லேபிள்கள்

ஞாயிறு, 11 மார்ச், 2012

குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?




குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.

தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.

குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.

அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.

குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.

குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.

தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.

குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.

ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.

குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.

அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்.

பச்சிளங்குழந்தை சில அபாய அறிகுறிகள்

குறைமாதத்தில் (37 வாரத்திற்கும் குறைவாக) குழந்தை பிறத்தல்.

குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிறந்தவுடன் அழாமல், மூச்சுவிடாமல் இருத்தல்.

மிக வேகமாக மூச்சு விடுதல், மூச்சுத்திணறல்

மிக அதிகமாக தொடர்ந்து கத்திக் கொண்டு இருத்தல்.

சரியாக பால் குடிக்க முடியாமை, சுறுசுறுப்பில்லாமை.

பால் குடித்தபின் மூச்சுத்திணறல் - எதுக்களித்தல்

குழந்தையின் உடல் உஷ்ணம் மிகக் குறைதல்.

வலிப்பு (ஜன்னி) வருதல்.

ஆபத்தான பிறவிக் குறைபாடுகள்.

பிறந்த 24 மணி நேரத்திற்குள் மஞ்சள்காமாலை ஏற்படுதல்.

பிறந்த 24 மணிக்குள் மலம், 48 மணிக்குள் நீர் போகாமை.

வாந்தி & வயிற்றுப்போக்கு.

குழந்தையின் எப்பகுதியிலாவது ரத்தம் கசிதல்.

வயிறு வீக்கமாக இருத்தல்.

குறைமாத குழந்தைக்கு அதிக கவனம் தேவை

குழந்தையின் உஷ்ணம் குறைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

தேவைப்படின் வார்மர் (Warmer) இங்குபேட்டர் (Incubater) வைத்து பாதுகாக்க வேண்டும்.

பால் குடிக்க முடியாத நிலையில் - ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தவும்.

பால் குடிக்காத குழந்தைக்கு - தாய்ப்பாலை சங்கில் எடுத்து ஊட்ட வேண்டும்.

இக்குழந்தைகளை நோய்கிருமிகள் எளிதாக தாக்கும்.

இக்குழந்தைகளை குளிப்பாட்டுவதை தவிர்க்கவும்.

குழந்தை நலம் - சில அறிவுரைகள்

திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும்.

நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது.

இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் -21) (ஆண் - 25) கூடாது.

தொற்று நீக்காமல் வேண்டாத கர்ப்பத்தை கலைத்தல் ஆபத்து.

கர்ப்ப காலத்தில் தேவையற்ற மருந்துகளை சாப்பிடுதல் கூடாது.

முதல் பிரசவத்தை வீட்டிலேயே வைத்து கொள்ளுதல் தவறு.

குழந்தை பிறந்தவுடன் குளிப்பாட்டுதல் கூடாது.

பிறந்தவுடன் குழந்தைக்கு - சக்கரைத் தண்ணீர், கழுதைப்பாலை தருதல் ஆபத்து.

தாயின் சீம்பாலை தராமல் இருப்பது தவறு.

கடையில் பால் வாங்கி பச்சிளங்குழந்தைகளுக்கு தருதல் ஆபத்து.

குழந்தைக்கு பாட்டிலில் பால் தருதல் ஆபத்து.

விளக்கெண்ணெய் தருதல் கிரேப்பாட்டில், போனிசம், பிறளி எண்ணெய் தரக்கூடாது.

குழந்தையின் தொப்புள் கொடியின் காயத்தில் சாம்பல், பொடி, பிற தடவுதல் கூடாது.

தாய் தூங்கிக்கொண்டே குழந்தைக்கு பால் கொடுத்தல் கூடாது.

குழந்தை இருக்கும் அறையில் தும்முதல் - இருமுதல் கூடாது.

குழந்தை இருக்கும் அறையில் புகை பிடித்தல் கூடாது.

ஏதாவது சுகவீனம் அடைந்தால் ஆரம்பத்திலேயே பாராமல் நேரம் தாழ்த்தல் தவறு.

காது, மூக்கு, கண் ஆகியவற்றில் எண்ணெய் விடுதல் ஆபத்தானது.

வலிப்பு வந்த குழந்தைக்கு சூடு போடவோ, வேப்பெண்ணெய் கொடுக்கவோ கூடாது.

வயிற்றுபோக்கு, பிற நோய் கண்ட குழந்தைக்கு வைத்தியம் செய்யாமல், கயிறு கட்டல், தொக்கம் எடுத்தல் - குடல் தட்டல் தவறு.

ஊட்டமான - முட்டை, பருப்பு ஜீரணிக்காது - மாந்தம் என்பது தவறு.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து தரக்கூடாது.

மருந்துகளை குழந்தைக்கு எட்டுமிடத்தில் வைத்தல் தவறு.

பழைய மருந்து சீட்டிற்கு மருந்து வாங்குதல் கூடாது.

பழைய மருந்துகளை தரக்கூடாது.

மற்ற குழந்தைக்கு தந்த மருந்தினை இதற்கும் தருதல் தவறு.

வயிற்றுபோக்கின் போது திரவ உணவு நிறுத்துதல் தவறு.

அரை குறை வைத்தியம செய்தல் கூடாது.

ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுதல் தவறு.

குழந்தைக்கு பல் முளைப்பதால் - வயிற்றுபோக்கு வரும் என்பது தவறு.

அம்மை நோய் கண்ட குழந்தைக்கு மருத்துவம் செய்யகூடாது என்பது தவறு.

காசநோய்-(Primary Complex) கண்ட குழந்தையின் மூலம் நோய் பரவும் என்பது தவறு.

குழந்தைக்கு காய்ச்சல் உள்ள போது உணவு தராமை தவறு.

வயிற்றுப்போக்குக்கு, சீர் அடித்தல் காரணம் என மந்திரித்தல் தவறு.

குடலில் உள்ள புழுக்கள் வெளியேற பேதி மருந்து தருதல் கூடாது.

மூச்சுத்திணறல் இருந்தால் - அதை ஆஸ்துமா என்பது தவறு.

தீ காயம் பட்ட பகுதிகளை தண்ணீரில் நனைப்பதை தடுத்தல் கூடாது.

வலிப்பின் போது சாவியை தந்தால் - நிற்கும் என்பது தவறு.

குழந்தை அழும்போது - ரப்பர் -நிப்பில் (Nipple) தருதல் ஆபத்து.


டாக்டர் கே.மணியன், எம்.பி.பி.எஸ், டி.சி.ஹெச்,
சிசு & குழந்தைகள் நல மருத்துவர், காட்டுமன்னார்கோயில்.

சனி, 10 மார்ச், 2012

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது?



‘‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக் கூடியவர்’’ என்று ஊரே கொண்டாடிய பொள்ளாச்சி ராமசாமி கடந்த மாதம் இறந்து போனார்.

அவருடைய காரியங்கள் முடிந்து, சொத்துகளை யார் பராமரிப்பது என்ற யோசனை வந்தபோது, குடும்ப வக்கீல் ஓர் உயிலைக் கொண்டுவந்து கொடுத்தார். உயிலைப் பிரித்துப் படித்த குடும்பத்தினர் மனநிறைவோடு ராமசாமியை நினைத்துக் கொண்டனர். யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாமல், எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக உயிலை எழுதியிருந்தார்.

தன்னுடைய மறைவுக்குப் பிறகு யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழக்கூடாது என்று நினைத்த ராமசாமிக்கு, எண்ணத்தை ஈடேற்ற உதவியாக இருந்தது உயில்!

உயில் என்றால் என்ன? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. சிவில் கோர்ட்டில் போய்ப் பார்த்தால் எத்தனை வழக்குகள் குடும்பச் சொத்து தொடர்பாக நடந்து கொண் டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி விடும். சொத்துக்களை முறையாகப் பிரித்து உயில் எழுதிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.

‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

உயில் எழுதவேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டோம். அதை எப்படி எழுதுவது? அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள வக்கீலைத்தான் நாடவேண்டுமா?

ரிஷிகேஷ் ராஜாவிடமே கேட்டபோது, ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’ என்றவர், உதாரணமாக ஒரு வடிவத்தைச் சொன்னார்.


எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.


உதாரணத்தைச் சொன்ன ரிஷிகேஷ் ராஜா, ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.

உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.

உயில் அமல்படுத்துநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்களை உயில் அமல்படுத்துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

உயில் எழுதப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் படியேறுகிறார்களே... மூத்த மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார், இளைய மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார். இரண்டுமே ஒரிஜினலாக வேறு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் என்ன செய்வது?

இதுபற்றி ஒரு வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘‘அப்படிப்பட்ட சூழலில் கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் செல்லுபடியாகும். ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் சட்டப்படி செல்லும்’’ என்றார்.

உயில் இல்லாமல் போனால் தோன்றக்கூடிய நிலை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகி சகுந்தலா சுந்தரம் கூறுகையில், ‘‘உயில் எழுதி வைக்காமல் ஒருவர் இறந்துபோனால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி (அவர் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப) வாரிசுகள் அனைவருக்கும் சொத்து பிரிக்கப்படும். இறந்தவர், தனது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் கூடுதலாக சொத்தைக் கொடுக்க நினைத்திருந்தாலும், உயில் எழுதாவிட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை. சொத்தை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்ய விரும்பி இருந்தாலும் அதுவும் நடைபெறாது’’ என்றார்.

தன்னுடைய கணவர் உயில் எழுதி வைக்காததால் தான் படும் சிரமங்கள் குறித்துச் சொன்ன யுவராணி, ‘‘என்னை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்ட என் கணவர், 1999&ல் இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மனைவியும் எனது கணவரது குடும்பத்தினரும், சொத்தில் எங்களுக்குச் சேரக்கூடிய பங்கைக் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்து வந்தனர். பிறகு, அந்தப் பணத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் 2004&ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என் கணவர் முறையாக உயில் எழுதி, அதில் எங்கள் பங்கைப் பற்றிச் சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டங்கள் வந்திருக்காது’’ என்றார்.

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

சொத்து மட்டும் அல்ல. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்-கான செலவு போன்ற எதிர்கால பணச்சிக்கல்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழி-முறைகள் பற்றியும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பெரும்பாலான குடும்பத் தலைவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் செயல் களையும், எதிர்கொள் ளும் பணச்சிக்கல்களையும் தங்கள் குடும்பத்தி னரிடம் முழுமையாகத் தெரிவிப்பதில்லை. உயில் எழுதாமல் இறந்துபோகிற பட்சத்தில், அவரது குடும்பம் எதிர்பாராத சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அதைத் தவிர்க்க கண்டிப்பாக உயில் எழுத வேண்டும்.

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.

உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. வங்கி நாமினி, உயில் வாரிசு, என்ன வித்தியாசம்?

வங்கிக் கணக்கில் நாமினியாக ஒருவரைக் குறிப்பிடுவது என்பது கணக்கு வைத்திருப்பவர் இறக்கும்போது, அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் வழங்குவது என்பதை மட்டுமே குறிக்கும். மேலும், நாமினிக்கு வங்கிப் பணம் வந்தபிறகு, அந்த பணத்தின்மீது இறந்து போனவரின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால், ‘தான் இறந்த பிறகு, சொத்துகள் யாருக்குச் சேரவேண்டும்என்று குறிப்பிட்டு வாரிசை நியமிப்பது உயில். அதன்மூலம் இறந்தவரின் அனைத்து உடமைகளுக்கும் ஒருவர் வாரிசாக நியமிக்கப்பட்டபின், அந்தச் சொத்து வாரிசுக்கு மட்டுமே சொந்தம். எனவே, வங்கி நாமினியை விட, உயில் வாரிசு மிக முக்கியத்துவம் பெறுகிறார்.

உயில்கள் பலவிதம்!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

மிகச் சிறிய உயில்கள்

டெல்லியைச் சேர்ந்த பிமல் ரிஷி, 1995&ல் எல்லாம் மகனுக்கே! (All to son) என்று எழுதியதுதான் மிகச் சிறிய உயில். 1967&ல் செக் நாட்டைச் சேர்ந்த கால் டவுச் எழுதிய உயிலில் எல்லாம் மனைவிக்கே!’ (All to Wife) என்று எழுதியிருந்தார்.

வாரிசு மைனராக இருந்தால்..?

உயிலில் குறிப்பிடப்படும் வாரிசு, 18 வயதுக்கு உட்பட்ட மைனராக இருந்தால், அவருக்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவரே வாரிசின் சொத்துக்குப் பாதுகாவலராகத் திகழ்வார். எதிர்காலத்தில், பாதுகாவலருக்கு இறக்கக்கூடிய நிலை ஏற்படுமாயின், மேலும் ஒரு பாதுகாவலரை நியமிப்பது நல்லது.

உயில் எப்போது செல்லாமல் போகும்?

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will - உயில் (விருப்ப ஆவணம்)
Testator - உயில் எழுதியவர்
Executor - உயில் அமல்படுத்துநர்
Codicil - இணைப்புத் தாள்கள்
Attested - சரிபார்க்கப்பட்டது.
Probate - -நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்..
Beneficiary, Legatee - வாரிசு
Intestate - உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate - வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act - இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act - முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian - காப்பாளர்
Witness - சாட்சி
காமெடிஉயில்

கனடா நாட்டு வழக்கறிஞரான சார்லஸ் மில்லர், ‘தான் இறந்து 10 ஆண்டுகளுக்குள், எந்த பெண்மணி அதிக பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாளோ, அவள்தான் தனது மொத்த சொத்துகளுக்கும் வாரிசுஎன்று உயில் எழுதி வைத்தார். சார்லஸின் வாரிசுகள், உயில் போலியானது என்று நிராகரிக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இறுதியில், மொத்த சொத்து, நான்கு பெண்மணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது!

ஆன் லைன்உயில்

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

புகழ்பெற்றவர்களின் உயில்கள்!

பிரெஞ்சுப் பேரரசரான நெப்போலியன், தனக்கு உதவிய போர் தளபதிகள், போர்வீரர்களுக்கு சொத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுத்தார். பாத்திரங்கள், கரண்டிகள், பெட்டிகள், மேஜைகள், ஆடைகள், புத்தகங்கள், போர்வாள்கள், துப்பாக்கிகள் போன்று, தன் வாழ்நாளில் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தன் உயிலில் குறிப்பிட்டார்.

மறைந்த தொழில் அதிபர் எம்.பி. பிர்லாவின் மனைவி பிரியம்வதா தன் 5,000 கோடி ரூபாய் சொத்துக்கள் அனைத்தையும் குடும்ப நண்பரும், ஆடிட்டருமான ஆர்.எஸ்.லோதா பெயருக்கு எழுதிவிட்டார்! ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திருபாய் அம்பானி உயில் எழுதி வைக்காததால் அவருடைய மகன்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தாயார் கோகிலா பென் அம்பானி தலைமையில், நிதி ஆலோசகர்களின் உதவியுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களைப் பிரித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

உயில் பரிசு!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரெட் நோபல் 1867&ல் டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். அதை விற்றதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார். இந்த டைனமைட் வெடிமருந்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1888&ல் இவர் இறந்தபோனதாக நினைத்து, பிரெஞ்சு பத்திரிகை ஒன்று, இவரது டைனமைட் கண்டுபிடிப்பை மனதில் கொண்டு, ‘மரணத்தின் வியாபாரிஎன்பது போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்தது. இச்செய்தியைப் படித்த ஆல்பிரெட், தனது கண்டுபிடிப்பால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்தினார். தன் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகள் முழுவதையும் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமூக சேவை அல்லது உலக அமைதி போன்ற துறைகளில் முன்னிலை வகிப்போருக்கு பரிசு வழங்க வேண்டும்என்று உயில் எழுதினார். அதுதான் இப்போது பிரபலமாக இருக்கும் நோபல் பரிசு!

சென்னைவாசிகளுக்கு உயில்!

சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுதும்போது முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வாரிசுகளுக்குச் சொத்தை சம பங்காகப் பிரிக்காமல், தன் விருப்பப்படி உயில் எழுதியிருந்தால், கோர்ட் அனுமதியுடன்தான் அதைச் செல்லுபடியாக்க முடியும். மற்ற ஊர்களைப் போல உயில் எழுதியவரின் மறைவுக்குப் பிறகு, அந்த உயிலில் சொன்னபடி சொத்தை வாரிசுகள் பிரித்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த அட்வகேட் கண்ணனிடம் கேட்டபோது, ‘‘சென்னைக்கு வெளியே எங்கு சொத்துக்கள் இருந்தாலும் சென்னை விலாசத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதிவிட்டால், அதை கோர்ட்டில் தாக்கல் செய்தால்தான் செல்லுபடியாகும். இதை புரொபேட் (Probate) என்பார்கள். சென்னை ஹைகோர்ட்டில் உயிலில் சொல்லப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பில் 3% கட்டணமாகச் செலுத்தி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

உயிலில் சாட்சியாகக் கையெழுத்துப் போட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது கோர்ட்டுக்கு வந்து, ‘இந்த உயில் என் முன்னிலையில் நேர்மையாக, நாணயமாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த விருப்பத்தின்படி எழுதப்பட்டதுதான்என்று சொல்ல வேண்டும். கூடவே, ஒரிஜினல் உயில், அதை எழுதியவரின் இறப்புச் சான்றிதழ், சொத்துகளுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை இணைத்துக் கொடுக்கவேண்டும். அதோடு சமமாகப் பிரிக்கப்படாததால், யாருக்காவது எதிர்ப்பு இருந்தால் அவர்களை எதிர்தரப்பாக மனுவில் சேர்க்க வேண்டும்.

கோர்ட் விசாரணைக்குப் பிறகு, சொத்தின் மதிப்பு பற்றிய தகவலுக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அவர்கள் சரி பார்ப்பார்கள். அதன்பிறகு, உரிய கட்டணத்தைச் செலுத்தி உயிலைச் செல்லுபடியாக்கிக் கொள்ள முடியும்’’ என்றார்.

சென்னையிலேயே வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இந்த புரொபேட் தேவையில்லை என்பது கண்ணன் சொன்ன கூடுதல் தகவல்!

வெள்ளி, 9 மார்ச், 2012

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?



சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டு மல்ல... பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது! வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து போய் விடுதல், அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருத்தல், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறு நீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது.

கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும்போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது.

கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி இரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன.

சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறுநீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை (cell and nuclear) உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும்போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்யமாக வைக்கிறது.

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?

குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்ஸலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப் பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்து உள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம்! இதற்கு

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.

3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்க உண்டாகிறது?

30_வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.

சிறுநீரகக் கல் உருவானது என்று எப்படித் தெரியும்?

அடி வயிற்று வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். x ray. IVP மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கல் உருவானது என்று எப்படித் தெரியும்?

மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ஸ்லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.

தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம்.

முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம்! சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது!

கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.
l

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாபழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், நெல்லிகனி

உட்கொள்ள வேண்டியவை:

நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசிணி)
கேழ்வரகு
புழங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாவக்காய், அவரை, வெண்டைக்காய் பால்

வியாழன், 8 மார்ச், 2012

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!



தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

புதன், 7 மார்ச், 2012

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?



கியாரண்ட்டிஎன்றால் உத்திரவாதம்என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வாரண்ட்டிஎன்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் கியாரண்டிஎன்றால் பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் சர்வீஸைக் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் லாப்_டாப்தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு சயன்டிஸ்ட்தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்அவர்கள் கூலாக, ‘நீங்கள் லாப்_டாப்பைசரியாக பிளக்கில்செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுஎன்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டிகொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் கார்டுகொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்உபயோகமில்லாமல் போய்விட்டது. கியாரண்ட்டி_வாரண்ட்டியைவைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன லாப்_டாப்விஷயம் போல் மைக்ரோவேவ் அவன்பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான மைக்ரோ வேவ் அவன்கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்றுபதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனைரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த கியாரண்ட்டி_வாரண்ட்டிவார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்இல்லாதவர்கள், ஒரு சுவிட்ச் கன்வெர்டர்வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

செவ்வாய், 6 மார்ச், 2012

தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்?



நமக்குத்தேவையான தகவல் களைப் பெற தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?

எந்தத் துறை சம்பந்தப் பட்ட தகவல்கள் உங்களுக்குத் தேவையோ, அந்தத் துறையின் பப்ளிக் இன்ஃபர்மேஷன் அலுவலருக்கு, உங்களுக்குத் தேவையான தகவல்பற்றி கடிதம் எழுதவேண்டும். அப்படி எழுதும்போது உங்களைப் பற்றிய முழுதகவல் மற்றும் விலாசம் தெளிவாக இடம்பெறவேண்டும்.

உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு பத்து ரூபாய் கட்டணத்தையும் அத்துடன் இணைத்துஅனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ பேங்கர்ஸ் செக்காகவோ அனுப்பலாம்.

உங்களுக்குத் தேவைப்படும் தகவல் ஒரு பக்கத்துக்கு மிகுந்தால், அதிகப்படியான பக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். நீங்கள் கேட்கும் தகவலின் தன்மையைப் பொறுத்து, அதற்குத் தேவையான கட்டணத்தை நீங்கள் முன்கூட்டியே அனுப்புவது நல்லது.

அதற்குப் பின்னும் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனுக்கு நீங்கள் புகார் செய்யலாம். அப்படி புகார் செய்யும்பொழுது அவர்களால் நீங்கள் கேட்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற்றுத்தர முடியுமே தவிர, உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.

ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனை நீங்கள் தொடர்புகொள்ள கீழ்கண்ட முகவரி மற்றும் இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். விலாசம்: ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷன். காமதேனு சூப்பர் மார்க்கெட் பில்டிங். முதல் மாடி, தேனாம்பேட்டை சென்னை. போன் : 044 24357580, இணையதள முகவரி: www.tnsic.gov.in

திங்கள், 5 மார்ச், 2012

வீட்டு வைத்தியம்! தினமும் வெந்நீர் குடிக்கலாம்



பாட்டி வைத்தியம்சொன்ன பாட்டியிடமிருந்து வைத்தியரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும், நல்ல அனுபவசாலி! ‘‘அலோபதியில எத்தனை மருந்து வந்தாலும், அவசரத்துக்கு நம்ம கை வைத்தியம் மாதிரி வரவே வராது’’ என்று அழுத்தமாக சொல்லும் அவரது எளிமையான குறிப்புகள் ஆரம்பமாகின்றன.

கிணறு வெட்ட பூதம் கிளம்புறாப்ல, சின்ன பிரச்னைக்கு கண்ட கண்ட இங்கிலீஷ் மருந்தைச் சாப்பிட்டு, அதனால புதுசு புதுசா வியாதிகளை வரவழைச்சுக்கக் கூடாது.

ஆயிரம் வியாதிக்கும் அடுப்பங்கரையில இருக்கு வைத்தியம்னு பெரியவங்க சொல்றதுண்டு. யோசிச்சுப் பார்த்தா, எதனால பிரச்னையோ.. அதனாலயே அதைத் தீர்க்க முயற்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்னு புரிய வரும்.

சமையலறையில நாம எண்ணெயையும் நெய்யையும் கொட்டியோ, இல்ல.. ஒரேயடியா வறுத்துப் பொரிச்சோ செய்யற பண்டத்தாலதான் பல வியாதிகளும் நமக்கு வர்றது. கிச்சன்வெட்டு வெட்டுனு வெட்டிட்டு, வயித்து வலிக்கு டாக்டரைத் தேடி ஏன் ஓடணும்? இதுக்கான மருந்தும் கிச்சன்லயே இருக்கு. நம்ம இஞ்சி, சுக்கு, ஏலம், கிராம்பு, கீரை, கொத்துமல்லி விதை, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பூண்டு.. இதுல எல்லாம்தான் இருக்கு சூட்சுமம்!

இதையெல்லாம் வெச்சு என்ன செஞ்சா.. என்னென்ன வியாதிகள்லாம் ஓடும்னுதான் உங்களுக்கு நான் சொல்றதா இருக்கேன்.

ஆச்சு.. மழைக்காலம் வந்துடுச்சு. சாதாரண நாள்லயே ஸ்வீட், எண்ணெய்ப் பலகாரம்.. எல்லாத்தையும் தொட்டுப் பார்க்கக்கூட இந்த டீன்&ஏஜ் குழந்தைகள் பயப்படும். கொலஸ்ட் ரால்பயம், ஊளைச் சதை, இடுப்புல மடிப்பு, தொப்பை வேற.. ஜீன்ஸ் போட முடியாம.. என்ன கஷ்டம்டியம்மா!

விதவிதமா அகர்வாலையும், ஸ்ரீகிருஷ்ணாவையும், ஆனந்த பவனையும் படைச்சுப்புட்டு, இந்த மாதிரியான பயத்தையும் பகவான் படைச்சிருக்க வேண்டாம்னு தோணுது.. இல்லையா?!

இனிப்போ, எண்ணெய்ப் பல காரமோ.. அளவாச் சாப்பிட்டா பிரச்னையே இல்ல. கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டா, நாக்கு முழுக்க மைதா மாவைத் தடவின மாதிரி வழவழனு ஆகிடும் சிலருக்கு.

உடம்பும் அங்கேயிங்கே சதை இல்லாம உருவி விட்டாப்ல இருக்கணும். அஜீரணம், ஏப்பம், நாக்கு கொழகொழப்பு இதெல் லாமும் வரக் கூடாதுன்னா, இதைப் படிங்க முதல்ல..

ஸ்வீட்டோ, காரமோ.. இல்ல, வடை பாயசத்தோட சாப்பாடோ.. சாப்பிட உக்கார்றதுக்கு முன்னால, நாக்கு பொறுக்கற சூட்டுல ஒரு டம்ளர் வெந்நீரைக் குடிச்சிருங்க குழந்தைகளா.. அதேமாதிரி, சாப் பிட்டதுக்கு அப்புறமாவும் ஒரு டம்ளர் வெந்நீர்.. அந்த வெந்நீர் வெதவெதனு இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைச் சுட்டுக்கவும் கூடாது. நாக்கு பொறுக்கற சூடு.. ஞாபகம் வெச்சுக்கங்க!

இதுல.. அதாவது, இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...

1. சாப்பிடறதுக்கு முந்தி குடிக்கிற வெந்நீர், நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல் இப்படி பேச்சு வாக்குல வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும்னு சொல்ல வைக்கும்.

2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதால, நாக்கு கொழகொழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டை கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள்.. எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம்.

இதுக்காகத்தான் அந்தக் காலத்துல சுமங்கலி பிரார்த்தனை, திதி.. இது போன்ற சமயங்கள்ல, சாப்பாட்டு இலைக்குப் பக்கத்துல சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீரை வச்சுடு வாங்க.

நாம தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். உடலையும் முகத்தை யும் நல்லா வெச்சுக்கலாம்.

இந்த பாட்டி எதைச் சொன்னாலும், உடனே ஃபாலோ பண்ற மாதிரிதான் இருக்கும். கவலையே வேண்டாம் கண்ணு களா. அத்தனைக்கும் மருந்து இருக்கு நம்ம கையிலயே..

ஞாயிறு, 4 மார்ச், 2012

சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!



விலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக, சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்!

1.சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சமைக்கும்போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

2. கீரைக்குச் சேர்க்கும் பயத்தம் பருப்பை தனியாக வேக வைக்காமல் குக்கர் வைக்கும்போதே ஒரு பாத்திரத்தில் குறைவாக தண்ணீரில் வேகவைத்து எடுத்துவிடுங்கள். காஸ் மிச்சமாகும்.

3. துவரம்பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வேகும்.

4. ரசத்துக்கு பருப்பை தனியாக குழைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பருப்பு வேகவைத்த தண்ணீரை ரசத்துக்குப் பயன்படுத்தினாலே ரசம் சுவையாக இருக்கும்.

5. அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டியான பேஸ்ட்டை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது புளியை பயன்படுத்திக்கலாம். தினமும் கரைசலில் வீணாகும் புளியை இதன் மூலம் தவிர்க்கலாம்.

6.உருளைக்கிழங்கை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் குறைந்த எண்ணெயில் உருளைக்கிழங்கு கரகரப்பாக வரும். எண்ணெய்ச் செலவு குறையும்.

7.உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை தண்ணீர்விடாமல் குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்து வறுத்தால், ஒரு கப் எண்ணெய்க்கு பதிலாக 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்தான் தேவைப்படும்.

8. தோசைக் கல்லை நறுக்கிய வெங்காயத்தில் நன்கு தேய்த்த பிறகு தோசை சுட்டால், குறைவான எண்ணெயில் வழுவழுப்பான, கரகரப்பான தோசை சுடலாம்.

9. அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்துப் பாருங்கள், அதிக எண்ணெய் இழுக்காது.

10. தோசை மாவு அரைத்த உடனே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிடுங்கள். தேவையான அளவு மாவை மட்டும் புளிக்க வைத்து இட்லி, தோசைக்குப் பயன்படுத்தினால் நான்கு நாளுக்கு வரும் மாவு எக்ஸ்ட்ராவாக ரெண்டு நாளுக்கு வரும்.

11. எந்த சமையலாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் பெரிய தணலில் வைத்து பிறகு குறைத்துவிட்டால் கேஸ் மிச்சப்படுத்தலாம்.

12. காய்கறி, பருப்பு வகைகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும், தண்ணீர் அதிகமாக விட்டால்தான் நீண்டநேரம் கேஸ் வீணாகும்.

13. பயன்படுத்துகிற பாத்திரம் அகலமாகவும், உயரம் குறைவாகவும் இருந்தால் சமையல் சீக்கிரம் முடியும்.

14. காபி போடுவதற்கு மொத்த பாலையும் சூடு செய்யாமல், தேவையான அளவு சின்ன பாத்திரத்தில் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்.

15. காஸ்ட்லியான வழக்கமான காய்கறிகளை கொஞ்சம் குறைத்து சுரைக்காய், கோவைக்காய், பிடிகருணை, வாழைப் பூ போன்ற வழக்கத்தில் இல்லாத காய்கறிகளை பயன்படுத்திப் பார்க்கலாமே!

16. பாத்திரத்தைக் கழுவி அப்படியே அடுப்பில் வைத்தால், அந்தப் பாத்திரம் காயவே ரெண்டு நிமிடம் ஆகும். இதனால் அனாவசியமாக கேஸ் வேஸ்ட். அதனால் பாத்திரத்தைக் கழுவி, துடைத்த பிறகு அடுப்பில் வைக்கவேண்டும்.

அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்களைச் சொல்கிறார் அசைவ உணவு நிபுணர்,

1. மட்டன், சிக்கனை கடாயில் அதிக எண்ணெய் விட்டு வறுக்காமல், தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வறுக்கலாம்.

2. இரண்டு முட்டையில் ஒரு கப் கடலைமாவு கலந்துவிட்டால் ஆறு ஆம்லெட் போடலாம்.

3. மீன் வாங்கும்போது பெரிய துண்டுகளுக்குப் பதிலாக மெலிசான சின்ன துண்டுகளாகப் போட்டு வாங்கினால் பத்துத் துண்டுகளுக்கு பதிலாக பதினைந்து துண்டுகள் கிடைக்கும்.

4. அதிக விலை கொடுத்து பெரிய மீன்களை வாங்குவதைவிட சின்ன மீன்களை வாங்கினால் நூறு ரூபாய்க்குள் முடிஞ்சிடும், நிறைய மீன்களும் கிடைக்கும்.

5.அசைவ உணவுகளை வாங்கி நாம் வெட்டுவதைவிட கடையில் வெட்டி வாங்கிக் கொண்டால் வீணாவதைத் தவிர்க்கலாம்

சனி, 3 மார்ச், 2012

தேர்வு பதட்டத்தை குறைக்க பயிற்சிகள்



தேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுதும் போது பயம் வந்துவிடும். தேர்வு எழுத பயந்ததால் நினைவிலுள்ள தகவல்கள் கூட மறந்து விடும்.

இப்படி தேர்வு நேரத்தில் குழம்பிப் போன சிலர் , நன்கு படித்திருந்தும் தேர்வை நல்ல முறையில் எழுத இயலாத நிலையே ஏற்பட்டு

விடுகிறது.எவ்வளவுதான் சிறப்பாக படித்திருந்தாலும் , தேர்வு நேரங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ,அதனை தவிர்க்கும்ë வழிகளையும் மாணவர்கள் முன் கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.

படித்த பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் அந்த பாடத்தை நினைவில் எளிதில் மனதில் பதிய வைக்கலாம். மேலும் எப்பொழுதெல்லாம் அந்தத் தகவல்கள் தேவைப்படுன்றதோ அப்போதெல்லாம் அவற்றை உப யோகித்துக் கொள்ளவும் முடியும்.

தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த பாடத்தை திரும்பவும் படிப்பது அவசியமாகும். திருப்புதல் நேரத்திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் ஒரு பாடத்தை திரும்பப் படிக்க வேண்டும் ? என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

நேரம் இருந்தால் கடந்த ஆண்டு நடந்த தேர்வின் கேள்வித் தாள்களில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்களை எழுதி நீங்களே திருத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களை நீங்களே மதிப்பிட்டு கொள்ளலாம்.

சில மாணவர்கள் இப்படி முன்கூட்டியே திட்டமிடாமல் தேர்வுக்கு முன்ëபு இரவு நேரங்களில் வெகு நேரம் விழித்துத் தொடர்ந்து படிப்பார்கள். தொடர்ந்து இப்படி அதிக நேரம் கண்விழித்துப் படித்துப் பழக்கமில்லாமல் திடீரென அதிக நேரம் கண்விழிக்கும் போது உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு தீராத தலைவலி ஏற்படும். காய்ச்சல் கூட ஏற்பட்டு தேர்வு எழுத இயலாத நிலை சில நேரங்களில் உருவாகிவிடும். எனவே திட்டமிட்டு முன் கூட்டியே ஒரு நேரத்திட்டத்தை வகுத்துக் கொண்டு படிக்கலாம்.

சிலரது பள்ளி அல்லது கல்லூரி வெகு தூரத்தில் இருக்கலாம் .பஸ்சில் பயணம் செய்யும் போது புத்தகத்தை எடுத்து படிக்க இயலாத நிலை உருவாகும். சுமார் 1மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் போது பயணம் செய்யும் நேரத்தையே படிக்கும் நேரமாக மாற்றிக் கொள்ளலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய ஆர்வத்தில் சிலர் ஓய்வு எடுக்காமல் படிப்பார்கள். ஓய்வெடுப்பதற்க்கும் சிந்திப்பதற்கு தகுந்த நேரத்தை ஒதுக்கத் தவறியவர்களுக்கு படிக்கும் போது குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர்த்து தேவையான அளவு தூங்குவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தேர்வு நேரத்தில் அதிக நேரம் ஓய்வெடுக்க பலருக்கு நேரம் இருக்காது. எனவே சிறிது நேரம் ஓய்வெடுத்து , பெரிய அளவில் புத்துணர்வு பெற சில பயிற்சிகளை பழகிக் கொள்ளலாம்.

மூச்சு விடுதல் பயிற்சி:

மூச்சு விடுதல் பயிற்சி என்பது அதிக அளவு மூச்சு காற்றை உள்ளிழுத்து அந்த மூச்சுக் காற்றை வெளிவிடும் பயிற்சியா கும். இப்பயிற்சியை செய்ய விரும்புபவர் கள் தரையில் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். இப் பொழுது உங்கள் இரு கண்களையும் இறுக மூடிக் கொள்ளுங்கள்.

உங்கள் வலது பக்க மூக்குத் துவாரத்தை வலது கைப்பெருவிரலால் அழுத்தி மூடிக் கொள்ளுங்கள் . இடது மூக்கின் வழியாக காற்றை மெதுவாக உள்ளிழுத்துக்கொள்ளுங்கள்.பின்புமெதுவாககாற்றைவெளிவிடுங்கள்.

இப்படி 5முறை காற்றை மெதுவாக உள்ளிழுத்து, மெதுவாக வெளி விடுங்கள். அதன்பின்னர் வலது கைப் பெருவிரலை மூக்கிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மூக்கின் இடது புறமுள்ள துவாரத்தை இடது கை பெருவிரலால் அழுத்தி மூடிக் கொள்ளுங்கள். வலதுபுறமுள்ள மூக்குத் துவாரத்தின் வழியாக மெதுவாக காற்றை உள்ளே இழுங்கள். சிறிது நேரம் கழித்து உள்ளிழுத்த காற்றை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி வலது மூக்குத்துவாரத்தின் வழியாக 5முறை காற்றை உள்ளே, இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

அதன் பின்னர் இடது கை பெருவிரலை மூக்கிலிருந்து எடுத்து விடுங் கள். இபபோது மூக்கின் இரண்டு துவாரங்களின் வழியாகவும் மெதுவாக காற்றை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உள்ளிழுத்த காற்றை மூக்கின் இரண்டு துவாரத்தின் வழியே வெளியேற்றுங்கள்.

இப்படி திரும்பத் திரும்ப சுமார் 5முறை இந்தப் பயிற்சியைச் செய்ய லாம். இந்த பயிற்சியை செய்வதன்மூலம் ரத்தத்திற்கு தேவையான அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மனஅழுத்தம் குறையவும் வாய்ப் புள்ளது.

தோள்பட்டைப் பயிற்சி

தோள்பட்டைப் பயிற்சியைச் செய்ய விரும்புபவர்கள் ஓரிடத்தில் வசதி யாக அமர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் தோள்ப் பட்டையை மேலும் கீழும் மூன்றுஅல்லது நான்குமுறை அசைத்துக் கொள்ளுங்கள். அதே போல் தோள்பட்டையை முன்னும், பின்னும் அசைத்து வாருங்கள். இப்படி நான்குஅல்லது ஐந்து முறை செய்து பாருங்கள்.அதன் பின்னர் திடீரென தோள் பட்டையின் நுனிப்பகுதி காதைத்தொடுகின்ற அள விற்கு தோள்பட்டையை உயர்த்துங்கள். அதேபோல் திடீரென உயர்த்திய தோள்பட்டையைத் தளர்த்திக்கொள்ளுங்கள். இப்படிநான்கு முறை செய்வதன்மூலம் களைப்பு கரைந்து போய் விடுகிறது. உற்சாகம் ஊற்றெடுக் கிறது.

கழுத்தை அசைக்கும் பயிற்சி

கழுத்தை அசைக்கும் பயிற்சியைச் செய்ய விரும்புபவர்கள் முதலில் இரண்டு பக்கமுள்ëள தோள்ப்பட்டைகளைத் தளர்த்திக் கொள்ளுங்கள் தலையை இடது புற தோள்பட்டை பக்கமாக சாய்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் இடதுகாதுமடல், இடது தோள்ப் பட்டையை தொடு மாறு வைத்துக்கொள்ளுங்கள்.

இனி மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள். இப்படி நான்கு முறை செய்த பின்பு தலையை வலதுபுறமாக சரித்து வலது காதின் மடல் வலது கை தோள்ப் பட்டையை தொடுமாறு செய்யுங்கள். இப்போது மெதுவாக காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

இந்தப் பயிற்சி செய்யும் போது எந்த பக்கம் தலையை சாய்க்கிறோமோ அந்த கையின் விரல்கள் தலையின் உச்சியைத் தொடும்படி பார்த்துக் கொண்டால் பயிற்சியின் பலன் அதிகரிக்கும். இதன் மூலம் களைப்புநீங்கும். புத்துணர்ச்சியும் பெறலாம்.

முன்பக்கம் வளையும் பயிற்சி:

முன்பக்கம் வளையும் பயிற்சி மிக வும் எளிதான பயிற்சியாகும்.இந்தப்பயிற்சியை செய்ய விரும்புபவர்கள் முதலில் ஒரு நாற்காலியில் பின்பக்கமாக சாய்ந்து, நிமிர்ந்து உட்காந்து கொள்ளுங் கள்.பின்னர் நன்கு மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் பின்பக்கம் கொண்டு வாருங்கள் . உங்கள் இடது கைவிரல்களினால் வலதுகையைப் பிடித்து கொள் ளுங்கள்.

முன்பு உள்ளிழுத்து வைத்துள்ள மூச்சுக் காற்றைமுன்பக்கமாக சாய்ந்து கொண்டு மெதுவாக வெளியே விடுங்கள்

இப்படி நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ந்து செய்து வாருங்கள். பின்னர். பின்பக்கமாக இருந்த கைகளை முன்பக்கமாக மெதுவாக கொண்டு வந்து பயிற்சியை நிறைவு செய்யலாம்.

பாடங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஏற்படுகின்ற களைப்பை உடனே போக்கிக்கொள்ள இந்த பயிற்சி உதவும். பதட்டத்தையும் நீக்கும்.

அமர்ந்து திரும்பும் பயிற்சி

இந்தபயிற்சியை செய்ய விரும்புபவர்கள் முதலில் ஒரு நாற்காலில் உட்காந்து கொள்ளுங்கள். பின்னர் இடது கையால் உங்கள் வலது காலின் விரல் நகங்களைத் தொடுங்கள். இடது கை வலது கையின் விரல்களைத் தொட்டு கொண்டிருக்கும் போதே, உங்கள் வலது கையை நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் பின்பக்கமாக கொண்டு வாருங்கள். இப்போது மூச்சுக் காற்றை நன்கு உள்ளே இழுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அதே நிலையில் இருந்து கொண்டு வலது புறமாக திருப்புங்கள்.

பின்னர் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள் இப்படி தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். அதன் பின்புதொடக்கநிலைக்கு வாருங்கள்.

இப்போது வலது கையால் இடது கால் விரல்களை தொடுங்கள்.இடது கையை நாற்காலிக்குபின்பறம் கொண்டு வாருங்கள். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அதேநிலையில்இருந்து கொண்டு இடது புறமாக திரும்புங்கள். இப்படித் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். மீண்டும் தொடக்க நிலைக்கு வாருங்கள். இந்த பயிற்சி உடலில்ë உற்சாகத்தை அள்ளி தரும் சிறந்த பயிற்சியாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் யாவும் தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற களைப்பை நீக்க பயன்படும் எளிய பயிற்சிகள் ஆகும்.இந்தப் பயிற்சிகள் ஒவ்வொன்றும் சுமார் 5 நிமிடத்திற்குள் செய்து முடிக்க கூடிய பயிற்சிகள் என் பதால் தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் தவிர படிக்கும்போது ஏற்படுகின்ற சோர்வை போக்க எந்நேரமும் இந்தப் பயிற்சியை செய்யலாம். இந்தப் பயிற்சிகள் பதட்டத்தை குறைக்கவும் பயன்படுவதால் "ஒரே டென்சனாக இருக்கிறது'' என்று குறைப்பட்டுக் கொள்பவர்களும் இந்தப் பயிற்சியை தினமும் செய்து பலன் பெறலாம்

வெள்ளி, 2 மார்ச், 2012

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!



மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,

ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.

மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் பின்செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக எர்த் கனெக்ஷன்கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு எர்த்கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.

வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி பின்களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல பிளக்குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது.
சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.

கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.

மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.

கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ஆன்ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.

மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.

மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.

ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

சுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் ! உபயோகமான தகவல்கள்


'காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...'' 
- வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை.
இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை, எல்லா வகையான வலிகளுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக... ஆர்த்ரைட்டீஸ், கால் மூட்டுவலி, தசைவலி, மூட்டு எரிச்சல் போன்றவற்றுக்கு முதல் முறை பிரச்னை வந்ததும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வாங்கிய மாத்திரைகளை... அடுத்தடுத்த முறை அந்த வலி தோன்றும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகிறோம்.
''இது சரியா?'' என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கருணாநிதியைச் சந்தித்தபோது...
''வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கூட்டினார் டாக்டர்.
''என்னிடம் வரும் நோயாளிகளில் பாதிப் பெண்கள், 'கை, கால் குடைச்சல் தாங்க முடியல டாக்டர். வலி சட்டுனு போற மாதிரி மாத்திரை கொடுங்கஎன்பார்கள். ஏன் இந்த வலி நமக்கு வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட, வலி உடனே பறந்து செல்வதற்கு என்ன வழி என்றுதான் பலரும் அவசரப்படுகிறார்கள். இதற்குக் காரணம் வீட்டு வேலை, பிழைப்புக்கான வேலை என்று சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கைச் சூழல்தான்.
வலியைக் குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் 'நான்-நார்காடிக்’, 'நார்காடிக்என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் 'நான்-நார்காடிக்வகையில் 'நான் ஸ்டீராய்டல் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ்' (NSAID- Non Steroidal Anti-Inflammatory Drugs) மாத்திரைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புரூஃபன், அசிட்டமினோபென் போன்ற மாத்திரைகள் இந்த வகையில் அடங்கும்.''
''வலி நிவாரணிகளை அடிக்கடி விழுங்கு வதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?''
''ஒருமுறை வலி போவதற்காக நாம் பயன்படுத்திய மாத்திரையை அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வலி தோன்றும்போது டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் விழுங்கிப் பழகிக் கொண்டால்... அது மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்கிற 'அடிக்ஷன்பிரச்னையை உண்டாக்கும். அடுத்த கட்டமாக முதலில் வயிற்றில் புண் (அல்சர்) உண்டாகும். அதன் எதிரொலியாக குடலின் தோல் கிழிந்து, உள்ளேயே 'கேஸ்ட்ரிக் எரோஸன்எனப்படும் ரத்தக்கசிவு உண்டாகும். அதை உணராமலும், தெரியாமலும் 'வயிற்று வலி வயிற்று வலிஎன்று துடித்து, அதற்காக தனி சிகிச்சை எடுப்போம். சிலருக்கு வலி நிவாரணிகளைத் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால்கூட, பிரச்னை வரலாம். அடுத்து நேரடியாக பாதிக்கப்படுவது சிறுநீரகம்.
50 வயதைக் கடந்தவர்கள் வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்தும்போது, 'ஹைபர் டென்ஷன்மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபர் டென்ஷன் உண்டான பின்பும் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது மாரடைப்பு வரை செல்லலாம். கூடுதல் பரிசாக, ரத்தம் உறையும் பிரச்னையும் உண்டாக்கும்.
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்த
   பிரச்னை அதிகமாகும். சிலருக்கு இந்த மாத்திரைகளை சில நாட்கள் உட்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும்.''
''வலி நிவாரண மாத்திரை களால் ஏற்படும் விளைவு களைத் தடுப்பது எப்படி?''
''அறுவை சிகிச்சை, மூட்டு - தசை வலிக்குள்ளானவர்கள் வலி நிவாரணிகளை உட்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, முதல் முறை டாக்டரைச் சந்திக்கும்போது 250 மில்லி கிராம் அளவு மாத்திரையைக் கொடுத்திருந்தார் என்றால், சில நாட்கள் கழித்து அந்த வலி உண்டாகும்போது அதைக் குறைக்க 100 மில்லி கிராமே பரிந்துரைப்பார். அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக் கொள்ளும்போது, 250 மில்லிகிராமையே பயன்படுத்துவோம். இது ஆபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.
வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, 'ஆன்ட்டி - ஆசிட்மாத்திரைகளையும் சேர்த்து உட்கொண்டால், மாத்திரையால் உண்டாகும் அல்சர் வராமல் தடுக்க முடியும்.''
 

வியாழன், 1 மார்ச், 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்



குறைந்தஅதி சிறந்த சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.

அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.

காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.
சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூடாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.

மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.

ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெது வெதுப்பான் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.

குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.

காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.

மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொண்டிருக்கும் போது அதற்கு எண்ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்டவ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

டாங்கில் எவ்வளவு மண்ணெண்ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறியீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கும். அதற்கு மேல் மண்ணெண்ணெய் ஊற்றக்கூடாது.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும். டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.

நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப்படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி மற்றும் தலை சுற்றல் வருவது ஏன்?

அலுவகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து பணியாற்றுவது கழுத்து வலியை உண்டாக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒருபக்க கழுத்து வலியால் அ...

Popular Posts