லேபிள்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!


பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
அபூவஸ்மீ

www.sahabudeen.com

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on 19th April 2012

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அல்லாஹ் தனது திருமறையில்:
ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக பரிபூரணமாக நிறைவேற்றுங்கள் (அல்பகரா 2: 196).
என குறிப்பிடுகிறான்.
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதே போன்று உம்ராவை ஹஜ்ஜுடன் இணைத்தும், தனியாகவும் நிறைவேற்ற முடியுமான ஒரு வணக்கமாகும். இங்கு கவனத்தில் கொள்ளப்படும் விடயம்,  ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்ற செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மதீனாவை தரிசிப்பதையும் தவறாது செய்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாக இருந்தாலும் மதீனா ஸியாரத்தோடு தொடர்பு படுத்தி சில தவறான கருத்துக்கள், நம்பிக்கைள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.  அவைகளைக் களையெடுத்து அதன் உண்மை நிலையை விளக்குவதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.
ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் மதீனா ஸியாரத்தையும் செய்ய வேண்டுமென ஆர்வப்படுத்துவதற்காக எந்த அடிப்படையுமற்ற சில ஹதீஸ்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் உண்மை நிலையை இப்பொழு பார்ப்போம்:
1) எவர் இவ்வீட்டை ஹஜ் செய்து என்னை தரிசிக்க வில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இமாம்களாகிய ஹாபிஃலுத் தஹபி தனது மீஸானிலும் (3- 237). அஸ்ஸர்கஷி, ஷவ்கானி ஃபவாஇதுல் மஜ்மூஆ பிஃல் அஹாதீஸில் மவ்லூஅத்என்ற நூலில் பக்கம் 42 லும், இப்னுல் ஜவ்ஸி தனது மவ்லூஆத் 2- 217 லும், ஷைக் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவிலும் (1- 119) குறிப்பிட்டுள்ளனர்.
2) எவர் ஒரே வருடத்தில் என்னையும், எனது தந்தை இப்றாஹீமையும், தரிசிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் கலை வல்லுனர்களில் எவரும் இப்படி ஒரு செய்தியை காணவில்லை என இமாம் அஸ்ஸர்கஷி தனது அல்லாலீஃல் மன்ஸுராஎனும் நூலிலும், இமாம் நவவியின் இது எந்த அடிப்படையுமற்ற ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்திஎன்ற கூற்றை இமாம் அஸ்ஸுயூதி தனது தைலுல் அஹாதீஸுல் மவ்லூஆஎன்ற நூலிலும், இமாம் இப்னு தய்மிய்யா, ஷவ்கானி போன்ற அறிஞர்களும் இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி என குறிப்பிடுகின்றனர். ஷைக் அல்பானி (ரஹ்) தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவில் (1- 120) இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என பதிவு செய்துள்ளார்கள்.
3) ஹஜ்ஜை நிறைவேற்றிய ஒருவர் எனது மரணத்திற்குப் பின் எனது கப்றை தரிசிப்பாரேனில் நான் உயிரோடிருக்கும் போது என்னை தரிசித்தவர் போன்றாவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷைக் அல்பானி (ரஹ்) தனது ஸில்ஸிலதுல் அஹாதிஸுல் லஈஃபாவில் (1- 120) இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என பதிவு செய்துள்ளார்கள்.
நமது மிம்பர் மேடைகளில் முழங்கும் ஒரு பொய்யான ஹதீஸ்:
யார் ஹஜ் செய்து என்னை தரிசிக்க வில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை பரவலாகச் சொல்லி வருகிpறார்கள்.  இது ஹதீஸ் கலை அறிஞர்களால் பொய்யான ஹதீஸ் என்று ஏகோபித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹஜ் மற்றும் உம்ரா போன்ற இபாதத்துக்களுக்கும் மஸ்ஜிதுன் நபவி ஸியாரத்துக்கும் மத்தியில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஹஜ் அல்லது உம்ரா செய்த ஒருவர் மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வில்லையென்பதால் அவரது ஹஜ் அல்லது உம்ராவுக்கு கிடைக்கும் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை.
அதே போன்று மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதால் ஹஜ் உம்ராவின் கூலியில் எந்தக் அதிகப்படியான நன்மையும் கிடைக்கப் போவதில்லை.  மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதென்பது தனியான ஒரு அம்சமாகும்.
மதீனாவின் சிறப்புகள்:
மதீனா இதில் இருந்து இது வரை ஒரு புனித பூமியாகும், அங்குள்ள மரங்கள் வெட்டப்படமாட்டாது, அங்கு மார்க்கத்தில் எந்த நூதனமும் ஏற்படுத்தக் கூடாது, அங்கு யாராவது மார்கத்தில் புதுமையை உண்டாக்கினால் அவனுக்கு அல்லாஹ்வினதும், வானவர்களினதும், முழு மனித சமுதாயத்தினதும் சாபம் இருக்கிறது என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புஹாரி. ஹ. எண்: 1736.
யாஅல்லாஹ் மக்காவுக்கு செய்த அருளை விட இரு மடங்கு மதீனாவுக்க அருள் புரிவாயாக என நபிகளார் (ஸல்) அவர்கள் பிரார்தித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புஹாரி. ஹ. எண்: 1752.
தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது, அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும், ஒவ்வொரு வாயிலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபீ பக்ரா (ரலி)., ஆதாரம் : புஹாரி. ஹ. எண்: 1746.
மஸ்ஜிதுன் நபவி, நபியுடைய மஸ்ஜித் என்று அழைக்கப்படக்கூடிய மஸ்ஜிதின் சிறப்புகள்:
எனது வீட்டுக்கும், மிம்பருக்கும் மத்தியில் சுவர்கத்தின் பூங்காக்களில் நின்றும் ஒரு பூங்கா இருக்கிறது என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்., அப்துல்லாஹ் இப்னு ஸைதுல் மாஸினி (ரலி), ஆதாரம்: புஹாரி.
மஸ்ஜிதுன் நபவியில் தொழப்படும் இரு ரக்அத்துகள் மஸ்ஜிதுல் ஹராமைத் (கஃபாவைத்) தவிர ஏனைய மஸ்ஜித்களில் தொழப்படும் ஆயிரம் ரக்அத்தை விட சிறந்ததாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று இடங்களுக்குத் தவிர மார்க்கத்தின் பெயரில் (நன்மையை நாடி) பிரயாணம் இல்லை. மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா), இந்த எனது மஸ்ஜித் (மதீனா), மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இஸ்லாத்தின பெயரால் மூன்று இடங்களுக்கு மாத்திரம் செல்வதை அனுமதிக்கிறது எனவே கபருகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ளப்படுவதை இந்த ஹதீஸ் தடைசெய்கிறது. மதீனாவுக்கு செல்லும் ஒருவர் மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்கும் நோக்கிலும் அங்கு இரு ரக்அத் தொழும் நோக்கிலும் தான் பயணிக்வேண்டும். அங்கு சென்று மஸ்ஜிதுன் நபவியில் இரு ரக்அத் தொழுது விட்டு பின் நபிகள் நாயகம் (ஸல்), அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), ஆகியோரின் கப்ருகளை தரிசித்து ஸலாம் சொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.
நான் உங்களுக்கு கப்ருகளை தரிசிப்பதை தடை செய்திருந்தேன் இப்பொழுது அவைகளை தரிசிப்பதற்கு அனுமதி அளிக்கிறேன் ஏனெனில் நிச்சயமாக அது மறுமை சிந்தனையை ஏற்படுத்தும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப நாட்களில் கப்றுகள் தரிசிப்பதை தடைசெய்தது சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் பல இன்னல்கள் தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவத்தின் பால் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கப்ருகளை தரிசிக்க அனுமதி வழங்கினால் மறுபடியும் அவர்கள் பழைய தவறையே செய்வார்கள் என்பதனாலாகும். ஆனால் அவர்கள் கொள்கையில் ஏகத்துவத்தில் உறுதியானதன் பின் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்தத் தவறு நிகழுமென பயந்து தடைசெய்தார்களோ அத்தவறு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதை காணலாம்.
 அனுமதியளிக்கப்பட்டதன் நோக்கம் அந்த ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை, மறுமை வாழ்க்கை பற்றிய சிந்தனையை அது ஏற்படுத்தும்; அதன் மூலம் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சீர்திருத்திக்கொள்ள முடியும்; தீமைகளை விட்டு விலக முடியும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கப்ருகளின் பக்கம் சென்றால் தமது தாடி நனையுமளவுக்கு அழக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி கேட்கப்பட்டபோது,
இது ஒரு மனிதனின் முதல் வீடு; இதில் அவன் வெற்றியடைந்து விட்டால் மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றியடைந்துவிடுவான்; இங்கு அவன் தோல்வியைத் தழுவினால் மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவுவான் எனக்கூறினார்கள்.
தற்பொழுதுள்ள அதிகமான முஸ்லிம்கள் இந்த நோக்கத்தை மறந்து அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களிடம் அருள் வேண்டுவதற்காகவும், அவர்களிடம் பிரார்த்திப்பதற்காகவும், அங்குள்ள மண்ணை பரகத் எனக் கருதி எடுத்து வருவதற்காகவும், அதை உடளில் தேய்த்துக் கொள்வதற்காகவும், அதை வலம் வருவதற்காகவும் செல்லக்கூடிய அன்றாட காட்சிகளைக் காணலாம்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு உங்களைப் போன்ற அடியார்களை அழைக்கின்றீர்கள் (பிரார்த்திக்கின்றீர்கள்); நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்கள் பிரார்த்தனைகளுக்கு அவர்கள் விடையளிக்கட்டும்’(அஃராப்: 194).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ருகளை தரிசிக்கும் போது சொல்வதற்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்துள்ளார்கள்:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ  (مسلم).

அஸ்ஸலாமு அலைகும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷாஅல்லாஹு பிகும் லலாஹிகூன் அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா’. (முஸ்லிம்).
பொருள்: முஃமின்கள், முஸ்லிம்களின் வீட்டுடையவர்களே அல்லாஹ் உங்களுக்கு சாந்தியை அளிப்பானாக; நிச்சயாமக நாமும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உங்களுடன் வந்து சேர இருக்கிறோம்; நமக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
கப்ருகளை தரிசிக்கும் ஒருவர் மறுமை சிந்தனையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அவைகளை தரிசிக்க வேண்டும். அவர்களுடைய பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரவேண்டுமே தவிர தங்களின் பாவங்களுக்கு அவர்களிடம் பாவமன்னிப்பு வேண்டுவது கொடிய பாவமான ஷிர்கில் கொண்டு போய் சேர்க்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தரிசிக்கும் ஒருவர்,

السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அவனது அருளும் அவனது பரகத்தும் உண்டாவதாக.
அபூ பக்கர் (ரலி) கப்றை தரிசிக்கும் போது,
அஸ்ஸலாமு அலைக யா அபாபக்ர் (ரலி)’. அபூ பக்ர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்களுக்கு உண்டாவாதாக.
உமர் (ரலி) கப்ரை தரிசிக்கும் போது:
அஸ்ஸலாமு அலைக யா உமர் (ரலி).
உமர் (ரலி) அவர்களே அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்ததன் பின் முதலில் கட்டிய பள்ளி மஸ்ஜித் குபாவாகும். எவர் தனது வீட்டில் இருந்து வுழூச் செய்து சென்று இம்மஸ்ஜிதில் இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அல்லாஹ் அவருக்கு ஒரு உம்ராவை நிறைவேற்றிய கூலியை வழங்குகிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.
அஸ்ஹர்

www.sahabudeen.com

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !----


தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக
  மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை
1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும்,
  மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்

www.sahabudeen.com

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் !


சரியான தூக்கமே இல்லை, ரொம்ப டயர்டா இருக்குஇந்த புலம்பல் இப்போது சகஜமாகிவிட்டது. பணத்தை துரத்தும் பரபரப்பான வாழ்க்கையில் நிம்மதியான தூக்கத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தூக்கம் இல்லாமல் போவதற்கு மன அழுத்தம், கவலைகள், வேகமான வாழ்க்கை முறை மற்றும் உடல் / மன ரீதியான கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இயற்கையான முறையில் அதிக முயற்சி இன்றி தூங்க சில வழிமுறைகள் இதோ:

    ஒரே மாதிரியான நேரத்தில் படுத்து எழுந்து பழகுங்கள்

தூங்குவதற்கு ஏற்றபடி சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் கொசு தொல்லை இல்லாமலும் அறையை தயார் செய்து கொள்ளுங்கள். சுத்தமான அறை அமைதியான, தெளிவான மனதை கொடுக்கும்.

     பிடித்திருந்தால் இரவில் மிக குறைவான சத்தத்தில் இசையை ஓட விடலாம்.
     டீ, காபி போன்ற பாணங்களை இரவில் முற்றிலும் தவிர்த்திடுங்கள்
     இரவில் மென்மையாக கை, கால் மசாஜ் செய்து கொள்வது நல்லது.
     இரவில் பொறித்த, எண்ணை அதிகம் உள்ள மற்றும் மசாலா அதிகமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசான உணவு நல்ல உறக்கத்திற்கு உதவும்.
      படுக்கும் முன் இளம் சூடான பால் குடிக்கலாம்.
     பேரீச்சம் பழம், செர்ரி பழம் இவற்றில் இயற்கயான தூக்கத்தை ஏற்படுத்தும் வேதி பொருட்கள் இருப்பதால் இவற்றை இரவில் சாப்பிடலாம்.
     பகலில் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலின் தேவையில்லாத கழிவுகள் சுலபமாக வெளியேறிவிடும்.
     யோகாசனம், தியானம் இவை நல்ல உறக்கத்தை தரும்.
     பகல் நேரங்களில் சொகுசு பார்க்காமல் முடிந்த அளவு உடல் உழைப்பை வெளிப்படுத்தவேண்டும்.  இதனால் இரவில் உடல் களைப்பாகி தூக்கம் எளிதில் வரும்.

இங்கே சொன்ன டிப்ஸ் தூக்கத்திற்கானசூழலை மட்டுமே உருவாக்கி கொடுக்கும். ஆனால் தூக்கம் என்பது அமைதியான மற்றும் திருப்தியான மனநிலையில் இருந்தால் மட்டுமே எளிமையாக சாத்தியமாகும். எனவே, குழப்பங்களோ திருப்தி இல்லாத நிலையோ இருந்தால், இவை தூங்காமல் இருந்து சிந்திப்பதால் தீராது என்பதை உணர்ந்து எதுவாக இருந்தாலும் காலையில் புத்துணர்ச்சியுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று சிந்தனை / கவலை இவற்றுக்கும் குட் நைட் சொல்லிவிட்டு, நிம்மதியாக தூங்கி விடுங்கள்.

www.sahabudeen.com

புதன், 1 ஆகஸ்ட், 2012

இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:1742:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:11029:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:2431:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)
தீய குணங்கள்

1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

 நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லி

www.sahabudeen.com

புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts