைபவங்களில் ஆண்கள் ,பெண்கள் என்று மண்டபத்தில் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு, ஆண்களும் பெண்களுமாக மண்டபமே நிரம்பி வழிந்தது .இங்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி இருப்பர்களா? என்ற சந்தேகம் வரவே , ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம்.  திருமண மண்டபத்தில் வந்திருந்த (மணமகள் உட்பட) அனைவரையும் காணும் பொழுது,   முஸ்லிமாகிய நாம்  உண்மையில் இஸ்லாமியர்களின் நிக்காஹ் என்னும் திருமண வைபவத்திற்குத் தான் வந்து இருக்கோமா என்ற சந்தேகம் ஒரு புறமும், நாளை நாமும் அல்லாஹ்விடத்தில் இதற்கு சாட்சியாக வேண்டும் என்ற எண்ணம் மறுபுறமும் என்னை ஆட்டிப்படைத்தது. நமது சமுகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது ?

நிற்க!
தற்போதுள்ள அறியாமையில் மூழ்கி கிடைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள் எல்லாம் நிகழ்கிறது என்பதை பார்த்துவிடலாம்!
  • திருமணத்திற்கு முன்பே திருமணத்தை போன்றே  ஆரம்பரமாக நடத்தப்படும் நிச்சயதார்த்தம்!
  • நிச்சயதார்த்தத்தன்று பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டில்  பால்குடமும் பாலும், 100க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் முட்டையும் , இன்னபிற சீர் வகைகளும் வைப்பது!
  • திருமணத்திற்கு சில இடங்களில் சுமங்கலிகளுக்கு மட்டும் வைக்கபடும் வாவரிசி  விருந்து!
  • மருதாணி வைக்கும் நிகழ்ச்சி! அதில் கைகால்களுக்கு சந்தனம் தடவுதல், பன்னீர் தெளித்தல், பூ தூவுதல் என ஏகப்பட்ட சடங்குகள்
  • திருமணத்தன்று காலையிலேயே பெண் குளிக்க போகும் முன் தலையில் எண்ணெய், பால் ஊற்றுதல்
  • அனைத்தை விடவும்  ஹைலைட்டான விஷயம் தாலி தான்! ஆம்... இஸ்லாம் காட்டித்தராத இந்த வழிமுறையை இஸ்லாம் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர்! இதில் பெரிய காமெடி என்னன்னா மணமகனுக்கு பதிலாக  வயதான ஒரு பெண் தான் மணப்பெண்ணுக்கு அந்த தாலியை அணிவிக்கின்றார்!
  • நபி (ஸல்) காட்டித்தராத  துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்!
  • மாலை மாற்றுதல், மெட்டி அணிதல்
  • பூவால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி கொண்டு முகம் மூடுவது,
  • திருமணம் நிகழ்வு முடிந்ததும் பாலும் பழமும் ஊட்டிவிடுதல்,
  • மணமகள் வீட்டார் செலவில்  நடத்தபடும்  படுவிசேஷமான விருந்து,
  • மடி நிரப்பாட்டுதல், அரிசி அளத்தல், வெத்தலை பாக்கு மணமகனும் மணமகளும் மூன்று முறை மாற்றிகொள்ளுதல்,  ஆரத்தி எடுத்தல்,  சம்பாயத்துக்காக வீட்டுக்குள் நுழையும் போது நிறைகுடத்தில் முழிப்பது, கண்ணாடியில் பார்ப்பது,  குர் ஆனில் திறந்து ஒரு வசனம் மட்டும் ஓதிவிட்டு மூடுவது...........................
  • இத்துடன்  நின்றுவிடாது... மணமகன் வீட்டில் மேற்சொன்ன சம்பிரதாயங்கள் நடக்கும். அடுத்த நாள் பெண் வீட்டார் மீண்டும் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை, பழங்கள் அடங்கிய தாம்பூல சீர்வரிசை, உப்பு முதல் அரிசி வரையிலான மளிகை சாமான்கள் (?!!) முதலிவற்றையெல்லாம் மணமகன் வீட்டில் சமர்ப்பித்து இருவரையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்.
  • இஸ்லாம் பொருத்தவரை மணமகன் தான் விருந்து கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் பெண் வீட்டில்  சுமையை தள்ளிவிட்டு தன் கடமையை வெறும் டீ, பிஸ்கட்டுடன் முடித்துவிட்டு இது தான் வலிமா என்பார்கள். 
  • மீண்டும் 3 நாட்கள் கழித்து பெண் மீண்டும் மணமகன் வீட்டுக்கு செல்லும் போது அவர்களுக்கான துணிமணிகளுக்கான பணம் கொடுத்தனுப்புவாங்க.
  • ஏழாம் நாள், பதினைந்தாம் நாள் , 30ம் நாள் என கணக்கே இல்லாமல் அடிக்கடி விசேஷம் நடத்தி மணமகள் வீட்டில் கரப்பதும் வாடிக்கை! இந்த நாட்களில் எல்லாம் பால்சோறு மணமகன் வீட்டில் செய்வார்கள். ஆனால் முந்திரி முதற்கொண்டு இதெல்லாம் மணமகள் வீட்டில் இருந்து வருவது தான் சம்பரதாயமாம்!!!! 
  • 40ம் நாள் தாலி பிரித்துக்கோர்க்கும் வைபவம்! தாலி என்ற ஒன்றே இல்லை... பின் எங்கே பிரித்துகோர்க்கும் வைபவமெல்லாம்????  தாலியை பாலில் நனைப்பது, அதுக்கு பூஜை செய்யும் விதமாக அனைவரும் பூ தூவுவது, பாத்திஹா ஓதுவது என இங்கேயும் ஏகப்பட்ட முட்டாள்தனங்கள் புகுத்தப்படும்!

ஆக மொத்தத்தில் இன்றைய இஸ்லாமியர்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே  உருவான திருமணம் தான்! எவ்வித தர்க்க ரீதியான காரணங்களும் அல்லாமல் பெண்ணை அலங்காரப்பொருளாக்கி, பலியாடாக்கி நடத்தப்படும் இந்த முட்டாள்தனங்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளி அளவும் சம்மந்தமில்லை!

அதெல்லாம் விடுங்க. இஸ்லாமிய உடையுடன் பல்கலைகழகம் வரை கல்வியை தொடர்ந்து பட்டமும் பெற்று, இன்று இஸ்லாமிய கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு மணமேடையில் முற்றும் முழுவதுமாக அந்நிய கலாச்சார உடையில்  அனைத்தையும்  அவள் இன்று இழந்து  நின்று கொண்டு இருக்கிறாள். இதற்கு யார் காரணம் ? சிந்தித்துப் பார்த்ததுண்டா?

திருமணம் என்ற விழா எவ்வளவு பெரிய பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது? இஸ்லாமிய சம்பிரதாயம் என்று சொல்லிக்கொண்டு இங்கு நடப்பவை எல்லாம் அனாச்சாரங்களே!

 இன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும்  அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அனுதினமும் நடக்கும் திருமண வைபவங்களை பார்த்தால் மூடநம்பிக்கைகள் அற்ற  இஸ்லாமிய  சமூகத்திலா இப்படி இஸ்லாமிய(?) திருமணங்கள் என்று முகத்தை திருப்பிக் கொள்பவர்கள் எத்தனை பேர்?  இஸ்லாமிய திருமணங்கள் என்ற பெயரில் எத்தனை சம்பிரதாயங்கள், ஜாஹிலிய போர்வையில் இஸ்லாத்தை வைத்துப் பூஜிக்க நினைக்கும் சடங்குகள்? 

இஸ்லாம் என்றால் என்ன என்று மக்கள்  மத்தியில் விழிப்புணர்வுகளை உண்டாக்கிட எண்ணற்ற இயக்கங்கள் நம் மத்தியில்  உலா வருகின்றன. இவ்வாறிருந்தும் இந்த கால கட்டத்தில் பாமர திருமணங்களும் ஆங்காங்கே நடந்தேறி வருவது அறியாமையின் வெளிப்பாடு .மார்க்கம் தெரிந்த மகனுக்கு பேரழகியை தேடுவதும் ஊதாரிக்கு ,ஊர்சுற்றியவனுக்கு காரோடு பெண் கேட்பதும் இன்று சர்வ சாதாரணம். இதற்கு மாற்றமானவர்கள் இருந்தாலும் அதிகமானவர்களின் நிலை இதுதான் . வெறுமனே உடல் அழகையும் செல்வத்தையும் மாத்திரம் வைத்து இன்றைய திருமணங்கள் சந்தையில் விலை பேசப்படுவதை பார்க்கிறோம் .இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் சொல்லாத நிறைய விஷயங்களை அரங்கேற்றி விட்டு இதற்கு நிக்காஹ் வைபவம் என்று பெயர்  சூட்டி விடுகின்றனர். அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம், அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!

'
குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.' என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?

**
திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் அல்லாஹ்விடம் பரக்கத்தினை அருளுமாறு துஆ கேட்டு இருப்பார்கள் ?

**
எத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன?

**
அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா?

**
ஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன?

**
நம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன ?

நாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .

அந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில்  உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்!.

 உங்கள் சகோதரி 
பாத்திமா


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 11 செப்டம்பர், 2013

முகப் பருக்களை எளிதாக குணமாக்குவது எப்படி!

முகப் பருக்களை எளிதாக குணமாக்குவது எப்படி!
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலர் முகப்பருக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய முகப்பருக்களை சரிசெய்ய நிறைய வழிகள் உள்ளன. இருப்பினும், அந்த பருக்களை போக்க ஒருசிலவற்றை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது.
அதை சரியாக செய்யவில்லையெனில், பருக்கள் முகத்தில் பரவி, பின் அவை நிறைய முகப்பருக்களை உண்டாக்கிவிடும். ஆகவே அவற்றை முறையாக போக்குவதற்கு சரியான பராமரிப்பு இருந்தால், எளிதில் போக்குவதோடு, அழகான சருமத்தை பெறலாம். இப்போது எந்த செயல்களை தினமும் செய்தால், பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!
 
முகத்தில் பருக்கள் இருந்தால், தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். ஏனெனில் சருமத்தில் பருக்கள் இருந்து அழுக்குகள் அதிகம் படிந்தால், அவை பருக்களை இன்னும் அதிகமாக்கிவிடும். ஆகவே பருக்களை சரிசெய்ய தினமும் இரண்டு முறை கிளின்சிங் செய்ய வேண்டும். கிளின்சிங் செய்தால், அவை அழுக்குகள், அதிகமான எண்ணெய் போன்றவற்றை நீக்கிவிடும். ஆகவே கிளின்சிங் செய்ய வேண்டுமெனில், பால் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். ஒருவேளை பருக்கள் உடைந்துவிட்டால், அவை பரவாமல் இருக்க பென்சோயில் பெராக்சைடு இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்துவது நல்லது. 
பருக்களை அகற்றும் போது, வேரோடு அகற்றும் படியாக இருக்க வேண்டும். இதற்கு தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய் போன்றவை நீங்கி, பருக்கள் குறைந்து, சருமம் மென்மையாகும்.
எப்போது மேக்-கப் போட்டாலும், இரவில் படுக்கும் முன் அதனை நீக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள் உடைந்து பரவி விடும். ஆகவே மேக்-கப்பை நீக்குவதற்கு, காட்டனில் டோனரை நனைத்து நன்கு துடைத்துவிட்டு, பின் தூங்க வேண்டும். அதிலும் டோனரில் ஆல்கஹால் ப்ரி டோனரைப் பயன்படுத்துவது நல்லது. ஆல்கஹால் இருக்கும் டோனரைப் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தி, அரிப்பை உண்டாக்கும். 
பருவநிலை மாறுபாட்டினாலும் சருமம் பாதிக்கப்படும். அதிலும் குளிர்காலம் என்றால், சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவை சருமத்திற்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும். 
பருக்கள் உள்ளது என்று அதனை போக்குவதற்கு உடைக்க கூடாது. உடைத்தால், அதில் உள்ள நீர் போன்ற திரவம் முகத்தில் பரவி, அதிகமான பருக்களை உண்டாக்கிவிடும். பருக்கள் இயற்கையாக உடைந்தால், அதிலிருந்து வரும் திரவத்தை காட்டன் கொண்டு துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிட வேண்டும். 
எலுமிச்சை மிகச் சிறந்த பருக்களைப் போக்கும் ஒரு பொருள். எனவே எலுமிச்சையைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்க்க வேண்டும். இதனால் பருக்கள், இறந்த செல்கள் போன்றவை போய்விடும். அதேசமயம் எலுமிச்சை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறட்சி ஏறப்டும். ஆகவே எலுமிச்சையை பயன்படுத்தியப் பின், மாய்ச்சுரைசரை மறக்காமல் தடவ வேண்டும். மேற்கூறியவையே பருக்களை போக்க முறையாக தினமும் செய்ய வேண்டிய செயல்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 9 செப்டம்பர், 2013

உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா?

உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா?
குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும்.
சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.  மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும்.
இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!! 
 * குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க,  அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும்.
அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும். 
 * ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.
* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.

Original from:
 http://gurutamilnews.blogspot.in/2012/12/blog-post_6357.html
Copyright http://tamilfilmhot.blogspot.com/ - All Rights Reserved


--
*more articles click*
www.sahabudeen.com


பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts