லேபிள்கள்

திங்கள், 5 மார்ச், 2012

வீட்டு வைத்தியம்! தினமும் வெந்நீர் குடிக்கலாம்பாட்டி வைத்தியம்சொன்ன பாட்டியிடமிருந்து வைத்தியரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும், நல்ல அனுபவசாலி! ‘‘அலோபதியில எத்தனை மருந்து வந்தாலும், அவசரத்துக்கு நம்ம கை வைத்தியம் மாதிரி வரவே வராது’’ என்று அழுத்தமாக சொல்லும் அவரது எளிமையான குறிப்புகள் ஆரம்பமாகின்றன.

கிணறு வெட்ட பூதம் கிளம்புறாப்ல, சின்ன பிரச்னைக்கு கண்ட கண்ட இங்கிலீஷ் மருந்தைச் சாப்பிட்டு, அதனால புதுசு புதுசா வியாதிகளை வரவழைச்சுக்கக் கூடாது.

ஆயிரம் வியாதிக்கும் அடுப்பங்கரையில இருக்கு வைத்தியம்னு பெரியவங்க சொல்றதுண்டு. யோசிச்சுப் பார்த்தா, எதனால பிரச்னையோ.. அதனாலயே அதைத் தீர்க்க முயற்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்னு புரிய வரும்.

சமையலறையில நாம எண்ணெயையும் நெய்யையும் கொட்டியோ, இல்ல.. ஒரேயடியா வறுத்துப் பொரிச்சோ செய்யற பண்டத்தாலதான் பல வியாதிகளும் நமக்கு வர்றது. கிச்சன்வெட்டு வெட்டுனு வெட்டிட்டு, வயித்து வலிக்கு டாக்டரைத் தேடி ஏன் ஓடணும்? இதுக்கான மருந்தும் கிச்சன்லயே இருக்கு. நம்ம இஞ்சி, சுக்கு, ஏலம், கிராம்பு, கீரை, கொத்துமல்லி விதை, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பூண்டு.. இதுல எல்லாம்தான் இருக்கு சூட்சுமம்!

இதையெல்லாம் வெச்சு என்ன செஞ்சா.. என்னென்ன வியாதிகள்லாம் ஓடும்னுதான் உங்களுக்கு நான் சொல்றதா இருக்கேன்.

ஆச்சு.. மழைக்காலம் வந்துடுச்சு. சாதாரண நாள்லயே ஸ்வீட், எண்ணெய்ப் பலகாரம்.. எல்லாத்தையும் தொட்டுப் பார்க்கக்கூட இந்த டீன்&ஏஜ் குழந்தைகள் பயப்படும். கொலஸ்ட் ரால்பயம், ஊளைச் சதை, இடுப்புல மடிப்பு, தொப்பை வேற.. ஜீன்ஸ் போட முடியாம.. என்ன கஷ்டம்டியம்மா!

விதவிதமா அகர்வாலையும், ஸ்ரீகிருஷ்ணாவையும், ஆனந்த பவனையும் படைச்சுப்புட்டு, இந்த மாதிரியான பயத்தையும் பகவான் படைச்சிருக்க வேண்டாம்னு தோணுது.. இல்லையா?!

இனிப்போ, எண்ணெய்ப் பல காரமோ.. அளவாச் சாப்பிட்டா பிரச்னையே இல்ல. கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டா, நாக்கு முழுக்க மைதா மாவைத் தடவின மாதிரி வழவழனு ஆகிடும் சிலருக்கு.

உடம்பும் அங்கேயிங்கே சதை இல்லாம உருவி விட்டாப்ல இருக்கணும். அஜீரணம், ஏப்பம், நாக்கு கொழகொழப்பு இதெல் லாமும் வரக் கூடாதுன்னா, இதைப் படிங்க முதல்ல..

ஸ்வீட்டோ, காரமோ.. இல்ல, வடை பாயசத்தோட சாப்பாடோ.. சாப்பிட உக்கார்றதுக்கு முன்னால, நாக்கு பொறுக்கற சூட்டுல ஒரு டம்ளர் வெந்நீரைக் குடிச்சிருங்க குழந்தைகளா.. அதேமாதிரி, சாப் பிட்டதுக்கு அப்புறமாவும் ஒரு டம்ளர் வெந்நீர்.. அந்த வெந்நீர் வெதவெதனு இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைச் சுட்டுக்கவும் கூடாது. நாக்கு பொறுக்கற சூடு.. ஞாபகம் வெச்சுக்கங்க!

இதுல.. அதாவது, இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...

1. சாப்பிடறதுக்கு முந்தி குடிக்கிற வெந்நீர், நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல் இப்படி பேச்சு வாக்குல வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும்னு சொல்ல வைக்கும்.

2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதால, நாக்கு கொழகொழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டை கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள்.. எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம்.

இதுக்காகத்தான் அந்தக் காலத்துல சுமங்கலி பிரார்த்தனை, திதி.. இது போன்ற சமயங்கள்ல, சாப்பாட்டு இலைக்குப் பக்கத்துல சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீரை வச்சுடு வாங்க.

நாம தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். உடலையும் முகத்தை யும் நல்லா வெச்சுக்கலாம்.

இந்த பாட்டி எதைச் சொன்னாலும், உடனே ஃபாலோ பண்ற மாதிரிதான் இருக்கும். கவலையே வேண்டாம் கண்ணு களா. அத்தனைக்கும் மருந்து இருக்கு நம்ம கையிலயே..

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts